Skip to main content

Posts

Showing posts from November, 2013
ஐ.ஐ.டி., என்.ஐ.டி., நுழைவுத்தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் G.V IIT ACADEMY புதிய உதயம்: விழுப்புரம்   மாவட்டத்தில்   முதன்முறையாக   சின்னசேலத்தில்  G.V IIT ACADEMY தொடங்கப்பட்டுள்ளது.இந்நிறுவனம் 20ஆண்டு காலமாக எண்ணற்ற மருத்துவர் பொறியியல் வல்லுனர்களை உருவாக்கி சாதனைப் படைத்த இந்நிறுவனத்தின் கிளை சின்னசேலத்தில்   உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இங்கு ஐ.ஐ.டி தேர்விற்கு மாணவர்களை சிறந்தமுறையில் சிறப்பாக தயார் செய்கின்றனர்.6முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளி மாணவர்களுக்கு காலை மாலை பள்ளி பாடங்கள் பாதிக்காதவாறு  சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அனுபவம் மிக்க சிறந்த ஆசிரியர்கள் மற்றும் வெளி மாநில ஆசிரியர்களை கொண்டு மாதாந்திரம் சிறப்பு பயிற்சி கலந்தாய்வுகள் நடைபெறுகிறது.உங்கள் பிள்ளைகளின் ஐ.ஐ.டி கனவை நினைவாக்கும் கல்விக்கலம் இன்றேசேர்வீர் பயனடைவீர் விண்ணப்பிக்க விரும்புவோர்  தொடர்புக்கு: CELL: 8925140392,9443622130,7401074620. ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு, ஆன்லைனில், டிசம்பர் 26ம் தேதி வரை மாணவர்
6 முதல் 8வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய அளவிலான கட்டுரைப்போட்டி :
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில்அனைத்துபாடத்திட்டங்களும்மாற்றிஅமைக்கப்படும்-துணைவேந்தர் சந்திர காந்தா பேட்டி: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றி அமைக்கப்படும் என்று துணைவேந்தர் சந்திரகாந்தா தெரிவித்தார்.தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரகாந்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-5 லட்சம் பேர் பட்டம் பெற்றுள்ளனர்கல்லூரிகளுக்கு செல்ல முடியாதவர்களும் தபால் வழியில் படிப்பதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகம் விளங்குகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பட்டம் பெற்றுச்சென்று உள்ளனர்.தற்போது 110 பாடப்பிரிவுகளுடன் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகம் பி.எட். படிப்பில் தமிழ் வழியில் 500 மாணவர்களையும், ஆங்கில வழியில் 500 மாணவர்களையும், மனநலம் குன்றிய மாணவர்கள், காதுகேட்காதவர்கள், கண்பார்வையற்றவர்கள் ஆகிய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கக்கூடிய வகையில் 500 பேர்களுக்கு பி.எட்.படிப்பும் கற்பிக்கப்படுகிறது.இந்த வருடம் இந்த 3 பி.எட். படிப்புகளுக்கும் தேர்வு
மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ஒருங்கிணைந்த ‘ஸ்மார்ட் கார்டு’ வசதி: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய ஒருங்கிணைந்த ‘ஸ்மார்ட் கார்டு’ வசதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் கூடுதலாக மாநகர பஸ், மின்சார ரெயில், கால் டாக்சி போன்றவற்றில் பயணம் செய்ய முடியும். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மெட்ரோ ரெயில் பணி சென்னையில், ரூ.14 ஆயிரம் 600 கோடி மதிப்பில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டை - விமான நிலையம், சென்டிரல் - பரங்கிமலை இடையே 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்க மற்றும் பறக்கும் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. தற்போதைய நிலையில், சுரங்கப் பாதை, பறக்கும் பாதை, ரெயில் நிலையங்கள் பணி என மொத்தப் பணிகளில் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன. முதற்கட்டமாக, கோயம்பேடு - பரங்கிமலை இடையே அடுத்த ஆண்டு மத்தியில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. மின் கம்பி இணைக்கும் பணிதற்போது அந்த வழித்தடத்தில், பறக்கும் பாதை அமைக்கும் பணி முடிந்து, அதில் தண்டவாளம் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மின் கம்பங
திருவள்ளூர் மாவட்டத்தில் டி.டி.மருத்துவ கல்லூரியைஏற்று நடத்த அரசு பரிசீலனை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் தகவல்: டி.டி.மருத்துவ கல்லூரியை ஏற்று நடத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக சென்னை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி கூறினார். மாணவர்கள் வழக்குதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டி.டி.மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் வாபஸ் பெற்றது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த கல்லூரியில் படித்த மாணவர்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘டி.டி. மருத்துவ கல்லூரியை தமிழக அரசே எடுத்து நடத்தவேண்டும்’ என்று கூறியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டி.டி.மருத்துவ கல்லூரி மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்களை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்து, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து, கடந்த வாரம் உத்தரவிட்டார்.ஏற்று நடத்த பரிசீலனைஇந்த நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி கேட்டு கொண்டதை தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முதுநிலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவக்கம்: முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு இன்றும் நாளையும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 881 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 22ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தமிழ்பாடத் தேர்வு வினாத்தாளில் 40க்கும் அதிகமான பிழைகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழைத் தவிர பிற பாடங்களுக்கு மதிப்பெண் பட்டியல் டி.ஆர்.பி இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து 2 ஆயிரத்து 770 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் ஒரே இன சுழற்சியில் சமமான மதிப்பெண் பெற்ற மேலும் 213 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாக கடந்த 24ம் தேதி டி.ஆர்.பி அறிவித்து இருந்தது. இதன் அடிப்படையில் இன்றும் நாளையும் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் தற்போது அழைப்பு கடிதம் பெற்றவர்களும், ஏற்கனவே பங்கேற்க தவறியவர்களும் பங்கேற்கலாம்
பிளஸ் 2 தனித்தேர்வு: இன்றுமுதல் இணையத்தில் விடைத்தாள் நகல்கள்: பிளஸ் 2 தனித்தேர்வு விடைத்தாள் நகலை தேர்வர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 28) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தனித்தேர்வில் விடைத்தாள் நகலைக் கோரி ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.இவர்களது விடைத்தாள் நகல்கள் examsonline.co.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு: பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அடுத்த வாரம் நடைபெறுகிறது.கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரியிலேயே தமிழக பட்ஜெட்: தமிழகத்தில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரியில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அது தொடர்பான ஆயத்தப் பணிகள் சில நாட்களுக்கு முன்புமுடிவடைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திட்டப் பணிகளுக்காகவும் தொடர் செலவினங்களுக்காகவும் தமிழக அரசு சார்பில் வரவு செலவு கணக்கு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 2013-14-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நிதியாண்டின் கூடுதல் செலவினங்களுக்கான துணை நிதி நிலை அறிக்கை, சட்டமன்றத்தில் கடந்த அக்டோபரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, சற்று முன்னதாகவே தாக்கல் செய்துவிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வருவதால், இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம் பெறலாம் எனத் தெரிகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: 2014 மே 15-க்குள் மத்தியில் புதிய அரசுஅமைய வேண்டும். அதனால் தேர்தல் எந்நேரத்திலும் அறிவிக்கப்படலாம். எனவே, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி மாதத்திலேயே தாக்கல் செய்ய முடிவு
இணைப்பு பள்ளிகள் சான்றுத்துவம் பெறுவது கட்டாயம் சி.பி.எஸ்.இ: அனைத்துப் பள்ளிகளும் Accreditation பெறுவது கட்டாயம் என்று அறிவித்துள்ளதுடன், அதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்பாட்டை தொடங்கும்படி உத்தரவிட்டுள்ளது.CBSE பள்ளிகள் accreditation பெறுவது முன்பு தன்னார்வ செயல்பாடாக இருந்தது. ஆனால் தற்போது அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . இதுதொடர்பாக CBSE வட்டாரங்கள் கூறுவதாவது: CBSE பள்ளிகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை accreditation பெறுவது கட்டாயம். தரமான கல்வி என்று நோக்கத்தை முன்வைத்தே, இந்த விதிமுறை கொண்டுவரப்படுகிறது. இணைப்புக் கட்டணமாக, பள்ளிகள் சுமார் ரூ.55,000 செலவிட வேண்டியிருக்கும். ஒருமுறை accreditation பெற்றவுடன், சிறப்பு நன்மைகளை அந்தப் பள்ளிகள் பெறும். அனைத்து CBSE பள்ளிகளும், நிரந்தர இணைப்பு தகுதியைப் பெறும். CBSE இணையதளத்தில், Form of Intent -ஐ பூர்த்திசெய்து ஆன்லைன் விண்ணப்ப செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப செயல்பாடு மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆசிரியைகளின் பிரச்சினையால் அரசு பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டம்: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த திருவரங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் சரஸ்வதி. அதே பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் மீனலோசனி என்கிற மீனாட்சி. இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் ஆசிரியைகள் இருவருக்கும் பையை ஓரிடத்தில் வைப்பது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இரு ஆசிரியைகளும் பள்ளி என்பதையும் மறந்து சண்டை போட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் மூலம், கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்படி பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட இரு ஆசிரியைகளையும் பணியிட மாறுதல் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் கடந்த திங்கட்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புறக்கணிப்பு போராட்டம் நடத்திய மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியை மீனாட்சியை மீண்டும் திருவரங்குளம் பள்ளிக்கே கொண்டு வரவேண்டும் என்றும், ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் பள்ளி தலைமையாசிரிய
மாணவிகள் பாதுகாப்பு: புதிய நடத்தை விதிகள்: பெண்கள் கல்லூரி வாகனங்கள் மற்றும் பள்ளி வாகனங்களில் அதிக அளவில் பெண் நடத்துனர்களை நியமிக்க வேண்டும்" என, கலெக்டர் ராஜேஸ் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பஸ், ஆட்டோக்கள், கல்லூரி வாகனங்கள், பள்ளி வாகனங்கள், சுற்றுலா பஸ்கள் மற்றும் மேக்சி கேப் ஆகிய வாகனங்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் பயணத்தின் போது அவர்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைளை தடுக்கும் பொருட்டு, அனுமதி சீட்டில் கூடுதல் நிபந்தனைகள் விதிப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ராஜேஸ் தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் ராஜேஸ் பேசியது: "நகர பஸ்களில் முன்புற வழி பெண் பயணிகள் மற்றும் குழந்தைகள் மட்டும் ஏறி இறங்க பயன்படுத்தவேண்டும். மேலும் முன்புறம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். பின்புற வழி ஆண் பயணிகள் மட்டும் ஏறி இறங்க பயன்படுத்த வேண்டும். பின் புறம் ஆண்கள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். இந்த நடைமுறை வரும் டிசம்பர், 1ம் தேதி முதல் அமுல்படுத்தப்படும். சுற்றுலா வாகனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்கள் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு வர்
மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அரையாண்டு தேர்வுக்குள் வினியோகம்:   நாமக்கல் மாவட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் வரத் துவங்கியதையடுத்து அடுத்த மாதம் நடக்கவுள்ள அரையாண்டு தேர்வு முடிவதற்குள் சப்ளை செய்யப்படவுள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களின் கல்விக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. விலையில்லா நோட்டு புத்தகம், நான்கு செட் சீருடைகள், புத்தகப்பை, காலணி, வரைபட கிரையான்கள், நிலவரைபட நூல், கணித உபகரணங்கள், சத்துணவு ஆகியவை வழங்கப்படுகிறது. மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக முப்பருவ கல்வித்திட்டத்தை அரசு கொண்டுவந்தது. அதனால், மாணவர்களின் புத்தகச் சுமை குறைந்து தேர்வு முறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டது. புத்தகங்கள் யாவும் தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் அச்சடிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகள் வாரியாக வழங்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் முதல் பருவப் புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் பருவ புத்தகங்கள
உதவி பேராசிரியர் தேர்வு: பி.எட். கல்லூரி பேராசிரியர்கள் கலக்கம்: தமிழகத்தில் உதவி பேராசிரியர் தேர்வு பணியில் பி.எட்., கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று மார்க்கை கணக்கில் எடுக்காததால் ஆயிரக்கணக்கான பி.எட்., கல்லூரி பேராசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழக அரசு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் 1093 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என சட்டசபையில் அறிவித்தது. நீண்ட இழுபறிக்கு பின் தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கியது. முதுகலை பட்டத்துடன் தேசிய தகுதி தேர்வு(நெட்) அல்லது மாநில தகுதி தேர்வு(ஸ்லெட்) இரண்டில் ஏதாவது ஒரு தேர்வில் தகுதி பெற்றிருந்தால் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. இந்த தேர்வில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஒன்பது மார்க்கும், எம்.பில்., பட்டம் பெற்றவர்களுக்கு ஆறு மார்க்கும், அனுபவத்திற்கு அதிக பட்சமாக 15 மார்க் என 24 மார்க்குகளும், நேர்முகத்தேர்வுக்கு 10 மார்க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 34 மார்க் அடிப்படையில் தேர்வுப்பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம்: ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே, காலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்குள், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால், பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டி.இ.டி., தேர்வில், 150க்கு, 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இறுதி தேர்வானது, பள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களும், கணக்கில் கொள்ளப்பட்டு, அதில் பெற்ற மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படும். டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண், 60
அண்ணாமலைப் பல்கலை: இனி அரசு கவுன்சலிங் மூலம் மாணவர் சேர்க்கை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கான அனுமதிச் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு கவுன்சலிங் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா செவ்வாய்க்கிழமை கூறியது: அண்ணாமலைப் பலகலைக்கழகச் சட்டம் 2013-ன் படி, வரும் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத்தின் தொழிற்படிப்புகளான பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகளுக்கான அனுமதிச் சேர்க்கை (தமிழ்நாடு அட்மிஷன் இன் புரஃபஷனல் எஜிகேஷனல் இன்ஸ்ட்டியுஷன்ஸ் ஆக்ட் 2006-ன் படி) தமிழ்நாடு அரசு கவுன்சலிங் மூலம் நடைபெறும். இனிமேல் பல்கலைக்கழக அனுமதிச் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கிடையாது. மேலும் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் இந்தக் கல்வியாண்டில் இதுவரை 70 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என்றார் அவர்.  
3ம் பருவ பாடப்புத்தகங்கள் வந்தாச்சு. விடுமுறைக்குபின், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்கத்தயார்: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன.ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பிரிவுகளாக பாடங்களை பிரித்து, மாணவ, மாணவியருக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவம் என்ற அடிப்படையில், தேர்வு நடத்தி, மாணவ, மாணவியரின் கற்றல் திறன் மதிப்பிடப்படுகிறது. தற்போது இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் நிலையில், வரும் டிச., 10 முதல் 23 வரை, பள்ளிகளில் இரண்டாம் பருவ தேர்வு நடக்கிறது. தேர்வு விடுமுறைக்குபின், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.  அதற்காக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி மற்றும் மாநகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்க, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வந்துள்ளன. சென்னையில் உள்ள அரசு பாடநூல் கழகத்தில் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் உள்ள மாநகராட்சி பள்ள
ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு: அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்: ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கும் அரசாணையின் பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக அரசாணை எண் 181-ஐ 2011-இல் மாநில அரசு பிறப்பித்தது. அந்த அரசாணையில், தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர்.எனினும், உள்ளாட்சி அமைப்புகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்கள், தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆகியவை எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி தகுதி மதிப்பெண்ணில் தளர்வு வழங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தைப் பொருத்தவரை, ஆசிரியர் தேர்வு வாரியம்தான் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி
பள்ளி மாணவியர் பாதுகாப்பு குறித்து வாழ்வியல் பயிற்சி: ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் குறித்த பயிற்சி நேற்று நடந்தது. மாணவர்கள் சாதனைகள் புரிவதற்கு தடைகளாக உள்ள மன அழுத்தம், பய உணர்ச்சி, முடிவு எடுத்தலில் தடுமாற்றம், நேர்மறை எண்ணங்களை உயர்த்துவது, தன்னைத்தானே உயர்ந்து கொள்ளுதல், ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிதல், மாணவர்களிடையே தலைமைப்பண்பு, ஆளுமை திறன் ஆகிய திறன்களை வளர்ப்பதற்காக பள்ளிகளில் வாழ்வியல் திறன்கள் கல்வி அமலில் உள்ளது. ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஒன்பது மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவிகளுக்கு வாழ்வியல் திறன்கள் குறித்த பயிற்சி நடந்து வருகிறது.  
அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊழியரின்றி பணிகள் தேக்கம்: பாகனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளர் உட்பட 5 பணியிடங்கள் காலியாக இருப்பதால் பணிகள் தேக்கமடைந்துள்ளன. இங்கு, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இளநிலை உதவியாளர், காவலாளி, பராமரிப்பாளர் உட்பட அலுவலக பணிக்காக 5 பேர்கள் வரை இருந்தனர். இவர்களை படிப்படியாக மாறுதல் செய்துவிட்டனர். இதனால், ஏற்பட்ட காலியிடங்களுக்கு ஊழியர்களை நியமிக்கவில்லை. இதனால், பள்ளியின் அலுவலக பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. த லைமை ஆசிரியரே அலுவலக பணிகள் அனைத்தையும் பார்க்கவேண்டிய நிலை உள்ளது. காவலாளி இன்றி பள்ளி வளாகத்தில் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. குடிமகன்கள் உள்ளே புகுந்து மதுபாட்டில்களை உடைத்து செல்கின்றனர். பள்ளி வரும் மாணவர்கள் இவற்றை சுத்தம் செய்த பின்னரே வகுப்பிற்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கு தேவையான ஊழியர்களை நியமிக்கவேண்டும்.  
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சி: திண்டுக்கல் மாவட்டத்தில் கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் கூறியதாவது: "அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் சார்பில் அரசுப் பள்ளிகளில் கற்றலில் பின்தங்கிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாத பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்காக, மேலாண்மை குழு மூலம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வாங்க ரூ.350 அளிக்கப்படும். இவர்கள், தினமும் தலா இரண்டு மணி நேரம் காலை, மாலை இரு வேளைகளிலும் பயிற்சி அளிப்பர். திண்டுக்கல் மாவட்டத்தில் 155 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள கோ.ராமநாதபுரம், அணைப்பட்டி கள்ளர் பள்ளி, நத்தம் மகளிர் பள்ளி, நத்தம் கோவில்பட்டி ஆண்கள் பள்ளி, கோபால்பட்டி, திண்டுக்கல் மகளிர் பள்ளி, வேடசந்தூர் மகளிர் பள்ளி, பழநி மகளிர் பள்ளி ஆகிய 8 இடங்களில் கூடுதலாக தலா ஒரு மைய
குரூப் 2 தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமரா: "டி.என்.பி.எஸ்.பி. குரூப் 2 தேர்வில் ஆயிரம் பேருக்கு மேல், எழுதும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்" என, கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார். தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பேசியதாவது: "டி.என்.பி.எஸ்.பி. குரூப் 2 தேர்வு டிச.,1ல் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 38 மையங்களில் 10,609 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில், திண்டுக்கலில் 24 மையங்களில் 8,500 பேரும், பழநியில் 14 மையங்களில் 2,109 பேரும் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகளை கண்காணிக்க 60 முதன்மை கண்காணிப்பாளர்கள், 531 கண்காணிப்பாளர்கள், 12 நடமாடும் குழுக்கள், 40 வீடியோகிராபர்கள், 5 பறக்கும் படையினர் என, மொத்தம் 648 பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆயிரம் பேருக்கு மேல், தேர்வு எழுதும் மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. தேர்வு நாளன்று காலை 9 முதல் 2 மணி வரை தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும். மையங்களில் குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தி தரப்படும்" என்றார்.  
அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தேர்வு: அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் சார்பில் திண்டுக்கல் நகராட்சி நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், சிறந்த 10 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. பழைய வத்தலக்குண்டு அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபுசாரா எரிசக்தி, புளியமரத்துக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆற்றல் சேமிப்பு, நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆற்றல் சேமிப்பு ஆகிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பசுமை உலகம், நகராட்சி நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளியின் விவசாயத்தில் நீர் சேமிப்பு ஆகிய படைப்புகளும், அம்மையநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் பிளாஷ்டிக் ஆற்றல், தெப்பத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியின் மின்சாரம், கோபால்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மின்னணுவியல், கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் உடல் நலம் பேணல், பாடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபு சாரா எரிசக்தி ஆகிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு படைப்புக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. 
கணினிகள் காமன் சென்ஸ் பெறுவதற்கான புதிய புரோகிராம்! இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட விஞ்ஞானிகள் அடங்கிய அமெரிக்க விஞ்ஞானிகள் குழு, காமன் சென்ஸ் எனப்படும் பொது விழிப்புணர்வு அறிவை, கணிப்பொறிகள் பெறும் வகையிலான ஒரு புதிய புரோகிராமை வடிவமைத்துள்ளது. இதன்மூலம், தேவையான அறிவைப்பெற, இணையதளம் மற்றும் லேபிள் படங்களில், கணிப்பொறி தானாகவே தேடலை மேற்கொள்ளும். Never Ending Image Learner(NEIL) என்று அழைக்கப்படும் அந்த புரோகிராம், கார்னேஜ் மெல்லன் பல்கலையில், ஒரு நாளைக்கு 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டுள்ளது. படங்களுக்காக வலைதளத்தில் தேடுதல், அதை சொந்தமாக புரிந்துகொள்ள முயற்சி செய்தல் மற்றும் பெரியளவில் காமன் சென்ஸ் திரட்டும் நடவடிக்கை உள்ளிட்டவை இந்த செயல்பாட்டில் அடக்கம். இதன்மூலம், வண்ணங்கள், வெளிச்சம் மற்றும் உபகரணங்கள் ஆகிய பண்புகளை, குறைந்தளவு மனித மேற்பார்வையில் அடையாளம் காணுதல் போன்ற சாத்தியங்கள் கணிப்பொறி துறையில் உருவாகும். மேலும், இதனால் உருவாக்கப்படும் தரவு, கணிப்பொறிகளின் திறனை அதிகரித்து, காட்சி உலகத்தை புரிந்துகொள்ளும் நிலைக்கு கொண்டுவரும். காட்சி அம்சங்களை புரிந்துகொள்ள படங்
ஐந்தாண்டு திட்டங்களில் உயர்கல்விக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்: அடுத்த இரு ஐந்தாண்டு திட்டங்களில் மத்திய அரசு உயர்கல்விக்கென 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது" என, பல்கலை மானியக் குழு துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்தார். கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: "எவ்வளவு அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் தரமான கல்வி போதிக்க ஆசிரியர்கள் அவசியம். இதை மனதில் வைத்து ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பல்கலை ஒன்றை ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பல்கலை மானியக் குழு உருவாக்கியுள்ளது. அடுத்த 2 ஐந்தாண்டு திட்டங்களில் உயர்கல்வியை மேம்படுத்த மத்திய அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவுள்ளது. இதில், 25 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பாக செயல்படும் தனியார் கல்வி நிறுவனங்களில் தொழில் சார்ந்த கல்வி அளிக்கவும், பாடங்களை உருவாக்கவும் வழங்கப்படும். மீதமுள்ள 25 ஆயிரம் கோடி ரூபாய் பல்கலை மானியக் குழுவுக்கு உயர்கல்வி மேம்பாட்டுக்கு செலவிட வழங்கப்படும். இந்திய கலாசார மேம்பாட்டுக்கும், சிறந்த ஆசிரியர்களை உர
மே மாதத்தில் நடத்த வேண்டிய, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்பதவி உயர்வு கலந்தாய்வு, விரைவில் ! மே மாதத்தில் நடத்த வேண்டிய, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவும், 450 உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இதுவரை, கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தொடர ....
2 டி.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு: சமீபத்தில் சி.இ.ஓ., காலியிடங்களை கல்வித்துறை நிரப்பியது. ஈரோடு அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரம்பலூர் ரெகுலர் சி.இ.ஓ.,பணியிடம்  மட்டும் காலியாக இருந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலாவள்ளி (சிவகங்கை),பத்மா (சேரன்மாதேவி) முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வுபெற்றுள்ளனர். கலாவள்ளி பெரம்பலூருக்கும் (ரெகுலர்) பத்மா ஈரோட்டிற்கும் (எஸ்.எஸ்.ஏ.,) நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையைபின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு: GOVT LTR - TO ENTER TAMIL DATE & YEAR IN GO & OFFICIAL ORDERS REG LETTER...
EMIS OFFLINE PRINTING-பள்ளி மாணவர்களின் விவரங்களை PRINT எடுப்பது எப்படி? முதலில் மாற்றப்பட்ட உங்களின் DATE BASE ஐ D ல் SAVE செய்துகொள்ளவும்  பின்னர் EMIS OFFLINE OLD VERSION ஐ UNINSTALL செய்து  இங்கு உள்ள LINK ல் புதிய EMIS OFFLINE NEW VERSION DOWNLOAD செய்து இன்ஸ்டால் செய்யவும் .. CLICK HERE NEW VERSION EMIS 1.5 PRINTING SOFTWARE .. HOW TO USE INSTRUCTION CLICK HERE... EMIS -ONLINE ல் அனைத்து போடோக்கக்ளையும் ஒரே சமயத்தில் சைஸ் மாற்றுவது எப்படி? Select Multiple Picture Files Add Files (You can select multiple pictures at once) Choose New Size for All Pictures Make my pictures: 75% smaller 50% smaller 25% smaller Custom Size: Width and/or    Height Save As: http://www.picresize.com/batch.php முதலில் இந்த வலைதளத்திற்கு சென்று திறந்து மேலே  உள்ள பக்கம் தெரியும் அதில் BROWSE ல் க்ளிக் செய்து COMPUTER ல் மாற்றப்படவேண்டிய போட்டோ FILE ஐ திறக்கவும் .பின்னர் custom size ல் widh andheight 200X200 என டைப் செய்து SAVE AS  ல் JPEG SELECT செய்து BATCH RE SIZE கிளிக் செய
இரட்டைப்பட்டம் வழக்கு விசாரணை மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி அன்று வருகிறது: இன்று ( 25.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் தலைமை நீதியரசர் மதிப்புமிகு ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் சத்தியநாரயணா முன்னிலையில் 12.15க்கு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு வழக்குரைஞர் தன்னுடைய எதிர் உரையை தாக்கல் செய்ய குறைந்தது ஒரு வார கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் அரசு தரப்பு எதிர் உரையை தயார் செய்து அதற்கான பதிலை பெறுவதற்கு இரட்டைப்பட்ட வழக்கறிஞர்களிடம் 10 தினங்களுக்குள் அளிக்க வேண்டும். அவர்கள் அதற்கான பதிலை 13.12.2013க்குள் தயார் செய்து முடித்திருக்க வேண்டும் எனவும், அடுத்த கட்ட விசாரணை 13.12.2013க்கு முதல் அமர்வில் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நீதிபதிகள் தங்கள் துறைகளை  மாற்றிக்கொள்ளும் சூழலில் நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிகிறது. எனவே வருகிற 13.12.2013 அன்று நீதியரசர் சத்தியநாரயணன் அவர்கள் இவ்வழக்கிற்காக சிறப்பு வரவாக சென்னை உயர்நீ
பாரதிதாசன் பல்கலை: தொலைநிலை பி.எட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் பி.எட் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. தேர்வு முடிவுகளை அறிய www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.  
இங்கிலாந்தில் ஓராண்டு முதுகலை: இந்தியாவில் தொடர் படிப்பு அவசியம்: இங்கிலாந்திற்கு சென்று ஓராண்டு முதுகலை பட்டம் முடிக்கும் மாணவர்கள், இந்தியாவில் அரசு வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்வதற்கு முன், தொடர் (Bridge) படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று எச்ஆர்டி தெரிவித்துள்ளது. இங்கிலாந்திற்கு சென்று ஒரு வருட முதுகலை பட்டப் படிப்பு முடித்துவிட்டு, இந்தியாவில் அரசு வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்யும் மாணவர்கள் Bridge என்ற 6 மாத கால தொடர் படிப்பை கட்டாயமாக முடித்திருக்க வேண்டும். பிரிட்ஜ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, அரசு வேலை வாய்ப்புக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் இந்திய மாணவர்கள் அரசு வேலை வாய்ப்புக்கு மட்டுமின்றி தேசிய அளவில் நடத்தப்படும் (NET) போன்ற நுழைவுத்தேர்களுக்கும் விண்ணப்பிக்க முடியும் என்று எச்.ஆர்.டிதெரிவித்துள்ளது
பள்ளிப் படிப்பில் இசை மற்றும் கலை அம்சங்கள்: பள்ளிப் பாடத்திட்டத்தில், இசை மற்றும் கலைப் பாடங்களை சேர்க்கும் முடிவை, மேகாலயா மாநில அரசு எடுத்துள்ளது. மாணவர்களுக்கு, கற்றலை எளிதாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் NCERT ஆகியவை இணைந்த Project -க்கு தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. மாணவர்களுக்கு, சம நிலையிலான கல்வியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும், எனவேதான் இசை உள்ளிட்ட அம்சங்கள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.  
விளையாட்டுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: ஆசிரியர்கள் புலம்பல்: விளையாட்டுக்கு என தனியாக நிதி ஒதுக்குவதில்லை என அரசு பள்ளி ஆசிரியர்கள் புலம்புகின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து மேம்படுத்துவதும் உடற்கல்வி குறித்த விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், விளையாட்டு ஆசிரியர்களின் முக்கிய பணி. அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்தே விளையாட்டு பிரிவுக்கான உபகரணங்கள் மற்றும் மாணவர்களை வெளியிடங்களில் நடக்கும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வது, உணவு செலவு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் அரசு தரப்பில் ஒதுக்கப்படும் நிதியை பள்ளிக்கு தேவையான செலவுக்கு மட்டும் ஒதுக்கிவிட்டு, விளையாட்டுக்கு என தனியாக நிதி ஒதுக்குவதில்லை என விளையாட்டு ஆசிரியர்கள் கூறுகின்றனர். அரசு பள்ளி விளையாட்டு ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: "பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மாணவர்களுக்கான செலவு என தனிப்பட்ட நிதி எதுவும் ஒதுக்கப்படுவதில்லை. பள்ளிக்காக வரும் நிதியில் இருந்தே இதற்கும் நிதி ஒதுக்க வேண்டும். பெரும்பாலான அரசு பள்ளிகளி
"நேர்மையாக உழைத்து முன்னேற வேண்டும்" தேர்வில் நேரம் போதாது என்பதற்கு கவனச் சிதறலே காரணம்; குறுக்கு வழியில் ஜெயிக்க நினைக்காமல், நேர்மையாக உழைத்து முன்னேற வேண்டும். குடும்பத்தினர், ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் உள்ளனர். அதை மனதில் நிறுத்தி படியுங்கள்; வாழ்வில் ஜெயிக்கலாம்" என, கல்வியாளர் ரமேஷ்பிரபா பேசினார். "தினமலர்" நாளிதழ் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான, "ஜெயித்துக்காட்டுவோம்" நிகழ்ச்சி சென்னை பல்கலை நூற்றாண்டு அரங்கில் நடந்தது. இதில், கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது: "பிளஸ் 2 வாழ்வில் முக்கிய காலகட்டம். பிளஸ் 2 வந்ததும் நீங்கள் பரபரப்பானீர்களோ இல்லையோ, உங்களைச் சுற்றியுள்ளோர், "நீ பிளஸ் 2; இதில் தான், உன் எதிர்காலமே இருக்கிறது" எனக்கூறி பரபரப்பாகி விடுவர். நவம்பர் வந்ததும், தேர்வுக்கு மூன்று மாதமே இருப்பதால் லேசான படபடப்பு வந்து எப்படியும் படித்துவிடுவோம் என, வந்துள்ளீர்கள். இந்த தேர்வில், நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. தேர்வை அணுகும் விதத்தில் குளறுபடிகள் ஏற்பட
EMIS -ONLINE ல் அனைத்து போடோக்கக்ளையும் ஒரே சமயத்தில் சைஸ் மாற்றுவது எப்படி? Select Multiple Picture Files Add Files (You can select multiple pictures at once) Choose New Size for All Pictures Make my pictures: 75% smaller 50% smaller 25% smaller Custom Size: Width and/or    Height Save As: http://www.picresize.com/batch.php முதலில் இந்த வலைதளத்திற்கு சென்று திறந்து மேலே  உள்ள பக்கம் தெரியும் அதில் BROWSE ல் க்ளிக் செய்து COMPUTER ல் மாற்றப்படவேண்டிய போட்டோ FILE ஐ திறக்கவும் .பின்னர் custom size ல் widh andheight 200X200 என டைப் செய்து SAVE AS  ல் JPEG SELECT செய்து BATCH RE SIZE கிளிக் செய்தால் WIN.RAR ல் மாற்றப்பட்ட அனைத்து போடோக்களும் கிடைக்கும் இதனை வேறொரு FILE NAME ல் சேவ் செய்து பயன்படுத்தலாம். http://www.dotnethelpers.com/Ultimate_Image_Resizer/Live_Demo http://www.imageoptimizer.net/Pages/Home.aspx http://www.resize2mail.com/advanced.php http://www.fixpicture.org/ மேலே உள்ள link ஐ click செய்தும் பயன்படுத்தலாம்.மேலும் சந்தேகங்களுக்கு 8754148487 மற்றும்