Skip to main content

Posts

Showing posts from May, 2013
SSLC RESULTS-2013 SSLC RESULT - LINK 1 (31.5.13 9.15 AM) SSLC RESULT - LINK 2 (31.5.13 9.15 AM) SSLC RESULT - LINK 3 (31.5.13 9.15 AM) SSLC RESULT - LINK 4 (31.5.13 9.15 AM) SSLC RESULT - LINK 1 FOR TML ONLY FOR SCHOOL HM (31.5.13 9.15 AM) SSLC RESULT - LINK 2 FOR TML ONLY FOR SCHOOL HM (31.5.13 9.15 AM) SSLC RESULT ANALYSIS FORMAT 2013
இதர மொழிப் பாடங்களில் முதலிடம் பெற்றவர்கள் யார்? அரபிக் டி.அர்ஷியா பாத்திமா - ஹபீபியா ஓரி அராபிக் மகளிர் பள்ளி, ஆம்பூர் - 99 மதிப்பெண்கள் பிரெஞ்சு இப்பாடத்தில், மொத்தம் 22 பேர், 99 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். குஜராத்தி ஆர்த்தி பி.ராஜ்புரோகித் - மணிலால் மேத்தா மகளிர் மேல்நிலைப்பள்ளி, பார்க் டவுன், சென்னை - 98 மதிப்பெண்கள். ஹிந்தி ஆர்.ராகேஷ் ரோஷன் - ஆர்.கே.ஆர்.ஜி.ஆர்.கே.எஸ்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உடுமலைப்பேட்டை - 100 மதிப்பெண்கள் கன்னடம் எம்.பிரியதர்ஷினி - டிவைன் விஐடி மெட்ரிக் பள்ளி, தாளவாடி - 96 மதிப்பெண்கள் மலையாளம் எப்.எஸ்.பின்ஸி - எஸ்.ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாடந்தலுமூடு - 98 மதிப்பெண்கள் தெலுங்கு ஆர்.கீர்த்தனா - அரசு மேல்நிலைப்பள்ளி, பெத்தபெலகொண்ட பள்ளி - 98 மதிப்பெண்கள் சமஸ்கிருதம் வி.ஹம்சிகா - புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி - 100 மதிப்பெண்கள் உருது எஸ்.கஷிபா - இஸ்லாம் ஜமாத் பள்ளி, நரியம்பட்டு - 97 மதிப்பெண்கள்  
ஒட்டுமொத்த அளவில் முதல் மதிப்பெண் 499: மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒட்டுமொத்த அளவில், 499 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும், தமிழை முதல் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள்.அந்த மாணவிகள் விபரம்வி.ஹம்சிகா - புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி - 499 எஸ்.ரக்சனா - வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி - 499மற்றபடி, தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் மற்றும் தமிழை முதல் பாடமாக எடுத்தப் படிக்காதவர்கள் என்ற வகையில், இரண்டு பிரிவினரையும் சேர்த்து, மொத்தம் 17 பேர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்களில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற 9 மாணவகளும் அடக்கம்.  
10 ஆம் வகுப்பு செண்டம் பெற்றவர்களின் விபரம்: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், அறிவியல் பாடத்தில், அதிகளவாக 38,154 பேர், 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதற்கடுத்து கணிதத்தில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், அதிகளவிலான மாணவர்கள் முழு மதிப்பெண்கள்(100/100) பெற்றுள்ளனர். அதன் விபரம் வருமாறு; * அறிவியல் - 38,154 பேர் * கணிதம் - 29,905 பேர் * சமூக அறிவியல் - 19,680 பேர் * ஆங்கிலம் - 17 பேர் மொழிப் பாடமான தமிழைப் பொறுத்தவரை, 44 பேர் 99 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் 498 மதிப்பெண்கள் பெற்ற 8 பேர் அடக்கம். கடந்த 2012ம் ஆண்டில் 100/100 பெற்றோர் எண்ணிக்கை * கணிதம் - 1,141 பேர் * அறிவியல் - 9,237 பேர் * சமூக அறிவியல் - 5,305 பேர்
10ம் வகுப்பு: வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் அதிகம்: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் படி, வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் தங்களை ஒரு படி உயரத்திலேயே வைத்துள்ளனர். சென்ற 2012ம் ஆண்டில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 83.40% ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 86% ஆக அதிகரித்துள்ளது. இருந்தாலும், கடந்த 2012ம் ஆண்டில் 88.9% ஆக இருந்த மாணவியர் தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு 92% ஆக அதிகரித்துள்ளது. இந்த வருடம் தேர்வு எழுதியவர்களில் 4,57,250 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியரில் 4,77,965 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 86.20% ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 89% ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மாணவியரின் பங்கு அதிகம்.  
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 9 பேர் முதலிடம்: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் 9 பேர் முதலிடம் பெற்றனர். அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் 500க்கு 498. ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி அனுஷா உள்ளிட்ட 9 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். அனுஷா - கொங்கு வேளாளர் பள்ளி ,பெருந்துரை தீப்தி - பஸ்கோள் பள்ளி , மதுரை அண்ணாநகர் காயத்ரி -மோன்ட் போர்ட் பள்ளி, மஞ்சம்பட்டி மார்சியா - ஷெரின்மோன்ட் போர்ட் பள்ளி ,மஞ்சம்பட்டி பொன்சிவசங்கரி - ஈஎச்கேஎன் பள்ளி, எம்.பாளையம் ஷாருமதி - ஸ்ரீஷ்டி பள்ளி, பிரம்மாபுரம், சோனியா - எஸ் ஜே எஸ் ஜேயூபி பள்ளி, திருநெல்வேலி ஸ்ரீதுர்கா - வீனஸ் பள்ளி , சிதம்பரம், வினுஷா - ஆக்சிலம் பள்ளி, வேலூர் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேரும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.  
பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:   பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில், கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் இரண்டாம் இடத்தையும், ஈரோடு மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்தன. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வருமாறு.. வருவாய் மாவட்ட எண் - மாவட்டம் - தேர்வு எழுதியவர்கள் - தேர்ச்சி பெற்றவர்கள் - தேர்ச்சி சதவீதம் - மொத்த பள்ளிகள் --------------------------------- 01 - கன்னியாகுமரி - 27725 - 26974 - 97.29 - 384 03 - தூத்துக்குடி - 24450 - 23330 - 95.42 - 273 13 - ஈரோடு - 31040 - 29601 - 95.36 - 329 22 - திருச்சி - 38926 - 37036 - 95.14 - 391 06 - விருதுநகர் - 27891 - 26519 - 95.08 - 325 33 - சென்னை - 58491 - 55338 - 94.61 - 591 26 - புதுச்சேரி - 18557 - 17528 - 94.45 - 266 12 - கோயமுத்தூர் - 45859 - 43164 - 94.12 - 496 08 - மதுரை - 44765 - 41828 - 93.44 - 438 15 - நாமக்கல் - 26418 - 24627 - 93.22 - 290 11 - திருப்பூர் - 29023 - 27011 - 93.07 - 295 02 - திருநெல்வேலி - 44918
மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கான விபரம்:   மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசாணை (1டி) எண்.129 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள் 09.05.2013 அரசாணையின்படி 20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். 2011-12ம் கல்வியாண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற
அண்ணாமலை பல்கலைக்கழகம் செப்.,15ம் தேதி பி.எட்., நுழைவுத்தேர்வு: சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு செப்டம்பர் 15ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி முறையில் பி.எட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி காலை 11.00 முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது. அண்ணாமலை நகர், கோயம்பத்தூர், சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. மேலும் விரிவான தகவல்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.  
 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 31ம் தேதி(நாளை)வெளியீடு: பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை (31ம் தேதி), காலை, 9.15 மணிக்கு வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 27ம் தேதி துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 5,43,152 பேர் மாணவர்கள்; 5,25,686 பேர் மாணவியர் என, மொத்தம், 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 பேர் தேர்வு எழுதினர். "தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி வெளியிடுப்படும்" என, இம்மாதம் முதல் வாரத்திலேயே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பணிகளை முழு வீச்சுடன் அரசு தேர்வு துறை செய்து வருகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:15 மணியளவில் வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது. www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge
முதுகலை ஆசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு: மே 31 முதல் விண்ணப்பம்: முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணியிடங்களுக்கான போட்டி எழுத்து தேர்வு வரும் ஜூலை மாதம் 21ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி வரை முதன்மை கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. விண்ணப்ப கட்டணம் 50 ரூபாயை ரொக்கமாக செலுத்தி பெற்று கொள்ளலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட அறிவுரையின்படி எந்தவித தவறுமின்றி ஓ.எம்.ஆர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேர்வு கட்டண செலானுடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எக்காரணம் கொண்டும் தபால் மூலமாக முதன்மை கல்வி அலுவலகத்திற்கோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ அனுப்ப கூடாது. அவ்வாறு தபால் மூலம் அனுப்பபடும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ம
ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்கள் கவுன்சிலிங் எப்போது? தமிழகம் முழுவதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் இயங்கும், பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், ஆன்லைன் மூலம், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பிக்காத தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள், ஆன்லைன் பொது மாறுதலில் கலந்து கொள்ள இயலாது. பட்டதாரி ஆசிரியர்கள், காப்பாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், காப்பாளர்கள் ஆகியோருக்கு, ஆன்லைன் பொது மாறுதல் தொடர்பான விவரம், தனியே அறிவிக்கப்படும்.  
  பள்ளிகளுக்கு செல்லும் ஆட்டோக்கள் பதிவு அவசியம்: போக்குவரத்து துறை: பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்லும், ஆட்டோ உள்ளிட்ட பிற வாகனங்கள் குறித்த விவரத்தை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்" என போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையடுத்து, பள்ளி வாகனங்கள், விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுவது குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கண்காணிப்பை தீவிரப்படுத்த, போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழகத்தில் உள்ள, 11 போக்குவரத்து துறை மண்டலங்களில், மண்டலத்திற்கு தலா, நான்கு முதல், ஐந்து சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில், போக்குவரத்து குழு அமைப்பது, தகுதி சான்றிதழ் பெறாத வாகனங்கள், உடனடியாக அதை பெற செய்தல் உள்ளிட்ட விஷயங்களில், அக்குழுக்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், பள்ளி வாகனங்களை தவிர்த்து, ஆட்டோ, மேக்சி கேப், ஆம்னி டாக்சி உள்ளிட்ட பிற வாகனங்களிலும், மாணவ, மாணவியர் செல்வதும் வழக்கம். இந்த வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகா
மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் அமைவிடம்: கூட்டத்தில் வலியுறுத்தல்: "மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளின் இடவசதி அமைவிடம் குறித்து தமிழக அரசு வரையறை செய்ய வேண்டும்" என மதுரையில் நேற்று நடந்த தென் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தனியார் பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் பெற அரசு உத்தரவு எண்:48 (2004)ல், மாநகராட்சியில் அமைந்த ஒரு பள்ளிக்கு குறைந்தது 6 கிரவுண்ட் இடமும், மாவட்ட தலைநகரில் 8 கிரவுண்ட், நகராட்சியில் 10 கிரவுண்ட், பேருராட்சியில் ஒரு ஏக்கர், ஊராட்சியில் 3 ஏக்கர் இடமும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும், என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை கடைபிடிக்க முடியாமல் 800 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக, தமிழக அரசு அமைத்த குழு மதுரையில் 3வது கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது. குழுத் தலைவர் பள்ளிக் கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமை வகித்தார். தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் தெரிவித்ததாவது: மாணவர் ஒருவருக்கு ஒரு பள்ளியில் 10 சதுரடி இடவசதி செய்ய வேண்டும்
குறையாத வெயிலின் தாக்கம்: பள்ளி திறப்பு தேதி மாற்றம்: தமிழகத்தில் கடுமையான வெப்ப நிலை தொடர்வதால், மாணவர்கள் நலன் கருதி, அனைத்து பள்ளிகளும், ஜூன், 3ம் தேதிக்கு பதில், ஜூன், 10ம் தேதி துவங்கும் என, பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், "கத்திரி" வெயில் வாட்டி எடுக்கும். இந்தாண்டுக்கான "கத்திரி" வெயில், கடந்த, 4ம் தேதி துவங்கியது. "கத்திரி" துவங்கியது முதலே, தமிழகம் முழுவதும் தொடர்ந்து வெயில் வாட்டி எடுத்தது. "கத்திரி" வெயில் நேற்றுடன் முடிவடைந்தும், வெயிலின் தாக்கம் குறைய, ஒரு சில வாரங்கள் ஆகும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகள் திறப்பதற்கு முன், வெயில் தாக்கம் குறித்து பரிசீலிக்கப்படும். அதன்படி, பள்ளிகள் திறப்பு தேதி முடிவு செய்யப்படும். வெயிலின் தாக்கம் குறையாததால், புதுச்சேரி அரசு, பள்ளிகளின் திறப்பு தேதியை, ஜூன், 3ம் தேதியில் இருந்து, 10ம் தேதிக்கு தள்ளி வைத்தது. இந்நிலையில், தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து
புதுச்சேரி பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் 10ம் தேதி மறுதேர்வு: புதுச்சேரியில் பிளஸ் 1 தோல்வியுற்ற மாணவர்களுக்கு ஜூன் 10ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார். பள்ளி திறக்கும் தேதி மாற்றம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றப்பட்டுள்து. கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதி வாரத்திலும் கோடை வெயிலின் தாக்கம் குறைய வில்லை. நாளுக்குள் நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், புதுச்சேரியில், பள்ளிகள் திறக்கும் தேதி ஜுன் மாதம் 3ம் தேதிக்கு பதில் 10ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் தியாகராஜன் இன்று அறிவித்தா  
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணையதள கலந்தாய்வு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணி நாடுனர்களுக்கு இணையதள கலந்தாய்வு மூலம் நியமன ஆணை இன்று வழங்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர் தாவரவியல் பாடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பணி நாடுனர்களுக்கு இணையத்தள கலந்தாய்வு மூலம் நியமன ஆணை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இன்று(27.05.2013) வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு வர வேண்டும். அதேபோன்று, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தொகுதி 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர்கள் பணிக்கு தேர்வு பெற்று பள்ளிக் கல்வித் துறைக்கு, துறை ஒதுக்கீடு செய்யப்பட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பணி நாடுனர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.  
சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை இன்று காலை வெளியிடப்பட்டன.  தேர்வு முடிவுகளை www.results.nic.in www.cbseresults.nic.in www.cbse.nic.in - ஆகிய அரசு இணையதளங்களில் காணலாம். மேலும் 011 24300699 / 011 28127030 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டும் அறியலாம். எஸ்.எம்.எஸ் மூலம் அறியவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு: மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்த்தும் நடைமுறையில் மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஐ.ஏ.எஸ்., -ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., பணிகளுக்கு, மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை தேர்வு செய்யும் நடைமுறை, தற்போது உள்ளது. இதன்படி, சீனியாரிட்டி மற்றும் ஆண்டு நம்பகத் தன்மை அறிக்கை (ஏ.சி.ஆர்.,) ஆகியவற்றின் அடிப்படையில், அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெறுகின்றனர். இந்த நடைமுறையில் மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, இனிமேல், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற விரும்புவோர், போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும். எழுத்துத் தேர்வு, சர்வீஸ் ரெகார்டு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட, நான்கு கட்டங்களாகத் தேர்வு நடக்கும். இதில், தேர்ச்சி பெறும் அதிகாரிகள் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பணிகளுக்கு, மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படுவ
ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: படிக்கட்டு பயணம் தடுக்கப்படுமா? தினமலர்  பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணிக்கும், மாணவர்களை தடுத்து நிறுத்த, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, டிசம்பர், 10ம் தேதி, சென்னை, பெருங்குடியை அடுத்த கந்தன்சாவடியில், பேருந்து மீது லாரி மோதியதில், படிக்கட்டில் பயணம் செய்த, நான்கு மாணவர்கள் பலியாயினர். இச்சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை,சென்னை ஐகோர்ட், தானாக முன் வந்து, வழக்காக எடுத்து விசாரித்தது. அப்போது, "பேருந்து படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்தால், அவர்களது பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரி விக்க வேண்டும். தொடர்ந்து, படிக்கட்டில் பயணம் செய்தால், அந்த மாணவர்களை பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்&' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, போக்குவரத்து துறையினரும், போக்குவரத்து போலீசாரும் களத்தில் இறங்கினர். படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை, போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பும் வேலையை
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று (27.05.2013) வழங்கல்: பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று முதல், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட்டது. பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இன்று காலை முதல், திருச்சி மாவட்டத்தில் அந்தந்த பள்ளிகளில் "மார்க் ஷீட்" வினியோகம் செய்யப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சியை பதிவு செய்து கொள்ள ஏதுவாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யம் பணி நடக்கவுள்ளது. வரும் ஜூன், 10ம் தேதி வரை, பதிவு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு, மே 27ம் தேதி முதல் சீனியாரிட்டி வழங்கப்படும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.    
சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு: ஆண், பெண் சம விகிதத்தில் தேர்ச்சி: சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வின், தென் மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. சென்னை மண்டலத்தில், ஆண்கள், 99.85 சதவீதமும், பெண்கள் 99.91 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, அந்தமான் -நிகோபார், கோவா ஆகிய மாநிலங்கள் அடங்கிய சென்னை (தென்) மண்டலத்தில் உள்ள, 2,338, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலிருந்து, பத்தாம் வகுப்பு தேர்வை, ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 965 மாணவர்கள் எழுதினர். இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில், 1,47,052 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், 275 பள்ளிகளை சேர்ந்த, 13 ஆயிரத்து 738 மாணவர்கள் மற்றும், 10ஆயிரத்து661 மாணவிகள் என, 24 ஆயிரத்து 399 பேர் தேர்வெழுதினர். இதில் 13 ஆயிரத்து 727 மாணவர்கள், 10 ஆயிரத்து 656 மாணவியர் என, 24 ஆயிரத்து 383 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 99.92 சதவீதமும், மாணவியர் 99.95 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது கிரேடு அடிப்படையில், வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டு வருகிறத
ஐ.ஏ.எஸ். பதவிக்கான தேர்வில் 40 சதவீதம் பேர் ஆப்சென்ட்: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் முதல் நிலைதேர்வு, நேற்று நடந்தது. இத்தேர்வை, தமிழகத்தில் இருந்து, 30 ஆயிரம் பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 40 சதவீதம்பேர், ஆப்சென்ட் ஆயினர். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, அரசு உயர் பணியிடங்களுக்கு, சிறந்த பணியாளர்களை தேர்வு செய்வதற்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., ஆண்டுதோறும் நடத்தி  வருகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என, மூன்று கட்டங்களாக, இத்தேர்வுகள் நடக்கின்றன. நேர்முகத் தேர்வுக்குப் பின், தகுதி வாய்ந்தோர், படி நிலை அடிப்படையில், பல்வேறு பணியிடங்களுக்கு, தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தாண்டில், மத்திய அரசுப் பணிகளில் காலியாக உள்ள,  ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 1,000 பணியிடங்களுக்கான, முதல் நிலைதேர்வு, நேற்று நடந்தது. இதில், இந்திய வனப் பணியில் (ஐ.எப்.எஸ்.,) காலியாக உள்ள, 80 இடங்களுக்கும், முதல் மு
10ஆம வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு:   சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய 10-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 5,00,000 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் www.cbse.nic.in, www.results.nic.in, மற்றும் www.cbseresults.nic.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், 011 - 2430 0699 என்ற IVRS தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். கடந்த சில ஆண்டுகளாக, மதிப்பெண்கள் வழங்குவதற்குப் பதிலாக கிரேடு வழங்கும் முறையை பின்பற்றி வருகிறது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. இணையதளத்தில் காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறியலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது
தமிழக அரசு பள்ளிகளில் உள்ள  சிறப்பாசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யகோரி கோரிக்கை : தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் போன்ற பாடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 16,549 சிறப்பு ஆசிரியர்களை நியமித்தது அரசு. தொகுப்பூதியமாக மாதத்திற்கு 5,000 ரூபாய் பெறும் இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோருகின்றனர். கடலூர் மாவட்டத்தில், பணி நியமனம் பெற்ற 690 சிறப்பு ஆசிரியர்களின் தற்போதைய நிலையையும், அவர்களது கோரிக்கைகளையும் பார்க்கலாம். சிறப்பு ஆசிரியர்கள் தவிப்பு: தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பணி நியமனம் பெற்ற சிறப்பு ஆசிரியர்கள், மாதத்திற்கு 12 அரை நாட்கள் வேலை செய்து, 5,000 ரூபாயை தொகுப்பூதியமாக பெறுகின்றனர். கடந்த ஏப்ரலில் மூன்று வாரங்கள் மட்டுமே வேலை நாட்கள் என்பதால் 3,750 ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. கோடை விடுமுறைக் காலமான இந்த மே மாதத்திற்கு அதுவும் கிடையாது என்பதால் சிறப்பு ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர். பணி நிரந்தம் செய்ய கோரிக்கை: புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரி முதலமைச்சர், பள்ளிக் கல்