Skip to main content

Posts

Showing posts from September, 2013
புதியதாக ஆதார்அடையாள அட்டை பெறுவது எப்படி? அக்டோபர் மாதத்திலிருந்து படிப்படியாக தமிழகத்தில் சமையல் கியாஸிற்கான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அதற்கு ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வங்கிக் கணக்குத் துவக்க, கியாஸ் இணைப்புப் பெற, பாஸ்போர்ட் பெற, வீடு வாங்க, விற்க போன்றவற்றிற்கு ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? எப்போது கிடைக்கும்? யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற தகவல்கள் உங்களுக்காக இதோ... ஆதார் என்றால் என்ன? ஆதார் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண். ஒருவரின் கருவிழிப்படலம், இரு கை விரல்களின் ரேகை, புகைப்படம் போன்ற தகவல்களைச் சேகரித்து 12 இலக்க எண்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும்.   ஆதார் அட்டை பெறத் தகுதிகள்:   இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ஆதார் அட்டை பெறலாம். 5 வயது மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆதார் அட்டை பெறலாம். வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆதார்
யு.ஜி.சிவிதிமுறைகளைபல்கலைக்கழகங்கள்பின்பற்றுவதில்லை:
மூண்றாண்டாக சம்பளம்இன்றி தவிக்கும் சிறப்பாசிரியர்கள்:
3,446 பார்வையற்றமாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு:
பூச்சிகளையும்காணோம்:மரங்களையும் காணோம்:
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: கல்வியியல் பட்டப்படிப்பு (பிஎட்) படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக ,  தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுக்குறித்து,  இன்று முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் விபரம் வருமாறு... 1.  பிஎட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக ,  தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். இத்தேர்வில் தகுதி பெறும் பிஎட் . ,  பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுபவர். 2.  இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு , மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வாயிலாக சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். 3.  பார்வையற்றவர்களுக்கு தேர்
தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை: தமிழகத்தில் 1.6.2006 ஆம் ஆண்டுக்கு முன் தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை ,  பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறை செய்ய வேண்டும் என , முதல்வருக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் ,  ஞாயிற்றுக்கிழமை மதுரையில் மாநிலத் தலைவர் பி. இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத் தீர்மானங்கள் வருமாறு: 1.6.2006-க்கு முன் பல்வேறு காலங்களில் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறைப்படுத்திட முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து ,  பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். சமூக அறிவியல் பாடத்துக்கு 7 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேர்வு பணிகளுக்கு வழங்கிடும் உழைப்பூதியத்தை இருமடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கு பி.எட். பட்டம் பெற்ற நாள் முதல் பணிமூப்பு கணக்கிட்டு ,
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க கலந்தாய்வு. தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அரசுக்கு ,  தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டத்தில் ,  தமிழக அரசு மற்றும் ஆசிரியர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும். இதை 2011 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த 10 அகவிலைப்படியை தமிழகத்திலும் அறிவிக்க வேண்டு ó ம். மேலும் 50 அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக சேர்க்க வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் அறிவிக்கையில் கூறியதுபோல் , சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதுவரை ஆசிரியர்கள் செலுத்திய தொகையிலிருந்து முன்பணம் பெற அனுமதிக்க வேண்டும். அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தங்களது கல்வி அறிவை வளர்த்துக் கொள்வதற்கு 3 ஆவது ஊக்க ஊதியம் வழங்கவேண்டும். பணியில் சேரும் ஆசிரியர்களின் மதிப்பெண் பட்டியலுக்கு ஒரே வாரத்தில் உண்மைத் தன்மை சான்று வழங்கப்படும் என அறிவித்த அரசு பள்ளித் தேர்வுத்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
தகுதித் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாளுக்கான தேர்வு முடிவும் இறுதி கீ ஆன்சரும் ஒரேநாளில் வெளியிடப்படும்’’ & ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும்: தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்- I ஐ , கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சுமார் 2 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினர். அதேபோல் ,  6ம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை பணிபுரியக் கூடிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்- II ஐ கடந்த 18ம் தேதி சுமார் 4 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில் ,  இரண்டு தேர்வுக்களுக்குமான  ‘ கீ ஆன்சரை ’  கடந்த மாதம் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிட்டது. ஆனால் ,  டி.ஆர்.பி. வெளியிட்ட  ‘ கீ ஆன்சரில் ’  ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் வருவதாகவும் ,  சில கேள்விகளில் குளறுபடிகள் இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் பேர் ஆதாரத்துடன் புகார்களை தெரிவித்திருந்தனர். இந்தச் சூழலில் புதிய கீ ஆன்சரையும் ,  தேர்வு முடிவையும் டி.ஆர்.பி. எப்போது வெளியிடும் என்றும் ,  புதிய கீ ஆன்சர் வெளியிடும்போது ,  தவறான க
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய போராட்டத்தின் விளைவாக துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி 7 அம்ச கோரிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அளிப்பதாக இயக்குநர் உறுதி: தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்திய 4 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக இறுதியில் தொடக்கக் கல்வி துறையின் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தி அதில் 7 அம்ச கோரிக்கை குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைப்பதாக தொடக்கக் கல்வி இயக்குநர் உறுதியளித்துள்ளதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் கடந்த 4 நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு தங்களின் நியாயமான கோரிக்கைகளை ஜனநாயக அடிப்படையில் தெரிவித்தனர். ஆனால் இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து எவ்வித பதிலும் வராததால் , தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநர் அளித்த உறுதிமொழியிலும் தங்களுக்கு திருப்தி இல்லையென்றும் ,  இந்த 4 நாட்கள் தொடர் போராட்டத்தின் விளைவாக தொடக்கக் கல்வி துறையிலுள்ள பல்வேறு சங்கங்கள் தங்களை அணுக
தமிழக ஆராய்ச்சி மாணவருக்கு "நாசா" ஆய்வு மையம் அழைப்பு: சென்னை அண்ணா பல்கலை ஆராய்ச்சி மாணவரும், கம்பத்தை சேர்ந்தவருமான சலீம்கானுக்கு, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அழைப்பு விடுத்துள்ளது.தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற நூலகர் அம்சத் இப்ராகிம்கான், ஹசீனா தம்பதியினரின் மகன் சலீம்கான். இவர் சென்னை அண்ணா பல்கலையில் காலநிலை மாற்றத்தினால் உண்டாகும் கடல்மட்ட உயர்வும், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறார். கடந்த 2008 ல் ஐ.நா., தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஐந்தாவது இளைஞர் மாநாட்டில் பங்கேற்று, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்கான ஐ.நா.வின் இளம் விழிப்புணர்வாளர் விருதை பெற்றுள்ளார்.அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், அங்குள்ள தேசிய அறிவியல் பவுண்டேஷனும் இணைந்து "புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சிகளை" நடத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சிகளை உலகம் முழுவதும் தீவிரப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.இதற்காக, இந்த தலைப்பில் ஆய்வறிக்கைகளை வரவேற்றது. உலக நாடுகளில் இருந்து 249 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட
"தாய்மொழியை விட்டு எங்கோ செல்லும் இளைஞர்கள்" "இன்றைய இளைஞர்கள் தாய்மொழியை விட்டு எங்கோ செல்வது வேதனையாக உள்ளது," என, எஸ்.ஆர்.எம். பல்கலை துணைவேந்தர் பொன்னவைக்கோ, ராஜபாளையம் மணிமேகலை மன்ற விழாவில் பேசினார்.மன்ற ஆண்டுவிழாவை முன்னிட்டு, சிறந்த தமிழ் நூல்களுக்கு விருது வழங்கும்விழாவில், அவர் பேசுகையில், "மன்றத்தினர் 55ஆண்டுகளாக தமிழ்சாதனை செய்கின்றனர்.  இங்கு விருது பெற்றவர்கள் 60 வயதை தாண்டியவர்கள். இவர்களை பாராட்ட இளைஞர்கள் இல்லை. இன்றைய இளைஞர்கள் தாய்மொழியை விட்டு எங்கோ செல்கின்றனர், என்பது வேதனையான ஒன்று. 2001ல் பாரிசில், அடுத்த நூற்றாண்டில் வாழும் மொழிகளின் பட்டியல் இருந்தது. அதில் தமிழ் இடம் பெறவில்லை. ஒரு மொழி அறிவதற்கான காரணமாக அம்மொழியிலேயே கல்வி, ஆட்சி, வழிபாட்டு, தாய் விருப்பம் போன்றவை இருக்கவேண்டும். இங்கு மாறிவிட்டது. தமிழகத்தில் அரசு உத்தரவு எல்லாம் ஆங்கிலத்தில் உள்ளது. மெக்காலே கல்வி திட்டம், இன்றும் தொடர்கிறது. தற்போது, துவக்கப் பள்ளிகளிலும் ஆங்கிலம் புகுந்துவிட்டது. தமிழ் நூல்களை உலகமொழிகளுக்கு மொழி பெயர்க்கவேண்டும். மற்ற மொழிகளுக்கு, தமிழ் தான் தா
புதிய தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்ப உத்தரவு: "புதிதாக துவங்க உள்ள 54 தொடக்க பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள," கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.குடியிருப்பு பகுதிகளில், மக்கள் தொகை 300 பேருக்கு, ஒரு தொடக்க பள்ளி அமைக்கவேண்டும் என்ற அடிப்படையில், மாநிலம் முழுவதும் கடந்தாண்டு, கள ஆய்வு செய்தனர். ஆய்வில், 54 குடியிருப்பு பகுதிகளில் தொடக்கப்பள்ளி இல்லாதது கண்டறியப்பட்டது. இப்பகுதிகளில், புதிய தொடக்க பள்ளிகளை விரைந்து துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான, ஆசிரியர்கள் சம்பள விபரங்களை தொடக்க கல்வி இயக்குனர், அரசிடம் வழங்கினார். அதன்படி, 2013-14ல் துவங்க உள்ள, தொடக்க பள்ளிகளுக்கென தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நிர்ணயம், தர ஊதியம் குறித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.அதில், புதிதாக துவங்கும் 54 பள்ளிகளுக்கு, இடைநிலை ஆசிரியருக்கு ரூ.5200-20200+2800; தலைமை ஆசிரியருக்கு ரூ.9300-34,800+4500 என்ற தர ஊதியமும் நிர்ணயித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பணி நியமனங்களில் இணையாக கருத வேண்டிய பட்டங்கள் தமிழக அரசு ஆணை. Click here-Public Services – Equivalence of Degree – various educational qualifications possessed by the candidates as equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders – issued.G.O (Ms).No. 185 Dt: September 26, 2013   தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு சமநிலை குழுவின் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் பி.ஏ., வரலாறு (வோக்கேஷ்னல்)  என்ற பட்டம், அரசு பணி நியமனத்தின்போது பி.ஏ. வரலாறு பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும். அதுபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும்எம்.எஸ்சி. தாவர அறிவியல் பட்டம், எம்.எஸ்சி. தாவரவியல் பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும்.சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் எம்.எஸ்சி. புள்ளியியல் பட்டம், முதுகலை பட்ட ஆசிரியர் பணி நியமனத்தின்போது எம்.எஸ்சி. கணித பட்டத்துக்கு இணையாக கருதப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்துடன் பரிசீலித்து அதனை ஏற்றுக்கொண்டதா
கேள்வித்தாள், ‘லீக்’ சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கேள்வித்தாள் வெளியான சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறிநிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், மூன்றாவது முறையாக, ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. 11 லட்சம் பேர், இந்த தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்து முடிக்கப்பட்டு விட்டன. தேர்வு முடிவை, தேர்வர்கள், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனினும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என, தெரியாத நிலை, நீடித்து வருகிறது. இதுகுறித்து விசாரித்தாலே, ‘தயாராக உள்ளது; விரைவில் வெளியிடுவோம்’ என்ற பதிலை, அதிகாரிகள் திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளின் ம
மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பு - 2013-14 ஆம் கல்வியாண்டில் 54 தொடக்கப்பள்ளிகளையும் அதற்கான தலைமை மற்றும் உதவி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு: click here to download the GO 188 - 54 New Primary Schools Name List for 2013-14 and Post Sanctioned
1,093 காலி இடங்கள் -பேராசிரியர் நேர்முகத்தேர்வை வீடியோவில் பதிவுசெய்ய முடிவு. கல்லூரி உதவிப் பேராசிரியர் நேர்முகத்தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் தவறு நடக்காமல் இருக்க நேர்முகத்தேர்வு காட்சியை வீடியோவில் பதிவு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 1,093  காலி இடங்கள் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள  1093  உதவி பேராசிரியர் பணிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட உள்ளன. அரசு பள்ளி ஆசிரியர்கள் போல் தகுதித்தேர்வோ ,  போட்டித்தேர்வோ இல்லாமல் சிறப்பு மதிப்பெண் வழங்கும் முறையில் உதவி பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.அதன்படி ,  பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு  2 மதிப்பெண் வீதம் அதிகபட்சம் ஏழரை மதிப்பெண் வீதம்  15 மதிப்பெண்ணும் ,  பி.எச்டி.முடித்திருந்தால்  9  மதிப்பெண்ணும் , ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சியுடன் எம்.பில். பட்டம் பெற்றிருந்தால்  6  மதிப்பெண்ணும் ,  எம்.பில். இல்லாமல் ஸ்லெட் , நெட் தேர்ச்சி இருந்தால்  5  மதிப்பெண்ணும் ,  நேர்முகத்தேர்வுக்கு  10 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிஅனுபவ சான்று தீவிர ஆய்வு தேர்வுமுறைக்கான மொத்த ம
தமிழ்நாடு அரசு அகவிலைப்படிக்கான அறிவிப்பு எப்போது? மத்தியப் பிரதேசம் , அசாம்  ,ராஜஸ்தான் மாநில அரசுகள் - மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியை 80% சதவீதத்திலிருந்து 90%  சதவீதமாக உயர்த்தியது.தமிழ்நாடு அரசு  மாநில அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப் படிக்கான அதிகாரப்பூர்வஅறிவிப்பு வெளியிடும் என்று நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவித்தனர்.
10-ம் வகுப்பு நேரடித் தனித்தேர்வர்கள்: செய்முறை வகுப்புக்கு பதிவு செய்ய வாய்ப்பு: பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை வகுப்புகளுக்குப் பதிவு செய்ய நேரடித் தனித்தேர்வர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.2013-14 ஆம் கல்வியாண்டில் நேரடியாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் அனைவரும் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு ஜூன் 3 முதல் 30-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதிக்குள் பதிவு செய்துகொள்ள தவறிய நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தனித்தேர்வர்கள், பதிவு செய்து பயிற்சி பெறாதவர்கள் ஆகியோர் தங்களது பெயர்களை அக்டோபர் 1 முதல் 15 வரை அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்காக பதிவு செய்யலாம். இந்த மாணவர்கள் http:dge.tn.gov.in. www.tndge.in என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். செய்முறைத் தேர்வுக்கான ரூ.125 கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வரைவோலை (டி.டி.) எடுத்து சம்பந்தப்பட்ட மாவட்
அனைத்து இளநிலை பட்டப் படிப்புகளிலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடம்: இளநிலைப் பட்டப் படிப்புகள் அனைத்திலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடத்தை கட்டாயமாக்குவது குறித்து சென்னைப் பல்கலைக்கழக கல்விக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.கல்விக் குழு நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்த இந்த விஷயத்தை, கல்விக் குழு உறுப்பினரும் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியருமான அரசு முன்வைத்து, வலியுறுத்திப் பேசினார்.இளநிலைப் பட்டப் படிப்புகளில் பெரும்பாலானவற்றில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அதாவது நான்கு பருவங்களுக்கு தமிழ்ப் பாடம் உள்ளது. ஆனால், பி.சி.ஏ., பி.பி.ஏ., போன்ற படிப்புகளில் முதலாண்டில் மட்டுமே தமிழ்ப் பாடம் உள்ளது. பி.காம்., போன்ற வணிகவியல் பட்டப் படிப்புகளில் முதலாண்டில் கூட தமிழ்ப் பாடம் இல்லை. இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (செப்.28) நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்தில், பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள அனைத்து கல்லூரிகளிலும் வழங்கப்படும் அனைத்து இளநிலை பட்டப் படிப்புகளிலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ் முதல் தாள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற பொருள் க
எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம் கணிதத்திற்கு இணையானது: Click here-.Higher Education – Equivalence of Degree – M.Sc. Statistics awarded by University of Madras as equivalent to M.Sc. Mathematics G.O (Ms).No. 190 Dt: September 27, 2013 எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது" என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. எம்.எஸ்சி., புள்ளியியல் படித்தவர்களுக்கு, அரசு பணிகளில், பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பு கிடையாது. அதுவே, எம்.எஸ்சி.,யில், இதர பாடங்களை எடுத்து படிப்பவர்கள், அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி வாய்ப்பை பெறுகின்றனர். இந்நிலையில், எம்.எஸ்சி., புள்ளியியல் படித்தவர்களும், அரசு பணி வாய்ப்பை அதிகளவில் பெறும் வகையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை, வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை பல்கலை வழங்கும் எம்.எஸ்சி., புள்ளியியல் படிப்பு, எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது என்றும், அரசு பள்ளிகளில், முதுகலை ஆசிரியர்களாக பணி வாய்ப்பு பெறுவதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்க உத்தரவு: தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில், 50 நடுநிலைப் பள்ளிகள்,உயர்நிலைப் பள்ளிட்களாக தரம் உயர்த்தப்படன. அப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள், 250 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். "புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை, இப்பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, 9ம் வகுப்பில் மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும்" என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து செப்டம்பர் 2013 மாத சம்பளம் வழங்க அரசு உத்தரவு: Click here-W.P.Nos.21525, 22423 of 2013 and batch cases – Filed challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (PC)department, dated 22—7-2013 based on the recommendations of the Pay Grievance Redressal Cell - Instructions issued – Regarding Order
தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது: தமிழக அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து , பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நடத்திய 12 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி , பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை பார்வையற்றோருக்கு 40 சதவீதமாக குறைக்க வேண்டும் ; அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தனர். சென்னை கே.கே.நகரில் உள்ள மாற்றுத் திறனாளிக்கான அலுவலகம் முன்பு அந்த சங்கத்தைச் சேர்ந்த 9 பேர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு மற்ற மாணவர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. தோல்வியில் முடிந்தது அந்த சங்கங்களின் சார்பில் சென்னையில் எங்காவது ஒரு சாலையில் திடீர் திடீரென்று மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டம் நடத்தும் பார்
பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாட திட்டத்துக்கு வல்லுநர் குழு ஒப்புதல்: பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்துக்கு உயர் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையிலான வல்லுநர் குழு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்தப் பாடத்திட்டம் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. மாநில அரசு ஒப்புதல் வழங்கியவுடன் அந்தந்தப் பாடங்களுக்கான புத்தகங்களை எழுதும் பணி தொடங்கும் என வல்லுநர் குழு வட்டாரங்கள் தெரிவித்தன. புத்தகங்களை எழுதவும், புத்தகங்களில் குறைபாடுகளை சரி செய்யவும் குறைந்தபட்சம் பத்து மாதங்கள் வரை ஆகலாம். புதிய புத்தகங்கள் 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம்தான் தயாராகும். எனவே, பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் 2015-16 கல்வியாண்டிலிருந்தும், பிளஸ் 2 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் 2016-17 கல்வியாண்டிலிருந்தும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக்குழு அமைக்கப்பட்டது. இந்தத் துணைக்குழு ம