Skip to main content

Posts

Showing posts from October, 2013
ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அட்டை: வாக்காளர் அடையாள அட்டை இனி வரும் காலங்களில், ஏ.டி.எம்., கார்டு வடிவில்வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில், 2014ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், அக்., 1ல் வெளியிடப்பட்டது  இந்த பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இன்று(அக்.,31) கடைசி நாள்.வாக்காளர் அடையாள அட்டை தற்போது "லேமினேட்' செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் ஏ.டி.எம்., கார்டு வடிவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக எல்காட் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட  வழக்கு இன்று காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்பொழுது இரு தரப்பு வழக்கறிஞசர்களும் தயாராக இருந்த நிலையில் நீதியரசர்கள் தற்பொழுது முதன்மை அமர்வு தயாராக இல்லையெனவும், வழக்கு வருகிற 13ம் அன்று முடித்து கொள்ளலாம் எனவும்,  இதையடுத்து இவ்வழக்கு நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிளஸ்-2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றம் - புதிய பாடப்புத்தகம் தயாரிக்கும் பணியில் 500 ஆசிரியர்கள்: பிளஸ்-2 வகுப்புக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அந்த பாடத்திட்டத்தின் படி புதிய பாடப்புத்தகங்களை 500 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் எழுத உள்ளனர்.பிளஸ்-2 புதிய பாடத்திட்டம் தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் ஒரே பாடத்திட்டத்தில் ஒரே விதமான பாடப்புத்தகங்கள்தான் வழக்கத்தில் உள்ளன. 5 வருடங்களுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி இந்த காலத்திற்கு ஏற்றவகையில் புதிய தொழில்நுட்பத்தில், மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்போது புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது. 500 ஆசிரியர்கள் கொண்ட குழுவினர்அதைத்தொடர்ந்து புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்றபடி பாடப்புத்தகங்கள் எழுத நிபுணர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர
10,12 ஆம் வகுப்பு செப்டம்பர் மாத தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் மறு கூட்டலுக்கு நவம்பர் 8 வரை விண்ணப்பிக்கலாம் :
தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 28.10.13 முதல் 02.11.13 முடிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கொண்டாட இயக்குனர் உத்தரவு: CLICK HERE-DEE - ALL DEEO / AEEO OFFICES R CELEBRATE ANTI-CORRUPTION WEEK FROM 28.10.2013 TO 02.11.2013
பள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது: CLICK HERE-DSE - ALL CEO / ACEO / DEEO / IMS REVIEW MEETING HELD ON 08.11.2013 AT CHENNAI...
விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (01.11.13)உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  : விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும்  உயர்நிலை /மேல்நிலை பள்ளிகளுக்கு திபாவளி திருநாளை முன்னிட்டு நாளை (01.11.13) உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.இதனை ஈடுகட்டும் பொருட்டு நவம்பர் 09ஆம் தேதி பள்ளி வேலை நாளாக அறிவித்து , நவம்பர் 01 ஆம் தேதியின் பாடவேளை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது .
தகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு வழக்கின் முடிவை பொறுத்து அமையும்: ஐகோர்ட்: ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் ,  தேர்வு மற்றும் நியமனங்கள் ,  வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என , சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த , வழக்கறிஞர் ,  எம்.பழனிமுத்து தாக்கல் செய்த  மனு: ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைப்படி , " ஆசிரியர் தகுதி தேர்வில் ,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ,  தகுதி மதிப்பெண்ணில் , 5  சதவீதம் தளர்த்தலாம்" என ,  கூறப்பட்டுள்ளது.  11  மாநிலங்களில் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ,  தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டுள்ளது.   சில மாநிலங்களில் ,  பிற்படுத்தப்பட்டோர் , இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் ,  தளர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ,  தகுதி மதிப்பெண் தளர்த்தக் கோரி ,  தாக்கல் செய்த மனு ,  நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ,  கடந்த ,  மே மாதம் , ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. ஆதிதிராவிடர் ,  பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ,  மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ,  தகுதி மதிப்பெண்ணை
முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன: 2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.கணினி வழித் தமிழ் மொழி பரவிட வகை செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த  விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1.00 இலட்சமும் 1 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும். இந்த விருது சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற  விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 31.12.2013 ஆகும். மேலும் விவரங்களுக்கு http://www.tamilvalarchithurai.org தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: டி.ஆர்.பி., தலைவருக்கு அபராதம்: ஆசிரியர் தகுதித்தேர்வு, கீ ஆன்சரில் தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், முழு மதிப்பெண் வழங்க தாக்கலான வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால், டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யாருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விக்கிரமசிங்கபுரம் சூர்யா தாக்கல் செய்த மனு: எம்.எஸ்.சி., - பி.எட்., படித்துள்ளேன். டி.ஆர்.பி., மூலம், 2012ல் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் எனக்கு பி வரிசை வினாத்தாள் வினியோகித்தனர். டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியான கீ ஆன்சரில், ஒன்பது கேள்விகளுக்கு, தவறான விடைகள் இடம்பெற்றன. அவற்றிற்கு நான், சரியான விடைகளை எழுதியுள்ளேன். எனக்கு 86 மதிப்பெண் வழங்கியுள்ளனர். தேர்ச்சி பெற 90 மதிப்பெண் வேண்டும். கீ ஆன்சர் தவறாக உள்ளதால் எனக்கு கூடுதலாக ஒன்பது மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இதனால் என், கட்-ஆப் மதிப்பெண் உயரும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன் மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கு ஓராண்டாக நிலுவையில் உள்ளது. பலமுறை
மனநல ஆலோசகர்களை நியமிக்க கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்: மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க, அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்கக் கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப" மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை வக்கீல் ஞானகுருநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக கல்லூரிக் கல்வி இயக்குனர் 2011 மே 25 ல் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், "கல்லூரி மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதால், தவறுகள் செய்ய நேர்கிறது. இதனால் தண்டனைக்குள்ளாகி தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதை தடுக்க ஒவ்வொரு பாடப்பிரிவிலும் பொறுப்பாசிரியர்கள் நியமிக்க வேண்டும். அதிக விடுப்பு எடுக்கும் மாணவர்களை கண்காணித்து, அறிவுரை வழங்க வேண்டும். குறைந்தபட்ச வருகைப்பதிவு இல்லாவிடில், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு மாணவர்களுடன் இணக்கமாக பேசி தீர்வு காண மூத்த பேராசிரியரை உளவியல் ஆலோசகராக நியமிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். நடப்புக் கல்வியாண்டில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக 17 வழக்குகள் பதி
2014ம் ஆண்டு ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு - மே 25ல் நடத்தப்படும்:   ஐ.ஐ.டி.,களின் கூட்டு சேர்க்கை வாரியம், 2014ம் ஆண்டு ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு, மே 25ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒரு வாரம் முன்னதாகவே அத்தேர்வு நடத்தப்படவுள்ளது. மேலும், இத்தேர்வு கணினி அடிப்படையில் நடைபெறாது என்று ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, அடுத்தாண்டு நடைபெறும் தேர்வு பேப்பர் - பென்சில் தேர்வாக நடைபெறும். இத்தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். முதல் தாளுக்கான தேர்வு காலை 9 மணிமுதல் நண்பகல் 12 மணி வரையும், இரண்டாம் தாளுக்கான தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். கேள்வித்தாள் objective முறையில் இருக்கும் மற்றும் இதன்மூலம் ஒரு மாணவரின் புரிந்துகொள்ளும் திறன், பகுப்பாய்வு மற்றும் காரணகாரிய ஆராய்வு திறன் போன்றவை சோதிக்கப்படும். இந்தியாவின் IIT -கள் மற்றும் ISM - தன்பாத் ஆகியவற்றிலுள்ள இளநிலைப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, 7 பிராந்திய IIT -களால் நடத்தப்படுகிறது இந்த JEE தேர்வு. JEE மெயின் தேர்வின் முதல் தாளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் 1 ல
குரூப்2 தேர்வு நாள் மாற்றம் இல்லை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்: குரூப்2 தேர்வு  தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்தபடி 01.12.2013 அன்றே நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழ் நாடு அரசுப் பணியாளர்கள் தேவாணையம் அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 2 (தொகுதி-2) ல் உள்ளடங்கிய 1064 பதவிகளுக்கான அறிவிக்கையினை (எண் 14/2013) வெளியிட்டு அதற்கான முதனிலை எழுத்துத் தேர்வினை 01.12.2013 அன்று நடத்த திட்டமிட்டிருந்தது.ஆனால் அதே நாளில் (01.12.2013) வேறு சில தேர்வு வாரியம் / ஆணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளும் நடைபெற இருந்ததை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-2 தேர்வினை வேறு ஒரு நாளில் நடத்துமாறு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மேற்படி கோரிக்கைகளை பரிசீலித்த தேர்வாணையம், தொகுதி-2 தேர்வுக்கு சுமார் 7 லட்சம் விண்ணப்பதாரர்களுக்கு மேல் விண்ணப்பித்திருப்பதாலும், இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருவதாலும், அடுத்தடுத்து வரும் வார இறுதி
முதுகலை ஆசிரியர்களுக்கான அக்டோபர் 22, 23 ஆகிய நாட்களில் நடந்த சான்றிதழ் சரிபார்பில் பங்கேற்காதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு: Also during the certificate verification held on 22nd and 23rd October 2013 as per the Provisional List dated 11.10.2013. A few candidates were absent for certificate verification and some candidates who attended the certificate verification did not produce the required certificates.Now, it is decided by the Board to give both of them another opportunity to attend the certificate verification or to produce the certificates at the venue and date mentioned below. Date : 06.11.2013 Venue : Government Girls Higher Secondary School, Ashok Nagar, Chennai No other chance shall be given.Member Secretary
குழந்தையின் கண்பார்வை- பெற்றோரின் பங்கு என்ன?  கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. எனவே, குழந்தைகளுக்கு ஏற்படும் கண் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கண்ணொளியை காத்தல் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இக்கட்டுரை பதிலளிக்கிறது. குழந்தைக்கு கண்ணாடி தேவை என்பதை பெற்றோர் எவ்வாறு உறுதி செய்வது? ஒரு குழந்தை, தனது பார்வை தெளிவாக இல்லை என்பதைப் பற்றி அரிதாகவே, தன் பெற்றோரிடம் புகார் தெரிவிக்கும். அடிக்கடி தலை வலிக்கிறது மற்றும் கண் வலிக்கிறது என்று தெரிவித்தாலோ அல்லது ஒரு அம்சத்தை தெளிவாக பார்க்கும் பொருட்டு, கண்களை பாதியாக சுருக்கினாலோ, உடனடியாக ஒரு நல்ல கண் மருத்துவரிடம் உங்கள் குழந்தையை அழைத்துச்செல்ல வேண்டும். கண் பார்வை பிரச்சினையுள்ள குழந்தைகள், ஒரு விஷயத்தைப் படிக்கையில், கண் அருகே வைத்துக்கொண்டு படிப்பார்கள். மேலும், வகுப்பறையின் கரும்பலகையில் உள்ள விஷயத்தைப் பார்த்து, தனது நோட்டில்
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாராணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில்  நீதியரசர் இராஜேஸ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில்  இன்று மதியம் 3.00 மணியளவில் வரவேண்டிய இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு ,ஒருதரப்பு வழக்கறிஞசர் ஆஜராகாததால் மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து மீண்டும் நாளைக்கு விசாராணைக்கு வரவுள்ளது  என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முடியாது : விசாரணை ஒத்திவைப்பு: தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட தடை கோரிய மனு மீதான விசாரணையில் , முடிவை வெளியிட   தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர் . இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால் , நீதிபதி சத்தியநாராயணா கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது மனுவை விசாரித்த நீதிபதிகள் , தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 18 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிய கிளர்க்கை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது: ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கடைபிடித்து வரும் வேளையில், தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில்,லஞ்சம் வாங்கிய கிளர்க்கை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர். அக்டோபர், 28 முதல், நவம்பர், 2ம் தேதி வரை, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அனைத்து அரசு ஊழியர்களும், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்வர். இந்நிலையில், தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், பில் செக்ஷனில், எழுத்தராக பணியாற்றி வருபவர் மோகன்ராம், 50. இவர், தாரமங்கலம் யூனியன் வணிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின், பி.எஃப்., மற்றும் ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றுக்காண பில்களை பாஸ் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து, வணிச்சம்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார், தலைமை ஆசிரியர் செல்வத்திடம், ர
புதிய கல்வி அமைச்சர் மாண்பு மிகு K.C வீரமணி:   தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்துபள்ளிக் கல்வி, தொல்லியல், விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சராக கே.சி.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையால் அனுப்பப்பட்ட திபாவளி பண்டிகைக்கு மாணவர்களின் உறுதிமொழி :
எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை: பிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலையில் பிடிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த ஜூலை மாதத்தில் பி.டி.எஸ்., மூன்றாமாண்டுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.பிடிஎஸ் தேர்வு முடிவுகளை அறிய http://web.tnmgrmu.ac.in/ என்ற இணையதளத்தை காணலாம்.
10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பு: மாற்றம் கேட்கும் தமிழாசிரியர்கள்: மாநில அளவில் 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பை தடுக்க வினாத்தாளில் மாற்றம் தேவை" என, தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.மாநில துணைத் தலைவர் இளங்கோ கூறியதாவது: "சமச்சீர் கல்வித் திட்டத்தில் பொதுத்தேர்வு தமிழ் பாடத்திற்காக வடிவமைத்த புதிய வினாத்தாள் கடினமாக உள்ளது. இதனால் தோல்வி விகிதம் அதிகரித்துள்ளது. பழைய முறையில் ஏழு மதிப்பெண் நெடுவினாக்களில் செய்யுள், உரைநடை பகுதியில் நான்கு கேட்கப்பட்டு இரு வினாவிற்கு விடையளித்தால் போதும். புது முறையில் செய்யுள், உரைநடை பகுதியில் தலா இரு வினாக்கள் கேட்டு ஒரு வினாவிற்கு எட்டு மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வினாக்கள் குறைவால், விடையளிக்க திணறுகின்றனர். இரண்டாம் தாளில் பழைய முறைப்படி இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், பிரித்து எழுதுதல், பிழை திருத்தம், பிற மொழி சொற்களை நீக்குதல் என தனித்தனி தலைப்பில் இரண்டு மதிப்பெண் வினாக்கள் மூன்று இடம் பெறும். வாக்கிய மாற்றம் தலைப்பில் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ஏழு கேட்கப்படும். தற்போது இவை அ
கலை படிப்புகளுக்கு கை கொடுக்குமா அரசு? ஆறு ஆண்டுகளாக பள்ளிகளில் நிரந்தர கலை ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 927 பணியிடங்கள் காலியாக உள்ளன; இவற்றை நிரப்ப வேண்டும்" என, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதுடன், தனித் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், தையல், கைத்தொழில், உடற்கல்வி, இசை உள்ளிட்ட பிரிவுகளில் கலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். வாரத்துக்கு ஒரு வகுப்புக்கு இரண்டு பாடவேளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து படிப்பு, தேர்வு, மனப்பாடம், மதிப்பெண் என்ற நோக்கத்தில், ஓடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இரு பாடவேளை வரப்பிரசாதம். பிற பாடங்களை காட்டிலும் இதுபோன்ற வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க முன் வருகின்றனர். தற்போது மாநிலம் முழுவதும் 3,200 நிரந்தர கலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2009ல் 231 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு 321 பேரை பணி நியமனம் செய்ய சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடந்தது. ஆனால், பணி நியமனம் செய்யப்படவில்லை. ஆறு ஆண்டுகளாக நிரந
இக்கணம் தேவை சிக்கனம்: இன்று உலக சிக்கன தினம் : இந்த பழக்கம் உங்களிடம் இருந்தால், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் உங்களுக்கு கவலையே ஏற்படாது. அது தான் சேமிப்பு. 1924 அக்., 31ல், இத்தாலியின் மிலன் நகரில், சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாடு நடந்தது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த, வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சிக்கனத்தின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும் வண்ணம், அக்.31ம் தேதி உலக சிக்கன தினம் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது.  எது சிக்கனம்: சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். வளங்களை வீணடிக்காமல், திறமையாக கையாள்வதை இது குறிக்கும். அதாவது அவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொள்வது. சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனாலேயே வங்கிகள், சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி அளித்து ஊக்கப்படுத்துகின்றன. சிக்கனமாக சேமிக்கப்பட்ட பணம் தான், எல்லா தொழில்களுக்கும் மூலதனம்.  என்ன வித்தியாசம்: பொதுவாக, செலவு செய்வதை கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம் என நான்கு வகையாக பிரிக்கலாம். கஞ்சத்தனம் என்பது
இந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு: click here to download the govt letter of instruction of prevention of national flag from insult reg...
இரட்டைப்பட்டம் இன்று  (30.10.2013) வரிசை எண் 43 ல் விசாரணைக்கு வருகிறது: இன்று (30.10.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசராணைக்கு வருகிறது.மேலும் வரிசை எண் 43-ல் விசாரணைக்கு வருகிறது.இன்று வழக்கு முடியும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்........
1093 உதவி பேராசிரியர் தேர்வுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்டு உத்தரவு: சென்னை ஐகோர்ட்டில் , விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.கோவிந்தன் , சி.மணி , ஜி.அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28–5–2013 அன்று விளம்பரம் வெளியிடப்பட்டது. இதில் , உதவி பேராசிரியர் பதவிக்கு பல்கலைக்கழகம் மானிய குழு நிர்ணயம் செய்துள்ள தகுதி மதிப்பெண்களுக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்துள்ளது. எனவே , உதவி பேராசிரியர் பதவிக்கு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கும் , அதன் அடிப்படையில் தேர்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது , மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெ.லட்சுமிநாராயணன் ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் , ‘‘ கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு , ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயம
PG TRB - Call Letter for Additional Candidates: Direct Recruitment of Post Graduate Assistants/ Physical Education Director Grade I - 2012-2013 - Call Letter for Candidates in Additional List...
SCHOOL EDN -TEMPORARY POST-ADDITIONAL POST GRADUATE  ASST IN HIGHER SECONDARY SCHOOL SANCTIONED TEMPORARY POST CONTINUATIONS ORDER FROM 29.10.2013 AWAITED FROM GOVERNMENT ORDER ISSUED... ORDER CLICK HERE....
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்கின்றனர்? அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கே அரசு பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா? இது போன்ற கேள்விகள் பெருமளவில் பரவலாகக் கேட்கப்படுகிறது..  பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்! அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இன்று நேற்றல்ல, காலம் காலமாய் நிகழ்ந்து வருவது.  அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்பதே மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.  அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே இந்த விமர்சனத்தின் சாரம்.  அரசாங்க மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளை மேலான சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிப்பதில்லையா?   அதனால் அவர்களுக்கு அரசு மருத்துவர்களின் மீதும், அவர்களின் திறமையின் மீதும் நம்பிக்கையில்லை என்று அர்த்தமா?   அரசாங்க மருத்துவமனைகளில் த
நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு: தீபாவளி திருநாளை முன்னிட்டு தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் நவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9 தேதி பள்ளி வேலை நாளாக செயல்படும்.மேலும் இதே போல மற்ற அனைத்து  மாவட்டகளிலும் உள்ளூர் விடுமுறை விடப்படுமா என எதிர்பார்கின்றனர்
RTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்: CLICK HERE-RTI - TRB - B.ED., WITH OTHER OPTION ELIGIBLE TO GET BT APPOINTMENT...
முதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முதுநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான, ஆசிரியர் தகுதித் தேர்வை கடந்த ஜுலை மாதம் டி.ஆர்.பி., நடத்தியது. இதில் தமிழ் பாடத்திற்கு நடத்தப்பட்ட தேர்வில், வினாத்தாளில் அதிகளவிலான பிழைகள் இருந்தன. எனவே, பெரிய குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ் பாடத்திற்கான தேர்வை ரத்துசெய்து, அப்பாடத்திற்கு மட்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டது. ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மறுதேர்வு நடத்துமாறு அளிக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தது.
நவ.,1 உள்ளூர் விடுமுறை அளிக்கணும் ஆசிரியர் கூட்டணி கோரிக்கை: தீபாவளிக்கு முதல் நாளான, நவம்பர், 1ம் தேதி, அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்க, நாமக்கல் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கைஎழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 15 யூனியன்களில், 812 துவக்கப்பள்ளி, 209 நடுநிலைப்பள்ளி என, மொத்தம், 1,021 அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அவற்றில், 53 ஆயிரத்து, 536 மாணவர், 52 ஆயிரத்து, 169 மாணவியர் என, மொத்தம், ஒரு லட்சத்து, 5,705 பேர் படிக்கின்றனர். மேலும், 3,361 அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். வரும் நவம்பர், 2ம் தேதி தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதற்காக, பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, புத்தாடை எடுப்பது, இனிப்பு வகைகள் தயாரிப்பது, ஸ்வாமி தரிசனம் செய்வதற்கு கோவிலுக்குச் செல்வது என, தீபாவளி பண்டிகைக்கு முன், ஆயத்தப்பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் வாங்கும் பணிகளில் ஈடுபட வேண்ட
தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆசிரியர்களின் விபரப் படிவத்தில் வினா எண் 14ஆ இல் ஆசிரியரின் வாக்காளர் பாகம் எண் மற்றும் தொடர் எண் கேட்கப் பட்டுள்ளது. வாக்காளரின் பாகம் எண் மற்றும் தொடர் எண்ணை இணையதளம் மூலம் அறியலாம். சொடுக்கவும்: click here-Search Your Name in Electoral Roll by EPIC Number... click here-To see ur Roll No & Part No...
ஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை துணைநிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: அரசு துவக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டுவரப்பட்டதால், தமிழ் பேசும் மாணவர்கள் குறைந்து போவார்களோ என்ற கவலை உள்ளது. தமிழ் மொழி அதன் செல்வாக்கை இழந்துவிடுமோ என்ற கவலையும் உள்ளது என்றார். அப்போது அமைச்சர் பி.பழனியப்பன் கூறியது: ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருந்து வருகிறது. வேலைவாய்ப்புக்கு என்று செல்லும் ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மேலும் ஆங்கில வழிக் கல்விக்காகவே தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் நிலையும் இருக்கிறது. அதன் காரணமாகவே பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. தற்போது தனியார் பள்ளிகளையும் தவிர்த்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆங்கில வழிக் கல்வியி