அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் தேர்வு:
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் சார்பில் திண்டுக்கல் நகராட்சி நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், சிறந்த 10 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
பழைய வத்தலக்குண்டு அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபுசாரா எரிசக்தி, புளியமரத்துக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியின் ஆற்றல் சேமிப்பு, நரசிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆற்றல் சேமிப்பு ஆகிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பசுமை உலகம், நகராட்சி நேருஜி நினைவு மேல்நிலைப் பள்ளியின் விவசாயத்தில் நீர் சேமிப்பு ஆகிய படைப்புகளும், அம்மையநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் பிளாஷ்டிக் ஆற்றல், தெப்பத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியின் மின்சாரம், கோபால்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மின்னணுவியல், கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் உடல் நலம் பேணல், பாடியூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் மரபு சாரா எரிசக்தி ஆகிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.
ஒவ்வொரு படைப்புக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
Comments
Post a Comment