Skip to main content

Posts

Showing posts from October, 2014

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்ப முடியாது: கட்டண நிர்ணய குழு திட்டவட்டம்:

'சி.பி.எஸ்.இ., பள்ளி கள், தமிழக அரசின் விதிமுறைகளில் இருந்தோ, கட்டண நிர்ணய குழு விதி முறைகளில் இருந்தோ தப்ப முடியாது' என, கட்டண நிர்ணய குழு வட்டாரம், நேற்று உறுதியாக தெரிவித்தது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கடிவாளத்தை, தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வந்து, சமீபத்தில், தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு வட்டாரம், நேற்று கூறியதாவது: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ.,) அங்கீகாரம் பெற்ற ஒரே காரணத்தினால், தமிழக அரசிடம் இருந்தோ, தமிழக அரசால் அமைக்கப்பட்டு உள்ள கட்டண நிர்ணய குழுவிடம் இருந்தோ, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தப்பிவிட முடியாது. தமிழகத்தில், 500 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளுக்கும், குழு, கட்டணத்தை நிர்ணயிக்கும். இந்த கட்டணத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும். 500 மெட்ரிக் பள்ளிகளுக்கு, தற்போது, புதிதாக கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கட்டணம் நிர்ணய காலம் முடியும் பள்ளிகளுக்கு, தொடர்ந்து, மூன்று கல்வி ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும். இவ்வாறு, குழு வட்ட

தரமற்ற கல்வி நிறுவனங்களைத் தடுப்பது அவசியம்: யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ்:

உயர் கல்வி விரிவாக்கம் திட்டத்தை நிறைவேற்றும்போது தரமற்ற கல்வி நிறுவனங்கள் உருவாவதைத் தீவிரமாகக் கண்காணித்து தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கேட்டுக்கொண்டார். சென்னைப் பல்கலைக்கழக 157-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே. ரோசய்யா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அறிவியலில் டாக்டர் (டி.எஸ்சி.) பட்டம் பெற்ற ஒருவருக்கும், டாக்டர் பட்டம் (பிஹெச்.டி) முடித்த 213 பேருக்கும், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் முதல் ரேங்க் பெற்ற 115 பேர் உள்பட மொத்தம் 400 பேருக்கு பட்டச் சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்காமல் மொத்தம் 60 ஆயிரத்து 228 பேர் பட்டம் பெற்றனர். முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். தாண்டவன் ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஹெச். தேவராஜ் பேசியது: தேசிய ஆய்வு, அங்கீகார கவுன்சிலின் "ஏ' தர அங்கீகாரத்தைப் பெற்றுள்ள சென்னைப் பல்கலைக்கழகம் 150 ஆண்டுக

தொலைநிலைப் படிப்பு: அங்கீகாரத்தை உறுதி செய்ய மாணவர்களுக்கு யுஜிசி அறிவுரை:

தொலைநிலைப் படிப்புகளில் சேருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் தொலைநிலைப் படிப்புகளை நடத்துவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அனுமதியைப் பெற்றுள்ளதா என்பதை மாணவர்கள் உறுதி செய்துகொள்வது அவசியம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சில கல்வி நிறுவனங்கள் அவர்கள் வழங்கும் படிப்புகளில் மாணவர்கள் தொலைநிலைக் கல்வி முறையிலும் சேர்ந்து படிக்கலாம், அதற்கு யுஜிசி அனுமதி பெறப்பட்டிருப்பதாகத் தவறான விளம்பரங்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டிருப்பது யுஜிசி-க்குத் தெரியவந்துள்ளது. இதுபோல, தொலைநிலைக் கல்வி முறையில் படிக்க விரும்பும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தற்போதைய அங்கீகார நிலையை http://www.ugc.ac.in/deb/ என்ற இணையதளத்தில் பார்த்து உறுதி செய்த கொண்ட பிறகே, சேரவேண்டும். அவ்வாறின்றி, யுஜிசி அனுமதி பெறாத கல்வி நிறுவனத்தில் தொலைநிலைப் படிப்பை மேற்கொண்டு பெறப்படும் பட்டம் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளுக்கு தகுதியற்றதாகக் கருதப்படும். அதோடு, கல்வி நிறுவனத்தின் கல்வி வழங்கக் கூடிய எல்லைய

பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச வழிகாட்டு குறுந்தகடு வெளியீடு:

பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டு குறுந்தகடுகளை சென்னையில் ஆளுநர் ரோசய்யா வியாழக்கிழமை வெளியிட்டார்.  பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வினா வங்கிகள், உயர்கல்வி வாய்ப்புகள், வங்கிக் கடன் வாய்ப்புகள் போன்ற தகவல்கள் அடங்கிய குறுந்தகடை "டிரீம் சொலுஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்தக் குறுந்தகடை தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்டு பேசியது: தற்போது கல்வி முறை பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. மாணவர்கள் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமில்லாமல், பெற்றோரிடமும் தேர்வு பயம் தொற்றிக்கொள்கிறது. எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். தங்களது பிள்ளைகள் எதைப் படிக்க வேண்டும் என்பதை பெற்றோர் திணிக்கக் கூடாது. மாணவர்களே அதனை தேர்வு செய்ய வேண்டும். இப்போது வெளியிடப்பட்ட குறுந்தகடு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார் ஆளுநர். இந்த குறுந்தகடு குறித்து டிரீம் சொலுஷன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் கூறியது: தேர்வுக்கு மா

சனிக்கிழமை சத்துணவு: கலெக்டர் உத்தரவு:

மதுரையில் மாற்று வேலை நாளாக சனிக்கிழமையன்று பள்ளி செயல்பட்டால் அன்று கட்டாயம் சத்துணவு வழங்க வேண்டும் என கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.அக்.,22 தீபாவளியை முன்னிட்டு அக்.,21ல் தொடக்கம் மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதை ஈடுசெய்யும் வகையில் அக்.,25 சனியன்று மதுரையில் பள்ளிகள் செயல்பட்டன. அன்று மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''சனியன்று பள்ளிகள் செயல்பட்டால் சத்துணவு வழங்கக்கூடாது என உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். கலவை சாதம் முறை வந்தவுடன் ஒவ்வொரு நாளும் ஒரு 'மெனு' தயாரிக்கப்படும். சனியன்று என்ன சாதம் வழங்க வேண்டும் என்று 'மெனு' இல்லை,'' என கூறியிருந்தார். இதற்கு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி உட்பட ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர்.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழ் அக்.,27ல் செய்தி வெளியிட்டது. தன்எதிரொலியாக நகராட்சி மற்றும் யூனியன் கமிஷனர்கள், மாநகராட்சி கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு கலெக்டர் சுப்ரமணியன் அனுப்பிய உத்தரவு: மா

கணக்கு வைத்துள்ள வங்கியாக இருந்தாலும் 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்., பயன்படுத்தினால் கட்டணம் - நாளை முதல் அமல்:

ஏ.டி.எம்., ஐ மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 6 நகரங்களில் நாளை முதல் இது அமல்படுத்தப்படுகிறது.கணக்கு வைத்துள்ள வங்கியாக இருந்தாலும் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும். வங்கிக்கணக்கில் பணம் எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளவும் இது உதவும், பிற வங்கி ஏ.டி.எம்.,களில் 3 முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். ஏ.டி.எம். கார்டை 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் வசூலிக்கும் முறை நாளை (1ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர், தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கும், பணம் இருப்பை அறிவிதற்கும் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி வருகின்றனர். கணக்கு வைத்துள்ள வங்கிகளில் இந்த ஏ.டி.எம். கார்டை எத்தனை முறை பயன்படுத்தினாலும் கட்டணம் ஏதும் இதுவரை வசூலிக்கப்படாமல் இருந்தது. மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால், கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இனிமேல் கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பதிவிகளுக்கு பதவிஉயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மை அலுவலகத்தில் 02/11/2014 அன்று நடைபெறும் - இயக்குனர்:

DIRECTOR PROCEEDING CLICK HERE..

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு RMSA மூலம் பணியிடைப் பயிற்சி:

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு RMSA மூலம் பணியிடைப் பயிற்சி நடைபெற இருக்கிறது.முதலாவுதாக கணிதம் வரும் 05.11.2014 மற்றும் 06.11.2014, அறிவியல் 10.11.2014 மற்றும் 11.11.2014,சமுக அறிவியல் 12.11.2014 மற்றும் 13.11.2014 என இரண்டு நாட்கள் என்ற முறையில் 8 மையங்களில் நடைபெறும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

ஒருவர் தனது குணநலன்களை வளர்த்துக்கொள்வது முடிவற்ற ஒரு செயல்முறை:

ஒருவர் தனது குணநலன்களை வளர்த்துக்கொள்வது முடிவற்ற ஒரு செயல்முறை. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும், இந்த நொடியில்கூட உங்கள் குணநலன் பரிணமிக்கிறது. தற்போதும், இந்தச் செயல்முறையை நிறுத்துவது சாத்தியம் அல்ல. நீங்கள் பார்ப்பது, முகர்வது, கேட்பது, ருசிப்பது அல்லது தொடுவது எல்லாமே உங்கள் குணநலன்களை, உங்கள் ஆதாரமான இயல்பை மாற்றிக்கொண்டிருக்கின்றன. அன்றாட அனுபவங்கள் உங்கள் குணநலனை உருவாக்குகின்றன. உங்களால் இந்த மாற்றத்தை நிறுத்த முடியாவிட்டாலும் அதைக் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் பார்க்கும் அனைத்து விஷயமும், நீங்கள் பழகும் மனிதர்களும், நீங்கள் செல்லும் இடங்களும் உங்களது குணநலனை உருவாக்குகின்றன. உண்மையான குணம் நீங்கள் அனைவராலும் விரும்பப்படுபவராக இருக்கலாம். அருமையான பண்புடையவர் என்று உங்களைப் பற்றி மக்கள் கூறலாம். அவர்கள் பார்வையில் படுவதை வைத்து அப்படிச் சொல்கிறார்கள். அது நல்லதுதான். ஆனால் ஒருவரின் உண்மையான குணம் அல்லது இயல்பு என்பது யாரும் இல்லாதபோது அவர் எப்படி இருக்கிறார் என்பதைப் பொறுத்ததே. நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது, உங்களை எடைபோட யாருமே இல்லாதபோது நீங்

TNPSC GROUP 4 தேர்வும் சில பயனுள்ள தகவல்களும்:

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 4,963 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. குரூப்-4 தேர்வு எழுதுவதற்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில் நுட்பத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை. பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35. தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை. குரூப்-4 தேர்வுக்கான கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பெரும்பாலும் பிளஸ்2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்பில்

‘கத்தி’ படத்தால் நிம்மதி இழந்த குமரி உடற்கல்வி ஆசிரியர்:

`கத்தி’ திரைப்படத்தால் நிம்மதி இழந்து தவிக்கிறார் கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவர். தீபாவளி அன்று திரைக்கு வந்த, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத் தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளியான `கத்தி’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகை சமந்தா ஒரு அலைபேசி எண்ணை நடிகர் விஜய்யிடம் கூறுவார். அது ஒரு நகைச்சுவை காட்சியாக சித்தரிக் கப்பட்டிருக்கும். உண்மையில் அந்த அலைபேசி எண் கன்னியாகுமரி மாவட்டம், அருமனையை அடுத்த குழிச்சலை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெகதீஷ் என்பவருடை யது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை ஆயிரக் கணக்கான அழைப்புகள் நடிகை சமந்தாவிடம் பேச வேண்டும், விஜய்யிடம் பேச வேண்டும் என வந்ததால் இப்போது மிகவும் தவித்து வருகிறார் ஜெகதீஷ். ஜெகதீஷின் எண்ணுக்கு நாம் தொடர்பு கொண்டபோது நமது அழைப்பு ஏற்கப்படவில்லை. அவரது சகோதரர் ஜெனீஷை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது: ’ஜெகதீஷின் அலைபேசியை எடுத்ததுமே முருகதாஸா? விஜய் அண்ணாவா? சமந்தாவா என்றுதான் கேட்கிறார்கள். ரசிகர்கள் அது வெறும் காட்சிக் காக பதிவு செய்யப்பட்ட எண் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நேற்

ஆசிரியர் தகுதித் தேர்வு: புதிய ஆசியர் பணியிடங்கள் இரண்டாவது பட்டியல் வருவது உறுதி முதலமைச்சர் தனிப்பிரில் அளிக்கப்பட்ட பதில் மகிழ்ச்சியான தகவல்:

தேனியை சேர்ந்த கே . முத்துராஜ் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அளித்த மனுவின் மூலம் முதலைமைச்சர் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட தகவலின் படி 2011 முதல் 2013 வரை உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்பப்பட்டது போக மீதம் உள்ள பணியிடங்கள் ஏற்கனவே வெற்றி பெற்ற தேர்வர்களை கொண்டு நிரப்பப்படும் . என முதலமைச்சர் தனிப்பிரிவில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளது . எனவே இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .

தலைமை ஆசிரியர் கலந்தாய்வு : 248 பேருக்கு உத்தரவு வழங்கல்:

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, மாநிலம் முழுவதும், இணையதள வழியில், நேற்று நடந்தது. இதில், 248 பேருக்கு, பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில், 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த பள்ளிகளுக்கு, புதிய தலைமை ஆசிரியர் நியமனம் மற்றும் பிற பள்ளிகளில் காலியாக இருந்த, 248 இடங்களை நிரப்ப, நேற்று, இணையதள வழியில் கலந்தாய்வு நடந்தது. இதில், 260க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்; காலியாக இருந்த, 248 இடங்களும் நிரப்பப்பட்டன. இன்று, 450 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியராக இருந்த, 100 பேருக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகியவை நடக்கிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டு குறுந்தகடு வெளியீடு;

பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டு குறுந்தகடுகளை சென்னையில் ஆளுநர் ரோசய்யா வியாழக்கிழமை வெளியிட்டார்.  பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வினா வங்கிகள், உயர்கல்வி வாய்ப்புகள், வங்கிக் கடன் வாய்ப்புகள் போன்ற தகவல்கள் அடங்கிய குறுந்தகடை "டிரீம் சொலுஷன்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்தக் குறுந்தகடை தமிழக ஆளுநர் ரோசய்யா வெளியிட்டு பேசியது: தற்போது கல்வி முறை பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. மாணவர்கள் கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமில்லாமல், பெற்றோரிடமும் தேர்வு பயம் தொற்றிக்கொள்கிறது. எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி படிக்கிறோம் என்பதுதான் முக்கியம். தங்களது பிள்ளைகள் எதைப் படிக்க வேண்டும் என்பதை பெற்றோர் திணிக்கக் கூடாது. மாணவர்களே அதனை தேர்வு செய்ய வேண்டும். இப்போது வெளியிடப்பட்ட குறுந்தகடு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார் ஆளுநர். இந்த குறுந்தகடு குறித்து டிரீம் சொலுஷன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் கூறியது: தேர்வுக்கு மா

கணினிப் பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் - TRB:

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள 652 கணினிப் பயிற்றுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 652 கணினிப் பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கான தெரிவுப் பணிகள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் நடைபெற உள்ளதால், அந்த அலுவலகத்தால் பரிந்துரை செய்யப்படும் பணிநாடுநர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவர். ஆசிரியர் தேர்வு வாரியம் இது தொடர்பாக எந்தவித விண்ணப்பங்களையும் கோராத நிலையில், இது சார்ந்த விண்ணப்பங்களை நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்ப வேண்டாம் என பணிநாடுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி முதலாமாண்டு மாணவர்கள் எழுதிய ஆங்கில தேர்வில் 239 பேர் தோல்வி - மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே காரணம் என குற்றச்சாட்டு;

ஐஐடி முதலாமாண்டு மாணவர்கள் எழுதிய ஆங்கில தேர்வில் 239 பேர் தோல்வியடைந்துள்ளனர். மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ஐஐடியில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ&மாணவிகள் படித்து வருகின்றனர். பொதுவாக ஐஐடிக்களில் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படுவதால், அங்கு படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பார்கள். எனினும், அனைத்து ஐஐடிக்களும் மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை நடத்தி மாணவர்களின் ஆங்கில திறனை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆங்கில பயிற்சி மற்றும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில், ஒருவார்த்தை கேள்விகள், கட்டுரைகள், ஆங்கில இலக்கண திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.  இந்நிலையில், சென்னை ஐஐடியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆங்கில தேர்வு நடைபெற்றது. இதில் 1,310 மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், 1,071 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று, 239 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறியதா

TET Paper 2: Next List will Publish Soon:

TET புதிதாக ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, புதிய பட்டியல் வெளியிடப்பட்டு விரைவில் பணிநியமனம் நடைபெற உள்ளது. - TRB -   Based On TRB Ltr.Dt: 23.10.2014.