Skip to main content

Posts

Showing posts from February, 2013
+2 தேர்வு  எழுதும் மையங்களுக்கு மின் தடையில் இருந்து விளக்கு -தமிழக மின்சாரத்துறை ஏற்பாடு: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர், மின்தடையின்றி தேர்வெழுத, தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று  துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு ரூ.5,284 கோடி! மத்திய அரசின் சார்பாக, நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கு, பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்தாண்டும் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. SC/ST, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அனைத்து மாணவிகள் ஆகியோருக்கான, பல்வேறு உதவித்தொகை திட்டங்களுக்காக, 2013-14ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், ரூ.5,284 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  
அனைத்திலும் நிறைந்தது அறிவியலே-பிப்ரவரி 28 உலக அறிவியல் தினம் : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது. இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும். அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும். எந்த நாகரிகத்துக்கும் முன்னோடி அறிவியல் தான். கற்காலத்திலும் கூட, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள அறிவியலை மனிதர்கள் பயன்படுத்தினர். கற்களை உரசி நெருப்பை உண்டாக்கினர்; கற்களை கூர்மையாக்கி ஆயுதங்களாக்கினர். கம்ப்யூட்டர் முதல் 3ஜி மொபைல் போன், புதிய வாகனங்கள், விவசாயத்தில் நவீனம், மரபணு மாற்றம், டெஸ்ட் டியூப் குழந்தை, நவீன ராக்கெட்டுகள், செயற்கைகோள்கள் வரை, ஒவ்வொரு நாளும் ஒரு கண்டுபிடிப்பு உருவாகிறது. வளரும் தொழில்நுட்பத்தி
சிறந்த பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு நிதி-மத்திய பட்ஜெட்  மத்திய பட்ஜெட்டில், அலிகார் முஸ்லீம் பல்கலை, பனாரஸ் இந்து பல்கலை உள்ளிட்ட 4 கல்வி நிறுவனங்களுக்கு தலா ரூ.100 கோடி ஒதுக்கி, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்கள் என்ற வகையில், உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அலிகார் முஸ்லீம்லீக் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், குவஹாத்தியிலுள்ள சமூக அறிவியலுக்கான டாடா கல்வி நிறுவனம், டெல்லியிலுள்ள கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்தியன் நேஷனல் டிரஸ்ட் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு, தலா ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் - மனிதவளத் துறைக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு!  இந்த 2013-14ம் நிதியாண்டிற்காக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், கல்விக்காக, கடந்தாண்டைவிட கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவளத் துறைக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி என்பது அரசின் உயர்ந்தபட்ச முக்கியத்துவத்தைப் பெற்ற துறையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 2013-14ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட், நாட்டு இளைஞர்கள், கல்வியையும், திறன்களையும் பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, அவர்கள் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற்று, அதன்மூலம் போதுமான வருமானத்தையும், ஒரு பாதுகாப்பான நல்ல வாழ்க்கையை பெறும் நோக்கத்தையும் கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. கல்விக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி விபரங்கள் * மத்திய மனிதவளத் துறைக்கு, ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட, 17% அதிகம். * சர்வ சிக்ஷா அபியான்(SSA) திட்டத்திற்கு ரூ.27,258 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. * மேலும், ராஷ்ட்ரிய மத்யமிக் சிக்ஷா அபியான்(RMSA) திட்டத்திற்கு, ரூ.3,983 கோடிகள் ஒதுக்க
கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வரப்போகுது "ஸ்கைப்" வசதி : கோவை மாநகராட்சியில், ஐந்து மண்டலத்தில் தலா ஒரு பள்ளியை தேர்வு செய்து, "ஸ்கைப் கால்" மற்றும் "டிஜிட்டல் ஸ்டோரி" திட்டத்தை நடைமுறைபடுத்த மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி மற்றும் "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் டிஜிட்டல் ஈகுவலைசர் புரோகிராம்" இணைந்து, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கிறது. இரண்டாம் கட்டமாக, சமச்சீர் கல்வி திட்டத்தில் குறிப்பிட்ட பாடங்களை, "டிஜிட்டலைஸ்" முறையில், மாணவர்களுக்கு கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம், ஒவ்வொரு பாடத்திலும் குறிப்பிட்ட தலைப்புகள் "டிஜிட்டல்&' முறையில் போதிக்கப்பட்டன. கோவை மாநகராட்சியில், கடந்தாண்டு மே 31ம் தேதி, இத்திட்டம் துவங்கப்பட்டது. ஓராண்டு நிறைவடையும் நிலையில், திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், கம்ப்யூட்டர் மயமான செயல்வழி கற்றல் பாடத்திட
குரூப்-4: 2,899 இடங்களை நிரப்ப தேர்வாணையம் அறிவிப்பு : குரூப்-4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை துவங்கி, மார்ச், 4ம் தேதி வரை நடைபெறும்; இதில், 2,899 இடங்கள் நிரப்பப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக்கு, ஏற்கனவே, 3,485 பேர், பல்வேறு துறைகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டனர். மீதமுள்ள, 2,899 இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை துவங்கி, மார்ச் 1, 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில், தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கும். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் விவரங்கள்,  www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் இட்ட, இரண்டு செட் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். 10ம் வகுப்பை, தமிழ் வழியில் படித்ததாக உரிமை கோரும் தேர்வர்கள், சம்பந்தபட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம், சான்றிதழ் பெற்று வர வேண்டும். இவ்வாறு செயலர் தெரிவித்து உள்ளார்.  
கல்வி துறையில் எகிறும் செலவினம்: எதிர்பார்ப்புகளை நிறைவேறுமா? தினமலர்  மாநிலம் முழுவதும், 55 ஆயிரம் பள்ளிகள், 1.35 கோடி மாணவ, மாணவியர் உள்ளனர். இவர்களுக்கு, கல்வி கற்பிக்கும் பணியில், 5.5 லட்சம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, ஆண்டுதோறும், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு, ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. கடந்த நிதி ஆண்டில், 14,552 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் பட்ஜெட்டில், இது, 16 ஆயிரம் கோடியை தாண்டலாம். இத்தனை கோடிகளை, மக்களின் வரிப் பணத்தில் இருந்து, செலவழித்த போதும், இதில் பெருமளவு நிதி, அதிகாரிகள், ஊழியர் சம்பளத்தில் தான் கரைகிறது. கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளம், நாள் ஒன்றுக்கு மட்டும், 25.55 கோடி ரூபாய்! மாதத்திற்கு எவ்வளவு, ஆண்டுக்கு எவ்வளவு என்பதை, கணக்குப் போட்டு பார்த்துக் கொள்ளலாம். சம்பளம் போக, மீதம் உள்ள சொற்ப நிதியுடன், மத்திய அரசு வழங்கும் நிதி உதவியுடன், பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள், கூடுதல் கட்டடங்கள், புதிய பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்
தேர்வு நேரத்தில் ஜெனரேட்டர் நிதி கேட்டு அதிகாரிகள் கடிதம்: மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் துவங்குகின்றன. மின்வெட்டை சமாளிக்க, தேர்வு மையங்களில், ஜெனரேட்டர் உபயோகத்திற்கான நிதி கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். மின்வெட்டை சமாளிக்க, தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் பயன்படுத்த, அரசு, ஏற்கனவே உத்தரவிட்டது. கல்வி மாவட்டம் வாரியாக, தேர்வு மையங்களை கணக்கிட்டு, ஜெனரேட்டர் ஏற்பாடு செய்ய, பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதற்கான நிதி கேட்டு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "அரசின் உத்தரவுப்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு, ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கிராமப்புற மையங்களுக்கு ஜெனரேட்டர் எடுத்துச் செல்வதால், கூடுதல் செலவாகும். பள்ளிக்கல்வித் துறையில் இருந்து நிதி வர தாமதமாகும் பட்சத்தில், பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளோம்" என்றனர்.  
நாளை முதல் +2 பொதுத்தேர்வு 8.5 ல ட் சம் மாணவ மாணவியர்கள் எழுதுகின்றனர்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை மறுநாள், துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு எழுதுகின்றனர். தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும், தேர்வுத்துறை முழுவீச்சில் முடித்து, தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வை, 7.56 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர். இந்த ஆண்டு, 49 ஆயிரம் பேர் கூடுதலாக எழுதுகின்றனர். இவர்களுடன், தனித்தேர்வு மாணவர், 45 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர். பள்ளி மற்றும் தனித்தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து, 8.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 2,044 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன. கடந்த, 20ம் தேதி, தாலுகா தலைமையிடம் வாரியாக, கேள்வித்தாள் கட்டுகள், பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட மையங்களில், 24 மணிநேர போலீஸ் பாதுகாப்புடன், கேள்வித்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு, 30 பறக்கும் படை குழுக்கள் வீதம், 32 மாவட்டங்களிலும், 960 பறக்கும் படை குழுக்கள் அமைக்க
மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள்: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைப்பது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டில் 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன. முதலில் 14 பள்ளிகளில் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் கோரியவர்களிடம் தகுந்த வசதிகள் இல்லாததால் டெண்டர் நிராகரிக்கப்பட்டது. பின்னர் எல்காட் நிறுவனம் மூலம் "ஸ்மார்ட்' வகுப்பறைகள் கொண்ட சென்னைப் பள்ளிகளை 5 ஆண்டுகளுக்கு இயக்க தோராய மதிப்பு பெறப்பட்டது. இதன்படி ஒரு பள்ளிக்கு ரூ. 5.76 லட்சம் செலவாகும். மொத்தம் 14 பள்ளிகளுக்கு ரூ. 80.65 லட்சம் செலவாகும். ஒப்பந்த காலம் முடிந்தவுடன் ஸ்மார்ட் வகுப்பறைகளை பள்ளிகளுக்கே ஒப்படைக்க வேண்டும். எனவே "ஸ்மார்ட்' வகுப்பறை வசதியை எல்காட் நிறுவனம்
1 முதல் 8வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு கணித ஆர்வத்தை மிகை படுத்த புதிய இணையதளம்: உங்களின் குழந்தைகள் கணித திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேகமான இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிப்புக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான கணிதத்தை விளாயாட்டு வழியாகச் சொல்லிக் கொடுக்கும் இணையதளம் இது. இந்த இணையதளத்தில் கணித விளையாட்டுக்கள் (Math Games), சொல் கணக்குகள் (Word Problems). கணித விடுகதைகள் (Math Puzzles), கணித நிகழ்படம் (Math Videos) போன்ற தலைப்புகளின் கீழ் கணக்குகள் நிறைய உள்ளன. கணித விடுகதைகள் எனும் தலைப்பில் பண்ணாங்குழி(Mancala), நகரும் செங்கல்(Sliding Block), சுடோக்கு(Sudoku), மணிச்சட்டம்(Battleship), நாணய எடை(Coin Weighing), கியூப்(Cube), என்பது போன்ற 18 வழிமுறைகளின் கீழ் பல கணக்குகள் தரப்பட்டுள்ளன. இத
ஆறே மாதத்தில் பி.எட்., பட்டம் : பெரியார் பல்கலை பட்டத்தை நிராகரித்தது டி.ஆர்.பி. சேலம் பெரியார் பல்கலையில், ஆறே மாதத்தில் வழங்கப்பட்ட பி.எட்., பட்டத்தை, டி.ஆர்.பி., செல்லாது என, அறிவித்து, வேலைவாய்ப்பை மறுத்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள், நேற்று, பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டனர். சேலம் பெரியார் பல்கலையில், 2008ம் ஆண்டுக்கு முன் வரை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. 2008ம் ஆண்டு, கல்வியியல் பல்கலை துவக்கப்பட்டு, அதில் கல்வியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டன. கல்வியியல் பல்கலை அறிவிப்பு வரும் நேரத்தில், 2008 ஜன., மாதத்தில், 10க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகளுக்கு, பெரியார் பல்கலை இணைவு வழங்கியுள்ளது. அக்கல்லூரிகளில், உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும், சேர்க்கப்பட்ட மாணவர்களை, அதே ஆண்டு மே மாதத்தில் தேர்வெழுதவும் அனுமதித்துள்ளது. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆறே மாதத்தில் பட்டச்சான்றிதழையும் வழங்கியது. அந்த பேட்ஜ் படித்த மாணவர்களில் ஒருவரான பிரபு, டி.ஆர
CBSE பள்ளிகளில் மன அழுத்தத்தை போக்க உதவி மையம்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 1லிலும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 15லிலும் தொடங்குகிறது. இதனால் மாணவர்கள் தேர்வு பற்றிய மன அழுத்தம், உளவியல் பிரச்சனைக்கு ஆட்பட்டு இருப்பார்கள். இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம், 98118 96286 என்ற புதிய ஹெல்ப்லைனை தொடங்கியுள்ளது. இந்த ஹெல்ப்லைன், இம்மாதம் இறுதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பாட்டில் இருக்கும். இந்த ஹெல்ப்லைனில், தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம், தேர்வு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், பசியின்மை, தலைவலி, தேர்வு பயம் போன்ற அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.
குழு விவாதத்தில் எளிதாக வெற்றிபெறலாம் -பயனுள்ள வழிமுறைகள்: வேலை வழங்கும் நிறுவனங்கள், போட்டியாளர்களின் திறனை பரிசோதிக்க, குழு விவாதத்தை நடத்துகின்றன. இதன்மூலம் போட்டியாளர்களின் திறமையை, நிறுவனங்கள் கண்டு கொள்கின்றன. இதில் வெற்றி பெறுவது பெரிய விஷயம் இல்லை. பதட்டப்படாமல், தகவல் தொடர்புத்திறனில் கவனம் செலுத்தினாலே போதும். கூற வந்த கருத்தை எளிய வார்த்தைகளில், தெளிவாக எடுத்துரைத்தாலே நிறுவனங்களை கவர்ந்து விடலாம். பலருக்கும் குழு விவாதம் என்றாலே ஒரு வித பயம் இருக்கும். இது குறித்து சரியான புரிதல் இருந்தால் வெற்றி எளிது. * விவாதங்களில் 10 முதல் 12 போட்டியாளர்கள் வரை, ஒரே நேரத்தில் பங்கேற்பர். தரப்படும் தலைப்பில் கருத்துக்களை விவாதிக்க வேண்டும். 20 முதல் 25 நிமிடங்களுக்கு விவாதம் நடக்கும். இதில் போட்டியாளரின் பண்புகளும் பரிசோதிக்கப்படுகின்றன. * தற்போதைய வணிக, பொருளாதாரச் சூழலில் தேவைப்படும் டீம் ஸ்பிரிட் எனப்படும் குழு சார்ந்த குணாதிசயம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. டீம் லீடராக இருப்பவர், குழுவில் உள்ளவரை வழிநடத்தி, அரவணைத்துச் செல்லும் குணத்தைப் பெற்றிருப்பது அவசியம். ‘ஐடி’ துறை
புதிய பள்ளிக் கட்டடப் பணிகளில் நிதியின்றி இழுபறி! அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தில், நிதி பற்றாக்குறையால், 200 புதிய பள்ளிக் கட்டட பணிகள் நிறைவு பெறாமல், இழுபறியில் உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 2009-10 ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 200 பள்ளிகளில், புதிய வகுப்பறை கட்ட, தலா 49.67 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 11 ஆயிரம் சதுர அடியில், நான்கு வகுப்பறைகள், கம்ப்யூட்டர் அறை, ஆய்வக அறை, நூலகம், கைத்தொழில் அறை, தலைமையாசிரியர் அறை, அலுவலக அறைகள் கட்டப்பட வேண்டும். இடப்பற்றாக்குறை உள்ள இடங்களில், மாடிகளில் அறைகள் கட்டப்பட்டன. இப்பணிகள் அனைத்தும் பள்ளி கல்விக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், கட்டுமான பொருட்களான மணல், சிமென்ட், இரும்பு கம்பிகள், பணியாளர்கள் சம்பளம் என, அனைத்தும் பல மடங்கு உயர்ந்துள்ளது. பல இடங்களில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, பூச்சு வேலைகள், மேல் தளத்தில் தட்டு ஓடு பதிக்கும் பணிகள், எலக்ட்ரிக்கல், வண்ணம் தீட்டுதல் பணிகள், நிதியில்லாமல் பாதியில் நிற்கின்றன.
பள்ளிகளுக்கான அறிவியல் உபகரணங்கள் - தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி: D inamalar தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்(ஆர்.எம்.எஸ்.ஏ.,) ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் உபகரணங்களை, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்க, தலைமையாசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இத்திட்டம் சார்பில், 2009ம் ஆண்டு முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்காக, மானியம் ஒதுக்கப்படுகிறது. 2012-13 ம் ஆண்டிற்காக, மாநிலத்தில் சுமார் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு, ஆய்வக உபகரணங்கள், நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் அடிப்படை தேவைக்காக, ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் ஒதுக்கப்பட்டது. இதில், ரூ.25 ஆயிரத்திற்கான ஆய்வக உபகரணங்களை, சேலம் மாவட்டத்தில் உள்ள ஒருசில தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்குவதற்கு, தலைமையாசிரியர்களை அத்திட்ட அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். அந்த நிறுவனங்களில் வாங்கப்படும் உபகரணங்களின் மதிப்பு ரூ.7 ஆயிரம் கூட இருக்காது. அதற்காக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலைகளை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என, தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்
நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன்-உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தீர்ப்பு: நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், வங்கிகள், கல்விக்கடன் வழங்க வேண்டும்" என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சிவகாசி, சாட்சியாபுரம் நித்யா தாக்கல் செய்த மனு: கோவை கற்பகம் பல்கலையில், பி.இ., சிவில் இன்ஜினியரிங் படிக்கிறேன். சிவகாசி, பாங்க் ஆப் இந்தியா கிளையில், 4 லட்சம் ரூபாய் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்தேன். "நிர்வாக ஒதுக்கீட்டில், பொறியியல் கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு, இந்திய வங்கிகள் சங்க வழிகாட்டுதல்படி, கல்விக்கடன் வழங்க முடியாது" என, வங்கி நிர்வாகம் மறுத்தது. கல்விக்கடன் வழங்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு செய்தேன். மனுவை, வங்கி பரிசீலிக்க, ஐகோர்ட் உத்தரவிட்டது. கடன் வழங்காமல், வங்கி நிர்வாகம் தாமத படுத்துகிறது. கடன் வழங்க உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி கே.கே.சசிதரன் முன், மனு விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல் மாரிமுத்து ஆஜரானார். வங்கி தரப்பில், "நிர்வாக ஒதுக்கீட்டில் கல்வ
கல்வி என்பது வாழ்க்கை முழுவதும் தன்னை காப்பது ஆகும் -கலாம : கல்வி என்பது வாழ்க்கை முழுவதற்குமான செயல்பாடாக இருக்க வேண்டும் மற்றும் அது மூன்று அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். கற்பதற்கு கற்றுக்கொள்ளல், கொடுப்பதற்கு கற்றுக்கொள்ளல் மற்றும் வாழ்வதற்கு கற்றுக்கொள்ளல் போன்றவையே அந்த அம்சங்கள் என்று திங்க்எடு கான்கிளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம் பேசினார். இந்நிகழ்ச்சியை, த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தியது. தனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நடந்த சில சுவையான சம்பவங்களை கோடிட்டு காட்டிய கலாம், தனது முன்னேற்றத்தில், தன் ஆசிரியர்களின் பங்கினையும் நினைவு கூர்ந்தார். இந்திய குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்க, படைப்புத்திறன் ரீதியான பாடத்திட்டம், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறைகள் ஆகியவற்றை வலுவாக ஆதரித்தார். சிறந்த ஆசிரியர்களின் பரிணாமம் மற்றும் நல்ல கல்விமுறை ஆகியவை இப்போதைய அவசிய தேவை என்று குறிப்பிட்ட அவர், ஆசிரியர்களை நியமிக்கும் வழிமுறைகள் மாற வேண்டும் என்றார். ஆரம்பக் கல்வியில் செய்யப்படும் சிறந்த மாற்றமே, அனைத்து
தரம் உயரும் இந்திய தகவல் தொடர்பு கல்வி நிறுவனம்: ஊடகத்துறை சார்ந்த கல்வியை அளித்துவரும் இந்திய தகவல் தொடர்பு கல்வி நிறுவனம்(IIMC) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையமாக தரம் உயர்த்தப்பட இருக்கிறது. இந்தியாவில் ஊடகத்துறை சார்ந்த கல்வியை அளிப்பதில் Indian Institute of Mass Communication சிறந்து விளங்குகிறது. நாடு முழுவதும் 6 ஐஐஎம்சி கல்வி நிலையங்கள் உள்ளன. அவற்றில் வானொலி மற்றும் விளம்பரம், தொலைக்காட்சி ஊடகம் மற்றும் அச்சு ஊடகம் ஆகிய பட்டய படிப்புகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு வாய்ந்த இக்கல்வி நிலையத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையமாக (INI) தரம் உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அநேகமாக, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. ஐஎன்ஐ தரத்தினை பெற்றால், ஐஐஎம்சி யானது ஐஐடி கல்வி நிலையங்களுக்கு இணையான அந்தஸ்திற்கு உயர்த்தப்படும். ஐஐஎம்சியின் 6 கல்வி நிலையங்கள் டெல்லி, தென்கனல் (ஒடிஸா), அமராவதி (மகாராஸ்டிரா), ஐஸ்வால் (மிசோரம்), கோட்டயம் (கேரளா) மற்றும் ஜம்முவில் இயங்கி வருகின்றன. இவற்றில் சில கல்வி நிலையங்கள் வாடகைக் கட்டிடத்தில்
அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கணக்கெடுக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு : தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் என அனைத்து விவரங்களையும் கணக்கெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டும். மேலும் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியவற்றை கணக்கெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.  
மெட்ரிக் பள்ளி இயக்குனர் மாற்றம்-தமிழ் நாடு பாடநூல் கழக செயலரிடம்  கூடுதல் பொறுப்பு: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, விடுவிக்கப்பட்டார். பாடநூல் கழக செயலர் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் இயக்குனராக இருந்த செந்தமிழ்ச் செல்வி, டிசம்பரில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. விரைவில், பள்ளி பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன. இதனால், தேர்வுத்துறை இயக்குனர், தேர்வுப் பணிகளில், முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதை அறிந்து, அவரை, மெட்ரிக் இயக்குனர் பொறுப்பில் இருந்து, தமிழக அரசு விடுவித்துள்ளது. பாடநூல் கழக செயலராக இருக்கும் பிச்சையிடம், மெட்ரிக் இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.