Skip to main content

Posts

Showing posts from April, 2014

சிக்கல்களை கடந்து ஆசிரியர் நியமனம் எப்போது?

பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம் ஜவ்வாக இழுக்கிறது.ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி பல மாதங்களாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மத்தியில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வும், கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.) இதுவரை நிறைவு பெறவில்லை. முதுகலை ஆசிரியர்களில், தமிழ் ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்யப்பட்டு விட்டனர். இதர பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வு, இடியாப்ப சிக்கலாக உள்ளது. எந்த தேர்வை எடுத்தாலும் நீதிமன்ற வழக்கில் இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கூறுகிறது.இதனால் முதுகலை ஆசிரியர்கள் எப்போது நியமனம் செய்யப்படுவர் என தெரியாத நிலை உள்ளது. டி.இ.டி. தேர்வில் மதிப்பெண் சலுகை அளித்ததன் காரணமாக, இரண்

அரசு ஊழியர் ஜிபிஎப் வட்டி 8.7% ஆக நீடிக்கும்:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் (ஜி.பி.எஃப்) வட்டி விகிதம் இந்த ஆண்டும் 8.7 சதவீதமாகவே இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் செலவினங்கள் துறைச் செயலாளர் உதயச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவு: பொது வருங் கால வைப்பு நிதியின் வட்டியை மத்திய அரசு நிர்ணயம் செய்துள் ளது. அதன்படி, அதன் பயனாளி களுக்கு, பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.7 சதவீதமாகத் தொடரும். 2014-15 நிதியாண் டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஜி.பி.எஃப் வட்டி விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நேரடியாக, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்:

தேர்வுத்துறை இயக் குனர், தேவராஜன் அறிவிப்பு: இன்றைய தேதியில், 12 வயது, 6 மாதங்களை பூர்த்தி செய்தவர்கள், நேரடியாக, 8ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.என்ற இணையதளத்தில் தெரிவித்துள்ள, சிறப்பு மையங்களுக்கு, நேரில் சென்று, விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம், 125 ரூபாய், விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும். முழுமையான விவரங்களுக்கு, தேர்வுத் துறை இணையதளத்தை பார்க்கலாம். இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.

தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் பதிவு செய்வதில் தாமதம்:

தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய தாமதமானதால் மாவட்டத்தின் கடைகோடியிலிருந்து வந்தவர்கள் விண்ணப்பம் கொடுக்க முடியாமல் தவித்தனர். கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களை, கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வழங்கி அவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கல்வித் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்ததுதில் ஓவியம், வேளாண்மை, தையற்கலை, இசை போன்ற தொழிற்கல்வி படித்த மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல் மற்றும் கல்விச் சான்றிதழ்களை பதிவு செய்ய நேற்று காலை கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் குவிந்தனர். விண்ணப்பம் கொடுப்பதற்கு வரும் 3ம் தேதி வரை அவகாசம் இருந்தாலும் நேற்று 200க்கு மேற்பட்டோர் குவிந்தனர். நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே இண்டர்நெட் வசதியுள்ளதாலும், விண்ணப்பங்களை சரி பார்த்து வாங்க வேண்டியிருந்ததாலும் தாமதம் ஏற்பட்டது. இதனால், நேற்று காலை முதல் மாலை 4:00 மணி வரை 40 விண்ணப்பங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. இதனால் வந்திருந்தவர்களை நாளை (2ம் தேதி) வரும்படி அறிவுறு

ஊராட்சி/ நகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2013ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைப் படி உபரியாக உள்ள இடைநிலை/ பட்டதாரி ஆசிரியர் விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு:

click here  download the dee proceeding of Excess BTs/ SGTs Details as on 01.09.2013    click here for Excess BTs/ SGTs Details forms....

தர ஊதியத்தில் பெற்ற தொகையை திரும்ப செலுத்த வேண்டும் கல்வித்துறை உத்தரவால் தமிழாசிரியர்கள் அதிர்ச்சி:

தமிழ் பட்டதாரி ஆசிரியர் தர ஊதிய உயர்வாக பெற்ற தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என கல்வித்துறை வலியுறுத்துவதால்அவர்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தரஊதியம் ஜனவரி 2011 ல் வெளியிடப்பட்டது. இதில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ் பட்டதாரிகள் உள்பட) தர ஊதியம் ரூ. 4400 ல் இருந்து ரூ. 4600 ஆக உயர்த்தி அரசாணை (எண். 23) வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து சில பாட ஆசிரியர்கள் தங்களுக்கும் தர ஊதியம் உயர்த்த கோரிக்கைவிடுத்தனர்.இதையடுத்து ஜுலை 2013 ல் திருத்திய தர ஊதிய அரசாணை 263 வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் நிதித்துறையினர் 1988 ம் ஆண்டிற்கு முன் காலாவதியான தமிழ் பண்டிட் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தனர். ( 1988 ல் தமிழ் பண்டிட் என்ற சிறப்பாசிரியர் பட்டியலில் இருந்து பள்ளி உதவியாசிரியர் பின்னர் தமிழ் பட்டதாரி ஆசிரியர் என தமிழாசிரியர்கள் பெயர் மாற்றம் பெற்று பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தை பல ஆண்டுகளாக பெற்று வருகின்றனர்). இந்நிலையில் ஜுலை 2013 அரசாணையில் பயன்படுத்திய தமிழ் பண்டிட் என்ற வார்த்தையையடுத்து 2011 ஜனவரியில் தர ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது ப

தமிழக அரசு உத்தரவு வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி துவக்கம்:

தமிழகம் முழுவதும் முப்பருவ கல்வி 2012 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டது. முப்பருவ கல்வி முறை தமிழ்கல்வி முறையில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ கல்வி முறையில் ஆங்கில வழிக்கல்வி திட்டத்தை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் 2013 ம் ஆண்டு ஆங்கிலவழி முப்பருவ கல்வி திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளையில் இருந்து ஏழை மக்களை பாதுகாக்க முடியும். அரசு பள்ளிகளில் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியை அரசு கொண்டு வந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கும். இத்திட்டத்தில் முதல் பருவத்தேர்வு , இரண்டாம் பருவத்தேர்வு , மூன்றாம் பருவத்தேர்வு என்று மூன்று பருவத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNTET - 5% மதிப்பெண் தளர்வினை 2012 க்கு விரிவுபடுத்தினால் குழப்பம் ஏற்படும்:

TET ஆசிரியர் தேர்வில் , 2013 தேர்வுக்கு அரசின் 5 மதிப்பெண் சதவீத தளர்வு செல்லும். 2012 க்கு விரிவுபடுத்தினால் குழப்பம் ஏற்படும் , என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு , ஆசிரியர் தேர்வு வாரியம் , தகுதி தேர்வைநடத்துகிறது. இதில் , மொத்தம் , 100 மதிப்பெண்களுக்கு , குறைந்தபட்சம் , 60 சதவீதம்பெற வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்காக 5 சதவீதம் தளர்த்த வேண்டும் என , பல தரப்பிலும் வந்த கோரிக்கையை பரிசீலித்த 5 சதவீத மதிப்பெண் தளர்த்தப்பட்டது. 5 சதவீத மதிப்பெண்தளர்த்தப்பட்டதை எதிர்த்தும் , 2012 ல் நடந்த தேர்வுக்கு , மதிப்பெண் தளர்வை விரிவுபடுத்த கோரியும் , சென்னை ஐகோர்ட்டில் , மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.   இம்மனுக்களை விசாரித்த , நீதிபதி நாகமுத்து பிறப்பித்த உத்தரவு: தேர்ச்சி மதிப்பெண்ணை , 5 சதவீதம் தளர்த்த வேண்டும் என , பல தரப்பிலும் வந்த கோரிக்கையை பரிசீலித்து , மதிப்பெண் தளர்த்துவதில் , கொள்கை முடிவு எடுக்கப்பட்டதாக , தமிழக அரசு பதிலளித்துள்ளது. எனவே , அரசு பரிசீலிக்கவில்லை எனக்கூற முடியாது. தகுதி தேர்வு , போட்டி தேர்வு அல்ல ; அது , தகுதி பெ

அண்ணாமலை பல்கலை. அதிரடி சொத்து கணக்கு காட்ட உத்தரவு ஆசிரியர் - ஊழியர்கள் அதிர்ச்சி:

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர், ஊழியர்களின் சொத்து விவரத்தை அளிக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் பல்கலை நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 13 ஆயிரத்து 500 ஆசிரியர்கள், ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழக நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்த உடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தமிழக அரசின் முதன்மை செயலாளருமான ஷிவ்தாஸ் மீனா நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் அதிரடி நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழக நிதி நிலைமையை ஓரளவு சரி செய்தார். நேற்று பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்து கணக்கு, இன்சூரன்ஸ் செய்திருந்தால் அதன் விவரம், வங்கி, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால் அதைப்பற்றிய முழு விவரம், சேமநலநிதி பற்றிய விவரம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நிர்வாகம் அனுப

ஆசிரியர்களே உங்கள் பதவி ஊயர்வு, பணிமாறுதல் கையூட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளதா?

 

ஆசிரியர் தகுதித் தேர்வு: 73 ஆயிரம் பேருக்கு புதிய ‘கட் ஆப்’ ஆன்லைனில் புதிய கட் ஆப் மதிப்பெண்:

தகுதித்தேர்வு மூலமான ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது. அதாவது பிளஸ் 2 மதிப்பெண், டிகிரி மதிப்பெண், பி.எட். மதிப்பெண், தகுதித்தேர்வு மதிப்பெண் ஆகியவற்றில் குறிப்பிட்ட சதவீதத்தில் இருந்து குறிப்பிட்ட சதவீதம் வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரே மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்துவிட்டு, தேர்வர்கள் பெற்ற மதிப் பெண்ணை குறிப்பிட்ட சதவீதத்துக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால், ஏற்கெனவே சான்றி தழ் சரிபார்ப்பு முடித்த ஏறத்தாழ 48 ஆயிரம் பேர் உள்பட 73 ஆயிரம் பேருக் கும் புதிய கட் ஆப் மதிப்பெண் வரும். உதாரணத்துக்கு பழைய முறையில், தகுதித்தேர்வில் 90 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றாலும் அனைவருக்கும் 60 மார்க் வழங்கப்படும். ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி 95 சதவீத மதிப்பெண் பெற்றவர், 90 சதவீத மதிப்பெண்ணைவிட கூடுதல் மார்க் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே முறைதான் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர

பள்ளிகளுக்கு விடுமுறை : மீண்டும் ஜூன் 2ஆம் தேதி திறப்பு:

கோடை விடுமுறை விடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் வரும் ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் அனைத்துக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) மே 1ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட உள்ளது. விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் மாதம் 2ஆம் தேதி திறக்கப்படுகின்றன. அப்போது 1-வது வகுப்பு முதல் பிளஸ்-2 வரை (11-வது வகுப்பு தவிர) அனைத்து வகுப்புகளும் அன்றைய தினம் தொடங்கப்பட உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தேர்வு முடிவு வந்த அன்றே மதிப்பெண்ணை இணையதளத்தில் ஜெராக்ஸ் எடுத்து விடலாம். அதைக்கொண்டு பிளஸ்-1 சேரும் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை முடிந்து ஜூன் மாதம் 16ஆம் தேதி பிளஸ்-1 வகுப்புகள் தொடங்குகின்றன. சில பள்ளிகளில் ஜூன் மாதம் முழுவதும் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நட

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு: முரண்பாடுகளைக் களைய கோரிக்கை:

"மேல்நிலைப்பள்ளி ஹெச்.எம்.,களுக்கு பதவியுயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்" என, தஞ்சையில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டம்தஞ்சை மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், மாவட்ட துணைத்தலைவர்கிருஷ்ணன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ரமேஷ், மாவட்ட அமைப்பு சாரா செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்து பேசினர்.இதைத்தொடர்ந்து, கூட்டத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு பதவி உயர்வில்உள்ள முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள முன்னாள் இயக்குனர் கருணாகரன் தலைமையிலான சீராய்வு குழு அறிக்கையை விரைந்து பெற்று உரிய தீர்வுகளை வழங்க வேண்டும். பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்வு விடைத்தாள் முகப்பு சீட்டுதைப்பதற்கு தாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் வழங்க வேண்டும்.ஓய்வு பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய பணப்பலன்களை 2013-14ம் கல்வியாண்டில் காலதாமதமின

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும்: தேர்ச்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரிகள் கோரிக்கை:

ஆசிரியர்  தேர்வுவாரியத்  தேர்வில்,  தேர்ச்சி  பெற்ற    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனே பணி ஆணை வழங்க வேண்டும் என்று அந்தத் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2800 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டி.ஆர்.பி. தேர்வு கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வில், தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பணி ஆணை வழங்கப்பட்டது.இந்நிலையில், மற்ற பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை என தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஞாயிறன்று  டி.ஆர்.பி.  அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதுகுறித்து, தருமபுரியைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரி யர் பாபு கூறுகையில், முதுநிலைப்பட்டதாரிகளுக்கான தேர்வில், தேர்ச்சி பெற்ற தமிழ் பாடத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக பணி ஆணை வழங்கப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர். நாங்கள் தேர்ச்சி பெற் றும் இதுவரை, இய

ஆசிரியர் தேர்வு விவகாரம் புதிய மதிப்பெண் வழங்கும் விதிமுறை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு:

ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணையில் புதிய விதிமுறையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. உயர்நீதிமன்றத்தில் பிரியம்வதனா உள்பட 18 பேர் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மதிப்பெண் கொடுக்கப்பட்டது. ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்ணுக்கு குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண் நிர்ணயிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய கணக்கிட்டு முறையை அரசு அறிமுகம் செய்து அரசாணையில் புதிய விதிமுறை வகுத்தது. இந்த விதிமுறை சட்டவிரோதமானது. சமமில்லாதவர்களை, சமமாக்க இந்த முயற்சியை அரசு எடுத்துள்ளது. 90 முதல் 104 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் நிர்ணயித்து சமமாக கருதுவது தவறானது. எனவே அரசின் விதிமுறையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறியிருந்தனர். இந்த வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்து, மனுதாரர் கூறிய படி, விதிமுறை சட்டவிரோதமானது. இதை ரத்து செய்கிறேன். எனவே மனுதாரர்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு சதவீதம் நிர்ணயிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தர

பள்ளிகளில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கும் பணி இழுபறி: பல்வேறு வழக்குகளால் கையைப்பிசைகிறது கல்வித்துறை:

பல்வேறு வழக்குகள், குழப்பமான உத்தரவுகளால், பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமனம் செய்யும் விவகாரம், ஜவ்வாக இழுக்கிறது. ஜூனில் பள்ளிகள் திறக்கின்றன. ஆனால், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய முடியாத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 12 ஆயிரம் பேரை நியமனம் செய்யும் பணி, பல மாதங்களாக, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.  சிக்கல்  கடந்த ஆண்டு மத்தியில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வும், கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வும் (டி.இ.டி.,), இதுவரை, நிறைவு பெறவில்லை.முதுகலை ஆசிரியர்களில், தமிழ் ஆசிரியர்கள் மட்டும், நியமனம் செய்யப்பட்டு விட்டனர். இதர பாடங்களுக்கான ஆசிரியர் தேர்வு, இடியாப்ப சிக்கலாக உள்ளது. எந்த தேர்வை எடுத்தாலும், நீதிமன்ற வழக்கில் இருப்பதாக, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) கூறுகிறது.  இதனால், முதுகலை ஆசிரியர்கள், எப்போதுநியமனம் செய்யப்படுவர் என, தெரியாத நிலை உள்ளது.டி.இ.டி., தேர்வில், மதி

நூறு விதமான சாதனைகள் நிகழ்த்திய உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகள் - உலக சாதனை நிறுவனம் பரிசுகள் வழங்கி கவுரவிப்பு:

விழுப்புரம் அருகே உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள், ஒரே நேரத்தில் நூறு விதமான சாதனைகளை நிகழ்த்திக்காட்டி உலக சாதனை நிறுவனம் சார்பில் பரிசு பெற்றனர். பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடுவதை தடுக்கவும், பள்ளிக்கு செல்லாத சிறுவர் சிறுமிகளை கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி அறிவை புகட்டவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், அண்டராயநல்லூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட மற்றும் பள்ளிக்குச் செல்லாத 150 சிறுமிகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கல்வியுடன் கைத்தொழில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்பள்ளிகளில் பயிலும் 100 மாணவிகள் ஒரே நேரத்தில் நூறுவிதமான சாதனைகளை நிகழ்த்திக் காட்டும் நிகழ்ச்சி திருவெண்ணைநல்லூரில் நடைபெற்றது. இதில், 30 மாணவிகள் பத்மாசனம், புஜங்காசனம், கருடாசனம் உள்ளிட்ட 30 வகையான ஆசனங்களை செய்துகாண்பித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ

சத்துணவு கூடத்துக்கு முட்டை சப்ளை மாநில அளவில் ஒரே டெண்டர் சரிதான்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு:

சத்துணவு கூடங்களுக்கு முட்டை சப்ளை செய்ய மாநில அளவில் ஒரே டெண்டர் விட்டது சரியானதுதான் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 2 ஸ்டார் கோழி பண்ணை , எஸ்எஸ்.என் கோழி பண்ணை ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு: தமிழகம் முழுவதும் சத்துணவு கூடங்களுக்கு முட்டை சப்ளை செய்ய மாவட்ட அளவில் அரசு டெண்டர் விட்டு வந்தது. இந்த டெண்டர் முறையை மாற்றி கடந்த ஆண்டு அரசு மாநில அளவில் ஒரே டெண்டர் விட்டது. இதில் பல நிறுவனங்கள் கலந்து கொண்டன. நேச்சுரல் புட் நிறுவனம், சொர்ணபூமி நிறுவனம் ஆகிய 2 நிறுவனங்களுக்கு அரசு டெண்டர்விட்டது. இது சட்டவிரோதமானது. இதை ரத்து செய்யவேண்டும். மாவட்ட அளவில் டெண்டர் விட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்து , மாநில அளவில் டெண்டர் விட்டது சரியானதுதான் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து 2 நிறுவனங்களும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பால்வசந்தகுமார் , சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு சார்பாக கூட

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே இறுதியில் இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது:

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே அல்லது ஜூன் மாதம் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். கடந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு முறை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி , இடமாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு காலியிடங்கள் குறித்த பட்டியல் ஆன்லைனில் காண்பிக்கப்படும். பணிமூப்பு , முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து தங்களுக்கு விருப்பமான பள்ளியை தேர்வுசெய்துகொள்வார்கள். அவர்களுக்கு அங்கேயே இடமாறுதல் உத்தரவும் வழங்கப்பட்டு விடும். கடந்த ஆண்டைப் போலவே , இந்த ஆண்டும் ஆசிரியர் இடமாறுதலுக்கு ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இந்த கலந்தாய்வை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ம் தேதி முடிவடைந்ததும். மே மாதம் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு வேண்டி -திண்டுக்கல் மாவட்டம் "தமிழக ஆசிரியர் மன்றத்தின்" சார்பாக தமிழக மாநில தலைமை தேர்தல் ஆணையர் & மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கோரிக்கை:

ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு வேண்டி -திண்டுக்கல் மாவட்டம் "தமிழக ஆசிரியர் மன்றத்தின்" சார்பாக தமிழக மாநில தலைமை தேர்தல் ஆணையர் அவர்களிடம் , திரு.ம -சேவியர் ஜோஸ்சப் கென்னடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஜனநாயக உரிமை அனைத்து ஆசிரியர்களுக்கும் வேண்டும் என கோரிக்கை வைத்தார் , உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதி அளித்தார் . பிறகு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தமிழக ஆசிரியர் மன்றத்தின்" சார்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும்  தபால் ஓட்டு வேண்டும் என கோரிக்கை வைத்தார் , உடனே அவரும் நடவடிக்கை எடுக்கப்படும் என் உறுதி அளித்தார் . குறிப்பு -(எந்த தொகுதியில் தேர்தல் வேலைக்கு சென்றமோ அந்த  தாலுகா விற்கு சென்று அவரவர் EDC-ஐ பெற்று ppo வாக மாற்றி நமது ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம்)இதை ஆசிரியர்கள் அனைவரும் பயன் பெருங்கள் ) தகவல்-திரு-சேஷ ராதா கிருஷ்ணன் ,           மற்றும்   திரு.ம -சேவியர் ஜோஸ்சப் கென்னடி-9443387777

தேர்தல் முடிந்தும் ஊதியம் கிடைக்கவில்லை: அதிருப்தியில் அரசு ஊழியர்கள்:

மக்களவை தேர்தலில் பணியாற்றிய, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு, இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில், மக்களவை தேர்தல் கடந்த 24ம் தேதி நடந்தது. தேர்தல் பணிக்காக தமிழகம் முழுவதும், பள்ளி ஆசிரியர்கள், சமூக நலத்துறை ஊழியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி மைய பணியாளர்கள் உள்பட, சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். வாக்காளர் அடையாள அட்டைக் கோரி விண்ணப்பிப்பவர்கள் குறித்து விசாரணை நடத்துவது, வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் செய்வது, வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்குவது உள்ளிட்ட பணிகளை சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் ஆகியோர் செய்தனர். அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் கடந்த 3 மாதமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, தேர்தல் ஆணையம் இவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கும். ஆனால், இந்த தேர்தலில் ஆணையம் இவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், தேர்தல் வாக்கு ப

கல்வி கட்டண விவரங்களை எழுதி வைக்க வேண்டும்: பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவு:

தனியார் பள்ளிகளின் வெளியே கல்வி கட்டண விபரங்களை தெளிவாக எழுதி வைக்க வேண்டும்‘ என கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கோடை விடுமுறைக்கு பின் வகுப்புகள் ஜூன் 2ம் தேதி திறக்கப்பட உள்ளன. பிளஸ்2 ரிசல்ட் வரும் 9ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் நேற்று அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. இதில், பிளஸ்2 ரிசல்ட் வரும் 9ம் தேதி வர உள்ளதால், மாணவர்களின் பதிவு எண் தொடர்பாக எந்த குழப்பங்களும் இருக்கக்கூடாது. அதில் ஏதாவது திருத்தம் இருந்தால் உடனடியாக தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். 6 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் தேர்வு முடிவுகளை வழக்கம் போல் வெளியிடலாம். 9ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்து பள்ளியின் கல்விக்குழு கூடி ஆலோசித்து முடிவு செய்யலாம். தனியார் பள்ளிகளில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இடஒதுக்கீட்டுதாரர்களுக்கு சீட் வழங்குவதை அனைத்துப் பள்ளிகளும் உறுதி செய்ய வேண்டும். எல்கேஜி, மற்றும் 6ம் வகுப்பிற்கு உள்ள மொத்த மாணவர்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி: மே 6ல் துவக்கம்:

இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வரும் ஆறாம் தேதி துவங்குகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும், இந்த சலுகை கடந்தாண்டு ஆகஸ்ட் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என, முதல்வர் ஜெயலலிதா கடந்த ஃபிப்ரவரி சட்டசபையில் அறிவித்தார். இதனால் ஆசிரியர் தகுதிதேர்வில் 150க்கு 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது. ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பின் 82 முதல் 89 மதிப்பெண் எடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் ஐந்து மையங்களில் கடந்த மார்ச் மாதம் நடந்தது. திருச்சியில் ஜங்ஷன் அருகே வாசவி வித்யாலயா பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. தமி

கல்வி கட்டண விவரம் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை:

அரசின் கல்வி கட்டண விவரபட்டியலை, பள்ளிகள் நோட்டீஸ் போர்டில், பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு குறித்த, தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், நடந்தது. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் பேசியதாவது: அரசின் கல்வி கட்டண விபர பட்டியல் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு, 25 சதவீத இடஒதுக்கீடு அரசாணையை, பள்ளி நிர்வாகங்கள், பொதுமக்கள் பார்வையில் படுமாறு, நோட்டீஸ் போர்டில் வைக்க வேண்டும். ப்ளஸ் 2 ரிஸல்ட்டை மாணவ, மாணவியர் எளிதில் அறியும் வகையில், அந்தந்த பள்ளிகளிலேயே, தேவையான வசதியை ஏற்படுத்த வேண்டும். மார்க் ஷீட், வேலைவாய்ப்பு பதிவு குறித்து, அரசிடம் இருந்து தகவல் ஏதும் வரவில்லை. ப்ளஸ் 1 ரிஸல்ட், மே, ஐந்தாம் தேதிக்குள் வெளியிட வேண்டும். கல்வியில் மிக, மிக மோசமாக, பள்ளிக்கு சரிவர வராத மாணவ, மாணவியருக்கு மட்டுமே, தோல்வி சான்று அளிக்க வேண்டும். ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது வகுப்பு மாணவ, மாணவியர் அனைவருக்கும், தேர்ச்சி வழங்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.ஸி., மற

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ரிலீஸ் எப்போது: தேர்வர்கள் ஆவேசம்:

முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியல் வெளியாவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டித்து, தேர்வர்கள் நேற்று, ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசு உத்தரவு : அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அரசு உத்தரவிட்டது. இதில், தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டும், இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமனமும் நடந்துள்ளது. 600க்கும் அதிகமான தமிழ் ஆசிரியர்கள், பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட, பல முக்கிய பாடங்களுக்கு இறுதி தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., இன்னும் வெளியிடவில்லை.  இதைக் கண்டித்து, முதுகலை தேர்வர்கள், நேற்று காலை, சென்னையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள், மேற்கண்ட பாடங்களுக்கு, இறுதி தேர்வு பட்டியலை, உடனடியாக வெளியிட வலியுறுத்தினர். பணி நியமனம் : இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: ஒரே போட்டித் தேர்வில், குறிப்பிட்ட பாட

தேர்தல் பணியில் மரணம்; நிவாரணம் கோரி கலெக்டர் கடிதம்:

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மரணமடைந்ததை அடுத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு, கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில், தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 6 லட்சம் பேர் ஈடுபட்டனர். அவர்களுக்கு, கிரேடு அடிப்படையில், ஒரு நாள் ஊதியம் வழங்கப்பட்டது. மேட்டூர், கொளத்தூர் பெருமாள் கோவில் நத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராசு, 44, தர்மபுரி, கொளத்தூர் கே.பள்ளிப்பட்டி ஓட்டுச்சாவடியில் பணியாற்றினார். ஓட்டுப்பதிவு முடிந்து வீடு திரும்பியவர் மாரடைப்பில் மரணமடைந்தார். அதேபோல், கெங்கவல்லி தாலுகா அலுவலக உதவியாளர் மாரிமுத்து, 56, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இவர்கள் குடும்பத்தினருக்கு, நிவாரணம் வழங்கக் கோரி, தேர்தல் கமிஷனுக்கு, சேலம் கலெக்டர் கடிதம் அனுப்பியுள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்2 பொதுத்தேர்வு: விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் கலக்கம்:

தமிழகத்தில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த கையோடு விடைத்தாள் திருத்தும் பணியும் மும்முரமாக நடந்தது. விரைவாக திருத்தும் நோக்கத்துடன் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. பிளஸ் 2 விடைத்தாள்கள் ஏற்கனவே கடந்த 10ம் தேதியே திருத்தி முடிக்கப்பட்டன. இதுபோல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்களும், பெரும்பாலான மையங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னதாக திருத்தி முடிக்கப்பட்டன. தற்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 9ம் தேதி பிளஸ்2 ரிசல்ட் வர உள்ளது. இதனிடையே விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் வராமல் இருக்கக்கூடாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் குறித்த பட்டியலை தயார் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆப்சென்ட் ஆனவர்கள் பட்டியலை தயாரிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளனர். வராதவர்கள் ஏன் வரவ

மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஆய்வு!; தலைமையாசிரியர்-கல்வி அலுவலர் பங்கேற்பு

மதுரை மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தலைமையாசிரியர்களுடன் கல்வி அலுவலர்கள், இன்று(ஏப்., 28) ஆய்வு நடத்துகின்றனர்.இம்மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், இதில் பங்கேற்கின்றனர். 2014-15 கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை, பள்ளிகளில் கட்டமைப்பு வசதி மேம்பாடு மற்றும் மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அரசு பள்ளிகளின் வளர்ச்சி, தலைமையாசிரியர் செயல்பாட்டை பொறுத்து அமையும். அந்த வகையில், மாணவர்கள் சேர்க்கை, அரசு நலத் திட்டங்கள் வினியோகம் குறித்து, தலைமையாசிரியர்களின் ஆலோசனைகளை பெற்று, கல்வியாண்டு துவங்குவதற்கு முன்கூட்டி பள்ளிக் கல்வி இயக்குனர் பார்வைக்கு அனுப்பப்படும். முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமையில் மதுரை, மேலுார், உசிலம்பட்டி கல்வி மாவட்ட அலுவலர்கள் பங்கேற்கின்றனர். தலைமையாசிரியர் 'ஆப்சென்ட்' ஆக கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.தலைமையாசிரியர் ஒருவர் கூறி

மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கு kalvikural-ன் வீர வணக்கங்கள்

தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய மே 16–ந்தேதி கடைசி நாள்:

தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் தபால் ஓட்டு போட மே 16– ந் தேதி கடைசி நாளாகும். தபால் ஓட்டு திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு கடந்த 24– ந் தேதி அமைதியாக நடந்து முடிந்தது. திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் , போலீசார் மற்றும் பணியாளர்கள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தபால் ஓட்டு போட ஏற்கனவே விண்ணப்பம் வழங்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் ஓட்டு சீட்டுகளை பெற்று தபால் ஓட்டுகளை போட்டு வருகின்றனர். தபால் ஓட்டுகளை பதிவு செய்ய கலெக்டர் அலுவலகத்திலும் , அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் , தாசில்தார் அலுவலகங்களிலும் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு முன் கூட்டியே தபால் ஓட்டுகளை பதிவு செய்ய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் வசதி செய்யப்பட்டிருந்தது. இதில் போலீசார் ஓட்டு போட்டனர். மே 16– ந் தி கடைசி நாள் இந்த நிலையில் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய ஓட்டு சீட்டு பெற்று வாக்களிக்காமல்

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டண விபரம் குறிப்பிட கோரிக்கை:

கல்விக்கட்டண விபரங்களை தனி யார் பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று ஆயக்குடி இல வசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மையத்தின் இயக்குநர் ராமமூர்த்தி அறி க்கை: நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க் கையை தனியார் பள்ளிகள் துவக்கியுள்ளன. பள்ளிக் கட்டணங்களை ஒரே தவணையாகவும் , சில பள்ளி கள் இரண்டு , மூன்று தவணைகளாகவும் செலுத்த அனுமதிக்கின்றன. ஆனால் இந்த கட்டணங்களை கல்வி இறுதியா ண்டு வரை செலுத்த வாய்ப்பளிக்கவேண்டும். மேலும் இதுகுறித்த பட்டியலை அறிவிப்புப் பலகையிலும் குறிப்பிட வேண்டும். கூடுதல் கட்ட ணம் வசூலிப்பதைத் தடுக்கும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வருகிற 6–ந் தேதி தொடங்குகிறது:

இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வருகிற 6 –ந்தேதி தொடங்குகிறது. 5 சதவீத மதிப்பெண் சலுகை ஆசிரியர் தகுதி தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும் எனவும் , இந்த சலுகை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் எனவும் முதல் – அமைச்சர் ஜெயலலிதா கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் அறிவித்தார். இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் 150 –க்கு 82 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாகும் வாய்ப்பு உருவானது. ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டன. இந்த நிலையில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பின் 82 முதல் 89 மதிப்பெண்கள் எடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் 5 மையங்களில் கடந்த மார்ச் மாதம் நடந்தது. திருச்சியில் ஜங்ஷன் அருகே வாசவி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற

மே மாதத்தில் வருகிறது "ரிசல்ட் வெள்ளி'கள்:

மே மாதத்தில் , தொடர்ந்து மூன்று வாரமும் , " ரிசல்ட் ' வெள்ளிக்கிழமை வெளிவருவது , அனைத்து தரப்பினரின் ஆவலையும் அதிகரித்துள்ளது. மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் எதிர்பார்க்கும் , பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு , மே மாதம் 9ம் தேதி , வெள்ளிக்கிழமைவெளியாகிறது. அதைத் தொடர்ந்து , 16வது லோக்சபா தேர்தல் முடிவுகள் , அடுத்த வெள்ளிக்கிழமையான , 16ம் தேதி , ஓட்டுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல , 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு , அதற்கடுத்த வெள்ளிக்கிழமையான , 23ம் தேதி வெளியிடப்படுகிறது. இப்படி , தொடர்ந்து மூன்று வாரங்களும் , " ரிசல்ட் ' வெள்ளிக்கிழமையாக அமைந்துள்ளது , பொதுமக்கள் தரப்பில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டு கேட்ட வேட்பாளர்கள் முதல் , ஓட்டு போட்ட வாக்காளர்கள் மட்டுமின்றி , மாணவர்களும் அடுத்தடுத்த வெள்ளிக்கிழமையை , " ரிசல்ட் ' தெரிந்து கொள்ளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

கோடை விடுமுறைக்கு சம்பளம் இல்லை!; பகுதி நேர ஆசிரியர்கள் கவலை:

பகுதி நேர ஆசிரியர்களுக்கு , பள்ளி விடுமுறை மாதமான மே மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் புகார்தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் , அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் , பள்ளிகளில் 16 ஆயிரத்து 582 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு , 5000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.அரசு வேலை என்பதால் , பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் குறைந்த ஊதியமாக இருப்பினும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். வாரத்துக்கு மூன்று நாட்கள் , பள்ளிகளில் கற்பிக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்பதால் , தனியார் பள்ளிகளில் முழு நேரமாகவும் , பகுதி நேரமாகவும் பணி வாய்ப்பு கிடைப்பதில்லை. பகுதிநேர ஆசிரியர்களுக்கு , அரையாண்டு , காலாண்டு விடுமுறையின்போது ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் , தேர்வுகளுக்கு முன்பு கூடுதல் பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்திக்கொண்டு , முழு ஊதியத்தையும் வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.ஆனால் , மூன்று ஆண்டுகளாகியும் மே மாதத்தில் , கோடை விடுமுறை என்பதால் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் , ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சக ஆசிர