Skip to main content

Posts

Showing posts from March, 2013
மாணவர்களை பாதிக்காதவாறு நடவடிக்கை: அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு! 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் விருத்தாச்சலத்தில் எரிக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த விவகாரம் குறித்து மாணவர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. விருத்தாச்சலம் ரயில் நிலைய அதிகாரிகளிடம் இருந்து கடலூர் முதன்மை கல்வி அலுவலரால் சரிபார்த்து பெற்றுக்கொள்ளப்பட்ட விடைத்தாள்கள், அரசுத்தேர்வுகள் இயக்ககத்தால் பெறப்பட்ட உடன், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் இருந்து திருச்சிக்கு தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்கள் அடங்கிய 90 கட்டுக்கள் ரயில்வே அஞ்சல் துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டு விருத்தாசலம் அருகே கீழே விழுந்து சேதமடைந்ததாகவும், குப்பை என ரயில்வே தொழிலாளர்கள் அவற்றை கருதி எரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சம்
கரன்ட் உண்டு; கட்டணம் இல்லை:முன்மாதிரி தொடக்கப் பள்ளி! தொடர் மின்வெட்டால் தமிழகமே தத்தளிக்கும் நிலையில், திருவண்ணாமலையில் தொடக்கப்பள்ளி ஒன்று மின்சாரத்தில் தன்னிறைவு பெற்று விளங்குகிறது. முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரத்தைக் கொண்டு இயங்கும் இப்பள்ளியின் முன்மாதிரி முயற்சி பாராட்டுக்குரியது. திருவண்ணாமலை மாவட்டம் வேடியப்பனூரில் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் இப்பள்ளியில் எல் கே ஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. பலமணி நேர மின்வெட்டால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதைக் கண்ட இப்பள்ளி நிர்வாகம், கடந்த 2009ம் ஆண்டே சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வசதியை ஏற்படுத்திவிட்டது. பள்ளியின் மேல் தளத்தில் சூரிய ஒளி மின்தகடுகளை அமைத்து மின்சாரம் தயாரித்து அதனை பேட்டரிகளில் சேமித்து பயன்படுத்துகின்றனர். அனைத்து வகுப்புகளிலும் குழல் விளக்குகள், மின்விசிறிகள், கணினிகள், எல்.சி.டி., புரஜக்டர்கள், நீரிறைக்கும் மின் மோட்டார் போன்றவை அனைத்தும் சூரிய ஒளி மின்சாரத்தினால் இயங்குகின்றன. சூரிய ஒளி மின்சாரம் தவிர, மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு இங்கு படிக்கும் 206 மாணவர்களுக்கும் வ
வினாத்தாள் குளறுபடிகளுக்கு சலுகை மதிப்பெண்கள் தீர்வாகுமா ? பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் இரண்டாம் தாளில் ஏற்பட்ட குளறுபடியால் அந்த வினாவிற்கு விடையளிக்க முயற்சித்துள்ள அனைவருக்கும் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த பிரச்னைக்கு முழு மதிப்பெண்கள் வழங்குவது சரியான தீர்வாக அமையுமா என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். கல்வியாளர்கள் கருத்து: பொதுத்தேர்வுகளில் சில சமயங்களில் நேரும் குளறுபடிகளால், தெரிந்த வினாக்களுக்கு கூட பதிலளிக்க முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுகின்றனர். லட்சக்கணக்கானோர் வாழ்க்கையை தீர்மானிக்கும் இத்தகைய தேர்வுகளுக்கு வினா தயாரிக்கும் பணியில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டுமென்கின்றனர் கல்வியாளர்கள். மாணவர்கள் கவலை: குளறுபடி ஏற்பட்ட வினாவுக்கு விடையளிக்க முயன்றிருந்தால் முழு மதிப்பெண்களும் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. நேரமின்மை மற்றும் குழப்பத்தின் காரணமாக அந்த வினாவை எழுத முயற்சிக்காதவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்கின்றனர் மாணவர்கள். குளறுபடி வினாவுக்கு முழ
14  பிளஸ் 2 மாணவிகளுக்கு நேரடியாக கனடா யார்க்  பல்கலையில் அட்மிஷன்: திருச்செங்கோடு வித்யா விகாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 எழுதியுள்ள மாணவிகள்14 பேருக்கு பொறியியல்  உள்ளிட்ட வகுப்புகளுக்கு நேரடியாக கனடா நாடடில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் அடமிஷன் வழங்கியது. இதற்கான விழா வித்யா விகாஸ் பொறியியல் மறறும் தொழில் நுட்ப கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடந்தது. வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின்  செயலர்  டாக்டர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார். பெண்கள்  மேல்நிலைப் பள்ளி முதல்வர் அமுதா வரவேற்றார். விழாவில் யார்க் பல்கலைக்கழக   சர்வதேச  மாணவர்கள் சேர்க்கைகான  அதிகாரி மேரி லா ரோஸ் மற்றும் ஆலோசகர் ஜிவி சங்கர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் மேரி லா ரோஸ் பேசியது.:-  யார்க் பல்கலைக் கழகம் ஒரு குளோபல் பல்கலைக்கழகமாகும்.  உலகில் உள்ள  மூன்றாவது பெரிய பல்கலைக்கழகம்  யார்க் பல்கலைக்கழகமாகும். இங்கு பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட 60 ஆயிரம் மாணவ மாணவிகள் பயில்கின்றனர்.  20 க்கு மேற்பட்ட மொழிகள் இங்கு கற்றுத்தரப்படுகின்றன.  4 சர்வதேச பட்டங்கள்  வழங்கப்படுகின்றன. 155 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்
விடைத்தாள் சேதம்: மறுதேர்வு கிடையாது என தேர்வுத்துறை அறிவிப்பு: விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் சேதம் அடைந்த விவகாரத்தில், மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது. தமிழ் முதற்தாளில், மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ, அதே மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கும் வழங்கப்படும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த 29ம் தேதி, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள், பி.முட்லூர் தபால் நிலையம் மூலமாக, திருச்சி மாவட்டத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. பார்சல் செய்யப்பட்ட விடைத்தாள் கட்டுகள், விருத்தாசலத்தில் ரயிலில் ஏற்றப்பட்டது. ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஒரு விடைத்தாள் கட்டு, கீழே விழுந்ததில், பல விடைத்தாள்கள் சேதம் அடைந்தன. இந்த விவகாரம், ரயில் திருச்சி சென்றபின், தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தேர்வுத்துறை, தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சேதம் அடைந்த விடைத்தாள்களை, ரயில்வே ஊழியர்கள், தீ வைத்து எரித்
ஊழியர்கள் பற்றாக்குறை: அரசு தேர்வுத்துறை திணறல்! தேர்வுத் துறையையும், இதனோடு சம்பந்தப்பட்ட அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தையும் (டேட்டா சென்டர்) வலுப்படுத்த, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு துறை வட்டாரங்களும் எதிர்பார்க்கின்றன. இல்லை எனில், வரும் ஆண்டுகளில், இந்த இரு துறைகளிலும், பெரிய குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டுவிடும் என, துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுத்துறை இயக்குனரகம், 1975ல் ஏற்படுத்தப்பட்டபோது, எத்தனை பணியிடங்கள் ஒதுக்கப்பட்டதோ, அதே பணியிடங்கள் தான், இன்றைக்கும் இருக்கின்றன. இயக்குனரகம் மற்றும் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் சேர்த்து, ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 500. இதில், 120 பணியிடங்கள், காலியாக இருக்கின்றன. கடந்த 98ல், பிளஸ் 2 தேர்வை, 3.63 லட்சம் மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வை, ஐந்து லட்சம் பேரும் எழுதினர். ஆனால், நடப்பு ஆண்டில், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை, மூன்று மடங்கும், 10ம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை, இரு மடங்கையும் தா
கலை அறிவியல் கல்லூரிகளில் இலவச கல்வி: சென்னை பல்கலை அறிவிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள, கலை, அறிவியல் கல்லூரிகளில், இலவசமாக கல்வி கற்க, சென்னை பல்கலைக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகம், மாணவர் இலவச கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் உள்ள, சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும், ஒவ்வொரு கல்லூரிகளிலும், ஐந்து மாணவர்கள், இத்திட்டத்தில், இலவசமாக கல்வி பெறலாம். முதல் தலைமுறை பட்டப்படிப்பு மாணவர்கள், ஆதரவற்றோர், விவசாய கூலி வேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகள், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட பெண்ணின் குழந்தைகளுக்கு, முன்னுரிமை வழங்கப்படும். பெற்றோர் வருமானம், 2 லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, மாணவர்கள், சென்னை பல்கலைக் கழகத்திலோ, பல்கலை இணைய தளத்திலிருந்தோ, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்ட உடன், பூர்த்தி செய்த விண்ணப்
மிகவும் பிற்படுத்தப்பட்ட  விடுதி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி-தமிழக அரசு 1.83 கோடி ஒதுக்கீடு: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காக, பயிற்சி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. தமிழகம் முழுவதும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160 விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இவர்களில், முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களின், ஆங்கில பேச்சுப் பயிற்சியை வளர்ப்பதற்கு, "ஆங்கில பேச்சு பயிற்சி சிறப்பு வகுப்புகள்" நடத்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முடிவு செய்தது. இதன்படி, மாணவர்களின் பேச்சாற்றலை மேம்படுத்த, ஒரு மாணவருக்கு, 2,800 வீதம், 6,500 மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி அளித்திட, 1.83 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆங்கில பயிற்சி அளிப்பதற்காக, ஏழு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள், அடுத்த மாதம், 27ம் தேதிக்குள், ஆரம்பகட்ட பணிகளை துவங்க அறிவுறுத்தப்பட்டு உள
கல்லூரிகள் திறப்பு எப்போது? கையைப் பிசைகிறது கல்வித்துறை! தமிழகம் முழுவதும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளை எப்போது திறப்பது என, தெரியாமல், உயர்கல்வித்துறை கையை பிசைந்து வருகிறது. அரசுத் தரப்பில் இருந்து, நேற்று மாலை வரை, உயர்கல்வித் துறைக்கு, எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், நாளை கல்லூரிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என தெரிகிறது. இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இம்மாத ஆரம்பத்தில் இருந்து, கல்லூரி மாணவர்கள், தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். படிப்படியாக, அனைத்து மாவட்டங்களிலும், போராட்டம் பரவியதால், கடந்த 15ம் தேதி, அரசு கலை, அறிவியல் கல்லூரி களுக்கு, கால வரையற்ற விடுமுறையை, உயர்கல்வித் துறை அறிவித்தது. இதற்கிடையே, பொறியியல் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால், அவர்களுக்கும், 18ம் தேதி முதல், கால வரையற்ற விடுமுறையை, அரசு அறிவித்தது. எனினும், மாணவர்கள் ஆங்காங்கே, போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ""மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்" என, சட்டசபையில்,
NEST Junior எனப்படும் தேசிய அளவிலான கல்வி உதவித் தொகை தேர்வு: 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், ஊக்கத் தொகை பெறுவதற்கான NEST Junior எனப்படும் தேசிய அளவிலான கல்வி உதவித் தொகை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. SEMCI என்ற தனியார் தொண்டு நிறுவனம் இந்தத் தேர்வுகளை நடத்துகிறது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வை முடித்தவர்கள் மற்றும் இந்த வருடம் தேர்வை எழுத உள்ளவர்கள் இந்த உதவித் தொகை தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே இந்த கல்வி உதவித்தொகை, 20,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை வழங்கப்படும். அகில இந்திய அளவில், 40 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்களை பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். இரண்டு மணி நேர அளவிலான ஆன்லைன் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வினாக்கள், தலா 50 மதிப்பெண்கள் வீதம் நான்கு பிரிவுகளில் கேட்கப்படும். மேலும், இயற்பியல் மற்றும் வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல், ஆங்கிலம் மற்றும் எளிய பகுப்பாய்வு, பொது அறிவு தொடர்பான வினாக்கள் இடம்பெறும். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ம
எஸ்எஸ்எல்சி., தேர்வில் குழப்பம்: முழு மதிப்பெண் வழங்க உத்தரவு! 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 28.03.2013 அன்று  நடைபெற்ற தமிழ் 2ஆம் தாள் தேர்வில், வினாத்தாளுடன் இணைத்து கொடுக்க வேண்டிய படிவம் கொடுக்கப்படாததால் பல பள்ளிகளில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் வினாவினை எழுத முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுகள் துறை இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. இதில் வினாத்தாளின் 6வது பக்கத்தில் 5 மதிப்பெண்களுக்கு படிவம் நிரப்பும் பகுதி கொடுக்கப்படும். இந்த பகுதியில், விண்ணப்ப படிவம் ஒன்று கேள்வித்தாளுடன் இணைத்து கொடுப்பது வழக்கம். ஆனால், பெரும்பாலான தேர்வு மையங்களில் இந்த படிவம் கொடுக்கப்படாததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அரசு தேர்வுகள் துறை இயக்குநர், மாணவர்கள் விடைத்தாள்களிலேயே படிவத்திற்கான பதிலை நிரப்ப வேண்டும் என அனைத்து தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும் அறிக்கை வெளியிட்டார். அவ்வாறு முழுமையான பதிலை நிரப்பாவிட்டாலும் வினாவினை எழுத முயற்சித்திருந்தால்கூட 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்
தொடரும் கேள்வித்தாள் குளறுபடிகள்: நேரமின்மையால் திணறிய மாணவர்கள்: 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் இரண்டாம் தாளுக்கான விடைத்தாளுடன் வழங்கப்பட வேண்டிய மாதிரிப் வங்கி படிவம் வழங்கப்படாததால் மாணவர்கள் மத்தியில் குழப்பமும் அதிருப்தியும் நிலவியது. இறுதியில் அந்த வினாவிற்கு விடையளிக்க முயற்சித்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை எதிர்கொண்ட மாணவர்கள் மனநிலை எப்படி இருந்தது என்பது குறித்து அறியலாம். தொடரும் கேள்வித்தாள் குளறுபடிகள்: 10-ஆம் வகுப்புக்கான தமிழ் இரண்டாம் தாளுக்கான பொதுத் தேர்வில் விடைத்தாளுடன் மாதிரி வங்கி படிவம் வழங்கப்படாததால்‌, மாணவர்கள் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். என்னதான் தயார் செய்து தேர்வுக்கு சென்றாலும் வினாத்தாளிலேயே குளறுபடி என்றால் என்ன செய்வது என்று கேள்வி எழுப்புகிறார் சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர் சதீஷ்குமார். மேலும் விடைத்தாளில் படிவத்தை வரைந்து விடையளிக்க வேண்டியிருந்ததால், நேரப் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் கூறுகிறார் இவர். நேரமின்மையால் திணறிய மாணவர்கள்: அரசு உதவி பெறும் பள்
இரண்டு லட்சம் பேருக்கு அரசு வேலை: புள்ளி விபரங்களுடன் அரசு தகவல்: அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில், 47 ஆயிரத்து 273 பேர் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, அமைச்சர் முனுசாமிதெரிவித்தார். அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்து, சட்டசபையில் நேற்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இத்தீர்மானத்தின் மீது, எம்.எல்.ஏ.,க்கள் பேசியதாவது: சவுந்தரராஜன் - மார்க்சிஸ்ட்: வணிக வரி, வேலைவாய்ப்பு, மருத்துவம், தொழிலாளர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில், பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அரசுப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கருணை அடிப்படையில், வாரிசுகளுக்கு வழங்கப்படும் பணிக்காக, ஏராளமானோர் காத்திருக்கின்றனர். இவர்கள் ஐந்து முதல், எட்டு ஆண்டுகள் வரை, பணி கிடைக்காமல் உள்ளனர். காலிப் பணியிடங்களில், இவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுமுகம் - இந்திய கம்யூனிஸ்ட்: மருத்துவத் துறையில், அடிப்படை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதுபோன்று, பல துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த, காலிப் பணியிடங்கள் உ
தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை! ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது. தேனியைச் சேர்ந்த  ராதிகா என்பவர் தாக்கல் செய்த மனு: நான் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறேன். என்னை ஆசிரியராக நியமிப்பதற்கான நடைமுறை, 2010 ஆக., 23க்கு முன் துவங்கியது. அந்த தேதிக்கு முன், நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ( டி.இ.டி.,) எழுதத் தேவையில்லை என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளது. ஆனால், 2010 ஆக., 23க்கு பின், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனத்தை, ரத்து செய்வதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இதனால், எனக்கு சம்பளத்தை நிறுத்தி விட்டனர். என்.சி.டி.இ.,விதிகள்படி, டி.இ.டி., தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, ஏற்கனவே நான் அரசிடம் மனு அளித்தேன். அது நிலுவையில் உள்ளது. கட்டாயக் கல்விச் சட்டப்படி, 2012 ஏப்., 12க்கு பின், நியமிக்கப்பட்டவர்களை, டி.இ.டி., தேர்வு எழு
சிவில் சர்வீஸ் தேர்வில் மாற்றம்: வாபஸ் பெற்றது யு.பி.எஸ்.சி., ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, யு.பி.எஸ்.சி., முதன்மைத் தேர்வில் செய்யப்பட இருந்த மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., வாபஸ் பெற்றது. ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் முடிவுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த முடிவை எடுத்தது. சிவில் சர்வீசஸ் என்றழைக்கப்படும், யு.பி.எஸ்.சி., தேர்வுகள், முதல் நிலை (பிரிலிமினரி), முதன்மை தேர்வு (மெயின்), நேர்காணல் (இன்டர்வியூ) போன்ற முறைகளில் நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வில், எந்த மாற்றமும் செய்யப்படாமல், முதன்மை தேர்வில் மட்டும், சில மாற்றங்களை, யு.பி.எஸ்.சி., மேற் கொள்ள விரும்பியது. இதற்கான அறிவிப்பு, இம்மாதம், 5ம் தேதி வெளியானது. அதில், ஆங்கிலம், இந்தி மொழிகள் தவிர்த்து, வட்டார மொழியில், ஒரு பகுதி தேர்வை எழுத விரும்பும் தேர்வாளர், தேர்ந்தெடுக்கும் மொழியை, குறைந்தபட்சம், 25 பேராவது, தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மேலும், வட்டார மொழி இலக்கிய தாளை தேர்ந்தெடுக்கும் தேர்வாளர், அதை தன் பட்டப்படிப்பில் எடுத்து படித்திருக்க வேண்டும். அனைத்து தேர்வாளர்களு
கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்ற மார்ச் 31 வரை கெடு! கல்வி உரிமை சட்டத்தை (ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது. கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்படாததால் பள்ளிகளில் மீண்டும் குழந்தைகள் சேர்க்கை அளவு குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் புள்ளி விபர அறிக்கையின்படி 40 சதவீதம் துவக்கப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும், 33 சதவீதம் பள்ளிகள் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி இல்லாமலும், 39 சதவீதம் பள்ளிகள் மாற்றுதிறனாளி குழந்தைகளை பராமரிக்கும் திறன் இல்லாமலும் உள்ளன. மத்திய அரசு உத்தரவு: கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் உரிமை சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்ட
சென்னைப் பல்கலை, தொலை நிலைக்கல்வி: இளநிலை படிப்புக்கு ஏப்ரல் 2க்குள் விண்ணப்பிக்கலாம்: பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி நிறுவனத்தில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளுக்கு ஏப்ரல் 2ம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அபராதக் கட்டணத்துடன் ஏப்ரல் 9ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலை நிலைக் கல்வி நிறுவனத்தின் தகவல் மையங்களிலும், www.ideunom.ac.in என்ற இணையதளத்திலும் விணணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் மே 24ம் தேதி தொடங்குவதாக பல்கலைக்கழக பதிவாளர் ஜி.கோடீஸ்வர பிரசாத் கூறியுள்ளார்  
யு.ஜி.சி. - நெட் தேர்வு முடிவுகள் அறிவிப்பு:   டிசம்பர் மாதம் 8 இலட்சம் பேர் எழுதிய யூ.ஜி.சி - நெட் தேர்வின்  முடிவுகள் திங்கட்கிழமை இரவு வெளியானது. கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி நாடு முழுவதும் இருந்து 7.8 இலட்சம் பேர் யூ.ஜி.சி.யின் நெட் தேர்வை எழுதினார்கள். அதற்கான தேர்வு முடிவுகள் திங்கட்கிழமை வெளியானது. இந்த தேர்வில் 39, 226 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர்த்து 3,669 பேர் இளம் ஆராய்ச்சி உதவித் தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் காணலாம்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., ஏப்ரல் 1ம் தேதி திறப்பு: அண்ணாமலை பல்கலைக்கழகம் ஏப்ரல் ஒன்றாம் தேதி துவக்கப்படுகிறது. இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. இதனையடுத்து கடந்த 13ம் தேதி முதல் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில், அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் கலை, அறிவியல், கடல்வாழ் உயிரினம், இந்திய மொழியியல், கல்வியியல், இசைத்துறை மற்றும் இன்ஜினியரிங் மாணவ மாணவியர்களுக்கு வகுப்புக்கள் ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கும் என்றும், வேளாண்மை மாணவ மாணவியர்களுக்கு மார்ச் 28ம் தேதி முதல் வகுப்புக்கள் துவக்கப்படும் என பல்கலை., பதிவாளர் மீனாட்சிசுந்தரம் அறிவித்துள்ளார்.  
  அடிப்படை வசதிகள் இல்லாததால் தனியார் பள்ளி மூடல்: திண்டுக்கல்லில் பள்ளியை திடீரென மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளதால், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் எம்.வி.எம்., மெட்ரிக்குலேஷன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6 முதல் பிளஸ் 2 வரை 420 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 9 ம் வகுப்பில் 26 மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில் 49 மாணவர்களும் படித்து வருகின்றனர். இவர்கள் அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதவேண்டும். இந்நிலையில் பள்ளி நிர்வாகம், மாணவர்களின் பெற்றோரை நேற்று முன்தினம் அழைத்து, "வரும் கல்வியாண்டில் பள்ளியை மூடி விடுவோம். எங்களுக்கு அளித்த அரசு பதிவு முடிந்துவிட்டது. நீங்கள் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்" என, தெரிவித்துள்ளனர். பத்தாம்வகுப்பு, பிளஸ் 2 க்கு புதிதாக எந்த பள்ளியிலும் சேர்க்கை நடக்காது. இப்படி இக்கட்டான நேரத்தில் மாணவர்களை தவிக்கவிட்டால் நாங்கள் என்னசெய்வது என, பெற்றோர்கள் புலம்புகின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலத்திடம் இதுகுறித்து மாணவர்களி
பழநி நகராட்சியில் சுவர்ண ஜெயந்தி நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம்இலவச கணினி பயிற்சி: பழநி நகராட்சியில் சுவர்ண ஜெயந்தி நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை முகாம் மார்ச் 27, 28 ல் நகராட்சி கடைவீதி பள்ளியில் நடைபெறவுள்ளது. வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள், தங்கள் கல்வி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ 2,  ஆகியவற்றுடன் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம், என பழநி நகராட்சி கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  
இடம் மாறும் கல்வி அலுவலகங்கள்? தினமலர்  கல்வித் துறை அலுவலகங்களை, ஒரே கட்டடத்தின் கீழ் கொண்டு வருவதற்காக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பெரும்பாலான கட்டடங்களை, மிக விரைவில் இடித்து, தரைமட்டமாக்க, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. இதனால், தற்காலிகமாக, வேறு இடங்களை பார்க்கும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நன்றாக, தரமான உள்ள கட்டடங்களும், இடிப்பு பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், மக்களின் பல கோடி ரூபாய் பணத்தை, தமிழக அரசு பாழாக்கலாமா என, அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பள்ளி கல்வித் துறையின் தலைமையிடமாக, சென்னை, கல்லூரி சாலையில் உள்ள, டி.பி.ஐ., வளாகம் திகழ்கிறது. 15 ஏக்கருக்கும் அதிகமாக, பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்தில், பள்ளி கல்வித் துறை இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம், தேர்வுத் துறை இயக்குனரகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரம், மெட்ரிக் கல்வி இயக்குனரகம், தமிழ்நாட்டு பாடநூல் கழகம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகம் உள்ளிட்ட, பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. சம்பத் மாளிகை: ஒவ்வொரு இயக்குனரகமும், தனித் தனி கட்டடத்தி
இந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 10.68 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம் தேதியில் இருந்து, நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், நாளையுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 5 லட்சத்து, 43 ஆயிரத்து, 152 பேர் மாணவர்கள்; 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 பேர் மாணவியர். 3,012 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன. சென்னையில், 222 மையங்களில் நடக்கும் தேர்வில், 58 ஆயிரத்து, 436 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களில், 29 ஆயிரத்து, 101 பேர், மாணவர்; 29 ஆயிரத்து, 335 பேர், மாணவியர். தேர்வு நடக்கும் தேதிகள் விவரம்: 27.3.13 - தமிழ் முதற்தாள் 28.3.13 - தமிழ் இரண்டாம் தாள் 1.4.13 - ஆங்கிலம் முதற்தாள் 2.4.13 - ஆங்கிலம் இரண்டாம் தாள் 5.4.13 - கணிதம் 8.4.13 - அறிவியல் 12.4.13 - சமூக அறிவிய
லயோலா கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கோடைக் கால பயிற்சி: லயோலா கல்லூரியின் சார்பில் உயிரித் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் மற்றும் உயிர் பல்வகைத் தன்மை குறித்த கோடைக் கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். மே மாதம் 6-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை ஆறு நாட்கள் இந்த முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் உயிரித் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் மற்றும் உயிர் பல்வகைத் தன்மை ஆகியவை குறித்த விரிவுரைகள், செய்முறைப் பயிற்சிகள், சோதனை மையங்கள், ஆய்வறிக்கை தயாரித்தல், அறிவியல் விளக்கப் படங்கள் தயாரித்தல், அறிவியல் தகவல்களை நாடகமாக நடித்துக் காட்டுதல் உள்ளிட்டவை மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும். இதில் பங்கேற்பதற்கு மாணவர்கள் 3,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பயிற்சி முகாம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற www.loyalacollege.edu என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுபாஷை 90437 93818 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
அண்ணாமலைப் பல்கலை: மார்ச் 25ல் தேர்வு முடிவுகள் வெளியீடு : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் இளநிலை, முதுகலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 25ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இணையதள முகவரிகள்: www.annamalaiuniversity.ac.in, www.indiaresults.com, www.hmh.ac.in,  www.schools9.com   ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்த்து கொள்ளலாம்.  
சென்னை பல்கலை: மார்ச் 25ல் முதுகலை தேர்வு முடிவுகள்: சென்னை பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி இயக்ககத்தில், முதுகலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் மார்ச் 25ம் தேதி வெளியிடப்பட உள்ளன. கடந்த டிசம்பர் மாதத்தில், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., ஆகிய படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் மார்ச் 25ல் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 9ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண www.ideunom.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.  
பிளஸ் 2 விடைத்தாள் மையங்களில் போராட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் போராட்டம் நடத்த தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் அய்யாதுரை தலைமை வகித்தார். மொழிப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி வரும் 26ம் தேதி ஆரம்பமாவதால் தேர்வு பணியில் ஈடுபடும் மொழி பாட  ஆசிரியர்களை உடனடியா தேர்வு பணியில் இருந்து வடுவித்து விடைத்தாள் திருத்தும் பணிக்கான நியமன ஆணை வழங்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்ய வேண்டும். மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கண் பார்வையற்ற ஆசிரியைக்கு உரிய நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். இது சம்பந்தமான நடுநிலையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆலங்குளத்தில் ஆசிரியர் மாணவர் விரோத போக்கை கடைபிடிப்பவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களிடம்