NEST Junior எனப்படும் தேசிய அளவிலான கல்வி உதவித் தொகை தேர்வு:
10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், ஊக்கத் தொகை பெறுவதற்கான NEST Junior எனப்படும் தேசிய அளவிலான கல்வி உதவித் தொகை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
SEMCI என்ற தனியார் தொண்டு நிறுவனம் இந்தத் தேர்வுகளை நடத்துகிறது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வை முடித்தவர்கள் மற்றும் இந்த வருடம் தேர்வை எழுத உள்ளவர்கள் இந்த உதவித் தொகை தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மட்டுமே இந்த கல்வி உதவித்தொகை, 20,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை வழங்கப்படும்.
அகில இந்திய அளவில், 40 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்களை பெறுபவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். இரண்டு மணி நேர அளவிலான ஆன்லைன் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. வினாக்கள், தலா 50 மதிப்பெண்கள் வீதம் நான்கு பிரிவுகளில் கேட்கப்படும்.
மேலும், இயற்பியல் மற்றும் வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல், ஆங்கிலம் மற்றும் எளிய பகுப்பாய்வு, பொது அறிவு தொடர்பான வினாக்கள் இடம்பெறும். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் மாநில அரசின் பாடத் திட்டங்களின் அடிப்படையில் வினாக்கள் கேட்கப்படும். நாடு முழுவதும் பல்வேறு முக்கிய இடங்களில் இந்தத் தேர்வுக்கு தயாராவதற்கான பயிற்சி மையங்கள் உள்ளன. கூடுதல் விவரங்களுக்கு www.nest.net.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
இந்தத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய அளவிலான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
விண்ணப்பங்களை www.nest.net.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாயை SEMCI INDIA, Mumbai என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து விண்ணப்பிக்கவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த ஏப்ரல் 30-ஆம் தேதி கடைசி நாள்.
மே மாதம் 31-ஆம் தேதி வரை செலுத்துபவர்கள் 100 ரூபாய் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். ஜூன் 30-ஆம் தேதி வரை செலுத்த 200 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:The Director, NEST, C/o SCMCI INDIA, B-1, Piccadilly Flats, 57-J, Clare Road, Byculla, Mumbai - 400 008.
NEST Junior 2013 தேர்வு ஜூலை 28-ஆம் தேதி நடைபெறும். கூடுதல் விவரங்களை www.nest.net.in என்ற இணைய தளத்தையும், info@nest.net.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அணுகியும் தெரிந்து கொள்ளலாம். மேலும், 022 - 6529 2506 அல்லது 89760 84445 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டும் விவரங்களைப் பெறலாம்.
Comments
Post a Comment