Skip to main content

Posts

NEW AND UPDATED

CPS ACCOUNT SLIP - PUBLISHED ONLINE - JUST TYPE YOUR CPS NUMBER AND DATE OF BIRTH: ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு: 10TH 12TH ALL SUBJECTS SLOW LEARNERS GUIDE AND MINIMUM PASS IDEAS-2014: NEW TET SELECTED TEACHERS FORMS CORNER: SSLC SCIENCE ONE MARK ANALYSIS-ALL PUBLIC ONE MARKS LIST OUT ONE PAGE-CLICK HERE TNPSC OLD QUESTION PAPERS WITH ANSWER: TNTET PREVIOUS YEAR QUESTION PAPERS WITH ANSWER: Click here -ALM Lesson plan-Science and Maths.. தஅஉச - உரியதுறை அனுமதியுடன் இரண்டு பட்டங்களை ஒரே கால அட்டவணையில் வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம்: தனியார் பள்ளியில் எந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன அரசுப் பள்ளியில் நல்ல மனிதர்கள் உருவாக்கப்படுகிறனர்-ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரின் மனக்குமுறல் ! தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை -INCENTIVE மற்றும் INCREMENT பெறுவதற்கான-அரசாணை - G.O: கவனத்திற்குள் வராத கணிதத் தேர்வும்-ஒட்டு மொத்த கணித ஆசிரியர்களின் ஆதங்கமும்: பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2014 விடைகுறிப்புகள்
Recent posts

விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி-ஊரக தொழில்த்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆச்சியர் பங்கேற்பு:

View the slide show 15.11.2014 அன்று கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்துகொண்ட அறிவியல் கண்காட்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இதில் ஊரக மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.ப.மோகன் அவர்கள், மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு.வி.சம்பத் IAS அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.டாக்டர்.காமராஜ் அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி அழகுவேல் பாபு அவர்கள்  கலந்துகொண்டு மாணவர்களின்  படைப்புகளை கண்டுகளித்து சிறந்த படைப்புகளை தேர்வுசெய்து பரிசளித்தனர்.இதில் முதல் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கலந்துக்கொள்ள தகுதியுடையவர் ஆவார்கள்.மேலும்  மாவட்ட கல்வி அலுவலர்கள் திருமதி.கோ.தனமணி,திரு.ந.பாஸ்கரன் ,திரு.எஸ்.மாதவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இது போன்ற நிகழ்வுகள் அரசுப்பள்ளிகளில்  அரசால் நடத்தப்படும்போது மாணவர்களின் அறிவியல் திறமை கண்டிப்பாக வெளிப்படும் என்பதில் சந்தேகம் இல்லை..என

20 சிறுவர்களுக்கு தேசிய விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்:

பிறரின் உயிரை காப்பாற்றிய 7 சிறுவர், சிறுமிகளுக்கு வீர விருது!!!

ஆபத்தான சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக நடந்து, தன் உயிரை பணயம் வைத்து, மற்றவரின் உயிரை காப்பாற்றிய, ஏழு சிறுவர்கள், இரண்டு சிறுமியருக்கு, மாநில அரசு வழங்கும், வீர விருது வழங்கப்படுகிறது குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர், உமாஸ்ரீ கூறியதாவது: நாயிடமிருந்து தப்பிக்கும் போது, கால் இடறி, 25 அடி ஆழ் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவன் சைஜனை காப்பாற்றிய, ரிப்பன்பேட்டை கவடூரு கிராமத்தின் தீக் ஷித்; பள்ளிச்சுற்றுலாவின் போது, குளத்தில் மூழ்கிய இரு மாணவர்களை காப்பாற்றிய, மதுகிரியின் கிஷன் ஆகியோருக்கு, இம்முறை, ’ஹொய்சாலா விருது’ வழங்கப்படுகிறது. குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில், தாய் இறந்து விட்டாலும், மன உறுதியை கைவிடாமல், தன், 8 மாத தம்பியை தூக்கிக் கொண்டு, இரவு வேளையில், அபாயமான கிருஷ்ணா நதி ரயில்வே பாலத்தை தாண்டி வந்த, முத்தோலின் சுமித்குமார் சிந்தகி; மலையேறும் சாகசத்தில் ஈடுபட்டபோது, வழுக்கி விழுந்த நண்பனை காப்பாற்றிய அனூப், ஸ்வரூப்; கல்லால் சிறுத்தையை அடித்து விரட்டி, இருவரை காப்பாற்றிய குண்டுலுபேட்டை தாலுகா குந்தகெரேயை சேர்ந்த அப்பு; வாகன விபத்தில், சிக்கிக் கொண்ட

அவசர ,அவசியத்திற்கு தேவையான எண்கள்:

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய, அவசிய தொடர்பு எண்கள்.பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற  புகார்களுக்கு : 93833 37639 பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு  Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828 மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க——–044 – 26530504 / 26530599 வாடகைத் தாய்களாகப் போய்,புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424 ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட் 044- 25353999 / 90031 61710 / 99625 00500 ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445 சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS ) மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377 மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639 போலீஸ் SMS :- —————————————-9500099100 போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832 போக்குவ

கணவன் – மனைவி கூட்டாக வீட்டுக் கடன் பெற முடியுமா?

வீடு வாங்க அல்லது கட்ட முடிவு செய்துவிட்டீர்களா? வங்கியில் வீட்டுக் கடனை வாங்கித்தானே வீடு வாங்க அல்லது கட்டப் போகிறீர்கள்? உங்கள் வீட்டில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் இருவரும் இணைந்து வீட்டுக் கடன் வாங்கலாமே! கூடுதல் கடன் வீடு கட்ட முடிவு செய்ததுமே பலருக்கும் இருக்கும் ஒரே கனவு, எல்லா வசதிகளையும் புதிய வீட்டில் ஏற்படுத்திவிட வேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கான பட்ஜெட்டைப் போடும்போது செலவு அதிகமாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கலாம். இந்தத் தொகையை வங்கியில் அப்படியே கேட்கும்போது, எதிர்பார்க்கும் தொகையை வங்கிகள் கொடுத்துவிடுவதில்லை. ஒருவேளை கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் சென்று மாதச் சம்பளம் பெறுபவர்களாக இருந்தால், பிரச்சினையே இல்லை. அதிகமாக வீட்டுக் கடனை வங்கியில் பெற்றுக் கொள்ளலாம். கணவன் - மனைவி இணைந்து வாங்குவதில் இதுதான் மிகப்பெரிய நன்மை. பொதுவாக வீட்டுக் கடன் வாங்கும்போது கடன் வாங்கும் நபர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நிகர சம்பளத்தை வங்கிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளும். இதை வைத்துதான் எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதை வங்க

சிவப்பு விளக்குகளை யார் யார் பயன்படுத்தலாம்? தமிழக அரசு புதிய உத்தரவு:

சிவப்பு, நீல வண்ண விளக்குகளை எந்தெந்த அதிகாரிகள் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: அரசு வாகனங்களின் மேல்புறத்தில் சிவப்பு விளக்குகள் பொருத்துவதை முறைப்படுத்துவது தொடர்பாக, மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், அரசு வாகனங்களில் சுழலும் வகையிலான சிவப்பு விளக்குகளையும், சாதாரண வகை சிவப்பு விளக்குகள், நீல வண்ண விளக்குகளை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையர் பரிந்துரைகளை அனுப்பியுள்ளார். அந்தப் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு உத்தரவைப் பிறப்பிக்கிறது. அதன்படி, சுழலும் வகையிலான சிவப்பு விளக்குகளைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றவர்கள்: மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர். சுழலும் வகையில் இல்லாமல், சாதாரண வகை சிவப்பு விளக்குகளை 14 பேர் பயன்படுத்திக