Skip to main content

Posts

Showing posts from May, 2014

பள்ளி சான்றிதழ்கள் தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?

மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: கல்வி அலுவலர் எச்சரிக்கை:

பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம், கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், கடும் எச்சரிக்கை விடுத்தார்.கடந்த கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வில், ஈரோடு மாவட்டம், மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பெற்றது. இதனால், அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பாராட்டு விழா, ஈரோடு, அரசு மகளிர் மேல்நில>ைப் பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பேசியதாவது: தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பால், ஈரோடு மா வட்டம், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 தேர்வில், தேர்ச்சி விகிதத்தில், மாநில அளவில் முதலிடத்தை பெற்று, சாதனை படைத்தீர்கள். இந்த பாராட்டையும், பரிசையும் தொடர்ந்து தக்க வைப்பதும், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பதும், தலைமையாசிரியர்கள் கைகளில் தான் உள்ளது. ஜூன், இரண்டாம் தேதி பள்ளி துவங்குகிறது. அன்றைய தினம், மாணவர்களுக்கு ஒரு செட் யூனிஃபார்ம், நோட்டு, புத்தகங்கள் கண்டிப்பாக வழங்க வேண்டும், என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதுபற்றி சந்தேகம் இருந்தால், தொலை

பள்ளி கல்வி இயக்குனரகம் முற்றுகை - ஆர்ப்பாட்டம் (படங்கள்):

மனித உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பாக இன்று  பள்ளி கல்வி இயக்குனரகம் முற்றுகை - ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது .

ஆசிரியர் தகுதி தேர்வு விடுபட்டவர்களுக்கு ஜூன் 10ல் சான்றிதழ் சரிபார்ப்பு:

ஆசிரியர் தேர்வு வாரி யம் சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது . இதற்கான விடைகள் கடந்த நவம்பர் 5 ம் தேதி வெளியிடப்பட்டது . இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்டம் வாரியாக நடைபெற்றது . இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கா மல் விடுபட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது . ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஜூன் 10 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை மதுரை , சேலம் , திருச்சி , விழுப்புரம் ஆகிய 4 மையங்களில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது . இதற்காக தேர்வர்கள் , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம் மற்றும் பயோடேட்டா போன்றவற்றை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . சான்றிதழ் சரிபார்ப்பு கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி , ராமநாதபுரம் , சிவகங்கை , விருதுநகர் , தேனி , மதுரை , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மதுரை ஒசிபிஎம் பெண்கள் மேல்நிலை

தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளித்திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு:

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாதநிலையில் வரும் ஜூன் 2 பள்ளிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி பரவலாக பெற்றோர்கள்,மாணவர்கள் மத்தியில் நிலவியது.இதனை குறித்து பள்ளிக்கல்வித்துறை இறுதி முடிவாக திட்டமிட்டப்படி ஜூன் 2பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ளது.ஆனால்  தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும்(1முதல் 5ஆம் வகுப்புவரை)பள்ளிகள் தள்ளிபோக வாய்ப்புள்ளது.இன்று நடைபெறும் இயக்குனர்கள் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டு, இன்று அறிவிக்கப்படலாம் என கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

20 ஆயிரம் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை எழுதுவதில் சிக்கல்: கணக்கெடுப்பில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம:

தமிழ் அல்லாத பிற மொழியை, முதல் பாடமாக படிக்கும் மாணவர்கள், 20 ஆயிரத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள், 2016ல், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது குறித்த விவரங்களை, ஒவ்வொரு பள்ளி வாரியாக சேகரிக்க, மெட்ரிக் பள்ளிஇயக்குனரகம்,உத்தரவிட்டுள்ளது.கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தின் கீழ், 2016, மார்ச் - ஏப்ரலில் நடக்கும் 10ம் வகுப்பு பொது தேர்வை, அனைத்து மாணவ, மாணவியரும், முதல் பாடமாக, தமிழ் தேர்வை எழுத வேண்டும். தற்போது, எட்டாம் வகுப்பை முடித்துள்ள மாணவர்கள், 2016ல், 10ம் வகுப்பு தேர்வை எழுதுவர்.தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், முதல் பாடமாக, தமிழ் அல்லாத பிறமொழி பாடத்தை தேர்வு செய்து, படித்து வருகின்றனர்.இவர்கள், '2016ல், தமிழ் தேர்வை எழுதியே ஆக வேண்டும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை, திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதனால், பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.தமிழக அரசின் கிடுக்கிப்பிடி உத்தரவு காரணமாக, த

தேர்ச்சி விகிதம் குறைவு: ஆசிரியர்களை மாற்ற முடிவு:

பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.சமீபத்தில் வெளியான பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. சில அரசு பள்ளிகள் 42 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளன. இதையடுத்து, நாகர்கோவில் மாவட்டத்தில் சில தலைமை ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதற்கு ஆசிரியர்கள் மத்தியல் எதிர்ப்பு கிளம்பியதால், 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை கல்வித்துறை நிறுத்தியது. இந்நிலையில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதையடுத்து, 60 சதவீதத்திற்கு கீழ் தேர்ச்சி விகிதம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். 'ஆசிரியர்கள் இடமாறுதல், பதவிஉயர்வுக்கான 'கவுன்சிலிங்' துவங்குவதற்கு முன், இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் ஆ

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சலுகை: ஐகோர்ட் உத்தரவு

ஓய்வுபெற்ற துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி மாற்றியமைக்கப்பட்ட சம்பளம், ஓய்வூதியப் பலன்கள் வழங்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.கன்னியாகுமரி ராஜாதங்கம் உட்பட, நான்கு பேர், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு துவக்கப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றோம். துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஐந்தாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, மாற்றியமைக்கப்பட்ட சம்பள விகிதம், 1988 ஜூன் முதல் அமல்படுத்தப்பட்டது. எங்கள் பணிக்காலத்தில் இடைநிலை ஆசிரியர்களிலிருந்து, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்ட, 174 பேருக்கு, சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, சம்பள விகிதத்தை மாற்றியமைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. எங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி சம்பள விகிதம், ஓய்வூதியப் பலன்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்களின் மனுவை, பள்

பள்ளி திறப்பு நாளில் நோட்டு, புத்தகம் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை: இணை இயக்குனர் எச்சரிக்கை:

பள்ளி திறக்கும் நாளில், விலையில்லா நோட்டு, புத்தகங்களை வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி பேசியதாவது: பள்ளிதிறக்கும் போது, அனைத்து மாணவர்களுக்கும், தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பொருட்களான புத்தகம், நோட்டு ஆகியவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. படிப்படியாக மற்ற விலையில்லா பொருட்களான சீருடை, எழுது பொருட்கள் வழங்கப்படும். தமிழக அரசின் விலையில்லா நோட்டு, புத்தகங்களை, பள்ளி திறக்கும் நாளில் வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா பள்ளிகளிலும், மழை நீர் சேகரிப்பு தொட்டி அவசியம் இருக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸை, மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக இலவச பஸ் பாஸ் பெற தகுதியுள்ள மாணவர்களுக்கு, தாமதம் இன்றி பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும

ஒன்றிய கல்விக்குழு கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை: கல்வியாளர்கள் புகார்:

கிராமங்களில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான ஒன்றிய கல்விக்குழு கூட்டம், பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் முறையாக நடத்தப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கல்வித்தரம், அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ஒன்றிய கல்விக்குழு செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஒன்றிய கல்விக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டத்தில், ஒன்றியக் குழுத் தலைவர், உதவி தொடக்க கல்வி அலுவலர், வார்டு கவுன்சிலர்கள், கல்வியாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள் பங்குபெற வேண்டும். ஒன்றியத்திலுள்ள பள்ளிகளின் மேம்பாடு குறித்த நடவடிக்கைகள், அடிப்படை வசதிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிைறவேற்றப்படும். ஆனால், பெரும்பாலான ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய குழு கூட்டம் நடத்தப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது.நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளின் வளர்ச்சி, தேவையான வகுப்பறை, மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர

போலி உத்தரவில் ஆசிரியர்கள் நியமனம் உதவி தொடக்க கல்வி அலுவலர் சஸ்பெண்ட்:

கோவை மாவட்டத்தில் 1,142 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 15 வட்டாரங்களில் மாவட்ட உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் உள்ளனர். இந்நிலையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 7 ஆசிரியர்கள் 2010க்கு முன் பணியில் சேர்ந்ததாக பதிவேடு தயாரித்து, பணி நியமனம் முறைகேடு நடந்தது என தகவல் பரவியது. இதையடுத்து, கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையை நடத்தி,அந்த அறிக்கையை சென்னைக்கு அனுப்பிவைத்தனர். இதில் ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததை தொடக்க கல்வி இயக்குனரகம் உறுதி செய்தது. இதையடுத்து, வால்பாறை உதவி தொடக்க கல்வி அலுவலர் காளிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விதியை மீறி பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 7 பேரிடமும் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், வால்பாறை உதவி தொடக்க கல்வி அலுவலர் அரசு பள்ளிகளில் முறைகேடான ஆசிரியர் நியமனத்திற்கு துணை போனது, முதல் கட்டமாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த கல்வி அதிகாரியை கல்வித்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது என்றார்.

திட்டமிட்டபடி ஜூன் 2-இல் பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளி கல்வித் துறை:

கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் திட்டமிட்டபடி ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பது சில நாள்கள் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், திட்டமிட்டவாறு பள்ளிகளை ஜூன் 2-ஆம் தேதியே திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. பள்ளி கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதியிலிருந்தும், தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு மே 1-ஆம் தேதியிலிருந்தும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது 4.2 கோடி புத்தகங்கள்: பள்ளிகள் திறக்கும் நாளான ஜூன் 2-ஆம் தேதியே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து 4.2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முதல் பருவத்துக்காக 2.2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 2 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் எ

10 ஆயிரம் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் வெளியீடு:

புதிய பள்ளிகள், மேல்முறையீடு செய்த பள்ளிகள் உள்பட 10 ஆயிரத்து 55 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்கள் தமிழக அரசின்நீதிபதி எஸ்.சிங்காரவேலு குழு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு கட்டணம் நிர்ணயம் செய்தது. 2013-14, 2014-15, 2015-16 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்கும் சேர்த்து இந்தக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் நீதிபதி சிங்காரவேலு குழுவிடம் மேல்முறையீடு செய்தன. அதே போல், பல தனியார் பள்ளிகள் நீதிமன்றத்திலும் வழக்குகளைத் தொடர்ந்தன. இந்தப் பள்ளிகளுக்கும் புதிதாகத் தொடங்கப்பட்ட பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து இப்போது தமிழக அரசின் இணையதளத்தில் கட்டண நிர்ணய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் கூறியது: மேல்முறையீடு செய்த பள்ளிகள் மற்றும் நீதிமன்றம் சென்ற பள்ளிகள், புதிய பள்ளிகள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைவுதான். இந்தப் பள்ளிகளுக்கான புதிய கட்டண நிர்ணயத்தோடு, ஏற்கெனவே கட்டணம் நிர்ணயிக்கப்

பள்ளிகளில் மாணவனின் பெயர் / பிறந்த தேதி / தந்தை பெயர் /சாதி மற்றும் முகப்பெழுத்து திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள்:

பள்ளிகல்வி இயக்குநரின் செயல்முறைகள்-ந.க.எண் 28192/எம்/இ3/2014.நாள்-09.05.2014-திருத்தம் குறித்து இயக்குநரின் அறிவுரைகள்.

கோவை கல்வி மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் (2014-15) 92 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள்!

கோவை கல்வி மாவட்டத்தில், நடப்பு கல்வியாண்டில் (2014-15) 92 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்க உள்ளதாக, தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) காந்திமதி தெரிவித்தார்.அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆங்கிலத்தின் மீது கொண்ட மோகத்தால், தனியார் பள்ளிகளை நாடும் பெற்றோர்களை கவரும் வகையில் கடந்த இரண்ட ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி செயல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த கல்வியாண்டில், மாநிலம் முழுவதும் 3000 பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி துவங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், இரண்டு ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை 50 ஆக இருந்தால், ஆங்கில வழிக்கல்வியை துவக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில், 249 பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மே முதல் வாரத்திலேயே துவங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க, ஆசிரியர்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரங

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: 9ம் தேதி வரை வினியோகம்:

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசம் , ஜூன் , 9 ம் தேதி வரை , நீட்டிக்கப்பட்டு உள்ளது . கடந்த , 14 ம் தேதி முதல் , விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது . விண்ணப்பம் பெறவும் , பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் , ஜூன் , 2 ம் தேதி , கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்நிலையில் , வரும் , 9 ம் தேதி வரை , விண்ணப்பம் வழங்கப்படும் என , தமிழக அரசு அறிவித்துள்ளது . இது குறித்து , ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி , பயிற்சி இயக்குனர் , கண்ணப்பன் கூறுகையில் , '' இதுவரை , 4,800 விண்ணப்பங்கள் , விற்பனையாகி உள்ளன . இதில் , 2,300 விண்ணப்பங்கள் , பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்டுள்ளன ,'' என்றார் .

தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான தேதி மாற்றியமைப்பு:

தொடக்க கல்வி பட்டயத்தேர்விற்கான தேதி , மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது . தொடக்க கல்வி பட்டயத் தேர்விற்கான முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு நாட்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது . திருமூர்த்திமலை மாவட்ட கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை : ஜூன் 11 ம் தேதி துவங்க இருந்த இரண்டாம் ஆண்டு தேர்வுகள் , ஜூன் 26 ம் தேதி துவங்கி ; ஜூலை 3 ம் தேதி முடிகிறது . இதன்படி 26 ம்தேதி - இந்திய கல்வி முறை , 27- கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும் , 28- தமிழ் மொழிக்கல்வி , 30- ஆங்கில மொழிக் கல்வி , ஜூலை 1 ம் தேதி - கணிதவியல் , 2- அறிவியல் , 3- சமூக அறிவியல் . ஜூன் 20 ம் தேதி நடக்கயிருந்த முதலாண்டு பட்டயத் தேர்வுகள் ஜூலை 7 ம்தேதி துவங்கி ; 14 ம் தேதி வரை நடக்கிறது . ஜூலை 7 ம்தேதி - கற்கும் குழந்தை , 8- கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும் , 9- இளஞ்சிறார் கல்வி மொழிக் கல்வி , 10- கணிதவியல் , 11- அறிவியல் , 12- சமூக அறிவியல் , 14- ஆங்கில மொழிக் கல்வி . தேர்வுகள்

மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் இறுதி கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டு, 7வது ஊதியக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ள கேள்வி, விடைகள் அடங்கிய தொகுப்பு:

CLICK HERE-Final version of Reply to 7th CPC Questionnaire formulated by Staff Side JCM National Council...

TNTET தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம்? பணிநிரவலுக்குப் பின்னரே தெரியும்!!

டிஇடி ஆசிரியர் தேர்வில் பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு 6,210,  புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போ வதாகபள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் உடனடியாக ஜூன் மாதம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், உபரி ஆசிரியர்கள் பட்டியல்தயாரிக்க கூறியதால், அதற்கான பணி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் அரசுப் பள்ளிகளில்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இட மாறுதல் கவுன்சலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங்நடத்தப்படுவது வழக்கம். அதற்கு பிறகு தான் புதிய ஆசிரியர்கள் நியிமிக்கப்படுவார்கள்.ஆனால் கடந்த 2013ல் எடுக்கப்பட்டஉபரி ஆசிரியர்கள் பட்டியலில் உள்ளபடி இடமாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் செய்ய வேண்டியுள்ளது. இந்த மே மாதம்நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது

50 மாணவர்கள் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க அரசு உத்தரவு:

50 மாணவர்களும், அதற்கு மேலும் உள்ள இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை நிகழாண்டிலதொடங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்க,உயர்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசு ஆங்கில வழிக்கல்வியை கடந்தாண்டு தொடங்கியது. இதில், கடந்தாண்டு முதல் வகுப்பு, 6-ஆம் வகுப்புகளில் மட்டும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க கட்டாயமாக்கப்பட்டது. மேலும், மூன்று ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளை தொடங்க கல்வித் துறை உத்தரவிட்டது. இரு ஆசிரியர்கள் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்க கட்டாயமில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், நிகழ் கல்வியாண்டில் கடந்த ஆண்டு விடுபட்டத் தொடக்கப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தொடங்கிட தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும் தங்களுக்கு கீழ் உள்ள உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடமும் இதைச் செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், தங்கள் ஒன்றியத்தில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் மட்டும் பணிபுரிய

TN Private Schools Fee Determination Committee - Latest up dated (inclusive order on Objection) Fee Structure 2013-2016:

Justice Thiru S.R Singaravelu, Chairman,  Private Schools Fee Determination Committee,  Chennai - 600 006. Fee Structure for the year 2013-2016 District wise Particulars Latest updated  ( inclusive order on Objection) District Ariyalur Fixation Chennai Fixation Coimbatore Fixation Cuddalore Fixation Dharmapuri Fixation Dindigul Fixation Erode Fixation Kancheepuram Fixation Kanyakumari Fixation Krishnagiri Fixation Madurai Fixation Nagapattinam Fixation Namakkal Fixation Perambalur Fixation Pudukkottai Fixation Ramanathapuram Fixation Salem Fixation Sivagangai Fixation Thanjavur Fixation The Nilgiris Fixation Theni Fixation Thiruvallur Fixation Thiruvarur Fixation Tiruchirappalli Fixation Tirunelveli Fixation Tiruppur Fixation Tiruvannamalai Fixation Tuticorin Fixation Vellore Fixation Villupuram Fixation Virudhunagar Fixation

கால்நடை மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பங்கள் பெற இன்று கடைசி நாள்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்குழு தலைவர் எம்.திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– கால்நடை மருத்துவம், உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளில் 2014–15–ம் ஆண்டு மாணவ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 12–ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்தின் 14 விற்பனை நிலையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை கால்நடை மருத்துவம், உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப இளநிலை பட்டப்படிப்புகளில் சேர 19 ஆயிரத்து 56 பேர் விண்ணப்பங்களை பெற்று சென்றுள்ளனர். விண்ணப்பங்கள் பெறுவதற்கு இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். விண்ணப்பங்களை மாலை 5 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜூன்) 2–ந்தேதி மாலை 5.45 மணிக்குள் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்களும் அடுத்த மாதம் (ஜூன்) 2–ந்தேதி மாலை 5.45 மணிக்குள் பல்கலைக்கழக இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு செ

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்-12.06.2014-உறுதிமொழி-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை:

ஓரிரு நாளில் விடைத்தாள் நகல்தேர்வு துறை இயக்குனர் தகவல்:

பிளஸ் 2 விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, ஓரிரு நாளில், விடைத்தாள் நகல், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும்,'' என, துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:பிளஸ் 2, விடைத்தாள் நகல் கேட்டு, 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். மறுகூட்டல் கேட்டு, 3,000 பேர் விண்ணப்பித்தனர்.விடைத்தாள் நகல் கேட்ட மாணவர்களின், விடைத்தாள்கள், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அவை, 'ஸ்கேன்' செய்யபபட்டு வருகின்றன.இந்தப் பணி, மிக விரைவில் முடிவடையும். அதன்பின், ஓரிரு நாளில், ஜூன், 2ம் தேதிக்குள், விடைத்தாள் நகல்கள், தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்படும். ஒரே நாளில், 80 ஆயிரம் பேருக்குமான நகல்கள், பதிவேற்றம் செய்யப்படாது.பாட வாரியாக, வெவ்வேறு தேதிகளில், விடைத்தாள் நகல்கள், பதிவேற்றம் செய்யப்படும். மறு மதிப்பீட்டில், மதிப்பெண் குறையவும் வாய்ப்பு உள்ளது.எனவே, மாணவர்கள், தங்கள் பாட ஆசிரியரிடம், நன்றாக ஆலோசித்து, அதன்பின் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தும் பள்ளிக்கு பரிசு வழங்கப்படும்' என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது:

பள்ளிகல்வித்துறை முதன்மை செயலர் சபீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாநில குடிநீர் வினியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம், முதல்வர் ஜெ., தலைமையில் நடத்தப்பட்டது. அதில், 'அனைத்துப்பள்ளிகளிலும், ஜூன் 30க்குள், மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என, முதல்வர் உத்தரவிட்டார். ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ள பள்ளி கட்டடங்களில், ஜூன் 30க்குள், மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும். அதற்காக, மாணவர்களைக்கொண்டு ஊர்வலங்கள் நடத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொடர்பாக, பள்ளி வளாக சுவர்களில், வாசகங்கள், கரும்பலகையில், தினம் ஒரு தகவல் எழுத வேண்டும். பள்ளிகளில், இறைவணக்கத்தின் போது, மழைநீர் சேகரிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும்.குடிநீர் வடிகால் வாரிய இன்ஜினியர்கள் மூலம், அத்திட்டத்தின் அவசியம் தொடர்பாக, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை கையாண்டு, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தும் பள்ளிக்கு விருது வழங்கப்படும். 'மழைநீர் சேகரிப்பு' என்ற தலைப்பில், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகளை, அனைத்து பள்ளிகளிலும் கிராம அளவில

செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க திட்டம்:

மத்திய அரசு ஊழியர்களுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அமல்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதுதொடர்பாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: 'மத்திய அரசு ஊழியர்களுக்கு, அவர்களின் திறமை மற்றும் செயல்திறன் அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தலாம்' என, ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்தது. இதை, மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஏற்றுக் கொண்டாலும், கொள்கை அளவில் மட்டுமே ஒப்புதல் அளித்தது. இந்த செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை குறித்து, பிரதமர் நரேந்திர மோடியிடம், மத்திய பணியாளர் நலத்துறை அதிகாரிகள், விரைவில் விளக்கம் அளிக்க உள்ளனர். அப்போது, ஊக்கத் தொகை திட்டத்திற்கு மோடி ஒப்புதல் அளித்து விட்டால், விரிவான வழிகாட்டிக் குறிப்புகள் தயார் செய்யப்படும். ஏற்கனவே இதுதொடர்பாக, முந்தைய ஆட்சியில், வரைவு வழிகாட்டிக் குறிப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த வரைவு வழிகாட்டிக் குறிப்புகளுடன், மோடி தெரிவிக்கும் யோசனைகளின் அடிப்படையில், புதிய விதிமுறைகள் இடம் பெ

SPECIAL TET 2014 PAPER 2 QUESTION PAPERS-CLICK HERE:

SPECIAL TET 2014 PAPER 2 QUESTION PAPER-CLICK HERE... இந்த கேள்வித்தாள் ஒரு மாணவனின் கேள்வித்தாள்-இதில் குறிக்கப்பட்டுள்ள விடைகளுக்கு கல்விக்குரல் பொறுப்பல்ல....

AS ON 01.01.2014 B.T TO PG PANEL UPDATED CLICK HERE:

SL.NO SUBJECT DOWNLOAD LINK 1 TAMIL DOWNLOAD - CLICK HERE 2 MATHEMATICS DOWNLOAD - CLICK HERE 2 ENGLISH-SM DOWNLOAD- CLICK HERE 3 ENGLISH-CM DOWNLOAD- CLICK HERE 4 PHYSICS DOWNLOAD- CLICK HERE 5 CHEMISTRY DOWNLOAD - CLICK HERE 6 BOTONY DOWNLOAD - CLICK HERE 7 ZOOLOGY DOWNLOAD- CLICK HERE REMINDER SUBJECTS UPDATE SOON