Skip to main content

Posts

Showing posts from March, 2014

ஆசிரியர் குடும்பங்களின் ஒரு லட்சம் ஓட்டுகள் கட்சிகளுக்கா, நோட்டோவுக்கா?

சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினரின், குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர், லோக்சபா தேர்தலில், 'நோட்டா'விற்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில், ஐந்தாவது சம்பள கமிஷன் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் 6,750 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9,000 ரூபாயாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு 10,500 ரூபாயாகவும் இருந்தது.இதன்பின் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை சம்பளம், 5,200 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சம்பளம், உரிய விகிதத்தில் அதிகரிக்கப்பட்டது. இதற்கு, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததாக, அப்போது காரணம் கூறப்பட்டது. ஆனால், தி.மு.க., ஆட்சியின் போது, மாநில அரசை எதிர்த்து, கோர்ட்டிற்கு சென்ற இடைநிலை ஆசிரியர்கள், 'மாநில மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்' என்ற கோர்ட் உத்தரவு பெற்றதற்காக, பழிவாங்கும் நோக்கில் சம்பளத்தில், 'கை' வைக்கப்பட்

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 4 முதன்மை கல்வி அலுவலர், 7 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர்கள் இன்று 31.03.2014 பிற்பகலில் ஒய்வுபெறுவதையொட்டி, பொறுப்பு அலுவலர்களை நியமித்து இயக்குனர் உத்தரவு:

DSE - 4 CEO & EQUAL CADRE OFFICERS AND 7 DEO & EQUAL CADRE OFFICERS RETIRED ON 31.03.2014FN - NEW INCHARGE OFFICERS LIST RELEASED CLICK HERE...

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

கோவை லோக்சபா தொகுதியில் தேர்தல் பணியாற்றவுள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. கோவை தெற்கு தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நிர்மலா கல்லுாரியிலும்; சிங்காநல்லுார் தொகுதிக்கு பெர்க்ஸ் பள்ளியிலும்; கோவை வடக்கு தொகுதிக்கு கிக்கானி பள்ளியிலும்; கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சி.எம்.எஸ்., பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடந்தது. ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவு முதன்மை அலுவலர் ஒருவர், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மூன்று பேர் பணியமர்த்தப்படுகின்றனர். ஓட்டுச்சாவடியில் மொத்தம் நான்கு பேர் பணியில் இருப்பர். ஒவ்வொரு தொகுதிக்கும் ௨௦ சதவீதம் அலுவலர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டு பயற்சி கொடுக்கப்படுகிறது.ஓட்டுப்பதிவு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது பற்றி, வீடியோ காட்சிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின், செயல்விளக்கமளித்து, மாதிரி ஓட்டுப்பதிவு செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் தெரிவித்த தகவல் வருமாறு: தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மண்டல தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபடுவர். ஒட்டு

அரசு மருத்துவக்கல்லூரிகளில், படிக்கும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு, கல்விக்கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு:

அரசு மருத்துவக்கல்லூரிகளில், படிக்கும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு, கல்விக்கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க,'' மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி உத்தரவிட்டார். தமிழகத்தில்,அரசு மருத்துவ கல்லூரிகளில், முதல் பட்டதாரிகளாக சேரும், மாணவர்களுக்கு அவர்களது,கல்வி கட்டணம் (டியூசன் பீஸ்) திரும்ப ஒப்படைக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், கடந்த கல்வி ஆண்டில், மருத்துவ கல்லூரிகளில், கல்வி கட்டணம் செலுத்திய, முதல் பட்டதாரி மாணவ, மாணவிகள் செலுத்திய, கட்டணத்தை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்குமாறு, மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.15 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கல்விக்கட்டணத்தை திரும்ப ஒப்படைத்து, அதற்கான ஒப்புதல் கடிதத்தை, மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்புமாறு, அரசு மருத்துவ கல்லூரிகளின் டீன்களுக்கு,மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில், படிக்கும் 16 முதல் பட்டதாரி மாணவர்களிடம், பெற்ற தலா ரூ.4,000 கல்விக் கட்டண தொகையை, திரும்ப ஒப்படைக்க,சிவகங்கை கல்லூரிக்கு, அரசு ரூ.64 ஆயிரம் ஒதுக்கியுள்ளது

ஏப்., 23, காலை 11.00 மணிக்குள் இருக்கணும்; ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு உத்தரவு திருப்பூர்:

மாவட்டத்துக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2,120 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் மூன்று ஓட்டுப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 176 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். ஓட்டுப்பதிவு அலுவலர்கள், வரும் ஏப்., 23ம் தேதி காலை 11.00 மணிக்கு, ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டும். ஓட்டுச்சாவடியை சுற்றி, 200 மீட்டர் தூரத்தில், கட்சி சின்னங்களோ, கொடிக்கம்பங்களோ, விளம்பரங்களோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.ஓட்டுச்சாவடிக்கு வரும் பகுதிகள், வேட்பாளர் பெயர்களை, சுவற்றில் ஒட்டி வைக்க வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முன்னதாக, கட்சிகளின் பூத் ஏஜன்ட் நியமனம், இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளையும் செய்து முடிக்க வேண்டும். ஏப்., 24ம் தேதி காலை 6.00 மணிக்கு, பூத் ஏஜன்டுகள் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்திப் பார்க்க வேண்டும். அதன்பின், காலை 7.00 முதல் மாலை 6.00 மணி

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்)

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்)   இதை விட விளக்கமாக சொல்ல முடியாது. பட விளக்கத்துடன் அருமையாக விளக்கப் பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் (முக்கியமாக வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள்) பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.

பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்தக் கோரி வழக்கு தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு :

பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்தகோரி தொடரப்பட்ட வழக் கிற்கு, பதில் மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ஐகோர்ட்டில், கோவையை சேர்ந்த ஆர்.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஓய்வு வயதுபாரதியார் பல்கலைக்கழகத்தில், 1987-ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். பின்னர், படிப்படியாக பதவி உயர்வுப் பெற்று, கடந்த 2013-ம் ஆண்டு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி (நேற்று) 58 வயது பூர்த்தியாவதால், அன்று பணியில் இருந்து ஓய்வு பெற பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.ஐந்தாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளின்படி, பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் (ஆசிரியர் அல்லாத பிற) ஊழியர்களின் ஓய்வுப்பெறும் வயது வரம்பை 60-ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழகத்தை தவிர, பிற மாநிலங்கள் அனைத்தும் அமல்படுத்தி உள்ளது.தடை விதிக்கவேண்டும்அதேநேரம், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் ஓய்வு வயது 60-

விடுமுறை என்றும் பாராமல் மாணவர் நலனுக்காக உழைத்த ஆசிரியை மீது அடித்ததாக புகார். - இன்றைய கல்வியின் நிலை?

விடுமுறை என்றும் பாராமல் மாணவர் நலனுக்காக உழைத்த ஆசிரியை மீது அடித்ததாக புகார். - இன்றைய கல்வியின் நிலை?சாப்பிட சென்ற மாணவரை, எல்லோரது முன்னிலையிலும் பிரம்பால் அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவரின் பெற்றோர் போலீஸில் புகார் செய்தனர். குமாரபாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ், ரத்தினம் தம்பதியரின் மகன் சந்தோஷ் 15. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., படித்து வருகிறார். தற்போது, அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு முடிந்துள்ளது. ஆங்கிலம் முதல் தாள், நாளை (ஏப்., 1) நடக்கிறது. அதற்காக சிறப்பு வகுப்புக்கு மாணவர்களை நேற்று, பள்ளிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். சிறப்பு வகுப்புக்கு, மாணவர் சந்தோஷ் சாப்பிடாமல் வந்துள்ளார். பசியின் காரணமாக, ஆசிரியரிடம் சொல்லாமல் வெளியே சென்றார். அப்போது பின்னால் சென்ற ஆசிரியை வசந்தி, பள்ளி கேட் முன் மாணவர் சந்தோஷை மரித்து, பிரம்பாலும், கையாலும் சரமாரியாக தாக்கினார். அதில் வலி தாங்க முடியாமல் மாணவர் கதறினார். ஒரு வாரத்துக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைய

அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014க்கான நாட்காட்டி:

05/04/2014 - சனிக்கிழமை - வேலை நாள் 12/04/2014 - சனிக்கிழமை - வேலை நாள் 14/04/2014 - திங்கட்கிழமை - தமிழ் புத்தாண்டு விடுமுறை 17/04/2014 - வியாழக்கிழமை - பெரிய வியாழன் - வரையறுக்கப்பட்ட விடுமுறை 18/04/2014 - வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி - அரசு விடுமுறை 19/04/2014 - சனிக்கிழமை - விடுமுறை 23/04/2014 - புதன்கிழமை முதல் 01/06/2014 வரை கோடை விடுமுறை

பட்டதாரி ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு :

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம்  பகுதிகளுக்கான புதிய பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று 30.03.2014 காலை 10மணியளவில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.இதற்கு முன்னால் சங்க நிர்வாகிகள்-திரு.A.இராமர் பிள்ளை (த.ஆ) ,திருச.அன்பழகன் (மு.க)ஆசிரியர்,திரு.இரா பழனிவேல் (மு.க.)ஆசிரியர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.மணி ,திரு செந்தில் வேலவன் மற்றும் திரு.இராமலிங்கம் ஆகியோர்கள் முன்னிலையிலும்,தேர்தல் அதிகாரிகளான மாவட்ட தலைவர்  திரு .S.சண்முகம் மற்றும் துணைத்தலைவர் திரு.N.செல்வராசு ஆகியோர்கள் தலைமையில்  புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். If you want print out the list Click Here.. கள்ளக்குறிச்சி நிர்வாகிகள் விவரம்  தலைவர்:திரு.தி.பாலசுப்ரமணியன் ப.ஆ,அ.ஆ.மே.நி.பள்ளி கள்ளக்குறிச்சி. து.தலைவர்: திரு. A.கருப்பையன்   ப.ஆ,அ.ஆ.மே.நி.பள்ளி தியாகதுருகம். து.தலைவர்: திரு. P.தங்கராசு ப.ஆ,அ.மே.நி.பள்ளி பெரியசெறுவத்தூர். செயலர்:திரு.R.துரைசாமி   ப.ஆ,அ.உ.நி.பள்ளி.பீளமேடு. இ.செயலர்:திரு.P.முத்துசாமி   ப.ஆ,அ.ப

தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014 மாத நாட்காட்டி:

05.04.2014~பள்ளி வேலை நாள் & குறைத்தீர் முகாம் 12.04.2014~பள்ளி வேலை நாள் 14.04.2014~தமிழ் வருடப் பிறப்பு விடுமுறை 17.04.2014~வரையறுக்கப்பட்ட விடுப்பு / பெரிய வியாழன் 18.04.2014~புனித வெள்ளி விடுமுறை 19.04.2014~சனி விடுமுறை 21.04.2014~மூன்றாம் பருவத் தேர்வு தமிழ் 22.04.2014~மூன்றாம் பருவத் தேர்வு ஆங்கிலம் 23.04.2014~தேர்தலுக்கான விடுமுறை நாள் 24.04.2014~தேர்தலுக்கான விடுமுறை நாள் 25.04.2014~தேர்தலுக்கான விடுமுறை நாள் 26.04.2014~பள்ளி வேலை நாள் / மூன்றாம் பருவத் தேர்வு கணிதம் 28.04.2014~மூன்றாம் பருவத் தேர்வு அறிவியல 29.04.2014~மூன்றாம் பருவத் தேர்வு சமூக அறிவியல் 30.04.2014~பள்ளி இறுதி வேலை நாள் மே 1 முதல் ஜூன் 1 வரை கோடை விடுமுறை (32நாட்கள்)

புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!

பல நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி வருவதாக குறிபிடுகின்றனர். மக்கள் தங்களுக்குத் தோன்றும் கருத்துகளை எளிதாகவும் , சுருக்கமாகவும் கூறியவை தான் பழமொழிகள். அவ்வாறு புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும் .. பசி வந்திட பத்தும் பறந்து போகும்: அறிவுடைமை , இன்சொல் , ஈகை , தவம் , காதல் , தானம் , தொழில் , கல்வி , குலப்பெருமை , மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மற்றொரு பழமொழி. அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர். சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் இந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள் , குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார் பெண் புத்தி பின் புத்தி நெற்றிக்கண் எனும் ஞானக்கண் , முதன்முதலில் பார்வதிதேவிக்குத்தான் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி சிவபெருமானுட

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.-மெயின்) நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். என்.ஐ.டி., ஐஐடி, ஐ.ஐ.எஸ்.இ.ர். (ஐசர்) போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது. இதில், ஜே.இ.இ. முதன்மை எழுத்துத் தேர்வு ஏப்ரல் 6-ஆம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 150 நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து, கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு ஏப்ரல் 9, 11, 12 மற்றும் 19-ஆம் தேதிகளில், மொத்தம் 281 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நடைபெறும். இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் ஜ்ஜ்ஜ். த்ங்ங்ம்ஹண்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் முதலில் அவர்களுடைய கல்வித் தகுதி விவரங்களை இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர், நுழைவுச் சீட்டை பதி

3 மாதங்களில் 800 பேர் மாயம் - மாணவியர் எண்ணிக்கை அதிகம்:

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 800 பேர் மாயமாகி உள்ளனர். இப்பட்டியலில், மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, குடும்ப பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டில் 2,413 பேர் காணாமல் போய் உள்ளனர். அந்த வரிசையில், நடப்பு ஆண்டில் மார்ச் 23ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 800 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என காவல்துறையில் புகார்கள் பெறப்பட்டு உள்ளன. இப்பட்டியலில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 202 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி, கல்லூரி மாணவியர். குடும்ப பிரச்னைகளால், ஏழு பெண்கள் காணாமல் போயுள்ளனர். மதுரை, 46, வேலூர், 37, காஞ்சிபுரம், 35, சேலம், 28, தேனி, 26, தஞ்சை, 22, நெல்லை, 21, விழுப்பும், 18, விருதுநகர், 17, ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள், போட்டோக்களுடன், காவல்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

உண்டு உறைவிட பள்ளி மூடல்: மலை கிராம மாணவர்கள் அவதி:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளை திடீர் என மூட உத்தரவிட்டுள்ளதால் மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம் கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். மேலும், கல்வி மற்றும் மற்றும் தொழில் வளர்ச்சியில், மிகவும் பின் தங்கிய மாவட்டம் ஆகும். மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், இம்மாவட்ட மக்கள் வேலை தேடி, ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்துக்கு அதிகளவில் குடும்பத்தோடு, வேலை தேடி சென்று வருகின்றனர். மேலும், பல பெற்றோர் குடும்ப வருமானத்துக்காக, தங்களது குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வந்தனர். இதனால், மாவட்டத்தில் பள்ளியில் இருந்து இடையில் நிற்கும் குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலத்துக்கு வேலை தேடி செல்லும் பெற்றோர் தங்களது பெண் குழந்தைகளை அதிகளவில் குழந்தை திருமணம் செய்து வைத்தனர். இதே போன்று, தர்மபுரி உட்பட வேறு பல மாவட்டங்களிலும் இந்நிலை தொடர்ந்தது. இதையடுத்து, தர்மபுரி மாவட்ட

தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் ‘யுகாதி’ வாழ்த்து :

தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா ‘யுகாதி’ வாழ்த்து கூறியுள்ளார்.‘மகிழ்ச்சி, பெருமிதம்’‘யுகாதி’ தினவாழ்த்து தெரிவித்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-‘யுகாதி’ திருநாளை உவகையுடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றும் வண்ணம், சாதி, மத வேறுபாடின்றி பல ஆண்டுகளாக சகோதர, சகோதரிகளாய் தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் மொழியால் வேறுபட்டு இருந்தாலும், தமிழ் மக்களின் இதயத்துடன் இரண்டறக்கலந்து, உள்ளத்தில் ஒன்றிணைந்து, அவர்தம் இன்ப துன்பங்களில் பங்கேற்று நட்புணர்வுடன் பழகி வருகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது என்றால் அது மிகையாகாது. சீரோடும், சிறப்போடும்...இவ்வண்ணம் தமிழ் மக்களோடு ஒன்றி, உறவாடி, உவகையுற வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் இந்தப் புத்தாண்டில் மேற

10% அகவிலைப்படி உயர்வு எப்போது? மத்திய அரசு ஆணை வெளியிட்ட பிறகும் தமிழக அரசு மவுனம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு:

மத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும என்று தமிழக அரசுஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பெற்று வந்த 90 சதவீத அகவிலைப்படியுடன் 10 சதவீதம் புதியதாக வழங்கப்பட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டது, அதற்கான் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசை போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரிய சங்கங்கங்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றன. ஆனால் இதுவரை மாநில அரசு இதுதொடர்பாக உத்தரவு ஏதும் பிறப்பிக்காததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, மத்திய அரசு ஊழியர்களை போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வை கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப்படி வழங்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் விரும்புகின்றனர். செய்தி பகிர்வு : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

தேர்தல் தினத்தன்று பொது விடுமுறை தனியாருக்கும் பொருந்தும்: அரசு உத்தரவு:

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தினத்தன்று (ஏப். 24) பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்டார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்படுவதாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். மத்திய அரசு சட்டப்படி சம்பளத்துடன் கூடிய இந்த விடுமுறை அறிவிக்கப்படுவதாக அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.தனியாருக்கும் பொருந்தும்: தமிழக அரசு அறிவித்துள்ள விடுமுறை அறிவிப்பு, தனியார் நிறுவனங்களும் பொருந்தும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் தினத்தன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அளிக்க வேண்டும். இந்த விதியை பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத் துறை நடவடிக்கை எடுக்கும்.என்ன நடவடிக்கை?: வாக்குப் பதிவு தினத்தன்று விடுமுறை விடாத தனியார் நிறுவனங்கள் மீது நடவட

தேர்தல் பணியில் 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்:

தமிழகத்தில் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகள் 9 ஆயிரத்து 222 இருப்பதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. பொதுப் பார்வையாளர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்ற பிறகு பதற்றத்துக்குரிய மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச் சாவடிகளின் முழு விவரங்கள் தெரிய வரும். வாக்குப் பதிவின் போது, 20,000 வாக்குச் சாவடிகளை வெப்-காமிரா மூலமும், 10,000 வாக்குச் சாவடிகளை காமிராக்கள் மூலமும் படம் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். வெப்-காமிரா மூலம் படம் பிடிப்பது, அவற்றை பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள்

விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்:

விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் வணிகவியல் விடைத்தாள்களை தொழிற்பாட பிரிவுகளை நடத்தும் ஆசிரியர்களை வைத்து திருத்தும்படி மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் 25–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திடீரென பள்ளியின் உள்ளே விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் ‘வழக்கமாக வணிகவியல் விடைத்தாள்களை முதுநிலை ஆசிரியர்கள் தான் திருத்துவார்கள். ஆனால் முதல் முறையாக இந்த ஆண்டு தொழிற்பாட பரிவு ஆசிரியர்களை வைத்து விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. இது நடைமுறைக்கு உகந்ததல்ல. இதனால் மாணவர்கள் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும் அவர்களின் எ

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உயிர் இழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் நிவாரண தொகை: தேர்தல் ஆணையம்:

லோக்சபா தேர்தல் வாக்குபதிவின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களில் அரசு ஊழியர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் 9 கட்டமாக நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு பணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தேர்தல் நடத்துவது பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. தமிழகத்திலும் இதற்கு சவால் விடும் வகையில் அரசியல் கட்சி தொண்டர்களின் வாக்கு பதிவு இயந்திரம் உடைப்பு, வாக்கு பதிவு இயந்திரத்தை தூக்கி செல்வது உள்ளிட்ட செயல்களில் திடீரென ஈடுபடுவது உண்டு. அந்த சமயங்களில் தடுக்க முயலும் அரசு ஊழியர்களை அவர்கள் தாக்குவதும் உண்டு. இந்த மாதிரி சம்பவங்களில் அரசு ஊழியர்கள் ஊனமானாலோ, இறந்தாலோ தேர்தல் கமிஷன் என்ன நிவாரணம் வழங்கியது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது அப்படி இறக்க நேரிட்டால் அவர்களுக்கு இரட்டை நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் சுனித் முகர்ஜி அனுப்பியுள்ள சுற்றரிக்கையில், கூறியுள்ளதாவது: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள

பிரித்து, பின்னர் மீண்டும் பொருத்தி சாதனை: கோவையை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்:

பத்தே நிமிடங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை பிரித்து , பின்னர் மீண்டும் பொருத்தி சாதனை படைத்த கோவையை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பிரிட்டைன் நாட்டிலுள்ள உலக சாதனைகளை அங்கீகரிக்கும் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது. கோவை மாவட்டத்தின் கோயில்பாளையம் பகுதியில் கம்ப்யூட்டர்களை பழுது நீக்கும் தொழில் செய்து வருபவர் , பிரபு மகாலிங்கம். இவரது மகள் ஆதர்ஷினி( 9) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வருகிறாள். துறுதுறுப்பு மிகுந்த சிறுமியான ஆதர்ஷினி , தந்தையின் கடைக்கு வரும் போதெல்லாம் அவர் வேலை செய்வதை உன்னிப்பாக கவனித்து வந்தாள். பின்னர் , மெதுவாக லேப்டாப்களை பிரிப்பதும் , பின்னர் ஒன்று சேர்த்து பொருத்துவதுமாக முயற்சி செய்து வந்த அவள் , காலப்போக்கில் பதினைந்தே நிமிடங்களுக்குள் ஒரு லேப்டாப்பை முழுமையாக பிரிப்பதும் , பின்னர் அதனை இயங்கும் நிலைக்கு பொருத்துவதுமாக பழகி வந்தாள். இன்னும் விரைவாக இந்த பணியை செய்ய முணைந்த ஆதர்ஷினி , அதனை பத்தே நிமிடங்களுக்குள் செய்து முடிக்கும் அளவுக்கு முன்னேறினாள். இதற்காக தமிழ்நாடு சாதனைப் பட்டியலிலும் , பின்னர் , தேசிய சாதனைப் ப

எஸ்.எம்.எஸ்.,சில் ஓட்டுச்சாவடி விவரம் : ஒரு லட்சம் பேர் பயன் பெற்றனர்:

தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்திய, எஸ்.எம்.எஸ்., திட்டம் மூலம், ஒரு லட்சம் வாக்காளர்கள், தாங்கள் ஓட்டு போடும், ஓட்டுச்சாவடி விவரங்களை அறிந்து கொண்டனர்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, 13 லட்சம் பேர், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், 10 லட்சம் பேர், 9ம் தேதி நடந்த சிறப்பு முகாமில் விண்ணப்பித்துள்ளனர். இவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. துணை வாக்காளர் பட்டியல், ஏப்., 5ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும். தாங்கள் ஓட்டு போடும் ஓட்டுச்சாவடி விவரங்களையும், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்ற விவரத்தையும், எஸ்.எம்.எஸ்., மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வசதியை, 10 நாட்களுக்கு முன், தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியது. இதற்கு, மொபைல் போனில், "epic' என, "டைப்' செய்து, இடைவெளி விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, 94441 23456 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தால

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை:

மக்களவைத் தேர்தலை நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் விடுமுறை அறிவித்துள்ளார்  என தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் 15 ஆயிரம் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு வருகிற 3ம் தேதி நடைபெறவுள்ளது:

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலங்களிலும் வரும் 3ம் தேதி ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 24ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் நன்னடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தது. அதன்படி அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த நலத்திட்டங்களும் வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் அளித்தல், மது அளித்தல் போன்ற பல்வேறு முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 24 மணி நேரமும் கண்காணிக்க 13 சட்டமன்ற தொகுதிகளில் 39 பறக்கும் படை குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதேபோல் சோதனை சாவடிகளில் கண்காணிக்க 39 நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிகள் மீறப்படுவதை கண்காணிக்க 13 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் மண்டல அளவி

தொகுப்பூதிய காலத்தையும் பணி வரன்முறை செய்து வழங்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை:

"தொகுப்பூதிய காலத்தையும், பணி வரன்முறை செய்து வழங்க வேண்டும்' என, பொதுக்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஐந்து புதிய ஒன்றியக் கிளைகள் துவக்க விழா, நாமக்கல்லில், நேற்று நடந்தது. விழாவுக்கு, மாவட்டத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். செயலாளர் நடேசன் வரவேற்றார். மாநிலத் தலைவர் காமராஜ், "ஆசிரியர் காவலன்' என்ற இதழை வெளியிட்டு பேசினார். பொதுச்செயலாளர் ஈசுவரன், எருமப்பட்டி, திருச்செங்கோடு, ராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல் ஆகிய ஐந்து புதிய ஒன்றியக் கிளைகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், தமிழக பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த தொகுப்பூதியக் காலத்துக்கும் சேர்த்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய காலத்தையும் பணிவரன் முறை செய்து வழங்க வேண்டும். தமிழக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை