Skip to main content

Posts

Showing posts from January, 2013
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த, குரூப்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.இந்த ஆண்டு 27 அரசு துறைகளில் 35 பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களில், 10 ஆயிரத்து, 105 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த உள்ளது. தேர்வு முறையில் பத்து ஆண்டிகளுக்கு பின் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த, குரூப்-2 தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் தெரிவித்தார்.  
பிளஸ் 2: இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள்: பிளஸ் 2 பொதுத்தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதையடுத்து, இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,048 ஆக அதிகரித்துள்ளது. பள்ளிகளின் மூலம் 8.01 லட்சம் பேரும், தனித்தேர்வர்களாக சுமார் 50 ஆயிரம் பேரும் என மொத்தமாக 8.51 லட்சம் பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். கடந்த ஆண்டைவிட சுமார் 30 ஆயிரம் பேர் இந்த ஆண்டு கூடுதலாக பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு 1,974 தேர்வு மையங்களில் 8.22 லட்சம் பேர் எழுதினர். இந்த ஆண்டு சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகத் தேர்வு எழுதுவதையொட்டி, தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக அரசுத் தேர்வுகள் துறை பரிசீலித்தது. பரிசீலனைக்குப் பிறகு கூடுதலாக 70 தேர்வு மையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிய தேர்வு மையங்களுக்கு அனுமதி வழங்கும்போது அரசுப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. ப
10ம் வகுப்பு தனித்தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் முடிவுகள், இன்று, தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஆண்டு, அக்டோபரில் நடந்த தனித்தேர்வை எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த தேர்வர்களின் முடிவுகள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று (ஜனவரி 31) வெளியிடப்படும். மதிப்பெண்களில் மாற்றம் உள்ள தேர்வர்களுக்கு, புதிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்குவது குறித்து, விரைவில், தபால் வழியாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர்  
இராமநாதபுரம் மாவட்டத்தில் 5 அரசு பள்ளிகளை மூட முடிவு - இதற்கு பதிலாக 10 ஆங்கில வழி பள்ளிகளை புதியதாக திறக்க திட்டம்: தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மாணவர்களை உருவாக்க, தீவிர முயற்சி! பத்திற்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை ஆரம்பிக்கவும், கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருவாடானை ஒன்றியத்தில் 117 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் குழந்தைகளை சேர்ப்பதில், இப்பகுதி மக்களுக்கு ஆர்வம் இல்லை. இதனால் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர். கலியணி கிராமத்தில் குழந்தைகள் சேராததால் இங்குள்ள ஒன்றிய துவக்கப்பள்ளி, கடந்தாண்டு மூடப்பட்டது. பிள்ளையாரேந்தல் ஒன்றிய துவக்கப்பள்ளியில் 7, கீழ்க்குடியில் 2, காட்டியனேந்தலில் 4, கீழக்கோட்டையில் 2, கிளியூரில் ஒன்று என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளையும் விரைவில் மூடவும், ஆசிரியர்களை
10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்-தேர்வுத்துறை : பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, செய்முறைத் தேர்வு நடக்கும் தேதியை, நேற்று வரை, தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியர் மத்தியில், குழப்பம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பை பொறுத்த வரை, தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவியரும், அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதனால், செய்முறைத் தேர்வு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தேர்வுத்துறை வட்டாரத்தினர் கூறுகையில், "பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு, இன்னும் தேதி முடிவு செய்யவில்லை. பிப்ரவரி இறுதிக்குக்குள், செய்முறைத் தேர்வு, நடத்தி முடிக்கப்படும். இதற்கான தேதிகளை, ஓரிரு நாளில் அறிவிப்போம்" என, தெரிவித்தனர்.
தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி:பொது தேர்வில் தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம்-   தினமலர்  அனைவருக்கும் கல்வி இயக்ககம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககத்தின் சார்பில், பிப்ரவரி மாதத்தில், ஆசிரியர்களுக்கு தொடர்ந்து, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதனால், நடப்பு கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் கல்வி இயக்ககமும்; ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்ககமும்; கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் கீழ், ஆண்டுக்கு, 15 நாள் வரை, அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்படும்.மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்த்து இருந்ததால், நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் தருணத்தில், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மாணவர்களின் விவரங்களை, "ஆன்-லைனில்' பதிவேற்றம் செய்யும் பணிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஒன்றிரண்டு ஆசிரியர்கள் ஈடுபட்டு வரு
தமிழகத்தில் 10000க்கும் மேற்பட்ட பணி இடங்களை நிரப்ப TNPSC தேர்வு கால அட்டவணை வெளியிட்டது: TNPSC ANNUAL RECRUITMENT PLANNER 2012-2013   தமிழகத்தில், பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான, தேர்வு அட்டவணையை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு, பல்வேறு அரசு துறைகளுக்கு, 18 ஆயிரத்து, 244 பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்ந்தெடுத்தது.இந்த ஆண்டு, 27 அரசு துறைகளில், 35 பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களில், 10 ஆயிரத்து, 105 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை நடத்த உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டு, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறியதாவது: மருத்துவத் துறையில், உதவி அறுவை மருத்துவர் - 2,800; கால்நடை உதவி அறுவை மருத்துவர் - 921; இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் - 2,716; வி.ஏ.ஓ., - 1,500 உள்ளிட்ட, 10 ஆயிரத்து, 105 பணியிடங்களுக்கு, இந்
RMSA மூலம் பணி நியமணம் பெற்ற  6000 ஆசிரியர்களுக்கு டிசம்பர் மாதம் சம்பளம் வழங்க தாமதம்: புதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000 ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி திட்ட நிதி - ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் இருந்து, சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஆண்டு, டிச., 13ம் தேதி, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் என, 21 ஆயிரம் ஆசிரியர்கள், புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், 6,000 பட்டதாரி ஆசிரியர் தவிர, மற்ற அனைவருக்கும், டிசம்பர் மாதத்தில், பாதி நாள் சம்பளம் வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கப்படவில்லை என, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரத்தினர் கூறுகையில், "இவர்களுக்கு சம்பளம் வழங்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். இதனால், சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில், அனைவருக்கும், சம்பளம் வழங்கப்படும்" என்றனர்.
10,12 ஆம் வகுப்பு P.T.A புத்தகம் மாவட்ட தலை நகரங்களில் விற்க அரசு ஆவணை செய்யுமா? பத்தாம் வகுப்பு வினா வங்கி புத்தகம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழக அலுவலகத்தில், விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மாநிலத்தின் கடைகோடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், சென்னைக்கு படை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், மாநில பெற்றோர்- ஆசிரியர் கழகம், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்காக, வினா வங்கி புத்தகங்களை தயாரித்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது. பாடப் புத்தகங்களை தயாரித்த ஆசிரியர் குழுவினரே, வினா வங்கி புத்தகங்களையும் தயாரித்து வழங்குவதால், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியருக்கு, இந்த புத்தகம், சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது. பிளஸ் 2 வினா வங்கி புத்தகங்கள், தொடர்ந்து பல மாதங்களாக விற்பனை செய்யப்படுவதால், இந்த புத்தகங்களை வாங்க, அதிகளவில் கூட்டம் இல்லை. ஆனால், 10ம் வகுப்பு வினா வங்கி புத்தகங்கள், சமீபத்தில் அச்சடிக்கப்பட்டு, கடந்த வாரத்தில் இருந்து, வி
உயர்நிலை /மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான தனித்திறன் போட்டிகள் பிப்ரவரி1 மற்றும் 2 ல் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறுகிறது: பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 75244 /எம் /இ 2/நாள் 16.12.2012. மேலும் விபரம் அறிய .....
தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்-அதிகம் வசூலித்த பள்ளிகள் பெற்றோரிடம் திரும்ப தர வேண்டும்: புதிய கட்டண நிர்ணயம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 536 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. தனியார் பள்ளிகளிடம் பிப்ரவரி 15-ம் தேதிக்குப் பிறகு விசாரணை தொடங்கும் என்று குழு வட்டாரங்கள் தெரிவித்தன. நாளொன்றுக்கு 40 பள்ளிகள் வீதம் நேரில் விசாரணை நடத்தி, கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு 2010-11-ம் கல்வியாண்டில் 10,935 தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த 6,400 பள்ளிகளுக்கு அதற்கடுத்த ஆண்டில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு மட்டுமே இந்தக் கட்டண நிர்ணயம் பொருந்தும் என்பதால் வரும் 2013-14-ம் கல்வியாண்டுக்கு புதிய கட்டண விகிதங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். புதிய கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கான பணிகளை நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையிலான குழு தொடங்கியுள்ளது. இந்தப் பணிகள் தொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியது: முதல் கட்டமாக 12,
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1168 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு பிப்-8க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களில் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவ மாணவியர்களுக்கு அவர்கள் பட்ட, பட்டியப் படிப்பு முடிக்கும் வரையிலும் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக பயின்று தேர்வு எழுதிய பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களில் 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மற்றும் 1168 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவிகள் ஆகியோருக்கு பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. இதையொட்டி மாணவ, மாணவியர் தங்களது மதிப்பெண் சான்று, ஜாதிச் சான்று மற்றும் தற்போது பயிலும் கல்லூரியில் இருந்து பெறப்பட்ட போனோஃபைட் சான்று ஆகியவற்றின் நகல்களு
பணிவரன் முறை ஊதியத்திற்க்காக காத்திருக்கும் புதிய ஆசிரியர்கள் : புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின், சான்றிதழை சரிபார்த்து அனுப்புவதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் இழுத்தடிப்பதால், பணி வரன்முறை ஊதியம் பெற முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். கல்வித் துறையில், தொடக்க, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு, இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, டிகிரி சான்றிதழ், சம்பந்தப்பட்ட பல்கலைக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ், மாநில தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கும் அனுப்பப்படுகின்றன. பல்கலை அளவில் அனுப்பப்படும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, உடனே அனுப்பப்படுகிறது. ஆனால், தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பப்படும் சான்றிதழ்கள், இழுத்தடித்து வழங்கப்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் பணி வரன்முறை செய்வதில், தாமத நிலை நீடிக்கிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் இன்றி அவதிப்படுகின்றனர். இவற்றை பெற விரும்பும் ஆசிரியர்கள், செலவு செய்து, சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, 10ம் வக
மாணவர்களின் விபரங்களை பதிவு செய்ய இணையதள மையத்தில் குவியும் தலைமை ஆசிரியர்கள்: ஸ்மார்ட் கார்டு பணிகளுக்காக, மாணவர்களின் விவரங்களை, ஆன்-லைனில் பதிவு செய்ய, தனியார் இணையதள மையங்களுக்கு தலைமையாசிரியர்கள் படையெடுத்து வருகின்றனர்.  மாணவர்களின் அனைத்து விவரங்கள் கொண்ட, ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. ஒன்று முதல், பிளஸ் 2 வரை, 80 லட்சம் மாணவர்களுக்கு கார்டுகள் தயாராகின்றன. மாணவர்களின் விவரங்களை சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் விவரங்களை சேகரித்து, கல்வித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மாணவர் விவரங்கள் கொண்ட விண்ணப்பங்களுடன், போட்டோக்களையும், ஸ்கேன் செய்து, கல்வி துறை ஆன்-லைனில், அப்டேட் செய்ய, தலைமையாசிரியர்களுக்கு, தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணியை, வரும் 31க்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு, அனைத்து மாவட்டங்களிலும், தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு வாரங்களுக்கு நீட்டித்து, கல்வி துறை உத்தரவிட்டது. ஆன்-லைன் பதிவு குறித்து, தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
+1முழு ஆண்டுத்தேர்வு தேதி அறிவிப்பு -பள்ளிக்கல்வித்த்துறை: பிளஸ் 1 மாணவர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மார்ச் 5ம் தேதி துவங்கும் தேர்வானது, மார்ச் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. தேதி வாரியான விபரங்கள் மார்ச்  5 - தமிழ் முதல் தாள் மார்ச்  8 - தமிழ் இரண்டாம் தாள் மார்ச் 12 - ஆங்கிலம் முதல் தாள் மார்ச் 13 - ஆங்கிலம் இரண்டாம் தாள் மார்ச் 19 - இயற்பியல் / பொருளியல் மார்ச் 20 - கணினி அறிவியல் மார்ச் 22 - வேதியியல் / கணக்கியல் மார்ச் 26 - கணிதம் / வணிகக் கணிதம் மார்ச் 28 - உயிரியல் / வணிகவியல் இத்தேர்வுகள் அனைத்தும், பிற்பகல் 1.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகள்: உலகின் புகழ்பெற்ற பல்கலைகளில் ஒன்றாக சிங்கப்பூர் தேசிய பல்கலை, தான் வழங்கும் பல்வேறான இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்குமாறு மாணவர்களை கேட்டுக் கொள்கிறது. இந்திய தரநிலையில் 12ம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது இந்த 2013ம் ஆண்டில் 12ம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதவுள்ளவர்கள் மற்றும் அதற்கு இணையான சர்வதேச அளவிலான பள்ளிக் கல்வித் தகுதியை வைத்திருப்பவர்கள் www.nus.edu.sg/admissions/undergrad என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தாண்டு இறுதித் தேர்வு எழுதவுள்ள 12ம் வகுப்பு மாணவர்கள், சமீபத்தில் நடைபெற்ற தேர்வின் முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும். IB தகுதியுடையவர்கள், விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி பிப்ரவரி 21. இந்திய 12ம் வகுப்பு தகுதி உடையவர்களுக்கான கடைசித் தேதி மார்ச் 31. பிறவகை தகுதியுடையவர்களுக்கு பிப்ரவரி 28 கடைசித் தேதி. அனைத்து வகையான விரிவான விபரங்களுக்கும் www.askadmissions.nus.edu.sg என்ற வலைத்தளம் செல்க.
தமிழகத்தில் புதியதாக பொறியல்,பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு உத்தரவு: தமிழகத்தின் பல மாவட்டங்களில், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகள் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் அவர்கள்  உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகிய இடங்களில், அரசு சார்பில் புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றுக்கு, ரூ.179.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா ரூ.14.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மதுரை, திருச்சி, தேனி மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மொத்தம் 10 பாலிடெக்னிக்குகள் அமைக்க ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மைத் துறையை இயந்திரமயப்படுத்தும் அரசின் முயற்சியை மேம்படுத்தும் வகையில், 300 கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தல் மற்றும் பராமரித்தல் குறித்து பயிற்சியளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, கோவை, மதுரை, வேலூர், திருச்சி, திருவாரூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண் பொறியியல் த
அங்கன்வாடி குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கிட  ரூ 3.59 கோடி ஒதுக்கீடு : அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அங்கன்வாடி மையங்களுக்கு, 3.59 கோடி ரூபாய் செலவில், பாடம் சம்பந்தப்பட்ட விளையாட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழி கற்றல் முறையும், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் கல்வி முறையும் அமல்படுத்தப்படுகிறது. செயல்வழிக்கற்றல் முறையில், மாணவர்கள் தாமாகவே கற்றுக்கொள்ளும் வகையில், கல்விமுறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இதில் மழலையருக்கான முன்பருவ கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில், அங்கன்வாடி மையங்களிலும் செயல்வழிக்கற்றல் கல்வி முறையில் விளையாட்டு உபகரணங்களை கொண்டு, கற்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், 160 அங்கன்வாடி மையம் வீதம், தமிழகம் முழுவதும், 4,800 அங்கன்வாடி மையங்களுக்கு, தலா, 7,485 ரூபாய் வீதம், 3.59 கோடி ரூபாய்க்கு, விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தமிழக அரசு
"ஆசிரியர் பணி அறப்பணி அதற்க்கு உன்னை அர்பணி " 8 ஆண்டுகளாக விடுப்பு இல்லை - அரசு பள்ளி ஆசிரியை சாதனை : அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும் ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு. இவர், கடந்த 8 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு செல்வதோடு, தன் துறையில் சிறந்த தேர்ச்சி விகிதத்தையும் தக்க வைத்து, அசத்தலான சாதனை படைத்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையை சேர்ந்த இவர் 2004ம் ஆண்டு முதல் வேளச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் விலங்கியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 7:45 முதல் 8:00 மணிக்குள் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து ஆசிரியை சசிகலா கூறியதாவது: நான் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே விடுப்பு எடுப்பது என்பது அரிதுதான். இதை ஒரு சாதனையாக நான் எப்போதும் கருதியது கிடையாது. கடமையாகவே நினைக்கிறேன். அதிலும், அரசு பள்ளி ஆசிரியை என்பதால் கூடுதல் பொறுப்பு உள்ளதாக நினைக்கிறேன். தினமும் அதிகாலை 5:00 மணிக்கே எனக்கு நாள் பணி துவங்கிவிடும். காய்ச்சல் வந்த போது,
கற்பித்தலில்தான் கணிதமும் இனிக்கும் - கணிதமும் ஒரு எளிமையான பாடம்தான் : வாழ்க்கையில் எல்லாமே ஒரு கணக்கு தான். இசை கூட ஒரு கணக்கின் அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆனால் இந்த கணக்கு பாடம் மட்டும் பெரும்பாலோருக்கு கசக்கும் மருந்தாகி விடுகிறதே ஏன்? இன்றைய கணித பாட திட்டங்கள் எல்லாமே தலையைச் சுற்றி மூக்கை தொடுவதாக உள்ளன. கற்பிக்க கூடிய விதத்தில் கற்பித்தால், கணிதமும் இனிக்கும்&' என்கிறார், கணித பேராசிரியர் சிவராமன். அவரோடு உரையாடியதில் இருந்து... கணித பாடத்தை எளிமைப்படுத்துவது எப்படி? முறையான கற்பித்தல் இல்லாததால், பல மாணவர்களுக்கு கணிதம் கசக்கத்தான் செய்கிறது. கணிதத்தை காட்சிப்படுத்தி புரிய வைக்க வேண்டும். சாதாரண பெருக்கல், கூட்டல், கழித்தல் தெரியாமல், பல அரசு பள்ளி மாணவர்கள் ஆரம்ப பள்ளியை, முடித்து விடுகின்றனர். காரணம், மனப்பாடம் செய்யும் முறை தான். இரண்டு எண்களை பெருக்க, ஒரே வழியை தான் மாணவர்களுக்கு கற்று தருகிறோம். உதாரணமாக 22=4. இதை தவிர ஆறு முறைகளில் எளிய பெருக்கலை கற்று கொடுக்க முடியும். மேலும், கணிதத்தை மாதிரிகள் கொண்டு, வடிவங்களை உருவ
அனைத்து பல்கலைக்கழகத்திலும் ஒரே பாடத்திட்டம்-வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்: அனைத்துக் கல்லூரிகளிலும், ஒரே பாடத் திட்டத்தை அமல் செய்யும் முறை, வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான, பணிகளை, பல்கலைக் கழக பாடத் திட்டக் குழுக்கள் துவங்கியுள்ளன. தமிழகத்தில், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 10 பல்கலைக் கழகங்களில், பாடத் திட்ட வளர்ச்சி குழு அமைக்கப்பட உள்ளது. பல்கலைக்கழக பாடத் திட்டங்களை, உலக தரத்திற்கு உயர்த்துவதே, இக்குழுவின் நோக்கம். ஒரு பல்கலைக்கு, ஒரு கோடி என, 10 கோடி ரூபாய், இதற்காக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், சமூக அறிவியல், உயிரி அறிவியல், உயர் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கணினி மற்றும் வர்த்தக அறிவியல், இந்திய மொழி, அயல்நாட்டு மொழி உள்ளிட்ட, 10 துறைகளின் கீழ் உள்ள பாடத் திட்டங்களில், என்னென்ன மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து, இக்குழு ஆராயும். ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழு, இன்றைய வேலை வாய்ப்புகளுக்கேற்ப, பாடத் திட்டத்தில் கொண்டு வ
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவ/மாணவியர்களின்  விபரங்களை இணையதளத்தில் பதிய பிரவரி 15 வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது: மாணவ, மாணவியரின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு, அவகாசத்தை நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் விவரங்களை உள்ளடக்கி, "கல்வி நிர்வாக தகவல் கட்டமைப்பை" உருவாக்க, கல்வித்துறை, நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தகவல்களின் அடிப்படையில், பல திட்டங்களை செயல்படுத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, அவர்களின் பெயர்கள், வகுப்பு, பிரிவு, தாய், தந்தை பெயர், வீட்டு முகவரி, தந்தையின் தொழில், குடும்ப வருவாய் என, பல விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்தப் பணி, கடந்த ஒரு வாரமாக, மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. கல்வித்துறை வழங்கியுள்ள பிரத்யேக இணையதளத்தில் , விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என, பள்ளி நிர்வாக
புதியதாக ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிரவரி 1முதல் பாடவாரியாக பயிற்சி: தமிழகத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு 311 மையங்களில் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது. தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 29 ஆயிரத்து 176 பட்டதாரி ஆசிரியர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில் முதற்கட்டமாக கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுவான பயிற்சி நடந்தது. தற்போது 2ம் கட்டமாக பாட வாரியாக அனைத்து மாவட்டங்களிலும் நான்கு நாட்கள் பயிற்சி முகாம் நடக்கிறது. தமிழ் பாட ஆசிரியர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 6,7,18 மற்றும் 19ம் தேதிகளிலும், ஆங்கில பாடத்தில் பிப்ரவரி மாதம் 8, 9, 20 மற்றும் 21ம் தேதிகளிலும், கணித பாடத்தில் பிப்ரவரி மாதம் 4, 5, 15 மற்றும் 16ம் தேதிகளிலும் இப்பயிற்சி நடக்கிறது. அறிவியல் பாடத்தில் பிப்ரவரி மாதம் 1, 2, 13 மற்றும் 14ம் தேதிகளிலும், சமூக அறிவியல்
34 ஆண்டுகளாக பதவி உயர்வில்லாமல் மன வேதனையில் தவிக்கும் தொழில் ஆசிரியர்கள்: கல்வித்துறையில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர்கள் பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியர்களாக வரும் நிலையில், 34 ஆண்டுகளாக அனைத்து தகுதியுடன் பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி மன உளைச்சலில் உள்ளனர். தமிழகத்தில் 1978ல் மேல்நிலை பள்ளி முறை துவங்கிய போது, பல தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 1986ம் ஆண்டு முதல் மேல்நிலை பள்ளிகளில் கம்ப்யூட்டர் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது, 500க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கை பதவி உயர்வு. இதை, கல்வி துறை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இவர்களில் வணிகவியல் ஆசிரியர்களை மட்டும், கடந்த ஆட்சியில் பதவி உயர்வு கொடுத்துவிட்டு, மற்ற ஆசிரியர்களை கண்டுகொள்ளவில்லை. தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில செயல் தலைவர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: முதன்மை கல்வி அலுவலகத்தில் வாட்ச்மேன் அல்லது அலுவலக உதவியாளராக பணியில் சேருபவர், தபால் மூலம் ப
பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு: RESULT CLIC K HER E தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள, கல்வியியல் கல்லூரிகளுக்கான, பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வு, கடந்த டிசம்பரில் நடந்தது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று, வெளியிடப்படுகிறது. இதை www.tnteu.in என்ற, இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். தேர்வில் தவறியவர்கள், மே, ஜூனில் நடைபெறும் தேர்விற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணையதளம் மற்றும் அவரவர் பயின்ற கல்லூரிகளின், முதல்வரிடம் பெற்று, பூர்த்தி செய்து, கல்லூரிகள் வாயிலாக, பிப்ரவரி 4ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.  
ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் விளக்கமளிக்கும் இணையதளம் :                          http://www.wordhippo.com ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் பல விளக்கமளிக்க ஓர் இணையதளம் உள்ளது. இந்த இணையதளம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ஒரு சொல்லைத் தேர்வு செய்து, அந்த சொல்லிற்கு இணையாக வேறு என்ன சொற்களெல்லாம் இருக்கின்றன? இந்த சொல்லிற்கு எதிர்சொற்கள் (Opposite Word)என்னென்ன இருக்கின்றன? அந்த சொல்லைக் கொண்டு எப்படியெல்லாம் வாக்கியங்கள் (Sentense) அமைக்கலாம்? அந்த சொல்லுக்கு இணையாக (டச்சு - Dutch), (பிரெஞ்ச் - French), (ஜெர்மன் - German), (இத்தாலி - Italian), (போர்ச்சுக்கீசு -  Portuguese), (ஸ்பானிஷ் - Spanish) போன்ற மொழிகளுக்கு மாற்றம் (Translate)செய்து வரும் சொற்கள், இந்த மொழிகளில், குறிப்பிட்ட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்தால் வரும் சொற்கள், ஒரு சொல்லுக்கு (பன்மைச் சொல் வடிவம் -Plural), (கடந்த காலம் -Past Tense), சொல் அல்லது( நிகழ் காலம் - Present Tense)சொல் என்ன? ஆங்கிலத்திலிருக்கும் அனைத்துச் சொற்களையும் கண்டறியும் வசதி, 2
11,12 ஆம் வகுப்பு பாடபுத்தகங்கள் அடுத்தாண்டு மாற்றப்படுவதால் அதற்கான மாதிரி பாடங்கள் பிப்ரவரி 13ல் இணையதளத்தில் வெளியிடப்படும்: அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு, புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், தற்காலிக வரைவு பாடத் திட்டங்கள், பிப்., 13ம் தேதி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, பாடத் திட்டங்களை மாற்றி, அவ்வப்போதைய கால கட்டத்திற்கு ஏற்றார் போல், புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தற்போதுள்ள பாடத் திட்டங்கள் அறிமுகமாகி, ஆறு ஆண்டுகள் ஆகின்றன. எனவே, வரலாறு, அறிவியல், தொழில்துறை, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில், புதிய பாடத் திட்டங்களை உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டது. பாட வாரியாக, தனித்தனி நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்டில், முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிற்கும், பல்வேறு பல்கலைகளைச் சேர்ந்த பே
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2013 NOMINAL ROLL ONLINE UPDATE தேதி வரும் 28.01.2013 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது: Respected Sir / Madam, The Nominal Roll data for the forthcoming SSLC 2013 examinations has been collecting through online from the respective schools. During the Video Conferencing held on 28.12.2012, the deadline for the collection of Nominal Roll data through online is fixed on 23.1.2013. On reviewing the data, it was found that some schools have uploaded the data partially. To receive the entire data, the date has been extended upto 28.1.2013. Therefore, all the CEOs and DEOs are hereby informed to give suitable instructions to the respective schools to upload all the data including photo till 28.1.2013 without fail. for Director Government Examinations Chennai For Further Details Contact: 9551772495, 9551772496, 9551772497
தமிழக அரசு /அரசு உதவிபெறும்  பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பிரவரி முதல் வாரத்தில் பல் பரிசோதனை முகாம் -சுகாதாரத்துறை அறிவிப்பு: அரசு பள்ளி மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கு, பல் சம்பந்தமான நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இவர்களுக்கு, பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்க, சுகாதார துறை திட்டமிட்டுள்ளது. கடந்த, 2011ம் ஆண்டு, மாவட்டத்திற்கு, ஒரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து, அவற்றில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின், மாணவ, மாணவியருக்கு, பொது சுகாதார துறை, பல் பரிசோதனை முகாம் நடத்தியது. அதில், 40 சதவீத மாணவர்களுக்கு, பல் சம்பந்தமான நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும், மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான, பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாமை, பொது சுகாதார துறை, அடுத்த மாதம் துவக்க உள்ளது. இதுகுறித்து, இத்துறையின் கல்வி பிரிவு இணை இயக்குனர் வடிவேலன் கூறியதாவது: இனிப்பு பண்டங்களை அதிகளவில் உட்கொள்வது; முறையாக பல் துலக்காதது போன்ற காரணங்க