Skip to main content

Posts

Showing posts from August, 2013
5 ஆண்டுகள் பிரிமியம் செலுத்தாத LIC பாலிசிகளை புதுபிக்க ஒரு அறிய வாய்ப்பு :
தமிழகத்தில் உயர்கல்வி பயில்பவர்கள் சதவீதம் உயர்வு: அமைச்சர்: தமிழகத்தில், உயர் கல்வி பயில்பவர்கள், 19 சதவீதம் உயர்ந்துள்ளதோடு, கல்வி திட்டத்தில், முதன்மை மாநிலமாக திகழ்கிறது" என பட்டமளிப்பு விழாவில், உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார். ஆத்தூர் அருகே, தேவியாக்குறிச்சி பாரதியார் கல்லூரியில், அன்னை தெரசா கலையரங்கம் திறப்பு மற்றும் மகளிர் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது: காற்றின் வேகம் குறைந்து, வெயில் அதிகம் உள்ளதால், சூரிய ஆற்றலை மின்சக்திக்கு பயன்படுத்த வேண்டும். நெய்வேலியில், நிலக்கரி எவ்வளவு காலம் கிடைக்கும் எனக்கூற முடியாததால், பெருகி வரும் தொழிற்சாலை, மக்கள் தொகைக்கு ஏற்ப, சூரிய ஆற்றலை, மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு, புதிய கண்டு பிடிப்புகளை, பொறியியல் துறை மாணவர்கள் கண்டறிய வேண்டும். தமிழகத்தில், உயர் கல்வி படிப்பவர்கள், 19 சதவீதமாக உயர்ந்துள்ளது. கல்வியில், தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலலிதா, புதிதாக, 36 கலை, அறிவியல் கல்லூரி, நான்கு பொறியியல் கல்லூரி, 11 தொழில் நு
4,340 பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப திட்டம்: ஆர்.எம்.எஸ்.ஏ. இயக்குனர்: தமிழகத்தில் 4,340 பள்ளிகளில் தகவல், தொடர்பு தொழில் நுட்பம் வளர, புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது" என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் சங்கர் பேசினார். மதுரை வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் "இன்ஸ்பையர்டு" விருதுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், புத்தாக்க அறிவியல் ஆய்வுத் திட்டமாக (இன்னோவேஷன் இன் சயின்ஸ் பர்சூட் பார் இன்ஸ்பைர்டு ரிசர்ச்- இன்ஸ்பையர்) நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அனைத்து மாவட்ட கண்காட்சியிலும் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள், படைப்புகளுடன் பங்கேற்றனர். கண்காட்சியை கலெக்டர் சுப்ர மணியன், மேயர் ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தனர். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், ""மதுரையில் கோளரங்கம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,&'&' என்றார். அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் வரவேற்றார். அனைவருக்கும் இடை
அறிவு சார்ந்த மாணவர்களை அதிகப்படுத்த வேண்டும்: கல்லூரியில் அறிவு சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும்" என வேலூர் வி.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில், சென்னை பல்கலை, முன்னாள் துணை வேந்தர் ஞானம் பேசினார். வேலூர், வி.ஐ.டி., பல்கலை, 28வது பட்டமளிப்பு விழா, வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடந்தது. சென்னை பல்கலை, முன்னாள் துணை வேந்தர் ஞானம், 5,233 மாணவ, மாணவியருக்கு, பட்டம் வழங்கி பேசியதாவது: அறிவு சார்ந்த பொருளாதாரம் இருந்தால் தான், நாட்டின் அடிப்படையில் முன்னேற்றம் ஏற்படும். கல்லூரிகளில், அறிவுக்கும், அறிவு சார்ந்த பொருளாதாரத்துக்கும், திறன் வளர்ப்புக்கும், முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போது தான், நாட்டில் தேசிய வருமானம் கூடும். கல்வி நிறுவனங்களில், அறிவு சார்ந்த மாணவர்கள் எண்ணிக்கை, குறைந்து வருகிறது. அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். புத்தக அறிவோடு, பேசும் திறன், ஆராயும் திறன், தொழில் துறை திறன் கலந்து தர வேண்டும். சமுதாயக் கல்வி துவங்கி, திறன்களை வளர்த்துக் கொள்ளலாம். இன்ஜினியரிங் கல்லூரிகளில், தரமான ஆராய்ச்சி செய்யப்படுவதில்லை என்ற குற்றச்ச
அமெரிக்காவில் எம்.எஸ்.டபிள்யு., படிப்பிற்கு வேலைவாய்ப்பு எப்படி? அமெரிக்காவில் மேற்படிப்பு மற்றும் அமெரிக்கா குறித்த, பல்வேறு சந்தேகங்களைப் போக்கும் வகையில், தினமலர் வாசகர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் பதிலளிக்கிறார்கள்... நான் உயிரித் தொழில்நுட்பத்தில், முதுநிலை (எம்.எஸ்சி.,) பட்டம் பெற்றிருக்கிறேன். அமெரிக்காவில் வேலை செய்ய விரும்புகிறேன். அங்கு வேலை பெறுவது எப்படி? அமெரிக்க ஆங்கிலத் திறனை வளர்த்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? பிரியா ஜோதி, சென்னை பல பொது மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளுக்கான விளம்பரம், அந்தந்த நிறுவனங் களின் இணையதளங்களில் வெளியிடப்படும். மற்றவர்கள் வேலைவாய்ப்பு ஏஜன்சிகள் வழியாகவும், வேலைவாய்ப்புள்ள நகரங்களில் வெளிவரும் உள்ளூர் செய்தித் தாள்களில் விளம்பரம் செய்வதன் மூலமாகவும் மற்றும் வெளியிடுகின்றனர். இந்திய நிறுவனங்களைப் போல, அமெரிக்க நிறுவனங்களும் தங்கள் தேவைக்கு ஏற்ப, உரிய திறனும் அனுபவமும் உள்ள நபர்களையே தேடுகின்றன. அமெரிக்க வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பொதுவாக, விண்ணப்பிக்கும் நபர்கள் அந்த வேலையைப் பெறுவதற்குரிய தகுதி, அனுப
அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கும் திட்டமில்லை என மத்திய அரசு உறுதி: மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது: "அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், "எந்த சூழ்நிலையிலும், அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம்' என, ஆறாவது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. சம்பள கமிஷனின் இந்த பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது. ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள், 2006, ஜனவரி மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது. அடுத்த சம்பள கமிஷன் குறித்து, இப்போது எந்த பதிலும் கூற முடியாது. ஒரு சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் தான், அடுத்த சம்பள கமிஷன் அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் : விரைவில் வெளியாகிறது அறிவிப்பு: கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. பழைய காலி பணியிடங்கள், 652 உடன், கூடுதல் பணியிடங்கள் சேர்த்து, அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடம், அதிகளவில் காலியாக உள்ளது. காலியாக உள்ள, 652 பணியிடங்களை, இரு மாதங்களுக்குள் நிரப்புவதற்கு, தேவையான நடவடிக்கைகளை, அரசு எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, பி.எட்., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த பட்டதாரிகளை, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், தேர்வு செய்ய,பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பழைய காலி பணியிடங்களுடன், கூடுதலாக தேவைப்படும் இடங்களுக்கும் சேர்த்து, கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்யப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த டி.ஆர்.பி.,யின் அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. ஒரு பணியிடத்திற்கு, ஐந்து பேர் வீதம், பதிவு மூப்பு பட்டியல் பெறப்பட்டு, தகுதியானவர், தேர்வு செய்யப்படுவர்.
பிளஸ் 1 படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஞாபகத் திறனை மேம்படுத்த பயிற்சி: பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்காக, பிளஸ் 1 படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஞாபகத்திறனை மேம்படுத்தும் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. கோவை ரோட்டரி கிளப் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகியவை இணைந்து பாரத புத்ரா என்கிற நிகழ்ச்சியின் மூலம் இதற்கான பயிற்சி முகாமை நடத்த உள்ளன. இந்தப் பயிற்சி முகாமில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப்.1) நடைபெற உள்ளது. கோவை தடாகம் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு நுழைவுத் தேர்வு நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் 9843379872 என்ற எண்ணில் பிரதீப் யுவராஜ் என்பவரிடம் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். மேலும் கிருஷ்ணா ஸ்வீட்ஸின் அனைத்துக் கிளைகளிலும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.srikrishnasweets.net என்ற இணையதளத்திலும் விண்ணப்பப் படிவம் கிடைக்கும். சென்னையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் குமார் பாபு அவர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க உள்ளார். இதன் மூலம் ஏழை மாணவ
தொலைதூர கல்வித் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும்: யெச்சூரி: நிர்வாகவியல் பண்புகள் தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு கற்பிக்கப்பட்டு வரும் தொலைதூர கல்வித் திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். நிர்வாகவியல் பண்புகள் தொடர்பாக மத்திய அரசின் மேற்பார்வை ஊழியர்களுக்கு தொலைதூர கல்வி மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. சமத்துவம், அடிப்படை உரிமை, சமஉரிமை  போன்ற பண்புகளுக்கு மாறாக இந்த கல்வித் திட்டம் அமைந்துள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது. மேலும் சீக்கிய, இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அதில் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இதை உடனடியாக நீக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். இதுகுறித்து யெச்சூரி, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் வி. நாராயணசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த கல்வித் திட்டத்தில், இந்தியப் பார்வையில் மனிதப் பண்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. சாத்வீகம், ராஜோ, தாமச குணங்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சீக்கிய மதம், இஸ்லாமிய மதத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகள் இழிபடுத்
516 காலி பணியிடங்கள் செப்டம்பர் 4,5ல் கலந்தாய்வு :
வேலை தேடுவதை எளிதாக்க நான்கு வழிகள்: இன்று ஒவ்வொரு ஆண்டு முடியும் போது பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை வாய்ப்பு சந்தைக்கு வருகிறார்கள். ஆண்டு தோறும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது, புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகிறது. ஆனாலும், வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஒரு தனி நபரின் திறமையைப் பொறுத்த வேலையில் அமர்வது என்பதும் மிகவும் அரிதாக உள்ளது. ஒரு பட்டதாரிக்கு உரிய வேலை கிடைக்க முக்கியமான 4 வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களுக்கான வேலை கிடைப்பதை எளிதாக்க முடியும் என்று வேலை வாய்ப்பு அறிஞர்கள் கூறுகிறார்கள். 1. தெளிவான இலக்கைத் தேர்ந்தெடுங்கள் வேலை தேடும் ஒவ்வொருவருக்கும் தெளிவான இலக்கு என்பது முக்கியமான தேவையாகும். இலக்கு என்றவுடனே மிக உயர்ந்த இலக்காகத்தான் இருக்க வேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். ஒரு தனி நபரின் பலம் மற்றும் பலவீனங்களின் அடிப்படையில் அவருக்கு ஏற்றபடியான இலக்கைத் தேர்ந்து எடுப்பதுதான் அவருக்கான பணி வாய்ப்பைப் பெறுவதற்கான முதல் படியாக அமையும். உதாரணமாக பிள
அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும்: அறிவை கூர்மைப்படுத்த நிறைய நூல்களை படிக்க வேண்டும்" என மதுரை புத்தக விழாவை துவக்கி வைத்த அமைச்சர் வைகை செல்வன் பேசினார். மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி), மாவட்ட நிர்வாகம் சார்பில் 8வது புத்தகத் திருவிழா தமுக்கம் மைதானத்தில் துவங்கியது. கலெக்டர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். "பபாசி" தலைவர் சண்முகம் வரவேற்றார். அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த, அவர்களுக்கு குறிக்கோளை எடுத்துக்காட்ட, இந்திய பெருமையை, தமிழுக்காக பாடுபட்டோரை அறிய புத்தகங்கள் உதவுகின்றன. கல்விக்காக முதல்வர் ஜெயலலிதா பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்," என்றார். விழாவை துவக்கி வைத்த அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: "நிறைய புத்தகங்களை படித்தால்தான் நம்மை நாம் அறிய முடியும். ஒருவர் வாழ்வில் வெற்றி பெற உடல், மனம், அறிவு ஆகிய 3 தளங்கள் வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். எப்போதும் மாறுபட்டுக் கொண்டே இருக்கும் மனதை, ஒருமுகப்படுத்தி, ஒரே புள்ளியில் சந்த
இளைஞர் படை" தேர்வுக்கான விண்ணப்பம் வழங்கல்: சேலம் மாவட்ட, எஸ்.பி., அலுவலகத்தில் இளைஞர் படை தேர்வுக்கான விண்ணப்பம் வரும், 2ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது. அதற்காக, இரு சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில், போலீஸ் பற்றாக்குறையை சமாளிக்க, "இளைஞர் படை" உருவாக்கப்பட்டுள்ளது. இப்படையில் பணியாற்ற, தமிழகம் முழுவதும் உடல் திடகாத்திரம் கொண்ட 10,500 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல்லில் மொத்தம் 805 பேர், சேலம் மாவட்டத்தில் மட்டும் 245 பேர் தேர்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் எஸ்.பி., அலுவலகத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி., டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தலைமையில், எட்டு எஸ்.பி.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அன்று மாலை, சேலம் எஸ்.பி., சக்திவேல் தலைமையில், மாவட்ட அளவில் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், விண்ணப்ப விநியோகம் செய்தல், அதற்காக தனிக் கவுன்டர், விற்பனை நேரம், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை திரும்ப பெறுதல் போன்ற பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி,
உடற்பயிற்சி சுய மதிப்பை உயர்த்தும்: உடற்பயிற்சி மாணவர்களின் சுயமதிப்பை உயர்த்தும்" என, தெரிவிக்கப்பட்டது. கோத்தகிரி காந்தி மைதானத்தில் குன்னூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி நிறைவு விழா நடந்தது. விழாவுக்கு, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட கல்வி அலுவலர் லட்சுமணன், போட்டியை துவக்கி வைத்து பேசுகையில், "பள்ளி மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களது உடல் நலம் அவர்களது கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகிறது. உடற்பயிற்சி உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதுடன், தசை வளர்ச்சிக்கும், உடல் தகுதிக்கும் உதவுவதுடன், சுயமதிப்பை உயர்த்தும். எனவே, மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு போட்டிகளில் பங்குபெறவேண்டும். இவற்றின் மூலம், தலைமைப் பண்பு, ஒற்றுமையுணர்வு, குழுவாக செயல்படுதல், புரிந்துணர்தல் மற்றும் ஆரோக்கியமான போட்டி ஆகியவற்றை வளர்க்கும்," என்றார். போட்டிகளில் பங்கேற்ற 55 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி: குழந்தைத் திருமணத்தை தடுக்க திட்டம்: பள்ளியில் இருந்து இடையில் நிற்பது மற்றும் குழந்தை திருமணத்தை தடுக்க மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். கல்வியில் பின் தங்கியிருந்த நிலையில் இருந்து, நகர் பகுதிகள் முன்னேறி வந்தாலும், கிராம பகுதிகளில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அப்பகுதியில் உள்ளவர்கள் கல்வி அறிவில் தொடர்ந்து பின் தங்கியுள்ளனர். மாவட்டத்தில், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், வெளி மாவட்டம், மாநிலங்ளுக்கு வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக, அவர்களை தங்களுடன் அழைத்து செல்லும் நிலையுள்ளது. பெண் குழந்தைகளை அதிகளவில், குழந்தை திருமணத்தில் ஈடுபடுத்துவதும் தொடர்ந்து வருகிறது. இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர்களுடன் இணைந்து, மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி அளிக்க உள்ளனர். இது குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சரவணன் கூறியது: &q
பிளஸ் 2, 10ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு காலாண்டுத் தேர்வுகள், மாநில அளவில், பொதுத்தேர்வாக, செப்., 10ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கின்றன. பிளஸ் 2 தேர்வுகள், 10 நாட்களும், 10ம் வகுப்பு தேர்வுகள், ஏழு நாட்களும் நடக்கின்றன. இத்தேர்வை, 19 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த ஆண்டில் இருந்து, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளும், மாநில அளவில், பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இரண்டாவது ஆண்டாக, இந்த ஆண்டும், காலாண்டுத் தேர்வு, மாநில அளவில், பொதுத் தேர்வாக நடக்கும் என, தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. அதன்படி, பிளஸ் 2, காலாண்டுத் தேர்வுகள், செப்., 10ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரையும், 10ம் வகுப்பு தேர்வுகள், செப்., 12ல் துவங்கி, 20ம் தேதி வரையும் நடக்கின்றன. மார்ச், ஏப்ரலில் நடத்தப்படும் பொதுத் தேர்வைப் போலவே, இந்த தேர்வுகளும் நடக்கும் என்பதால், மாணவர்களுக்கு, இது, நல்ல பயிற்சியாக அமையும். பிளஸ் 2 தேர்வுகள், காலை, 10:15 மணிக்கு துவங்கி, 1:15க்கு முடியும். முன்னதாக, காலை, 1
தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 31.08.2013 அன்று காலை 10.00மணிக்கு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மேற்கொள்ளகூடாது என உத்தரவு: DEE - 2013-14 MIDDLE SCL HM / ELE HM PROMOTION COUNSELING TO BE HELD ON 31.08.2013 AT CONCERN DISTRICTS REG PROC CLICK HERE...
பி.எட். சேர்க்கை: கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: பி.எட். படிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. தேசிய ஆய்வு, அங்கீகார கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற சுயநிதி கல்லூரிகள், பி.எட். படிப்புக்கு ஆண்டுக்கு ரூ. 46,500-ம், அங்கீகாரம் பெறாத கல்லூரிகள் ரூ. 41,500-ம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். எம்.எட். படிப்புக்கு ரூ. 47,500 கட்டணம் வசூலிக்க வேண்டும் என கட்டண நிர்ணயக் குழு வரையறுத்துள்ளது. இந்தக் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணத்தை கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது. இப்போது 2013-14- ஆம் ஆண்டுக்கான பி.எட்., சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கல்விக் கட்டணம் குறித்து கல்லூரிகளுக்கு நினைவூட்டும் வகையில் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
அண்ணாமலைப் பல்கலை : குறுந்தகவல் மூலம் மாணவர் குறைதீர்க்கும் சேவை பிரிவு துவக்கம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் குறுந்தகவல் மூலம் மாணவர்கள் குறை தீர்க்கும் சேவை பிரிவினை பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். மேலும் அவர் நிர்வாகக் கட்டடத்தில் மாணவர்கள் அனுமதி சேர்க்கை, தேர்வுகள் மற்றும் இதர விபரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இரு தனி சிறப்பு சேவை பிரிவினையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம், மாவட்ட வருவாய் அலுவலர்கள் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஏ.ரகுபதி, புல முதல்வர்கள் டாக்டர் என்.சிதம்பரம் (மருத்துவம்), டி.வேலுசாமி (பொறியியல்), ரவி டேவிட் ஆஸ்டின் (பல்மருத்துவம்), செல்வராஜ் (கலைப்புலம்), கதிரேசன் (வேளாண்மை), ரவீந்திரன் (விளையாட்டுத்துறை) உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா செய்தியாளர்களிடையே தெரிவித்தது: மாணவர்கள் ராகிங், கல்வி, விடுதி மற்றும் பல்கலைக்கழக தொடர்புடைய குறை மற்றும் புகாரினை குறுந்தகவல் மூலம் எனது கவனத்திற்கு கொண்டு
சிபிஎஸ்இ.,யில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்: மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்தில் (சிபிஎஸ்இ), இந்தாண்டு முதல் +1, +2 மாணவர்களுக்கு  'Knowledge Traditions & Practices of India' என்ற புதிய பாடத் திட்டதை அறிமுகப்படுத்தியுள்ளது. கணிதம், இயற்பியல், நுண்கலை, விவசாயம், வர்தகம் மற்றும் வணிகம், நிலவியல், சுற்றுச்சூழல், வாழ்க்கை அறிவியல் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டுவடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பு, மாணவர்களின் அறிவை வளர்க்கும் விதமாகவும், எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பை எதிர்படுத்தி தரும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது என்று சிபிஎஸ்இ தலைவர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.  
விருதுநகரில் மறியல் போராட்டம் : தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் 268 பேர் கைது: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் 268 பேரை போலீஸார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.கணேசன் தலைமையில் நடந்தது. இதில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் கூட்டமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து இப்போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 95 பெண்கள் உள்பட 268 பேரை சூலக்கரை போலீஸார் கைது செய்து தனியார் அரங்கத்தில் சிறை வைத்தனர்.  
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு:தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்திட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும், பத்தாம் வகுப்பு தேர்வில், தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றின் தலைமையாசிரியர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி, மாநில அளவில் நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. பழநி அட்சயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஆக., 30 ல், நடக்கும் முதற்கட்ட பயிற்சியில் திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி மாவட்டங்களை சேர்ந்த 76 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இதில், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் இயக்குனர் சங்கர், இணை இயக்குனர் நரேஷ், மாநில ஆலோசகர்கள் முத்துச்சாமி, ஜெயச்சந்திரன் கலந்து கொள்கின்றனர்.
23 ஆண்டுகளாக உயராத கல்வி ஊக்கத்தொகை: பள்ளி கல்வித் துறையில், 1991 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாவட்டத்திற்கு 3 ஆயிரம் வரை தேர்வு எழுதும் மாணவர்களில், 50 மாணவர், 50 மாணவியர் என, 100 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர் களுக்கு 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு, ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் துவங்கப்பட்டு 23 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, 8ம் வகுப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை 14 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர்களின் பொருளாதார நிலையும் பல மடங்கு உயர்ந்து உள்ளது. பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்தும், இந்த ஊக்கத் தொகை மட்டும் இதுவரை உயர்த்தப்படவில்லை. கடந்த 1991ல், இத்தொகை பெற மாணவரின் பெற்றோர் வருவாய் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமாக இருந்தது. தற்போது, ரூ.ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊக்கத் தொகை மட்டும் மாற்றம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என, மாணவர்கள் தெரிவிக்கின்றனர். பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது: தற்போது, 8ம் வகுப்பு படிப்போரின் எண்ணிக்கை பல
புதிய மென்பொருள் இல்லாததால் காட்சிப்பொருளாக மாறிய மடிக்கணினிகள்-Dinamalar: பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினியில், "ஜாஸ்" என்ற சிறப்பு மென்பொருள் பொருத்தாததால், மடிக்கணினியை பயன்படுத்த முடியாமல், மாணவர்கள் தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு, பார்வையற்ற மாணவர் பயன்பெறும் வகையில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், பள்ளி, கல்லூரிகளில் பயிலும், 300 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. அதே போல், இந்த ஆண்டும், 200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மடிக்கணினி வழங்கப்பட்ட போது, "ஜாஸ்" என்ற மென்பொருள் பொருத்தப்படவில்லை. இந்த மென்பொருளை பொருத்தினால், ஒவ்வொரு பட்டனை அழுத்தும் போதும், அந்த பட்டன் பற்றி கூறும். குறிப்பாக, "ஆல்ட்" பட்டனை அமுக்கினால், "ஆல்ட்" என, சத்தமாக கூறும். இந்த மென்பொருளை, பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளில் பொருத்த, அரசு முடிவு செய்து, அதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அதே போல், பாதியளவு பார்வை தெரியும் மாணவர் படிக்கும் வண்ணம், பூதக்கண்ணாடிகள் வாங்க, 20 லட்சம் ரூபாய் ஒதுக்
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி செயல்படும் பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி செயல்படுதல், அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட காரணங்களால், மூன்று பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது; மேலும் மூன்று கல்லூரிகளின் அங்கீகாரம், ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 676 கல்வியியல் கல்லூரிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. புதிய கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா, மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என, தனியார் பி.எட்., கல்லூரிகளின் செயல்பாட்டை ஆய்வு செய்ய, பல்கலைக்கழகம், குழுக்களை அமைத்துள்ளது. இக்குழுக்கள் அளிக்கும் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், விதிமீறி செயல்படும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இக்குழு, துணைவேந்தர் தலைமையில், 15 கல்லூரிகளை பார்வையிட்டது. இதில், அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் பெறப்பட்ட, மதுரை ராயல் கல்வியியல் கல்லூரி, வேதாரண்யம் ராமச்சந்திரா மகளிர் கல்வியியல் கல்லூரி, சேலம் கொங்குநாடு இருபாலர் கல்வ
தற்போது இருக்கும் வரலாற்றுப் பாடங்கள் நடைமுறை வாழ்கைக்கு உதவுவதில்லை: "நாம் படித்த வரலாற்றுப் பாடங்கள், நம் நடைமுறை வாழ்கைக்கு உதவுவதில்லை" என்று பாரதிதாசன் பல்கலை., வரலாற்றுத் துறை தலைவர் டாக்டர். ராஜேந்திரன் பேசினார். சென்னை, வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயாகல்லூரியில் "உலகப்போர்களுக்கிடையே சென்னை நகரம்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு துறை சார்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்கிறார்கள். முதல் நாளான நேற்று கருத்தரங்கங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் குணசேகரன், சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் வெங்கட்ராமன், பாரதிதாசன் பல்கலை வரலாற்றுத்துறை தலைவர் ராஜேந்திரன் மற்றும் வரலாற்று ஆய்வாளர் நரசய்யா ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் ஐ.சி.எச்.ஆர். உறுப்பினரும், பாரதிதாசன் பல்கலையின் வரலாற்றுத்துறை தலைவருமான ராஜேந்திரன் பேசியதாவது: "சென்னையின் வரலாறு ஒரு சிறு பகுதியில் இருந்து ஆரம்பித்து திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் என ஒவ்வொரு ஊர்
மதுரை புத்தகத் திருவிழா துவக்கம்: செப். 1ல் ஓவியப் போட்டி: மதுரையில் நடக்கும் புத்தகத் திருவிழாவில், செப்., 1ல் மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் நடக்கின்றன. விருப்பமுள்ள ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இதில் பங்கேற்கலாம். தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், மதுரையில் 8வது புத்தகத் திருவிழா இன்று (ஆக.,30) துவங்கி, செப்., 9 வரை நடக்கிறது. ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் நடக்கின்றன. ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஓவியப் போட்டிகள் தமுக்கம் கலையரங்கில், செப்., 1ல் காலை 9 மணிக்கு துவங்குகின்றன. முன்பதிவு தேவை இல்லை. பள்ளி அடையாள அட்டையுடன் வர வேண்டும். ஐந்து முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் ஓவியங்கள் வரையலாம். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, போட்டி துவங்கும் முன் "தலைப்பு" வழங்கப்படும். அதன் அடிப்படையில் மட்டுமே ஓவியம் வரைய வேண்டும். வரைவதற்கான "சார்ட்" மட்டும் கலையரங்கில் வழங்கப்படு
வேலை தேடுதலில் நெட்வொர்க் என்பதன் பயன்பாடு: வேலை தேடும் போராட்டத்தில் பல முரணான விஷயங்களைபலரும் எதிர்கொண்டிருப்பார்கள். இந்த விஷயங்கள், அவர்களுக்கு, சோர்வையும், வெறுப்பையும் தரக்கூடியாதாகவும் இருக்கும். உதாரணமாக, ஒருவர், புதிதாக படித்து முடித்த பட்டதாரி என்றால், அவர் விண்ணப்பிக்கும் நிறுவனம், நாங்கள் அனுபவசாலிகளைத் தேடுகிறோம் என்று சொல்லி, அவர் விண்ணப்பத்தை நிராகரிக்கும். அதேசமயத்தில், அனுபவமுள்ள ஒருவர், ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட பணிக்காக விண்ணப்பித்தால், அந்நிறுவனம், நாங்கள் புதியவர்களைத்தான் தேடுகிறோம். இப்போதைக்கு அனுபவசாலிகள் தேவையில்லை என்று சொல்லி அவரை நிராகரிக்கும். எனவே, இதுபோன்ற சூழல்களை சமாளிக்க, ஒருவர், தனக்கான வேலை தேடுவோர் நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் அல்லது அதுபோன்றதொரு நெட்வொர்க்கிலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நெட்வொர்க்கிலோ இணைதல் வேண்டும். அப்போதுதான், பணி தேடும் செயல்பாடு சுலபமானதாக இருக்கும். சரியான நெட்வொர்க் இல்லாமல் வேலை தேடும் ஒருவர், ஒரு வாரத்திற்கு சில நிறுவனங்களையே அணுக முடியும். இதன்மூலம், அவரின் பணியின்மை காலம்