Skip to main content

Posts

Showing posts from December, 2013

இயற்கை விவசாயக் கல்வியை வலியுறுத்திய விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்:

  இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார். தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில் பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம்மாழ்வார் என்றால் அது மிகையல்ல. இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நே

பொறியியல் முதுநிலை துறையில் சாதனை படைப்பதற்கு கேட் தேர்வு:

பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிகரித்ததன் விளைவாக முதுநிலை பொறியியலுக்கான மாணவர் சேர்க்கையில் கடும் போட்டி நிலவுகிறது. முதுநிலை பொறியியல் படிப்பதற்கும் வேலை வாய்ப்பிற்கும் முக்கியமானதாக கேட் தேர்வு உள்ளது. கேட் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் எடுப்பதன் மூலம் சிறந்த கல்லூரிகளில் எம்.இ. / எம்.டெக். படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதோடு அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தியன் ஆயில் நிறுவனம், பாபா அணு ஆராய்ச்சி நிலையம், என்.டி.பி.சி., பெல் நிறுவனம் போன்ற பல பொதுத்துறை நிறுவனங்கள் கேட் மதிப்பெண்களின் அடிப்படையில் பணிக்கு சேர்க்கின்றனர். வருடத்திற்கு வருடம் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2008இல் 1 இலட்சத்து 66 ஆயிரம் பேர் எழுதிய நிலையில், 2011இல் 5 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு முறை எழுதி பெறப்படும் மதிப்பெண் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்

மலை போல் குவிந்து வரும் வழக்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், இருக்கும் வழக்குகளை, விரைந்து முடிப்பதற்கு ஏதுவாகவும், மண்டல வாரியாக, "லீகல் செல்" அமைக்க- பள்ளி கல்வித்துறை, திட்டம்:

சம்பளம், பதவி உயர்வு, நிலுவை தொகை, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, அரசு துறைகள், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காத போது, பாதிக்கப்படும் ஊழியர்கள் கோர்ட்டை அணுகுகின்றனர். இதுபோன்ற வழக்குகள் அனைத்து துறைகளிலும் இருக்கிறது என்றாலும் பள்ளி கல்வித்துறையில் மிக அதிகம். ஒரு கோடி மாணவர், 5.5 லட்சம் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர் பல லட்சம் என பெரிய துறையாக பள்ளி கல்வித்துறை இருப்பதால் பிரச்னைகளும் அதிகம். தொடக்க கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை, தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம் என பல துறைகள், பள்ளிகல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. பல்வேறு பிரச்னைகள் காரணமாக ஆசிரியரும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கோர்ட்டில் வழக்கு தொடர்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, தொடக்க கல்வித்துறையில் 1,000 வழக்குகளும், பள்ளி கல்வித்துறையில் 4,000 வழக்குகளும், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு விவகாரங்களை கையாள்வதே, பள்ளி கல்வித்துறைக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. அதிகாரிகளில் பலர் தினமும் கோர்ட்டுக்கு செல்வதே, முக்கிய வேலையாக இருக்கிறது. இதனால், அதிகாரிகளை, அல

கல்விக்குரலின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்:

கல்விக்குரலின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 

"கல்விக்குரலின் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்"

"கல்விக்குரலின் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்"

ஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் .இ .ஆ .ப. .அவர்களால் டிப்ளமோ கல்வித்தகுதியை காரணம் காட்டி ஊதியம் 5200-20200+2800 -இருந்து 9300-34800+4200 மாற்றி அமைக்கப்பட்ட பணியிடங்கள்:

1) Training Instruc 5200-20200+2800 - 9300-34800+4200 2) Hostal Superintendent and Physical Training Officer 5200- 20200+2800 - 9300-34800+4200 3) Laboratory Assistant 5200-20200+2800 - 9300-34800+4200 4) Laboratory Technician Grade-1 5200-20200+2800 - 9300- 34800+4200 5) Laboratory Technician Grade-II 5200-20200+2800 - 9300- 34800+4200 6) Dental Hygienist/Dental Mechanic 5200-20200+2800 - 9300- 34800+4200 7) Refractionist/opthalmic Assistant/Opticial / Optometrist  5200-20200+2800 - 9300-34800+4200 8)Leprosy physiotherapist Physio therapy Technician 5200- 20200+2400 - 9300-34800+4200 9) Pharmacists 5200-20200+2800 - 9300-34800+4200 10)  Health  Inspector Grade-I 5200-20200+2800 - 9300-34800+4200 11) Food Inspector 5200-20200+2800 - 9300-34800+4200 12) Technician Grade-I 5200-20200+2800 -9300-34800+4200 13 Audio-Visual Technician 5200-20200+2400 - 9300- 34800+4200 14) Librarian 5200-20200+2400 - 9300-34800+4200 15) Orthotic Technician 5200-20200+2800 - 9300-34800+4200  16) Pharmacist(

பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காகஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு:

அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ்2 வகுப்பில் சிறப்பாக   அவற்றின் மூலம் மற்ற பள்ளி மாணர்களுக்கு கற்பிக்க கல்வித்துறை   திட்டமிட்டுள்ளது. இதற்காக , ஆசிரியர்களிடம் இருந்து , வீடியோ , ஆடியோ கட்சி பதிவுகளை கல்வித்துறை கோரி உள்ளது.                 இதில் பதிவு செய்யப்படும் காட்சிகள் எந்த காலத்திலும்   பயன்படுத்தும் விதமாகவும், மற்ற ஆசிரியர்கள் தங்களது கற்றல் கற்பித்தல்   திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும்.              தனிமனிதன், நிறுவனம், சாதி, மதம் சார்ந்ததாக இருக்க கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றை ஜன., 10க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென, கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை, சி.டி.,களில் பதிவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

MADRAS HIGH COURT ORDERD TO PARTICIPATE IN CERTIFICATE VERIFICATION Tommorrow (31.12 13 ) FOR B SERIES TRB PG TAMIL CANDIDATES WHO APPROACH THE COURT :

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் நான்கு பேருக்கு நாளை (31.12.13) நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு-தமிழக முதல்வர் அறிவிப்பு :

2014-ம் ஆண்டு பொங்கல்  திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு  1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு பொங்கல் பரிசுத்  தொகுப்பு பொங்கல்  திருநாளுக்கு முன்னரே வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  இதன் மூலம் அரசுக்கு 281 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி சீரோடும்,  சிறப்போடும் கொண்டாட வழிவகுக்கும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜி.பி.ஏ.டி. எனப்படும் கிராஜுவேட் பார்மசி ஆப்டிட்யூட் டெஸ்ட்(2014), ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பால் வரும் பிப்ரவரி 25 - 27ம் தேதிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது:

அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தேர்வானது, நாட்டின் பார்மசி கல்லூரிகளில் எம்.பார்ம்., மற்றும் பிஎச்.டி., படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படுகிறது.இத்தேர்வு குறித்த கேள்விகளும், அதற்கு நிபுணர்களின் பதில்களும் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. படித்துப் பார்த்து மாணவர்கள் பயன் பெறவும். GPAT தேர்வுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், அதை எழுதுபவர் எவ்வாறு தயாராவது? பல மாணவர்கள், இத்தேர்வு மே மாதம்தான் நடத்தப்படும் என்று நினைக்கின்றனர். அது தவறு. இத்தேர்வுக்கு தயாராகும் நபர்கள், பார்மசூடிக்ஸ், பார்மகாலஜி, பார்மகாக்னசி, பார்ம் அனலிசிஸ் மற்றும் பார்மசூடிகல் கெமிஸ்ட்ரி என்ற 5 முக்கிய பேப்பர்களில், ஆர்கானிக் கெமிஸ்ட்ரிக்கும் முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்த வேண்டும். மேலும், ஜுரிஸ்புரூடன்ஸ், மைக்ரோபயாலஜி மற்றும் பயோகெமிஸ்ட்ரி ஆகிய பிரிவுகளிலிருந்தும் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில், GPAT தேர்வில் இருந்த கடினமான விஷயங்கள் என்ன? இந்த 2014ம் ஆண்டில் அத்தேர்வை எழுதுவோர் என்ன எதிர்பார்க்க முடியும்? GPAT பாடத்திட்டத்தின்படி, அத்தேர்வுக்கு கடந்த 3 ஆண்டுகளாக, ம

UPSC -ன் அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற்ற அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த முடிவுகளை, UPSC -ன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in ல் சென்று பார்க்கலாம். அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் நிலையில் மொத்தம் 57 பணியிடங்களை UPSC விளம்பரம் செய்தது. மத்திய பணியாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின், மத்திய பணியாளர் சேவைகளின் கீழ், இந்த விளம்பரம் மேற்கொள்ளப்பட்டது. அசிஸ்டன்ட் வெல்பேர் கமிஷனர், அசிஸ்டன்ட் லேபர் வெல்பேர் கமிஷனர் உள்ளிட்ட பல பணிநிலைகள் அவற்றுள் அடக்கம்.

தொடக்கக் கல்வியில் பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்:

தொடக்கக் கல்வியில் பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்" என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், தொடக்கக் கல்வித்துறையில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 2004-05ம் ஆண்டு முடிய இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது எனவும், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு அந்தந்த பாட பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது எனவும் அரசு முடிவெடுத்தது. அதன்படி, தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில் 2005ல் இருந்து 26,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கு மாநில முன்னுரிமை அடிப்படையில் 50 சதவீதம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது.மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் மாவட்டக்கல்வி அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தொடக்கக

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி மாநகராட்சி சார்பில் அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்:

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி: 79 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றிபெற ஏதுவாக சென்னையில் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு மாநகராட்சி சார்பில் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது.  இதன் முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சியை சென்னை மாநகராட்சி கட்டணமில்லாமல் அளித்து வருகிறது. இந்த பயிற்சியில் சேர விரும்பும், சென்னை மாநகராட்சிக்குள் படித்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்படும். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள், w‌w‌w.c‌h‌e‌n‌n​a‌i​c‌o‌r‌p‌o‌r​a‌t‌i‌o‌n.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பயிற்சி நடைபெறும் சைதாப்பேட்டை சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவேகானந்தரின் கோட்பாடுகள் உலக மக்கள் பின்பற்றத்தக்கவை: அமெரிக்க, ஜெர்மனி துணைத்தூதர்கள் புகழாரம்:

விவேகானந்தர் ரதயாத்திரைக்கு சென்னை மெரீனாவில் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் 150-வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ராமகிருஷ்ணா மடம் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்துக்கான ரதயாத்திரை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்தநிலையில் மெரீனா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ரதயாத்திரை வந்தடைந்தது. அப்போது பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப்பிரமுகர்கள் விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கிறிஸ்துவம், இஸ்லாமியம், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து அகில இந்திய வானொலி நிலைய அரங்கத்தில் இதுகுறித்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னைக்கான அமெரிக்க துணைத்தூதர் ஜெனிபர் மெர்க்கின்டயர் மற்றும் ஜெர்மன் துணைத் தூதர் ஸ்டீபன் வெக்பேக் ஆகியோர் கூறியது:  இந்திய ஆன்மிகத்தின் மிகச் சிறந்த அடையாளமாக விவேகானந்தர் விளங்குகிறார். உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் சேர்ந்தவர்களும் பின்பற்றும் அளவுக்கு அவரது கருத்துக்களும்,

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் உடல்நல காப்பீடு அரசாணை வெளியீடு :

தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் முதன்மைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழ்நாடு சட்டசபையில் 2013-14-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். CLICK HERE-தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை.. இந்த திட்டத்தை ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான சில புதிய வரைமுறைகளை அரசு வகுத்தளிக்கிறது. அதன்படி, இந்த புதிய காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் வரை ரூ.2 லட்சம் அளவுக்கு ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் பயனடையலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு அரசு ஊழியர் இருந்தால், அதில் ஒருவர் மட்டும் இந்த திட்டத்துக்கான பிரிமியம் செலுத்தினால் போதுமானது.இந்த திட்டம், அரசு கருவூலம் மற்றும் அக்கவுண்ட் ஆணையர் அலுவலகம் மூலம் அமலாக்கப்படும். காப்பீட்ட

ஆசிரியர்கள் நியமனம்: கேள்வித்தாள் வெளியானதால் தேர்வு ரத்து டெல்லி மாநில அரசு நடவடிக்கை :

டெல்லியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் 1 லட்சம் ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். ஆனால் தேர்வுக்கு முன்பே, கேள்வித்தாள் ரகசியமாக வெளியானது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து, ஆசிரியர் நியமன தேர்வை ரத்து செய்து டெல்லி மாநில கல்வி மந்திரி மனிஷ் சிசோடியா உத்தரவிட்டார். மறு தேர்வு இன்னும் ஒரு மாதத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.

பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - அகஇ - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட BRC / CRCகளில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களில் 115 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் நாளை 31.12.2013 பிற்பகல் 2மணியளவில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடைபெறும்:

CLICK HERE-DSE - 115 BRTE / CRTESs CONVERSION TO BT ASST IN GOVT HIGH / HSS SCHOOLS - COUNSELING HELD AT CONCERN CEO OFFICES ON 31.12.2013 AT 2PM REG  CLICK HERE-DSE - 115 BRTE / CRTEs CONVERSION LIST

முடிந்தது நெட் தேர்வு: வழக்கு தொடர்ந்த மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள்:

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பார்வையற்ற மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்ற பிற பார்வையற்ற மாணவர்களுக்கு இந்த பிரத்யேக வினாத்தாள் வழங்கப்படவில்லை. யுஜிசி நடத்தும் உதவிப் பேராசிரியர் பணிக்கான "நெட்' தகுதித் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வெழுதினர். சென்னையில் 13 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 47 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மிராண்டா டாம்கின்ஸன் என்பவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "நெட்' தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெய்லி முறை வினாத்தாள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 270 பார்வையற்றோர் பங்கேற்பு: ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "நெட்' தேர்வில் தமிழகத்தில் மட்டும் 270-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்றபோதும், வழக்கு தொடர்ந்த மிராண்டாவுக்கு மட்டும்

பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் யு.பி.எஸ்.சி:

பேராசிரியர், உதவிப் பேராசிரியர், கண்காணிப்பாளர், சீனியர் லெக்சரர் உள்ளிட்ட பல பணி நிலைகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை UPSC வரவேற்கிறது. இதற்குரிய முக்கிய தேதி விபரங்கள் * பதிவு செய்வதற்கான தொடக்க தேதி - டிசம்பர் 28 * பதிவு செய்தல் முடியும் தேதி - ஜனவரி 16 * விண்ணப்பம் பிரின்ட் செய்வதற்கான கடைசித் தேதி - ஜனவரி 17 * 18 பணி நிலைப் பிரிவுகளில், மொத்தம் 21 பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு * அசோசியேட் பேராசிரியர் (சிவில் இன்ஜினியரிங், டெக்னிக்கல்)  - 55 வயது * சீனியர் லெக்சரர் - 50 வயது * அசோசியேட் பேராசிரியர் (ஐ.டி) - 50 வயது * உதவிப் பேராசிரியர் மற்றும் கண்காணிப்பாளர் - 35 வயது. விண்ணப்பிக்க விரும்புவோர் www.upsconline.nic.in என்ற வலைதளம் செல்ல வேண்டும். தபால் மூலமாக விண்ணப்பம் அனுப்ப தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வகைப் பள்ளிகளின் மாதந்திர சம்பளம் பெரும் கணக்கு தலைப்பு எண் விபரம்-ALL HEAD ENFACEMENT DETAILS:

GOVERNMENT SECONDARY / HIGHER SECONDARY SCHOOL MUNICPAL  ANDCORPORATION  SECONDARY/HIGHER SECONDARYSCHOOL CREATIONOF ADDITIONAL POST IN HIGH SCHOOLS AND HIGHER SECONDARY SCHOOLS UNDER RASHTRIYA MADHYAMIK SHIKSHA ABHIYAN.     (RMSA) GOVT  HIGH \HIGHERSECONDARY SCHOOL UNDER SARVA SIKSHA ABHIYAN SCHEME  (SSA) UP GRADATIONOF SCHOOLS UNDER RASHTRIYA MADHYAMIK SHIKSHA ABHIYAN.     (RMSA)  UP GRADATIONOF SCHOOLS UNDER RASHTRIYA MADHYAMIK SHIKSHA ABHIYAN.     (RMSA)  AIDED  HIGH / HIGHER SECONDARY SCHOOL   ALL TREASURY SUBMITTED  ENFACEMENT FORM

பள்ளிகளில் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணம் மற்றும் கணக்கு தலைப்பு விபரம் :

பள்ளிகளில் அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணம் மற்றும் கணக்கு தலைப்பு விபரம்-CLICK HERE

கல்லுரி ஆசிரியருக்கான தேசிய அளவிலான தகுதித்தேர்வு தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது :

விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் -தமிழகம் முழுவது உலா வந்த ரத யாத்திரை இன்று சென்னை மைலாப்பூரில் வீதி உலா :

உபரி நிதி குறைவாக உள்ளதால் நடப்பு நிதி ஆண்டில், பி.எப். சேமிப்புக்கு 8.5 சதவீதம் வட்டிதான் கிடைக்கும் :

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ.) நடப்பு 2013-14-ஆம் நிதி ஆண்டிலும் பிராவிடண்ட் ஃபண்டு (பி.எஃப்) சேமிப்புக்கு சென்ற நிதி ஆண்டைப் போன்று 8.5 சதவீத வட்டியைத்தான்வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பில் 5 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.ஜன.13-ந் தேதி முடிவுதொழிலாளர் நல அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆஸ்கார் பெர்ணான்டஸ் தலைமையின் கீழ் செயல்படும் மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த வட்டி விகிதம் தொடர்பாக முடிவு செய்யப்படும். இந்த கூட்டம் ஜனவரி 13-ந் தேதி நடைபெறுகிறது. பி.எஃப். சேமிப்பிற்கு 8.5 சதவீதம் வட்டி வழங்குவதால் ரூ.56.96 கோடி தான் உபரி நிதி கிடைக்கும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பி.எஃப். சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டி, இ.பி.எஃப்.ஓ. ஈட்டும் வருவாயின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டில் இந்த அமைப்பிற்கு ரூ.20,796.96 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8.5 சதவீத வட்டி வழங்குவதானால் ரூ.20,740 கோடி செலவினம் ஏற்படும். ஆக, உபரி நிதி குறைவாக உள்ளது. இ.பி.எஃப். அமைப்பு சந்தாதாரர்களிடமிருந்து த

பிரிட்டனைச் சேர்ந்த 90 வயது மாணவர் முனைவர் பட்டம் பெற்று சாதனை:

பிரிட்டனைச் சேர்ந்த 90 வயது மாணவர் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ஓய்வு பெற்ற ஆசிரியரான எரிக் வூப், தனது பள்ளிப் படிப்பை முடித்து 74 ஆண்டுகளுக்குப் பின் 90வது வயதில் பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்து, எரிக் வூப் கூறியதாவது: "லண்டனைச் சேர்ந்த, தொழிலாளிக்கு பிறந்த நான் 16வது வயதில் தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளிப்படிப்பை விட்டு பணியில் சேர்ந்தேன்; இரண்டாம் உலகப் போர் துவங்குவதற்கு முன், லண்டனுக்கு குடிபெயர்ந்து கணித ஆசிரியர் பயிற்சி பெற்றேன். பின், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றபின், 39வது வயதில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். திருமணமாகி நான்கு குழந்தைகள் பிறந்தனர். கணித ஆசிரியராக 20 ஆண்டுகள் பணிபுரிந்தேன். கடந்த 2003ல், எம்.ஏ., பட்டம் பெற்றேன்; 2008ல் லாங்கெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., ஆய்வுப் படிப்பில் சேர்ந்தேன். பல்கலைக்கழக சூழல் என்னை உற்சாகப்படுத்தியதுடன், தூண்டுகோலாகவும் இருந்தது; சக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் உதவி கிடைத்தது." இவ்வாறு எரிக் வூப் கூறினார்.

மன அழுத்தத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவுகள்:

  இன்றைய நவீன வாழ்க்கை முறையில் வேகமாகவும் பரபரப்பாகவும் ஓடுகிறது அனைவரின் வாழ்க்கை. அதன் விளைவையும் தாக்கத்தையும் நம்மில் பல பேர் உணராவிட்டாலும் கூட, நம் உடலில் உண்டாகும் பல உடல்நல கோளாறுகளுக்கு இதுவே முக்கிய காரணமாக விளங்குகிறது. நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி, மாணவராக இருந்தாலும் சரி அல்லது சும்மா இருந்தாலும் சரி குறிப்பிட்ட அளவிலான மன அழுத்த காரணக்கூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். ADVERTISEMENT மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணக்கூறுகள் நாளுக்கு நாள் உங்கள் வாழ்க்கையில் அதிகரித்து கொண்டே தான் போகும். ஒரு கட்டத்தில் அதனை சமாளிக்க முடியாமல் நாம் திண்டாத தொடங்கி விடுவோம். ஆனால் மன அழுத்தத்தை நீக்க ஆரோக்கியமான பல உணவுகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அவைகளை உட்கொண்டால் மன அழுத்தம் நீங்கி உங்கள் மனநிலை சற்று நிம்மதி பெருமூச்சு விடும். தேவையில்லாத மன அழுத்தங்கள் உங்கள் உடலில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கி விடும். நீங்கள் எவ்வளவு தான் அமைதியாக இருந்து மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முயற்சித்தாலும் கூட, உங்கள் ஆழ் மனதில் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்