லயோலா கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கோடைக் கால பயிற்சி:
லயோலா கல்லூரியின் சார்பில் உயிரித் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் மற்றும் உயிர் பல்வகைத் தன்மை குறித்த கோடைக் கால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். மே மாதம் 6-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை ஆறு நாட்கள் இந்த முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் உயிரித் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் மற்றும் உயிர் பல்வகைத் தன்மை ஆகியவை குறித்த விரிவுரைகள், செய்முறைப் பயிற்சிகள், சோதனை மையங்கள், ஆய்வறிக்கை தயாரித்தல், அறிவியல் விளக்கப் படங்கள் தயாரித்தல், அறிவியல் தகவல்களை நாடகமாக நடித்துக் காட்டுதல் உள்ளிட்டவை மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும்.
இதில் பங்கேற்பதற்கு மாணவர்கள் 3,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பயிற்சி முகாம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற www.loyalacollege.edu என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுபாஷை 90437 93818 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment