Skip to main content

Posts

Showing posts from April, 2013
éG¥ òu « kht£l ¡ fšé mYtyç ‹ brašKiwfŸ   e.f.v © 2883/m3/2013   ehŸ : 29.04.2013 bghUŸ :     nj®ÎfŸ – Ïilãiy bghJ¤nj®Î – kh ®¢ / V¥uš 2013 nj®Î    KoÎfŸ btëahjš F¿¤ jhd m¿ÎiufŸ - rh ®ªJ. gh®it :      Ï›tYtyf Ïnj v©,   ehŸ : 9.11.2013                                           - ----             eilbg‰W Koªj 2012 – 2013 M« fšé M©oš Ïilãiy ¡ fšé ¡ (6 M« tF¥ò Kjš 9 M« tF¥ò tiu ) fhd éil¤jh£fis 30.04.2013  ¡FŸ kÂ¥ÕL brŒJ kÂ¥bg © g£oaš jahç¤J 06.05.2013 §fŸ » Hika‹W éG¥òu «, muR kfë ® nkšãiy ¥ gŸëæš eilbgW « kht£l ¡ fšé mYty ® T£l¤Âš x¥òjš bg‰W nj®Î KoÎfis 08.05.2013 òj ‹» Hika‹W btëæl¥gl nt©L « vd r«gªj¥g£l gŸë jiyik MÁça®fŸ / Kjšt®fS¡F bjçé¡fyh»wJ . 1.        Ô®khd ¥ gÂnt£oš gŸë ¤ jiyik MÁça ® k‰W « MÁça ® FG x¥òjš bg ‰¿ U¡f nt© L «. bjhF¥ò , kÂ¥bg © g£oaš _‹W ÃuÂfëš     x¥gil¡f nt©L «. 2.      jftš ika bghW¥ò ( Nodel HM) jiyik MÁça®fŸ nj ®¢Á m¿¡ ifæid rçgh ®¤J 03.05.2013 ¡FŸ ifbah¥g « bg‰W it¤ÂU¡f nt©L «. 3.      ã cjébgW «
 தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (D.A) உயர்வு எப்பொழுது? மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 72%-80%சதவிதமாக மத்திய அரசு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்பட்டது .அதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை (ஜெனவரி,ஜூலை)விலைவாசியின் உயர்விற்கு தக்கவாறு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் .அனால் இந்த ஆண்டு ஜெனவரி மாதம் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி மத்திய அரசு சற்று தாமதமாக சென்ற வாரம் ஆணை வெளியிட்டது .அதனை தொடர்ந்து தமிழக அரசின் அகவிலைப்படி உயர்வின் அறிவிப்பு எப்பொழுது வெளியிடுவார்கள் என அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன்  இருக்கிறார்கள் 
இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி ஓரிரு நாட்களில் அறிவிப்பு: இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரான டாக்டர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். நாமக்கலில் பேசிய அவர், தொலைதூர பட்டயப் படிப்பில் புதிதாக 11 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு கால அட்டவணை வெளியீடு: வரும் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு கால அட்டவணை அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. பட்டயப் படிப்பிற்கான முதலாம் ஆண்டு தேர்வு ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்குகிறது. பட்டயப் படிப்பிற்கான இரண்டாம் ஆண்டுத் தேர்வு ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது. தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை நடைபெறும். ஜூன் 24-ஆம் தேதி தொடங்கும் இரண்டாமாண்டு தேர்வில் முதல் நாளன்று இந்திய கல்வி முறை, 25-ஆம் தேதி கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. 26-ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம் உள்ளிட்ட மொழிகள் தொடர்பான தாள் மற்றும் இளஞ்சிறார் கல்வித் தேர்வு நடைபெற உள்ளது. ஜூன் 27, 28 மற்றும் 29 தேதிகளில் ஆங்கிலம், கணிதவியல் மற்றும் அறிவியல் தேர்வுகள் நடைபெறும். ஜூலை ஒன்றாம் தேதி, சமூக அறிவியல் தேர்வுடன் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் நிறைவடைகின்றன. முதலாமாண்டுக்கான தேர்வு ஜூலை 4-ஆம் தேதி கற்கும் குழந்தை என்ற தாளுடன் தொடங்குகிறது. 5-ஆம் தேதி, கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும் என
பட்டதாரிகள் தொழில் தொடங்க முன்வரவேண்டும்: மத்திய அமைச்சர் பேச்சு: பட்டம் பெற்றவர்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும்" என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜூ பேசினார். மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி பட்டமளிப்பு விழா செயலாளர் விஜயராகவன் தலைமையில் நடந்தது. மத்திய அமைச்சர் பல்லம் ராஜூ, பட்டங்கள் வழங்கி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு உயர்கல்வி மிக அவசியம். இந்தியாவில் 23 கோடி குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்கின்றனர். இது 96 சதவீதம்தான். விரைவில் அது 100 சதவீதத்தை எட்டிவிடும். இந்தியாவில் உயர்கல்வியின் வளர்ச்சி 18.8 சதவீதம் மட்டுமே. இந்த ஆண்டு 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். தொழில் சார்ந்த கல்வி அவசியம். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் மாணவர்கள் தொழில்நுட்ப திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பட்டம் பெற்றவுடன் பிறரிடம் வேலைக்கு செல்வதை தவிர்த்து, தொழில் தொடங்கி பலருக்கு வேலை கொடுக்க முன்வரவேண்டும். நாட்டின் பொருளாதாரம் விரைவான வளர்ச்சிக்கு உதவும், என்றார்.  
ஜனாதிபதியிடம் பரிசு பெறுவதற்காக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவி: கட்டுரைப்போட்டியில் தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல் மாணவி, பரிசு வழங்கும் தேதியில் மாற்றமில்லை என்று அறிவித்ததால், பொதுத்தேர்வை எழுதாமல் ஜனாதிபதியிடம் பரிசு பெற சென்றார். டாடா நிறுவனம், பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியை நடத்தியது. தேசிய அளவில் 5000 மாணவர்கள் பங்கேற்றனர். மொழி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் நடந்த போட்டியில் சுற்றுச்சூழல் என்ற தலைப்பில், திண்டுக்கல், புனித வளனார் மேல்நிலைப்பள்ளியின், 10ம் வகுப்பு, மாணவி ஐஸ்வர்யா, இரண்டாம் இடம் பெற்றார். டில்லியில் நடந்த விழாவில் தேசிய அளவில் தேர்வான மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, "மினி லேப் டாப்," "ஷீல்டு," ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார். ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற மாணவி ஐஸ்வர்யாவை, கலெக்டர் வெங்கடாசலம் பாராட்டினார். ஜனாதிபதி பரிசு பெறும் நாள் முடிவு செய்யப்பட்ட அன்று, ஐஸ்வர்யாவிற்கு 10 ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடந்தது. பரிசு வழங்கும் தேதியில் மாற்றமில்லை என்று
புதிதாக துவங்கப்படும் மற்றும் புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்: புதிதாக துவங்கப்படும் மற்றும் புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள், மே 30க்குள் அங்கீகாரம் பெறுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூரில் நர்சரி பள்ளிகள், ஜூன் மாதம் துவங்குகிறது; ஏப்., துவக்கத்தில் இருந்து, மே இறுதி வரை நர்சரி பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை நடக்கிறது. மாணவர் சேர்க்கையில் "பிஸி"யாக உள்ள பள்ளிகள், அதிக வேலைப்பளு காரணமாக, பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிக்க தவறும் வாய்ப்புள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக துவங்கப்படும் நர்சரி பள்ளிகள்; மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள் வரும் மே 30க்குள், அங்கீகாரத்தை பெற வேண்டும். அங்கீகாரம் பெறவோ, புதுப்பிக்கவோ தவறும் பட்சத்தில், நர்சரி பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  
தமிழகம் முழுவதும் 51ஆயிரம் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு - கல்வித்துறை  நடவடிக்கை  பள்ளி படிப்பை, இடையில் நிறுத்திய குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே செல்லாமல் உள்ள குழந்தைகள், 51 ஆயிரம் பேர் இருப்பது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களை, வரும் கல்வி ஆண்டில், பள்ளியில் சேர்க்க கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளி கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து, தமிழகத்தில் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தியது. பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள், பள்ளிக்கே செல்லாத குழந்தைகள் என, இரு பிரிவினர் குறித்தும், கணக்கு எடுக்கப்பட்டது. இதில், 51 ஆயிரத்து, 173 பேர், பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது, தெரிய வந்துள்ளது.இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், முழுமையான தகவல்களை, பள்ளி கல்வித்துறை சேகரித்துள்ளது. "பள்ளி செல்லாததற்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும், வரும் கல்வி ஆண்டில், அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது" என, கல்வித்துறை அதிகாரி, ஒருவர் தெரிவி
தாகத்தில் தவிக்கும் பறவைகள்; தண்ணீர் கொடுத்து உதவுங்கள்: சுட்டெரிக்கும் வெயிலால் தாகத்தில் தவிக்கும் பறவைகளுக்கு, தண்ணீர் கொடுத்து உதவுங்கள்," என, இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மக்கள் தொகை பெருக்கத்தால், விலங்குகளின் வாழ்விடங்கள், பறவையினங்கள் வாழும் அடர்ந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு, குடியிருப்புகளாக மாறி வருகின்றன. வெள்ளை அரிவாள் மூக்கன், மீன்கொத்தி, மைனா, நீர்காகம், சிட்டுக்குருவி, பாம்புதாரா, தேன்சிட்டு, சின்னான், சிவப்பு மூக்கன், சாம்பல் நாரை என 300க்கும் மேற்பட்ட பறவையினங்கள் உள்ளன. நீர் நிலைகள், மரங்கள் அடர்ந்த பகுதி, குளம், குட்டைகளில் இப்பறவைகள் வாழ்கின்றன. சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கத்தால், தண்ணீர் இருப்பிடத்தை தேடி பறவைகள் பறந்து அலைகின்றன. சுட்டெரிக்கும் வெயிலால் மனிதர்கள் மட்டுமின்றி, பறவைகளும் தாகத்தால் வாடுகின்றன; பறவைகளுக்கு, தண்ணீர் கொடுத்து உதவுங்கள் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். "ஓசை" அமைப்பு தலைவர் காளிதாஸ் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள பறவையினங்கள் தண்ணீர் பருகும் நேர அட்டவணையை குறிப்பிட்டுச் சொல்ல ம
கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு: "கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி, நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு ஆகும்," என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர், பல்லம் ராஜூ பேசினார். திண்டுக்கல், காந்திகிராம் பல்கலையில், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து அவர், பேசியதாவது: மக்கள் தொகையில், அதிகமானோர் கிராமங்களில் வசிக்கின்றனர். இவர்களில், 65 சதவிகிதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர். தற்போது, விவசாய பரப்பு மிகவும் சுருங்கி வருவது கவலையளிக்கிறது. விவசாயத்தை பாதுகாப்பதன் மூலம் தான், நாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்ய முடியும். இதற்கு கிராம பொருளாதாரம் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். கிராமம் மற்றும் கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு, அதிக விழிப்புணர்வு தரப்பட வேண்டும். கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி, நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு ஆகும். இவ்வாறு, பல்லம் ராஜூ பேசினார்.  
பயின்றதை பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே இலக்கை அடைய முடியும்: இந்தியாவின் கல்வி முறை ஒரு தனி நபரின் ஆளுமைத் தன்மையைமேம்படுத்துவதற்கென்று எந்தவித பிரத்யேக முயற்சியையும் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்படவில்லை. எனவே, மென்திறன்கள் குறித்த விழிப்புணர்வை பெறுவதுதான் நிறுவனத்தில் அடுத்த நிலைகளை எட்டுவதற்கு உதவும் என்பது வல்லுனர்களின் கருத்தாகும். மென்திறன் பயிற்சிகள் இது குறித்த புரிதலை ஓரளவு ஏற்படுத்த உதவும் என்பதால் முறையான பயிற்சி நிறுவனங்களின் மூலமாக அவற்றை மேற்கொள்வது நமது பணி எதிர்காலத்திற்கான உத்திரவாதத்தை தர முடியும். ஆனால் பயின்றதை பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே நமது இலக்கை அடைய முடியும் என்பதை மறந்து விடக்கூடாது. உங்களுக்கு நீங்களே பயிற்சியாளராக மாறுங்கள்! நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் திறன்களை வளர்ப்பதற்கு என்று பல லட்சம் ரூபாய்களை மூலதனமாக இடுகின்றன. பயிற்சி, திறன் மேம்பாடு என்று பல்வேறு முயற்சிகளை இந்த நிறுவனங்கள் மேற்கொண்ட போதும் தனி நபரின் புரிதல் மட்டுமே நிறுவனம் மற்றும் ஊழியரின் எதிர்கால வளர்ச்சிக்கு முழுமையாக உதவ முடியும். எனவே தன
மாணவர்களிடம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர் வைகைச் செல்வன்: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப்பள்ளியில், உலக புத்தக தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். குணசேரன், ஆர்.டி.ஓ., மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பகவதி முன்னிலை வகித்தனர். சென்னை பொது நூலக இயக்குனர் ராமேஸ்வர முருகன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி, பள்ளி கல்வி துறை அமைச்சர் வைகைச்செல்வன் பேசியதாவது: உலக புத்தக தினத்தையொட்டி தமிழகம் எங்கும் நூலகத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நூலக துண்டு பிரசுர வினியோகம், கையெழுத்து இயக்கம், கட்டுரை போட்டி, நூலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு வில்லை வழங்குதல், நூலகத்துறை சார்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் "ஜெய ஜெய வெற்றி பேரியக்கம்" திட்டம் உட்பட பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. நூலர்கள் தாங்கள் செய்யும் பணியை கடமை உணர்வோடு செய்ய வேண்டும். கிராம புற நூலகர்கள் தங்கள் பகுதியில் உள்ள கிராம புற இளைஞர்களுக்கு புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். நல்ல அ
ஏழை மாணவர்களின்  சத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசு: சத்துணவுக்கான மானியத்தை, தமிழக அரசு 69.50 பைசாவிலிருந்து ரூ.1.30 உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 54 ஆயிரம் மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது. சத்துணவுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணை, முட்டை ஆகியவற்றை அரசே வழங்குகிறது. காய்கறி, மசாலா பொருட்கள் மற்றும் சமைக்கத் தேவையான விறகு ஆகியவற்றுக்காக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தலா 69.50 காசுகளும், ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 79.50 காசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. "விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளதால், இத்தொகையை அதிகரிக்க வேண்டும்" என்று சத்துணவு ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், சென்னை, சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து, அனைத்து மாவட்ட சமூகநல அலுவலகங்களுக்கும் ஒரு புதிய உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இதில், சத்துணவுக்கு, ஒன்று முதல் ஐந்து வரை படிக்கும் மாணவர்களுக்கு, பருப்புடன் சாதம் வழங்கும் நாளில்
மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு: எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய மருத்துவம் சார் பட்ட மேற்படிப்புகளில், 2013 -14ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம், மருத்துவக் கல்வி இயக்ககத்தில், மே முதல் வாரம் நடக்கிறது. இதில் பங்குபெற, விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் அடிப்படையிலான, தரவரிசை பட்டியல், www.tnhealth.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், பிரமலை கள்ளர் வகுப்பினர் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களின், கல்வி நிலையை மேம்படுத்த, மிகப் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 289 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், இயங்குகின்றன. இப்பள்ளிகளில், 34,749 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 2012-13ம் ஆண்டில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்காக, 53 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 2013-14ம் ஆண்டு, இப்பள்ளிகளின் செயல்பாட்டிற்காக, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இந்தியனுக்கு இந்தியாவின் பெருமையை உணர்த்தியவர் விவேகானந்தர்: இந்தியனுக்கு இந்தியாவின் பெருமையை உணர்த்தியவர் சுவாமி விவேகானந்தர் என "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார். ஸ்ரீ கிருஷ்ண கான சபா சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜெயந்தி விழா சென்னையில் சனிக்கிழமை (ஏப்.27) கொண்டாடப்பட்டது. இதில் "தினமணி' ஆசிரியர் பேசியது:- உலகுக்கு இந்தியாவின் பெருமையை முதன்முதலில் எடுத்துரைத்தவர் சுவாமி விவேகானந்தர் என்று மட்டுமே நாம் கருதி வருகிறோம். அது தவறு. முதன் முதலாக இந்தியர்களுக்கு இந்தியாவின் பெருமையை உணர்த்தியதும் சுவாமி விவேகானந்தர்தான். விவேகானந்தரைப் பின்பற்றிய மகாத்மா: சுவாமி விவேகானந்தர் ஒரு துறவியாக, ஆன்மிகவாதியாகத் தடம் பதிக்க முற்பட்டபோது, அவருக்கு இரண்டு முன்னோடிகள் இருந்தனர். ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜம் நிறுவியிருந்தார். சுவாமி தயானந்தாவின் ஆர்ய சமாஜமும் நிறுவப்பட்டிருந்தது. இருவரும் தங்களுக்குள் ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு, சமூகத்தில் சில மாற்றங்களைச் செய்துகொண்டிருந்தனர். பிரம்ம சமாஜம், ஆர்ய சமாஜ் இரண்டுமே சில சமயச் சீர்திருத்தங்களையும
கல்லூரி விடுதி மாணவர்களுக்கு உதவித் தொகை உயர்வு: கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கான உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பேரவையில் நேற்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.) மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசுகையில் அமைச்சர் முகமது ஜான் வெளியிட்ட அறிவிப்பு: கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உணவு, உறைவிட கட்டணம் உயர்த்தப்படும். அதன்படி, தொழிற்கல்வி படிப்புகளுக்கு ரூ. 75 முதல் ரூ. 140 என்பது ரூ. 350 ஆகவும், ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்புகளுக்கு ரூ. 75 முதல் ரூ. 80 என்பது ரூ. 225 ஆகவும், 11, 12-ஆம் வகுப்பு மற்றும் இளங்கலை படிப்புகளுக்கு ரூ. 75 முதல் ரூ. 80 என்பது ரூ. 175 ஆகவும் உயர்த்தப்படும். இதன் மூலம் 44,961 மாணவ, மாணவிகள் பயன்ப
மே 9ம் தேதி முதல் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பம் விநியோகம்:  தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் தேதியை மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 9 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 18ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்து. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிபதற்கு கடைசி நாள் மே 20ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தயார் நிலையில் 40,000 விண்ணப்பங்கள்: இதற்காக 40,000 விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு 22,000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. 2011ம் ஆண்டு 25,000 விண்ணப்பங்களும், 2012ம் ஆண்டு 27,877 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்: கலந்தாய்வுக்கான தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள
மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் புலமை இல்லையென்றால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்கள் தமிழ் ஆங்கிலத்தில் புலமை இல்லையென்றால் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படிப்பை முடித்து விட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல்  மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு காரணம் அரசு பள்ளிகளில் சரியான  ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி இல்லாததே ஆகும். எனவே இந்த நிலை மாறினால் மட்டுமே மாணவர்களின் கல்விதரம் உயர்த்த முடியும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். இந்த கல்வியாண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட சர்வே குறிப்பில் தமிழ், ஆங்கிலம் எழுத, படிக்க தெரியாத மாணவர்கள் பலர் உள்ளனர். எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் சிறந்த பயிற்சியளிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு சரியான பயிற்சி வழங்கப்படவில்லையெனில் சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எ
சிவில் சர்வீஸ் தேர்வு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்: சிவில் சர்வீஸ் தேர்வு கொள்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் ‌ பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். எழுதியுள்ள கடித விவரம்: சிவில் சர்வீஸ் தேர்வில் உள்ள கொள்கை முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசு பணிக்கு மாநில அதிகாரிகள் தேர்வு எழுத வேண்டும் என்பது புது கொள்க‌ை. மத்திய அரசு கொண்டுவந்துள்ள கொள்கை முறையை கைவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  
கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்: முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம்! "மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வியில், கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு, 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், ஆர்.சி.பள்ளி பல சமய உரையாடல் மன்ற அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற்கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும். விடைத்தாள் திருத்த தனி கட்டடம் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்த வேண்டும். முதுநிலை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு பதவி உயர்வு அளிக்க வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேல்நிலைக் கல்வியில் உள்ள அனைத்து பாடங்களுக்கும் அக மதிப்பீட்டு மதிப்பெண் முறையை அமல்படுத்த வேண்டும். விடுமுறை நாட்களில் முதுநிலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி, பணியிடை பயிற்சி நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
டிவி பார்ப்பதை தவிர்த்தால் தொழிலதிபர்களாகலாம்: பாரதிதாசன் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்: உளுந்தூர்பேட்டை: 365 நாட்களுக்கு அலைபேசியை பயன்படுத்தாமல், கண்ணாடி, "டிவி" பார்ப்பதை தவிர்த்தாலே நீங்கள் தொழிலபதிர்களாக முடியும் என திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக சிண்டிகேட் உறுப்பினர் தங்கம்மூர்த்தி பேசினார். உளுந்தூர்பேட்டை ஸ்ரீவிநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது: மாணவர்கள் கல்வியறிவு பெறவேண்டும். கல்வியை ஏதோ படித்துவிட்டோம், முடிந்தது என்று பட்டம் வாங்கியதோடு இருந்துவிடக் கூடாது. படித்து கொண்டே இருக்கவேண்டும், அதற்கு வயது ஒரு தடையல்ல. மாணவர்களாகிய நீங்கள் 365 நாட்கள் அலைபேசியில் பேசாமல், பயன்படுத்தாமல் இருக்கவேண்டும். உங்களுடைய முகம், உருவத்தை கண்ணாடியில் பார்க்காமல் இருக்கவேண்டும். "டிவி" பார்க்காமல் இருக்கவேண்டும். இந்த மூன்றையும் தவிர்த்தாலே நீங்கள் பெரும் தொழிலபதிர்களாக வரமுடியும். தன்னம்பிக்கை இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். நாம் காமராஜர், விவேகானந்தர், பாரதியார், பாரதிதாசன் உள்ளிட்ட பல தலைவர்களை ஹீரோக்களாக நினைப்பதில்
புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் திட்டம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகமாகிறது: பாடப் புத்தகங்களைப் பார்த்து, பொதுத்தேர்வை எழுதும், புதிய வகை திட்டம், வரும் கல்வி ஆண்டில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அமல்படுத்தப்பட உள்ளது. பொதுத் தேர்வுகள், மாணவர்களிடையே மன அழுத்தத்தை தருவதால், தேர்வு நடைமுறைகளில், படிப்படியாக, பல்வேறு சீர்திருத்தங்களை, மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. மதிப்பெண்கள், மாணவர்களிடையே, வேறுபாடுகளை ஏற்படுத்தி, மன அளவில், பாதிப்படைய செய்வதால், "கிரேடு&' முறையை, சி.பி.எஸ்.இ., கல்வி முறையில், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம், பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளி அளவிலான பொதுத்தேர்வு, சி.பி.எஸ்.இ., நடத்தும் பொதுத்தேர்வு என, இரு வகையான தேர்வுகளையும் நடத்துகிறது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நடைமுறையில் உள்ள தொடர் தேர்வு கண்காணிப்பு முறையை, தமிழக அரசும், எட்டாம் வகுப்பு வரை அமல்படுத்தி, உள்ளது. இதைத் தொடர்ந்து, கிரேடு முறையும், மாநில பாடத்திட்டத்தில், விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை
குழந்தைகளுக்கு கை உறிஞ்சும் பழக்கம் இருக்கா?   கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின்  காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் பசி உணர்விலிருந்து  விடுபடுவதற்கான வழியாக கருதுகின்றனர்.. கட்டை விரலை உறிஞ்சும் அதிக குழந்தைகள் உணவில் கவனம் செலுத்துவதில்லை.. இதனால் குழந்தைகளுக்கு எடை குறைவாகவே உள்ளது.. இது  குழந்தைகளுக்கான ஒரு ஆறுதல் நடவடிக்கை மட்டுமே. இதை குழந்தைகள் வழக்கமாக கடைபிடிக்க அனுமதிக்ககூடாது.. குழந்தைகளின் விரல்  உறிஞ்சும் பழக்கதால் பெற்றோர்கள் எப்படி நிறுத்துவது என கவலை படுகின்றனர். நான்கு வயது வரை குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவது பிரச்சனையில்லை அதற்கு மேல் குழந்தைகள் விரல் உறிஞ்சினால் பற்களில்  பிரச்சனைகளை ஏற்படுத்தும். நான்கு மற்றும் ஐந்து வயதிலிருந்து கட்டை விரலை உறிஞ்சும் பழக்கம் தொடர்ந்தால் பற்களில் வெடிப்பு ஏற்பட்டு  அதுவே தீவிர பிரச்சனையாக மாறும். குறிப்பிட்ட வயதிற்கு மேலாகியும் இந்த பிரச்சனை தொடர்வதால் பற்கள் நெருக்கமாக மற
ஏப்ரல் 25(இன்று ) இளநிலை உதவியாளர் பணிக்கான கலந்தாய்வு: தமிழக அரசின் இளநிலை உதவியாளர் பணிக்கான 563 பணி நாடுநர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் நான்கின் கீழ் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடூ பெறப்பட்ட இந்த பணியிடக் கலந்தாய்வு ஏப்ரல் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. போதுமான காலிப் பணியிடம் இல்லாததால், சொந்த மாவட்டங்களில் பணி கிடைக்காதவர்கள் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும், பிற்பகலில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெறப்பட்ட தேர்வாளர்கள் அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ஏப்ரல் 25-ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு தவறாமல் வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூலகங்களை இணைய தளம் மூலம் இணைக்கும் நூலக இணைப்பு எனும் புரட்சி: அறிவுப் பொக்கிஷங்களை தன்னகத்தே வைத்திருக்கும் முக்கியமான நூலகங்களை இணைய தளம் மூலம் இணைக்கும் முறை, உலக அளவில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில், டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் DELNET என்ற தொண்டு நிறுவனம், திருச்சியில் நடத்திய கருத்தரங்கில், நூலகங்கள் இணைப்பு குறித்த பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டது. நூலக இணைப்பு எனும் புரட்சி: நூலகங்களை இணைய தளம் மூலம் இணைப்பதன் மூலம், உலகின் ஒரு மூலையில் இருக்கும் வாசகர், மறுமூலையில் இருக்கும் புத்தகங்களைக்கூட படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நவீன முறை குறித்து டெல்லியைச் சேர்ந்த டெல்நெட் என்ற தனியார் நிறுவனம் திருச்சி என்.ஐ.டியில் நடத்திய கருத்தரங்கில், தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த நூலகர்கள் கலந்து கொண்டனர். உலக அளவில் நூலகங்களை இணைப்பதன் மூலம் வாசகர்களுக்குக் கிடைக்கும் பயன்கள் குறித்து பல தகவல்களைத் தெரிந்துகொண்டதாக நூலகர்கள் தெரிவித்தனர். ஒரே தளத்தில் 4,600 நூலகங்கள்: தனியார் தொண்டு நிறுவனமான டெல்நெட் உலக அளவில் 4,600 நூலகங்களை இணைத்தி