Skip to main content

Posts

Showing posts from September, 2014

சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த விவகாரம்: தனியார் பள்ளியை மூட கேரள அரசு நடவடிக்கை:

திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான குடப்பனகுன்னு என்னுமிடத்தில் தனியார் மழலையர் பள்ளியில்4 வயது சிறுவன் ஒருவன் யு.கே.ஜி. படித்து வந்தான். கடந்த மாதம் 25-ந் தேதி அவன் வகுப்பு நேரத்தில் அருகில் இருந்த மற்ற குழந்தைகளிடம் பேசியதாக கூறப்படுகிறது.இதனால் கோபமடைந்த வகுப்பு ஆசிரியை அந்த சிறுவனை பள்ளிக் கூடத்தில் இருந்த நாய் கூண்டுக்குள்3 மணி நேரம் அடைத்து வைத்தார். இதையறிந்த குழந்தைகள் நல ஆர்வலர்களும்அப்பகுதி மக்களும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகி சசிகலா கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்த மாநில கல்வித்துறை துணை இயக்குனர் பள்ளியில் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை கண்டுபிடித்தார்.இதையடுத்து அவர் சமர்ப்பித்த அறிக்கையின்படி அந்த பள்ளியை மூடுவதற்கு கேரள அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.இதனிடையே கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிக்கு கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 68 காசுகள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.1 குறைகிறது:

பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 68 காசுகள் குறைந்தது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் டீசல் விலையும் லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைகிறது.கச்சா எண்ணெய் விலை சரிவுசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. ஆனால் டீசல் விலையை ஒரேயடியாக உயர்த்தாமல் இறக்குமதி விலைக்கு சமமாக வரும்வரை மாதம் லிட்டருக்கு 50 காசுகள் மட்டும் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்தது.15 நாட்களுக்கு ஒரு முறை, 1 மற்றும் 16 ஆகிய தேதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் இதுபோல விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. வித்தியாசம் நீங்கியதுஇதன் காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி டீசல் விலையை 50 காசுகள் உயர்த்தியவுடன், சர்வதேச சந்தை விலைக்கும், இங்குள்ள சில்லரை விலைக்கும் இடையே இருந்த வித்தியாசம் நீங்கியது. செப்டம்பர் 16-ந் தேதி சர்வதேச விலையைவிட இந்தியாவில் டீசல் லிட்டருக்கு 35 காசுகள் அதிகமாக இருந்தது. இந்த கூடுதல் விலை இப்போது ஒரு ரூபாய் அளவுக்கு

சுய நிதி மருத்துவ கல்லூரியில் MBBS படிக்க மேலும் 30 மாணவர்களுக்கு வாய்ப்பு:

படித்து பட்டம் பெற்றாலும் திறமையும், தகுதியும் தேவை!

வேலைவாய்ப்பு தேடி காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை, தமிழகம் மட்டும் அல்ல; நாடு முழுவதும் அதிகரித்திருக்கிறது. தாங்கள் படித்த கல்விக்கு ஏற்ப, வருமான அளவை எதிர்பார்த்து காத்திருக்கும் இவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு, ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது. குறிப்பாக, பொறியியல் படிப்பு படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள், வேலைவாய்ப்பு சந்தை யில் குவிந்துள்ளனர். வேலை கிடைத்தாலோ அதிக சம்பளம், எதிர்காலம் வளமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு முற்றிலும் மாறி விடுகிறது. பொறியியல் படிப்பில், அதிக மதிப்பெண்கள், திறனறி போட்டிகளில் தேர்வு பெறும் தன்மை, நேர்முக தேர்வுகளில் சமாளிக்கும் திறன் ஆகிய அனைத்தும், தேவைப்படும் நிலை இப்போது வந்து விட்டது. இதனால் சிலர், வங்கிப் பணிகள் அல்லது அரசுப் பணி தேர்வுகளையும் எழுதத் துவங்கி விட்டனர். நாட்டின் கவுரவமான எரிசக்தி துறை நிறுவனத் தலைமை நிர்வாகி ஒருவர், தன் நிறுவனம் எதிர்பார்க்கும் விஷயங்களை, வெளிப்படையாக கூறியிருக்கிறார். 'பொறியியல் பட்டதாரியின் மதிப்பெண்கள், கணினியில் அதிக தேர்ச்சி, பணியில் சேர்ந்தால் திறனுடன் உடனடியாக முடிவெடு

துணை மருத்துவப் பட்டய படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடக்கம்:

துணை மருத்துவப் பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது.  செவிலிய உதவியாளர் உள்ளிட்ட 16 துணை மருத்துவ சான்றிதழ் படிப்புகள், கண் மருத்துவம் உள்ளிட்ட 8 பட்டயப் படிப்புகள் என மொத்தம் 24 படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை கிங் மருத்துவ ஆராய்ச்சி மையத்திலும் விண்ணப்பங்களைப் பெறலாம். விண்ணப்பங்களை www.tnhealth.org, www.tngov.in ஆகிய இணையதளங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப விநியோகத்துக்கான கடைசித் தேதி அக்டோபர் 13 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். படிப்பில் சேர தகுதி உள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் அக்டோபர் 24-ஆம் தேதி வெளியிடப்படும். அக்டோபர் இறுதி வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2ம் பருவ பாட புத்தகங்கள் அக்.6ம் தேதி விநியோகம்:

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2014-2015ம் கல்வியாண்டிற்கான 1 முதல் 9ம் வகுப்பு வரை 2ம் பருவத்திற்கான இலவச பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், இலவச சீருடைகள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் கல்வி மாவட்ட வாரியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு இன்று முதல் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு தேவையான இலவச பாட புத்தகங்களை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்று பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்து காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக். 6ம் தேதி அன்று மாணவர்கள் வசம் இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம் மற்றும் இலவச சீருடை வழங்கப்பட வேண்டும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களும் இப்பணியில் காலதாமதமின்றி விரைவு நடவடிக்கை எடுத்துள்ளார்

புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி இன்று நடக்கிறது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வியாழக்கிழமை பணியில் நியமிக்கப்பட்டனர். பணி நியமனத்திற்கு எதிரான இடைக்கால தடை விலக்கப்பட்டதை அடுத்து ஆசிரியர்கள் நியமனத்தை பள்ளி கல்வித்துறை முடித்தது. அந்தந்த மாவட்ட கல்வி முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் ஆன்லைன் மூலமாக காலி இடங்களில் பணி அமர்த்தப்பட்டனர். நியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள் மறுநாளே பணியில் சேர்ந்தனர். பணியில் சேர்ந்த மறுநாள் முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது. தற்போது  அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அக்டோபர் 6–ந்தேதி பள்ளிகள்  மீண்டும் திறக்கப்படுகிறது. புதியதாக நியமிக்கப்பட்டபட்டதாரி  ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று (30–ந்தேதி) மற்றும் 1–ந்தேதி ஆகிய 2 நாட்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. புதிய ஆசிரியர்கள், மாணவர்களை எவ்வாறு கையாள வேண்டும், 6, 7, 8 ஆகிய  வகுப்புகளில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள கிரேடு முறைப்பற்றியும் 10–ம்  வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் கற்றுதல்  வேண்டும் என்று இதில் அறிவுரைகள், ஆல

பட்டப் படிப்புகளின் ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியீடு!!

தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் எந்தெந்தப் படிப்புகளுக்கு இணையானவை என்பதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.  வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும். உடனடியாக அந்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும் என தமிழ்நாடு உயர் கல்வி கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கலை, அறிவியல் கல்லூரிகளில் அவ்வப்போது புதிய பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.  இவ்வாறு அறிமுகம் செய்யப்படும் சில பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடத் தேர்வுகளில் பங்கேற்க முடியாமல் போகிறது. இவர்களுடைய பட்டப் படிப்புகளைத் தகுதியற்றவையாக ஆசிரியர் தேர்வு வாரியம் புறக்கணிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரத்தை உருவாக்கும் பணியை தமிழ்நாடு உயர்

இந்தியாவின் முதலாவது தொழிற்பயிற்சி பல்கலை தொடக்கம்!!

இந்தியாவின் முதலாவது தொழிற்பயிற்சி பல்கலைக் கழகம் புனேயில் தொடங்கப்பட்டுள்ளது. தொழில் திறன் மிக்க இளை ஞர்களை உருவாக்கும் நோக்கில் குஜராத் மாநில அரசும் மனித வள நிறுவனமான டீம் லீஸ் நிறுவனமும் இணைந்து இந்த பல்கலைக் கழகத்தை உருவாக்கியுள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் 4 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். டீம்லீஸ் ஸ்கில்ஸ் பல்கலைக் கழகம் (டிஎல்எஸ்யு) முதல் கட்டமாக மூன்று பிரிவுகளில் சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறது. மெகடிரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஹார்ட்வேர், நிதி மற்றும் வர்த்தக செயல்பாடு குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. வரும் காலங்களில் சில்லறை வர்த்தகம் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் குறித்த பயிற்சிகளையும் அளிக்க உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் இப்போது 20 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக தொழில் பயிற்சி பல்கலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பல்கலைக் கழகத்தின் செயல்பாடு மற்றும் இதுகுறித்து வெளியாகும் விமர்சனங்களின் அடிப்படையில் இதை படிப்படியாக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்

தமிழக அமைச்சர்களின் இலாகாக்கள்....

900 முதுகலை ஆசிரியர்கள்-டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு:

தமிழகத்தில் அரசு மற்றும் நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த 100 உயர்நிலை பள்ளிகள், மேல் நிலைபள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேவையான 900 முதுகலை ஆசிரியர்கள் டி.ஆர்.பி., மூலம் விரைவில்தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை பள்ளிகள் 300, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிரியல், வேதியியல் பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்று விக்கப்பட்டன. தற்போது, இதனுடன் தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கும் கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஜூலையில் நடந்த சட்டசபை கூட்டத்தில் 100 உயர் நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என ஜெ., அறிவித்தார். அதன் அடிப்படையில் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகள் பட்டியலை பள்ளி கல்வி துறை செயலர் சபிதா வெளியிட்டுள்ளார். இந்த பள்ளிகளில் 100 தலைமை ஆசிரியர்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் என, 900 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான தேர்வு டி.ஆர்.பி., மூலம் விரை

B.Ed., மாணவர் சேர்க்கை தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.......

ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான தகுதிச் சான்று பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று, பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (செப்.24) நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விசுவநாதன் கூறியது: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வை பல்கலைக்கழகம் முதல்முறையாக நடத்தி வருகிறது. வரும் திங்கள்கிழமை (செப்.29) மீதமுள்ள 120 பி.எட். இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.  பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், அவர்களிடம் உள்ள இடங்கள் அனைத்தையும் தாங்களாகவே நிரப்பிக் கொள்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தும்போதும், கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் தகுதிச் சான்று பெற வேண்டும். அவ்வாறு தகுதிச் சான்று பெற்ற பின

வனத்துறை பணியாளர்கள் தேர்வுக்கு புதிய வாரியம்: வனவர்கள், வனக் காப்பாளர்கள் 609 பேர் விரைவில் நியமனம்:

வனத்துறை ஊழியர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு என்ற பெயரில் புதிய தேர்வு வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் 609 வனவர்கள், வனக் காப்பாளர்கள், வனக் காவலர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். தமிழக அரசின் வனத்துறையில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வனப்பாதுகாவலர், வனப்பாதுகாவலர், உதவி வனப்பாதுகாவலர், மாவட்ட வன அதிகாரி, வனச்சரகர்கள் என பல்வேறு பதவி நிலைகளில் உயர் அதிகாரிகளும், வனவர்கள், வனக் காப்பாளர்கள், வனக்காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். நேரடியாக உயர் பணியில் நியமிக்கப்படும் அதிகாரிகள் (ஐஎப்எஸ்) மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலமாகவும், உதவி வனப்பாதுகாவலர்கள் (மாநில வனப்பணி), வனச்சரகர்கள் (ரேஞ்சர்கள்), தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். புதிய தேர்வு வாரியம் வனவர் (பாரஸ்டர்), வன காப்பாளர் (பாரஸ்ட் கார்டு), வனக்காவலர் (பாரஸ்ட் வாட்சர்) ஆகியோர் இதுவரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு பட்டியல் பெறப்பட்டு அதில் இடம் பெற்றவர்களுக

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்?

இந்த ஆண்டு 2 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலாயா உள்ளிட்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர “சி-டெட்” எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வையும், இதேபோல், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்குச் சேர ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வையும் (டெட்) எழுத வேண்டும். கடைசியாக டெட் தேர்வு 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 17, 18-ந் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அதில் ஏறத்தாழ 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்பட்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவது நீதிமன்ற வழக்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேசிய

TNTET;ஆசிரியர்களுக்கு இரண்டாவது பட்டியல் 2032 பணியிடங்கள் விரைவில் வர உள்ளது?

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது அதில் வெயிட்டேஜ் அடைப்படையில் 12000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இரண்டாவது பட்டியல் வெளிவரஉள்ளது இதில் 2032 பணியிடங்கள் மேல் உள்ளது இதில் தமிழுக்கு மட்டும் 250 பணியிடங்கள் வரலாம் என உறுதியான தகவல்கள் கூறுகிறது. 

தேர்வுக் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்: இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்..

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்மையில் உயர்த்திய தேர்வுக் கட்டண உயர்வை, வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 2002 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இப்போது, காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வருகிறது.             இப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 115 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக் கல்லூரிகளில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் ஏழை-எளிய கிராமப்புற மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் இப் பல்கலைக்கழகம் தனது தேர்வுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. முன்பு, இளங்கலை படிப்பு தாள் ஒன்றுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.45, முதுகலைப் படிப்பு தாள் ஒன்றுக்கு ரூ.75, மதிப்பெண் சான்றிதழ் பெற ரூ.25, செய்முறைத் தேர்வுக்கு ரூ.100, தேர்வு விண்ணப்பத்துக்கு ரூ.25 என்று கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. இந்த கட்டணங்களில் இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளங்கலை படிப்பு தாள் ஒன்றுக்கான தேர்வுக் கட்டணமாக ரூ.85, முதுகலைப் ப

1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதல்-அமைச்சர் பதவி வகித்தவர்கள் விவரம்:

தமிழக முதல்-அமைச்சர்கள் 1952-ம் ஆண்டுக்கு பிறகு தமிழக முதல்அமைச்சர் பதவி வகித்தவர்கள் விவரம் வருமாறு: ராஜாஜி    10-04-1952 முதல் 13-04-1954 வரை கே.காமராஜ்        13-04-1954 முதல் 02-10-1963 வரை எம்.பக்தவச்சலம் 02-10-1963 முதல் 06-03-1967 வரை அண்ணா    06-03-1967 முதல் 03-02-1969 வரைமு.கருணாநிதி         10-02-1969 முதல் 04-01-1971 வரை..  15-03-1971 முதல் 31-01-1976 வரை எம்.ஜி.ஆர்        30-06-1977 முதல் 17-02-1980 வரை                               09-06-1980 முதல் 15-11-1984 வரை         10-02-1985 முதல் 24-12-1987 வரை ஜானகி ராமச்சந்திரன்        07-01-1988 முதல் 30-11-988 வரை மு.கருணாநிதி        27-01-1989 முதல் 30-01-1991 வரை ஜெ.ஜெயலலிதா        24-06-1991 முதல் 12-05-1996 வரை மு.கருணாநிதி        13-05-1996 முதல் 13-05-2001 வரை ஜெ.ஜெயலலிதா        14-05-2001 முதல் 21-09-2001 வரை ஓ.பன்னீர்செல்வம்        21-09-2001 முதல் 01-03-2002 வரை ஜெ.ஜெயலலிதா        02-03-2002 முதல் 12-05-2006 வரை மு.கருணாநிதி        13-05-2006 முதல் 15-05-2011 வரை ஜெ.ஜெயலலிதா        16-05-2011 முதல் 27-09-2014 வரை

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி-விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சம்பத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை வளர்க்கும் கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாவட்ட அளவிலான 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வரும் 9ம் தேதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணிக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒரு பள்ளியிலிருந் தும் ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று பேர் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம் வழங்கப்படும். அதே போல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வரும் 1ம் தேதி விழுப்புரம் அறிஞர் அண்ணா அர சு கலைக் கல்லூரியில் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரமும் வழங்கப்படும். ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஒரு போட்டிக்கு ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலி சான்றிதழ் விவகாரம் 3 காலி மருத்துவ இடத்துக்கு இன்று சென்டாக் கவுன்சலிங்:

சென்டாக்கில் காலியான 3 மருத்துவ இடங்களுக்கு இன்று இறுதிகட்ட கவுன்சலிங் நடைபெறுகிறது. புதுவையில் சென்டாக்கில் போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மோனிகா நீக்கப்பட்டார். இதுபோல், வேறு யாராவது போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்துள்ளார்களா? என்பதை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.ஆய்வின்போது, உண்மை தெரிந்து விடும் என்பதால் அடுத்தடுத்து 2 மாணவிகள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்து தாங்களாகவே விலகிய நிலையில், 27ம்தேதி மேலும் ஒரு மாணவி போலி சாதிச்சான்றிதழ் காரணமாக விலகினார். இந்நிலையில் காலியான மருத்துவம், துணை மருத்துவ இடங்களுக்கு இன்று (29ம்தேதி) கவுன்சலிங் நடைபெறுகிறது. இதுகுறித்து சென்டாக் கன்வீனர் நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 3 மருத்துவ இடங்களுக்கு இன்று கவுன்சலிங் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். அதில், வெங்கடேஸ்வரா மற்றும் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரிகளில் பொதுப்பிரிவில் தலா ஒரு இடமும், பிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் எம்பிசி பிரிவில் 1 இடமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாகே ராஜீவ்காந்தி ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் பொத

கிராமப்புற அஞ்சல் நிலையங்களில் பிரவுசிங் சென்டர்: விரைவில் வருகிறது புதிய திட்டம்:

விரைவில் வருகிறது புதிய திட்டம்  தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் விரைவில் பிரவுசிங் சென்டர்களை தொடங்கி இணைய சேவையை வழங்கும் புதிய திட்டம் விரைவில் செயல்படவுள்ளது . அஞ்சல்துறை மாற்றங்கள் சுதந்திரம் பெற்றபோது இந்தியாவில் மொத்தம் 23,344 அஞ்சல் நிலையங்கள் இருந்தன . தற்போது அந்த எண்ணிக்கை 7 மடங்கு அதிகமாகி 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது . கடிதம் , தந்தி , மணி ஆர்டர் போன்ற சேவை களை வழங்கி வந்த அஞ்சல் நிலையங்கள் காலப்போக்கில் எண்ணற்ற மாற்றங்களை சந்தித்தன . தற்போது அஞ்சலக சேமிப்பில் ஆரம்பித்து பணப்பரிமாற்றம் , அயல்நாடுகளுக்கு பொருட்களை அனுப்புவது , இ - போஸ்ட் , மீடியா போஸ்ட் என 25- க்கும் அதிகமான சேவைகளை ஒரே இடத்தில் வழங்கி வருகிறது . நவீனமயமாக்கம் வங்கிகளைப் போல அஞ்சல் நிலையங்களையும் நவீனமயமாக்க பல கோடி ரூபாய் செலவில் ‘ அஞ்சலக தகவல் தொழில்நுட்ப நவீனமயமாக்கல் 2012’ என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது . இந்நிலையில் பொதுமக்களை கவரும் விதமாக முக்கிய இடங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் விரைவில் பிரவுசிங் சென்டர்

உள்ளத்தால் உயர்ந்த கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி:

இந்தியாவில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாடி சம்பாதித்தவர்கள் எல்லாம் ஹோட்டல் , கம்பனி என்று தங்களின்தொழிலை மட்டுமே வளமாக்கி கொண்டார்கள் . தனக்காக கைதட்டிய ரசிகனை பற்றி ஒரு முறையும்சிந்திக்காதவர்கள் . இன்று ஓய்வு பெற்ற பின்பும் எதாவது வருமானம் வருமா என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள் . அந்த வகையில்பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் ஷாஹித் அப்ரிடி , எந்த அளவிற்கு அதிரடி ஆட்டகாரரோ , அதே அளவிற்கு இளகியமனம் படைத்தவர் . தான் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு இலவச மல்டி ஸ்பெஷல்மருத்துவமனை , மற்றும் தரமான சாலைகள் போடுவதற்கு செலவு செய்து உள்ளார் . இதுவரை அவர் 17 மில்லியன் டாலர்களை அவர்செலவு செய்து உள்ளார் . இந்திய மதிப்பில் 77 கோடிக்கும் மேல் . முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதநிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது . அப்ரிடியின் மனிதநேய செயலை பாராட்டுவோம் .. வாழ்த்துவோம் ..! ஆனால் இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ஆட்டகாரரர்கள் என்ன செய்ய போகிறார்கள் . ஓய்வு பெற

பாங்காக் கில் தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க பேப்பர் ஹெல்மெட்:

நாளை(29.09.2014) திட்டமிட்டபடி அனைத்து புதிய முதுகலை ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடைபெறும்:

விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரியும் அனைத்து முதுகலை கணித ஆசிரியர்களையும் கல்விக்குரல் உள்ளம் மகிழ வரவேற்கிறது.நீங்கள் செவ்வனே இப்பயிற்சியினை  பெற நல்வாழ்த்துக்கள். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பேருந்து வழித்தடங்கள் பயிற்ச்சியை பற்றிய கூடுதல் தகவலுக்கு இங்கு கிளிக் செய்யவும்: 2011-2012 மற்றும் 2012-2013 ஆண்டிற்கு முதுகலை ஆசிரியர் நேரடி  நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்களில் கீழ்க்கண்ட மையங்களில் பாட வாரியாக உண்டு உறைவிட பயிற்சி நடைபெற உள்ளது. வ.எண் : மாவட்டம்: பயிற்சி நடைபெறும் இடம் : பாடம் பயிற்சி பெறவிருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 1. சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சின்னதிருப்பதி, சேலம் - 8. வேதியியல் 219 2. நாமக்கல் கே.எஸ்.ஆர்.பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி, கே.எஸ்.ஆர். கல்வி நகர், திருச்செங்க

'புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி-30.09.2014-01.10.2014

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.  இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, நடந்த பணிநியமன கலந்தாய்வில் பங்கேற்ற, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் பணி நியமன உத்தரவை பெற்று, பணியில் சேர்ந்தனர். இதில், உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்.,30 மற்றும் அக்.,1 அன்று சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும், என சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, 2 நாட்கள் அந்தந்த மாவட்டத்திலேயே கருத்தாளர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும், என்றார்

வீட்டுக் கடன் வாங்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

விண்ணப்பதாரரின் புகைப்படம் , புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று , முகவரிச் சான்று , வருமானச் சான்று , மனைப் பத்திரம் ( சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த பத்திரம் ), தாய்ப் பத்திரம் ( இப்போதைய பத்திரத்துக்கு முந்தைய மனைப் பத்திரம் ), 13 ஆண்டுகளுக்குக் குறையாத வில்லங்கச் சான்றிதழ் ( ஈ . சி ), விற்பனைப் பத்திரத்தின் நகல் , சட்ட வல்லுநரின் கருத்து ( லீகல் ஒபீனியன் ), உரிய அதிகாரியிடன் ( சி . எம் . டி . ஏ அல்லது டிடிசிபி அதிகாரிகளிடம் ) பெறப்பட்ட மனைக்கு உண்டான வரைபடம் அங்கீகார நகல் , கட்டுமானச் செலவு அல்லது வீட்டின் மதிப்பீடு பற்றிய பொறியாளர் அறிக்கை ( வேல்யூவேஷன் ரிப்போர்ட் ) ஆகிய ஆவணங்களுடனும் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப் படிவத்தையும் அளிக்க வேண்டும் . நமக்கான வீட்டுக் கடன் வாங்குவதற்கான தகுதியை வங்கி எப்படித் தீர்மானிக்கும் ? திருப்பிச் செலுத்தக்கூடிய உங்கள் திறனை வைத்தே வீட்டுக் கடன் தகுதியைத் தீர்மானிக்கும் . அதாவது உங்கள் மாதந்த்திர வருமானத்தில் இருந்து உங்கள் தேவைகள் போக , மிஞ்சும் பணத்தை வைத்தே உங்களால் எவ்வளவு பணம் திருப்பிச் செலுத்த முடியும் என்பதை வங்கிகள் கணக்