Skip to main content

Posts

Showing posts from January, 2014

இதயத்திற்கு இதம் தரும் கனிகள் கனிகளை உண்போம் இதயத்தை காப்போம்:

  இன்றைய உலகில் மக்களை இருவிதமான நோய்கள் அதிகமாக ஆட்டிப் படைக்கின்றன. அவை நீரிழிவு, இரத்த அழுத்தம். இரத்த அழுத்தமானது  இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது.  இதய நோய் வந்தால் குணப் படுத்தவும், வராமல் தடுக்கவும் இயற்கை  நமக்களித்த கொடைதான் காய்களும் கனிகளும். இதயத்திற்கு இதம் தரும் பழங்கள் பல உள்ளன.  அவை இதயத்தை பலப்படுத்தி சீராக செயல்பட வைக்கும். ஆப்பிள் பழம் இதயத்திற்கு  உற்சாகத்தையும், புத்துணர்வையும் தர வல்லது.  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை  என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. “தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இல்லை”  இதிலிருந்து ஆப்பிளின் மருத்துவப் பயன் நமக்கு புரியவரும். இதுபோல் புத்தம் புது திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீதாபழம் ஆகியவை இதயத்தை பலப்படுத்தும். வாதுமையும் தேங்காய் நீரும் இதயத்திற்கு ஊக்கம்  அளிப்பவை. நெல்லிக்கனி இதயத்திற்கு மிகுந்த பலனைத் தரவல்லது.  ஒரு நெல்லிக்கனியில் 4 ஆப்பிளுக்கு இணையான சத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள்  கூறுகின்றனர்.  இதனை ஜாமாகவும், இலேகிய ம

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், கடத்தல், மிரட்டல் போன்றவை அதிகரித்து வருகின்றன. அவைகளில் இருந்து குழந்தைகள் தப்பிக்க பாதுகாப்பு பாடம்:

குழந்தைகளுக்கு எப்போது புரிந்துகொள்ளும் சக்தி உருவாகிறதோ அப்போதிருந்தே, பெற்றோரின் பெயர், செல்போன் எண், வசிக்கும் இடத்தின் பெயர்,  தந்தை, தாய் வேலை பார்க்கும் நிறுவனம் போன்றவைகளை சொல்லிக்கொடுக்க வேண்டும். பக்கத்து வீட்டினர் மற்றும் நெருக்கமான உறவினர்களின்  போன் நம்பர்களையும் முடிந்தால் மனதில் பதிய வைப்பது நல்லது. சாலையில் இடதுபுற ஓரமாக நடந்துசெல்லும்படி கூறுங்கள். பள்ளிக்கு செல்லத்  தொடங்கிவிட்டால் பள்ளி அடையாள அட்டையை, பள்ளி அருகில் செல்லும்போது மட்டும் அணியாமல் வீட்டில் இருந்து கிளம்பும்போதே அணியச்  செய்யுங்கள். மற்றவர்கள் தரும் எந்த பொருளையும் வாங்கக்கூடாது, மற்றவர்கள் தரும் பொருட்களை சாப்பிடவும் கூடாது, மற்றவர்களை நம்பி அவர்களோடு  செல்லவும் கூடாது என்பதை கண்டிப்பாக சொல்லி வையுங்கள். சிறுவர், சிறுமியர்களாக இருந்தால் பள்ளி, வீடு தவிர மற்ற இடங்களுக்கு செல்லும்  போது எங்கே செல்கிறார்கள்? யாரோடு செல்கிறார்கள்? என்பன போன்ற தகவல்களை முதலிலே கூறி, உங்கள் அனுமதியோடு செல்லும்படி  கூறுங்கள். பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு மற்ற இடங்களில் சுற்றித் திரியக்கூடாது என்பதையும், அதனால்

இந்திய ஆட்சிப் பணிக்கு இணையாக பொறியாளர்கள் அரசுத் துறையில் உயர் பதவியை அடைய, ஐ.இ.எஸ்.(Indian engineering service) தேர்வு நடத்தப்படுகிறது:

இந்திய ஆட்சிப் பணிக்கு இணையாக பொறியாளர்கள் அரசுத் துறையில் உயர் பதவியை அடைய, ஐ.இ.எஸ்.(Indian engineering service) தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வை ஆண்டுக்கு ஒரு முறை யு.பி.எஸ்.சி. நடத்துகிறது. மூன்று நாட்கள் நடக்கும் இத்தேர்வில், எழுத்துத் தேர்வில் 1,000 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 200 மதிப்பெண்களும் என மொத்தம் 1,200 மதிப்பெண்கள் அளிக்கப்படுகின்றன. மொத்தம் 5 தாள்கள். இத்தேர்வை சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் இன்ஜினீயர்களும் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்டு டெலிகம்யூனிகேஷன் இன்ஜினீயர்களும் எழுதலாம். முதல் தாள் பொது ஆங்கிலம், பொது அறிவு என இரு பகுதிகளைக் கொண்டது. இது 2 மணி நேரம் நடக்கும். பொது அறிவுத் தேர்வு அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளாலானது. இரண்டு மற்றும் மூன்றாம் தாள்கள் விருப்பப் பாடங்கள். இதுவும் 2 மணி நேரம்தான். தலா 200 மதிப்பெண்கள். நான்கு மற்றும் ஐந்தாம்தாளில் கேள்விக்கான பதிலை விரிவாக எழுதவேண்டும். இத்தேர்வு 3 மணிநேரம் கொண்டது. தலா 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. ஐந்து தாள்களுக்கு மொத்தம் 1,000 மதிப்பெண்கள். கையெழுத்து சரியாக இல்லை எனில் 5 சதவீதம் மதிப்

சிறந்த இன்ஜினியர்களை அளிப்பதில் வடஇந்திய மாநிலங்கள் குறிப்பாக டில்லி மற்றும் பீகார் முன்னிலை வகிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு்ள்ளது:

ஆஸ்பிரிங் மைண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹிமான்ஷூ அகர்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இதற்காக இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களி்ல் உள்ள 520 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 20 மாணவர்களிடையே கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது டில்லி, பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் மேற்கு இந்திய பகுதியை சேர்ந்த கல்லூரிகள் மட்டுமே அதிக வேலைவாய்ப்பை காட்டுவதாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் அதிக எண்ணிக்கையில் இன்ஜினியரிங் கல்லூரிகளை கொண்ட மாநிலங்களாக திகழும் தமிழ்நாடு ஆந்திரா போன்ற மாநிலங்கள் குறைந்த வேலைவாய்ப்பை மட்டுமே வழங்கி வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காளான்களை போன்று நாட்டில் இன்ஜினியரிங் கல்லூரிகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதிகளவு இன்ஜினியர்கள் உருவாகும் நேரத்தில் குறைந்த அளவே வேலை திறன் மி்க்க இன்ஜினியர்கள் உருவாகின்றனர். என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனம்: ஏற்கனவே கடைபிடிக்கப்பட்ட முறைப்படி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இடஒதுக்கீடுசென்னை பல்கலைக்கழகத்தில் இப்போது நிரப்பப்படவுள்ள 96 பேராசிரியர்கள் பணியிடங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 4 இடங்களும், மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 11 இடங்களும், பட்டியலினத்தவருக்கு 3 இடங்களும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுப்பிரிவினருக்கு 51 இடங்கள், அருந்ததியர் மகளிருக்கு 27 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக் கப்படும் தவறான இடஒதுக்கீட்டு முறை தான். சுழற்சி முறைதமிழகத்தில் 100 புள்ளி சுழற்சிமுறை இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தவரை பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனத்தில் குழப்பம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், 2007-ம் ஆண்டில் சில பிரிவின

மருத்துவக்கல்வி இயக்குனராக டாக்டர் கீதா லட்சுமி நியமனம்:

தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனராக டாக்டர் எஸ்.கீதா லட்சமி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.எஸ்.எஸ். படித்து அதே சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி டீன் ஆக இதுவரை பணிபுரிந்தார். இவர் ஏற்கனவே சென்னை மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றிலும் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் டாக்டர் கனகசபை, தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனர் பொறுப்பிலும் இருந்து வந்தார். அவர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவுபசாரவிழா நடத்தப்பட்டது.

டீசல் விலை லிட்டருக்கு 61 காசு உயர்ந்தது மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைந்தது:

டீசல் விலை லிட்டருக்கு 61 காசு உயர்ந்தது. மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. டீசல் விலை உயர்வு சர்வதேச சந்தையில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, டீசல் விலையை மாதம் தோறும் மாற்றி அமைக்க பொதுத்துறை எண்ணெய் கம்பெனிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான உத்தரவை கடந்த ஆண்டு ஜனவரி 17–ந் தேதி மத்திய அரசு பிறப்பித்தது. அதன்படி மாதம்தோறும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.அந்த வகையில் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் கம்பெனிகள் நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 50 காசு உயர்த்தி உள்ளன. சென்னையில் 61 காசு உயர்வு சென்னையில் வரியுடன் சேர்த்து இந்த விலை உயர்வு 61 காசுகள் ஆகும். இதன் மூலம் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.57.95–லிருந்து ரூ.58.56 ஆக உயர்ந்தது. இதே போன்று மும்பையில் டீசல் விலை லிட்டருக்கு 63 காசு உயர்ந்து ரூ.62.60–லிருந்து ரூ.63.23 ஆகி உள்ளது. கொல்கத்தாவில் 59 காசு உயர்ந்து ரூ.58.91 லிருந்து ரூ.59.50 ஆகி உள்ளது. டெல்லியில் 57 காசு அதிகரித்து ரூ.54.34–லிருந்து ரூ.54.91 ஆக கூடி உள்ளது.இந்த விலை உயர்வு நேற்று ந

01.01.2014 முதல் அகவிலைப்படி 100% Dearness Allowance from January 2014 will be 100%

The rate of Dearness Allowance from January 2014 has been now confirmed by just released AICPIN for the month of December 2013. Labour bureau has released the All India Consumer Price Index Number for Industrial workers for the month of December 2013 in its website www.Labour bureau.nic.in to day. The AICPIN for the month of December is very much required to finalize the percentage of DA to be increased for central government employees from January 2014.              The CPI for Industrial workers is the only factor to determine the additional installment of DA to be released with effect from 01.01.2014, so we need to know the 12 months average of AICPIN from January 2013 to December 2013 to calculate the percentage of Dearness Allowance to be paid from January 2014. Gservants, in its article published on 30th August 2013, told that the Percentage of DA to be paid from January 2014 will be from 100% to 102% . With 7 months CPI points it was estimated that there would b

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Ministry ofsocial justice & Empowerment இயக்குநர் ,ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்:

2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் நேற்று (31.01.2014) வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்:

AICPIN for the month of December 2013 Consumer Price Index Numbers for Industrial Workers (CPI-IW) December 2013 According to a press release issued by the Labour Bureau, Ministry of Labour & Employment the All-India CPI-IW for December, 2013 declined by 4 points and pegged at 239(two hundred and thirty nine). On 1-month percentage change, it decreased by 1.65 per cent between November and December compared with the rise of 0.46 per cent between the same two months a year ago. The largest downward pressure to the change in current index came from Food group contributing -4.96 percentage points to the total change. At item level, Onion, Ginger, Chillies Green, Brinjal, Cauliflower, Cabbage, Peas, Tomato, Potato and other Vegetable items, Sugar etc. are responsible for the decrease in index. However, this was compensated to some extent by Fish Fresh, Eggs, Hen, Poultry, Milk, Pure Ghee, Garlic, Firewood, ESI Contribution, etc. putting upward pressure on the index. The ye

சமூக மாற்றத்துக்கு கல்வியில் முழு சீரமைப்பு அவசியம்: அண்ணா ஹசாரே:

சமூகத்தில் நேர்மறையான மாற்றம் ஏற்பட கல்வியில் முழு சீரமைப்பு அவசியம் என காந்தியவாதி அண்ணா ஹசாரே வலியுறுத்தினார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் சென்னையில் வியாழக்கிழமை (ஜன.30) நடத்தப்பட்ட "திங்க்எஜு கான்கிளேவ்' என்ற இரண்டு நாள் கல்வி மாநாட்டில் பங்கேற்ற அண்ணா ஹசாரே பேசியதாவது: சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதும்கூட, நம்முடைய கல்வி முறை சமூகத்தில் போதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. கல்வியின் முக்கியக் குறிக்கோள் ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதுதான். ஆனால், இந்த இடைவெளி அதிகரித்துக் கொண்டுதான் போகிறது. இதற்கு கல்வி முறை சரியில்லாததே காரணம். நூறு சதவீத தேர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, பாடத் திட்டத்தை மாணவரிடம் திணிக்கும் பணியைத்தான் நமது கல்வி முறை செய்து வருகிறது. நாள் முழுவதும் அந்த மாணவர் என்ன செய்ய வேண்டும்; பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிறகு விளையாட வேண்டுமா அல்லது தூங்க வேண்டுமா என்பதில் கவனம் செலுத்த நாம் தவறிவிட்டோம். பாடத்திட்டத்தை மட்டுமல்லாமல் நல்ல பழக்க வழக்கங்களையும், தூய்மையாக சிந்திக்கவும்

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித் தொகை உயர்வு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித்தொகை திட்ட நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ.936 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய உரை: 2013-14-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.396 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடு ரூ.936 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் பயனை தனியார் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மாணவர்களுக்கும் விரிவுப்படுத்திய அரசின் முடிவு, கல்விப் புரட்சியை ஏற்படுத்தியதோடு, இந்த மாணவர்களையும் உயர்கல்வி நீரோட்டத்திற்குள் கொண்டுவந்துள்ளது. சமுதாயத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பிரிவுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு புதியதொரு வாய்ப்பை வழங்கியிருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். இது தவிர, இந்த மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்தி, அவர்கள் கல்வி பயில்வதற்கு நல்ல சூழலை ஏற்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும் மன நிற

3,589 பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு:

தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தியே ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த மனு: கூட்டுறவு நிறுவனங்களில், உதவியாளர் பணியிடத்துக்கான நேரடி நியமனம் குறித்த அறிவிப்பாணை நவம்பர் 2, 2012ல் வெளியானது. "மொத்தம் 3,589 காலியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி, நவம்பர் 23, 2012" என தெரிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வு டிச., 9, 2012 அன்று நடத்தப்பட்டது. டிச., 20, 2012ல் தேர்வு முடிவுகள் வெளியானது. உதவியாளர் பணி நியமனத்தில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கவில்லை. கூட்டுறவு துறை ரீதியான பயிற்சி பெறாதவர்களும் நியமிக்கப்பட்டனர். ஜாதி வாரியான ஒதுக்கீடு, தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. தேர்வு முறையில், விதிமீறல்கள் இருந்தன. எனவே, தேர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந

பிப்., 6ல் அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்: பொதுச் செயலாளர் தகவல்:

"தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, இரண்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிப்.6ல், மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் , 27 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணிவழங்க வேண்டும், கம்ப்யூட்டர் இயக்குனர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும் "டைப்பிஸ்ட்"களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி, பிப். 6ல், மாநில அளவில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதன் பிறகும் அரசு செவி சாய்க்கவில்லையெனில், பிப். 16ல், சென்னையில் நடக்கவுள்ள மாநில செயற்குழு கூட்டத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

நிகர வரி செலுத்த வேண்டிய வருமானம் (NET TAXABLE INCOME) ரூபாய் 5 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு வருமான வரியில் ரூபாய் 2000 விலக்கு:

As per the Central Finance Budget 2013, a new Income Tax Section has introduce under section 87A, where can get relief as well as Rebate Maximum Rs. 2,000/- who's taxable income up to 5,00,000/-. For more clarification about this new section under clauses 19 & 20 of the Central Budget 2013 as given below: Clauses 19 & 20 of the Central Budget which have already passed by the Parliament, thatThe new section 87A in the income tax Act relating to get the rebate of income taxin case of below given certain clauses : a) The section 87A seeks to providethat an tax payer being an individual , whose total Taxable Income does not exceed 5,00,000/-( After deduction of U/s 10,16,80C and under chapter VI A). It is must be great opportunity to tax relief for below tax payers. b) This amendment will take effect from 1st April 2013 which effect for the Financial Year 2013-14 and Assessment Year 2014-15.

அரசு ஊழியர் / ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வது எப்படி?

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும். கடைசியாக கடந்த 2013 ஜூலை  முதல் 80 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 10 சதவீதம் அதிகரித்து தற்போது 90 சதவீதமாக இரு அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர். இனி 2014 ஜனவரி மாத அடிப்படையில் அகவிலைப் படியை அறிவிக்க வேண்டும். இதன்படி இம்மாத இறுதியில், நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் அடிப்படையில், மத்திய அரசு 10 அல்லது 11 சதவீத அகவிலைப்படியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகையை  ஜனவரி  முதல் நிலுவையாக வைத்து வழங்கும். இதையடுத்து மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை  மார்ச்சில்  அறிவித்து, ஏப்ரலில்  3 மாத நிலுவையுடன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . அகவிலைப்படி கணக்கீடு எப்படி: ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அரசு அறிவிக்கும் அகவிலைப்படி கணிசமான தொகையாக கிடைக்கிறது. இதை நிர்ணயிப்பதற்கென ஒரு பார்முலா உள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை சம்பளம் வழங்குகின்றனர். கடந்த 12 மாதத்தில், தேச

நேற்று(30.01.2013 )பேரவையில் ஆளுநர் ரோசய்யா உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:

வேலை தேடுபவர்களையும் வேலை வழங்குபவர்களையும் இணைக்கும் தளமாக மாநில வேலைவாய்ப்பு இணைய தளம் தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. பேரவையில் நேற்று ஆளுநர் ரோசய்யா உரையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள்: *கடந்த 2012-13ம் ஆண்டில் 4.14 சதவீத அளவில் மட்டுமே வளர்ச்சி இருந்தபோதிலும், 2013- 14ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் மேம்பட்டு 5 சதவீதத்தை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. *மாநிலத்தில் வடகிழக்குப் பருவமழை அளவு 33 சதவீதம் குறைவாகப் பெய்துள்ள சூழ்நிலையிலும், 2013-14ம் ஆண்டில் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி 100 லட்சம் மெட்ரிக் டன் அளவை விஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சியின் அடிப்படையிலேயே கிராமப்புற பொருளாதாரம் அமையும். *ஏழைகளுக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம் மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 32 ஆயிரம் ஏழை, எளியோர் பொருளாதார மதிப்புமிக்க சொத்துக்களை பெற்றுள்ளனர். 3.72 லட்சம் நிலமற்ற ஏழைப் பெண்கள் பலன் பெற்றுள்ளனர். *ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் ரூ.770 கோடி உதவியுடன் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்புத் தி

எழுத்தறிவற்ற இந்தியர்கள் 28.7 கோடி பேர்: ஐ.நா அறிக்கையில் தகவல்:

  உலகில் கல்வியறிவு பெறாதவர்கள் அதிகமுள்ளவர்கள் நாடுகள் பட்டி யலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐ.நா. அறிக்கையின் படி இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் எண்ணிக்கை 28.7 கோடியாக உள்ளது. ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு சார்பில் 2013-14 அனைவருக்கும் கல்வி இயக்க கண்காணிப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 1991-ம் ஆண்டு 48 சதவீதமாக இருந்தது. இது 2006-ம் ஆண்டு 63 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆயினும் மக்கள் தொகை வளர்ச்சி காரணமாக, கல்வியறிவு பெறாத வயதுவந்தோரின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமுமில்லை. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டப்பட்ட அம்சங்கள்: இந்தியாவில் செல்வக் குடும்பத்தில் பிறந்த இளம்பெண்கள் உயர்கல்வி பெற்றுள்ளனர். ஆனால், ஏழைப் பெண்கள் கல்வி பெறவில்லை. இவ்விரண்டுக்கும் இடையே மிகுந்த ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. யாருக்கு அதிகம் கல்வியறிவு தேவையோ அவர்களுக்குக் கல்வி வழங்கும் இலக்கு தோல்வி யடைந்து விட்டதையே இது காட்டுகிறது. வரும் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு எட்டப்படவேண்டிய இலக்கு களை அடைய, மிகவும் வ