Skip to main content

Posts

Showing posts from June, 2013
புதுச்சேரி: மருத்துவம், பொறியியல் கவுன்சிலிங் கட்டணம் வெளியீடு: மருத்துவம், பொறியியல் படிப்பிற்கு கவுன்சிலிங் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. சென்டாக் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்க பெறாத மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் தங்களுடைய பெயர் இருப்பின் கவுன்சிலிங் நடைபெறும் குறிப்பிட்ட தேதி, நேரத்தில் கலந்து கொள்ளலாம். கவுன்சிலிங் வரும் மாணவர்கள், தி கன்வீனர், சென்டாக், புதுச்சேரி பொறியியல் கல்லூரி வளாகம் என்ற பெயருக்கு புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் 850 ரூபாய்க்கு டி.டி.,எடுத்து வர வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., மாணவர்கள் 350 ரூபாய்க்கு டி.டி., எடுத்தால் போதுமானது. கவுன்சிலிங் வருபவர்கள், மதிப்பெண், மாற்றுச் சான்றிதழ், குடியிருப்பு, குடியுரிமை சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், விடுதலைப்போராட்ட வீரர்களின் வாரிசுகள் எனில், அதற்கான அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலில் குளறுபடி-தினமலர்  எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலில், பல்வேறு குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு, வழங்கிய மதிப்பெண் பட்டியலை, திரும்பப் பெறுகின்றனர். தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் பள்ளிகளில், வழங்கப்பட்டு வருகிறது. மதிப்பெண் பட்டியலில், தேர்வு பதிவு எண், பெயர், பிறந்த தேதி, தேர்வு எழுதிய மையம், புகைப்படம் மற்றும் பெற்ற மதிப்பெண்களின் விவரம் ஆகியவை, கம்ப்யூட்டரில் அச்சிட்டு, வழங்கப்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில், வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்களில், சான்றிதழில் நேர் கோடு விழுந்துள்ளதால், பிறந்த தேதி மற்றும் மதிப்பெண் விவரம், சரியாக தெரியவில்லை. இதனால், அவற்றை திருத்தி, புதிய சான்றிதழ் பெற, உரிய பள்ளி தலைமை ஆசிரியர்கள், திரும்ப பெற்று வருகின்றனர். இவை, மாவட்ட கல்வித் துறை மூலம், தேர்வுத் துறைக்கு அனுப்பப்படுகின்றன.  
ரூ.180 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு: ஐ.ஓ.பி., மண்டல மேலாளர் தகவல்: ஈரோடு மாவட்டத்தில் 2013-14ம் ஆண்டில் 180 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ்யின் ஈரோடு மண்டல மேலாளர் சுந்தர் தெரிவித்தார். அகில இந்திய கட்டுனர் சங்கத்தின், ஈரோடு மையம் சார்பில், வங்கி அதிகாரி மற்றும் கட்டுனர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஈரோடு மண்டல மேலாளர் சுந்தர், சங்க நிர்வாகிகள் சந்தேகங்களுக்கு பதில் அளித்து பேசியதாவது: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மட்டுமே ஈரோட்டில் மண்டல அலுவலகத்தை அமைத்துள்ளது. அது மட்டுமின்றி, ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 44 கிளைகள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு மாணவ, மாணவிகளுக்கு 100 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 180 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற முதியவர்கள், வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் வங்கி சேவை அமைப்பாள
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தகுதியான கல்வித்தகுதி: ஆசிரியர் தேர்வு வாரியம்: ஆசிரியர் தகுதித்தேர்வில் கலந்துகொள்வதற்கு எந்தெந்த பட்டப்படிப்புகள் இணையான கல்வித்தகுதி கொண்டவை? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழ் - ஆங்கிலம்: பி.ஏ. தமிழ், பி.ஏ. பயன்பாட்டு தமிழ் (திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் தமிழ் (நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. கம்யூனிகேஷன் இங்கிலீஷ் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்), பி.ஏ. கம்ப்யூட்டர் பயன்பாட்டுடன் ஆங்கிலம், பி.ஏ. பங்ஷனல் இங்கிலீஷ், பி.ஏ. சிறப்பு ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் (தொழிற்கல்வி) (காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்) கணிதம் - இயற்பியல்: பி.எஸ்சி. கணிதம்,  பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. கணிதம் (கம்ப்யூட்டர் பயன்பாடு) பி.எஸ்சி. இயற்பியல், பி.எஸ்சி. இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ் (பாரதிதாசன் பல்கலைக்கழகம்), பி.எட். படிப்பில் இயற்பியல் படித்திருக்க வேண்டியது கட்டாயம், பி.எஸ்சி. இயற்பியல் (சி.ஏ.) (கோவை பாரதியார் பல்கலைக்கழகம்), பி.எஸ்சி. இயற்பியல் (
TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்? இந்த மாதம் வருகிறது... அடுத்த மாதம் வருகிறது... நாளை வருகிறது என்று சொல்லிக் கொண்டு இருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு நமக்கு மிக அருகில் வந்து அமர்ந்துவிட்டது. அதாவது ஆகஸ்ட் 17,18 தேதிகளில். இந்த நேரத்தில் நாம் என்ன செய்யலாம்? இதோ சிந்தனைக்கு சில... *  பயிற்சி நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை முதலில் உங்கள் மீது வைக்க வேண்டும். *  மனம் மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத் தயாராக்க வேண்டும். *  சுய சிந்தனையுடையவராய் உங்களை நீங்கள் நினைக்க வேண்டும். *  தேர்வுக்குத் தயார் செய்வதற்கு செலவிடும் காலத்தையும், வருவாய் இழப்பையும் வாழ்நாள் முதலீடாக கருத வேண்டும். *  தகுதித் தேர்வை வெறுக்காமல் வாழ்க்கையில் கிடைக்க பெற்ற வரப்பிரசாதமாகவும், உங்களின் திறமைக்கு விடப்பட்ட சவாலாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். *  தகுதித் தேர்வினை ஆதரிக்காவிட்டாலும் அதை எதிர்க்காத மனநிலையைப் பெற்றிருந்தால் அல்லது இனி பெறப்படுவீர்கள் என்றால் உங்கள் வெற்றி உங்களால் உறுதி செய்யப்படும். *  முதலில் சந்தையில் கிடைக்கும் கண்டதை எல்லாம் படிக்காமல் தேவையானதை
அடிப்படை வசதிகளற்ற பி.எட். கல்லூரிகள் மூடல்: தமிழகத்தில், பி.எட்., படிப்பிற்கு, சர்வதேச தரத்தில், பாடத் திட்டங்களை உருவாக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர், விசுவநாதன் தெரிவித்தார். அவர், மதுரையில் கூறியதாவது: தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட பி.எட்., கல்லூரிகளின் அமைவிடம், ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது. இதில், அடிப்படை வசதிகள் இல்லாத கல்லூரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பி, நிவர்த்திக்க நடவடிகக்கை எடுக்கும்படி, அறிவுறுத்தப்பட்டது. நாங்கள் சுட்டிக் காட்டிய குறைகளை, நிவர்த்தி செய்யாமல், நிவர்த்தி செய்ததாக சில கல்லூரிகள், பதில் அனுப்பின. மீண்டும் நடத்தப்பட்ட ஆய்வில், அது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், மதுரை, சேலம், நாகபட்டினம் மாவட்டங்களில், தலா, ஒரு பி.எட்., கல்லூரிகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டு, அவற்றை மூட, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு, மாணவர்கள் சேர்க்கை இருக்காது. இவ்வாறு, விசுவநாதன் கூறினார்.  
கல்லூரிகளில் ராகிங் தடுப்பு தீவிரம்: ராகிங் கொடுமையை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும் மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்களில், "ராகிங்" தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலும், கல்லூரி நிர்வாகம், அரசுக்கு தெரியாமல் ஆங்காங்கே, கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. ராகிங்கை மத்திய, மாநில அரசுகள் கடுமையான குற்றமாக அறிவித்துள்ளன; கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. ராகிங் குற்றத்தில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி நிறுவனங்களிலிருந்து நீக்கப்படுவதுடன், வேறு மாநிலங்களிலுள்ள கல்லூரிகள், பல்கலைகளில் சேர்ந்து படிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. குற்றத்தின் தன்மையை பொறுத்து, மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம். ராகிங்கால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படும் மாணவர்கள் சிலர், தற்கொலை வரை செல்கின்றனர்; இதனால் வரும் முன்விரோதத்தால் சிலர் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது. சென்னை அருகே "ராகிங்" தொல்லையால் கல்லூரி மாணவர் ஒருவர், சமீ
மெட்ரிக் பள்ளிகளில் 5 பிரிவுகளுக்கு மேல் இருந்தால் நடவடிக்கை: மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஒவ்வொரு வகுப்பிலும், அதிகபட்சமாக, ஐந்து பிரிவுகள் (செக்ஷன்கள்) வைத்துக் கொள்ளலாம். அதற்கும் அதிகமான பிரிவுகளுக்கு, விதிமுறையில் இடம் இல்லை. எனவே, ஐந்து பிரிவுகளுக்கும் அதிகமாக வகுப்புகளை நடத்தினால், சம்பந்தபட்ட பள்ளி மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்துள்ளார். அவரது அறிக்கை: மெட்ரிக் பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் விதித் தொகுப்பின் படி, ஒரு வகுப்பிற்கு, அதிகபட்சமாக, நான்கு பிரிவுகள் மட்டுமே செயல்பட வேண்டும். கூடுதலாக, ஒரு பிரிவு துவங்க வேண்டும் எனில், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அனுமதி பெற வேண்டும். ஐந்து பிரிவுகளுக்கு மேல் செயல்பட, விதியில் இடம் இல்லை. எனினும், நடப்பு கல்வி ஆண்டில், சில பள்ளிகளில், எல்.கே.ஜி.,- ஆறாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில், அதிகமான மாணவரை சேர்ப்பதாக தெரிய வருகிறது. மெட்ரிகுலேஷன் விதி தொகுப்பில் உள்ள விதிகளை ஏற்காமல், அதிக மாணவர்களைக் கொண்டு
கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில் அண்ணா பல்கலை "ஹவுஸ்புல்" பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கிய ஒரு வாரத்தில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இருந்த இடங்கள், நேற்றுடன் நிரம்பிவிட்டன. மாநிலத்தில், 560 பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, சென்னை, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி., கல்லூரி ஆகிய, மூன்று கல்லூரிகளில் படிப்பதை, மாணவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். மூன்று கல்லூரிகளில், கிண்டி பொறியியல் கல்லூரி, முதலிடத்தில் உள்ளது. கலந்தாய்வு துவங்கியதும், "டாப்" மாணவர்களில் துவங்கி, அனைவரும், கிண்டி பொறியியல் கல்லூரியையே தேர்வு செய்கின்றனர். தரமான கல்லூரி, சகலமும் அடங்கிய உள்கட்டமைப்பு வசதிகள், படிக்கும்போதே, "கேம்பஸ் இன்டர்வியூ" மூலம், முன்னணி நிறுவனங்களில் வேலை ஆகியவை கிடைப்பதால், கிண்டி பொறியியல் கல்லூரி, மாணவர்களின் கனவாக உள்ளது. ஆனால், "கட்-ஆப்&' 200க்கு, 200ல் துவங்கி, 198 அல்லது 197 வந்த உடன், அண்ணா பல்கலை கல்லூரிகளில் உள்ள இடங்கள், ம
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்: மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜுலை 5 ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம். பிபிடி, பி.எஸ்சி., ரேடியேஷன் டெக்னாலஜி, பிஒடி ஆகுபேஷனல் தெரபி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்தப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக்கல்லூரிகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவினர் 350 ரூபாய் செலுத்தியும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கள் சாதி சான்றிதழ் நகலை கொடுத்து இலவசமாகவும் விண்ணப்பங்களைப் பெறலாம்.
தமிழ் பல்கலையில் எம்.எட் படிப்புக்கு ஜூலை 1 முதல் விண்ணப்பம்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், எம்.எட் படிப்புக்கு ஜூலை 1ம் தேதி முதல்விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படிப்பில் சேர தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.எம்.எட்., படிப்பிற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு விதிமுறையின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பங்களை பல்கலைக்கழக வளாகத்திலோ அல்லது இணையதளத்திலோ விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.600ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். ஜூலை 31க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.  
குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியீடு: தமிழக அரசின் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. காலியாக உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட், பில் கலெக்டர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ, பீல்டு சர்வேயர் உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க ஏற்ற கல்வித்தகுதி, இதர தேவைகள் விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப மாறுபடும். ஜூலை 15 ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாளாகும். ஜூலை 17 க்குள் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெறுகிறது. விண்ணபிப்பவர் www.tnpscexams.net என்ற இணையதளத்தை பார்க்கலாம்  
ஆயுர்வேத மருத்துவம்: நுழைவுத்தேர்வு ரத்து: ஆயுர்வேத மருத்துவ படிப்பில் மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் அறிவித்துள்ளது. பனாரஸ் இந்து பல்கலைகழகம் சார்பில் ஆயுர்வேத மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கேள்வித்தாளில் ஒரு சில தவறுகள் இருந்தது கண்டறியப்பட்டது இதனையடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஐ.எம்.எஸ்., இயக்குனர் பேராசிரியர் ரானா கோபால் சிங் தெரிவித்தார். இன்று ரத்து செய்யப்பட்டதற்கான மறுதேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி ந‌டத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  
அரசு இசைப்பள்ளியில் ஊக்கத்தொகையுடன் இசைப்பயிற்சி: அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் பயிற்சி பெற விரும்புவோர் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்" என திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ அறிக்கை: தமிழக அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் கீழ், திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளி கலைப்பண்பாட்டு வளாகம், ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாராம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய இசைப்பயிற்சி கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில், 12 முதல், 25 வயது வரை உள்ள மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியப் பயிற்சிக்கு, 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேவாரம், நாதஸ்வரம், தவில் ஆகிய கலைகளுக்கு ஆரம்ப கல்வித் தகுதியில் சலுகை உண்டு. இப்பள்ளியில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழு நேர பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்று ஆண்டு இசைப்பயிற்சிக்கு பிறகு படிப்பு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு 150 ரூபாய். மாதந்
கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை: ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம், விளையாட்டிற்கு கொடுக்கப்படுவதில்லை. 80 சதவீத பள்ளிகளில் விளையாட்டு மைதானம் புதர்மண்டியும், போதிய விளையாட்டு உபகரணங்கள் இன்றியும் உள்ளது. மாணவர்களிடம் விளையாட்டு திறனை வளர்ப்பது கேள்விக்குறியாகிவிட்டது. மாவட்டத்தில் 66 அரசு உயர்நிலை பள்ளிகள், 61 அரசு மேல்நிலைபள்ளிகள் உள்ளன. பொதுவாக பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளில் நூறு சதவீத தேர்ச்சி, மாவட்ட அளவில் சாதனை போன்றவைகளில்தான் கல்வி துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால், விளையாட்டு திறமை கொண்ட மாணவர்களை, ஊக்குவிப்பது இல்லை. பள்ளிகளில் மைதானத்தை மேம்படுத்துதல் கால்பந்து, வாலிபால், பேட்மிட்டன் நெட், ஹாக்கி போன்ற உபகரணங்கள் இல்லை. மாணவர்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால், மாநில அளவில் சாதிக்க உள்ளவர்களின், திறமை வீணடிக்கப்படுகிறது. மாநில அளவில் தற்போது, விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து, உடற்கல்வியை கட்டாயமாக்கியுள்ளனர். இதன்
பி.இ. இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை: நாளை முதல் கலந்தாய்வு துவக்கம்: காரைக்குடியில் உள்ள அழகப்ப செட்டியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில், பொறியியல் இரண்டாமாண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (ஜூன் 26) முதல் தொடங்குகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் டிப்ளமோ மாணவர்கள், பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம்  செய்யப்பட்ட  மதிப்பெண் பட்டியலைச் சமர்ப்பித்தாலே போதுமானது என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் கூறினார். டிப்ளமோ முடித்த மாணவர்கள், பி.எஸ்சி. முடித்த மாணவர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்று நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டில் சேரலாம். கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் பதற்றமடைந்தனர். பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக் குழுவிடம் டிப்ளமோ தேர்வு முடிவுகள் சி.டி.க்களில் வழங்கப்பட்டுவிட்டன. எனவே, மாணவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் பொறியியல் தொ
நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்கு உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.  
அரசுப் பள்ளியில் படித்த மாணவி; ஐ.எஃப்.எஸ்., தேர்வில் 56வது இடம்: இந்திய வனத்துறை பணி தேர்வில் தேர்ச்சி பெற்று 56வது இடத்தை பிடித்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஷாக்கிராபேகத்தை கலெக்டர் தரேஷ் அஹமது பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், தொண்டமாந்துறை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அப்துல்ரஷீத். இவரது மகள் ஷாக்கிராபேகம். 2012ம் ஆண்டுக்கான இந்திய வனத்துறை பணி தேர்வில் 56வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தனது தொடக்கக் கல்வியை தொண்டமாந்துறை பஞ்., யூனியன் துவக்கப்பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை தொண்டமாந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைக்கல்வியை பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார். இதைத்தொடர்ந்து திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி., அக்ரி பட்டப்படிப்பு முடித்தார். தொடர்ந்து ஐ.சி.ஏ.ஆர்., நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் மூன்றாம் இடம் பெற்று, டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் எம்.எஸ்.சி., ஜெனடிக்ஸ் மற்றும் பி.ஹெச்.டி., ஜெனடிக்ஸ் படிப்ப
வால்பாறையில் கனமழை: பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை: வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இன்றும், நாளையும் பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறை மலைப்பகுதியில், தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர். இடைவிடாமல் பெய்துவரும் மழையால், இங்குள்ள, அனைத்துப் பள்ளிகள் மற்றும் பாரதியார் பல்கலை கல்லூரிக்கு, இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.  
பொறியியல் கல்லூரி ரேங்க் பட்டியல்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்: பொறியியல் படிப்பில் சேரும் மாணவ, மாணவியரின் நலன் கருதி, கல்லூரிகளின், ரேங்க் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட வேண்டும். இதற்கு மறுத்தால், மாணவர்களும், பெற்றோரும், தர்ணா நடத்த வேண்டும்; வேறு வழியில்லை" என கல்வியாளரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார். பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலையில் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும், 560 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், எத்தனை கல்லூரிகள், தரமான கல்லூரிகள்; எத்தனை கல்லூரிகளில், நல்ல உள் கட்டமைப்பு வசதிகள் உள்ளன; தரமான ஆசிரியர்கள் இருக்கின்றனர்; வேலை வாய்ப்பு நன்றாக இருக்கிறதா என, எந்த தகவலும் தெரியாத நிலையில், மாணவ, மாணவியர், கலந்தாய்வுக்கு வருகின்றனர். ஒரே நிறுவனம், பல்வேறு பெயர்களில், பல கல்லூரிகளை நடத்துகிறது. இதில், ஏதாவது ஒரு கல்லூரி மட்டும், தரமானதாக இருக்கும். ஆனால், பெயரில், சிறிய மாற்றங்களை செய்வதால், அது தெரியாமல், மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். கல்லூரிகளின் நிதர்சனமான
பத்தாம் வகுப்புத் தேர்வு முதலிடம் பிடித்த நவமணிகள்! பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற 9 பேரும் மாணவிகள். அவர்கள் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். எஸ். அனுஷா கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை தாயும் தந்தையும் தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து கல்லூரி  ஊழியர்கள். கணிதம், அறிவியல், சமூக அறிவியல்   ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு. ‘‘அன்றைய பாடங்களை அன்றே படித்து எழுதிப் பார்த்து விடுவதுதான் எனது வெற்றிக்குக் காரணம்’’ என்கிறார் அனுஷா, மாநில அணி வாலிபால் பிளேயர். நரம்பியல் நிபுணராக ஆகவேண்டும் என்பது இவரது எதிர்கால லட்சியம். ஜே.பி.எம். தீப்தி பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, அண்ணாநகர், மதுரை. தாயும் தந்தையும் பள்ளி ஆசிரியர்கள். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ள தீப்தி, டியூஷன் சென்றதில்லை. ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை அன்றே படித்து முடித்து விடுவார். ஃபேஷன் டெக்னாலஜி படிக்க வேண்டும் என்பது அவரது எதிர்கால லட்சியம். எம். காயத்ரி மான்ட் போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
பொறியியல் கலந்தாய்வு: பாட வாரியாக ஒதுக்கீட்டு நிலவரம் -ஜூன் 23: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூன் 21 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பாடவாரியாக, ஜூன் 23ம் தேதி  மாலை 7.35 மணி நிலவரப்படி நிரப்பப்பட்டுள்ள இடங்களை காணலாம். பாட வாரியாக ஒதுக்கீடு நிலவரம்: www.annauniv.edu/tnea2013/pdf/press/branchpress.pdf  
எம்.பி.பி.எஸ். படித்தவர்களுக்கு ஊரகப் பகுதிகளில் கட்டாய சேவை கூடாது: எம்.பி.பி.எஸ். பயின்றவர்கள் ஊரகப் பகுதிகளில் கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் சென்னையில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்கள் ஓராண்டு காலமாவது ஊரகப் பகுதியில் மருத்துவ சேவை செய்தால் தான் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்க முடியும் என்ற மத்திய அரசின் புதிய விதிமுறையை கைவிட வேண்டும். அதேபோல் மூன்றாண்டு மருத்துவப் படிப்புத் திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும். இந்தத் திட்டமானது கிராமப்புற மக்களையும், மாணவர்களையும் இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிவிடும். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்து விட்டதால் கடந்த ஆண்டுகளில் இக்கல்லூரியில் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிப் பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம்-தொடங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு: பள்ளி மாணவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்கும் விதமாக, பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி பாட கால அட்டவணையில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இயங்கும் நேரத்தில் மாற்றமில்லை என, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும், பள்ளிகள் இயக்கப்படும், 9:30 மணிக்கு, அரசு, தனியார் அலுவலகங்களும் செயல்படத் துவங்குகின்றன. பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களைத் தவிர, அரசு பேருந்துகளில், சொந்த வாகனங்களில் செல்லும் மாணவர்கள், இதனால், மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலைகள் போதுமான அளவு இல்லாத நிலையில், வாகன பெருக்கத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதில் மாணவர்கள் சிக்கி, உரிய நேரத்தில் பள்ளிக்கு போக முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், "ஷிப்ட்" அடிப்படையில் பள்ளிகளை இயக்கலாமா? என்ற, ஆலோசனையும் இருந்தது. சில தனியார் பள்ளிகள், இம்முறையை பின்பற்றியும் வருகின்றன. இதற