10ம் வகுப்பு: வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் அதிகம்:
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் படி, வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் தங்களை ஒரு படி உயரத்திலேயே வைத்துள்ளனர்.
சென்ற 2012ம் ஆண்டில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 83.40% ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 86% ஆக அதிகரித்துள்ளது. இருந்தாலும், கடந்த 2012ம் ஆண்டில் 88.9% ஆக இருந்த மாணவியர் தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு 92% ஆக அதிகரித்துள்ளது.
இந்த வருடம் தேர்வு எழுதியவர்களில் 4,57,250 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியரில் 4,77,965 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்ற ஆண்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 86.20% ஆக இருந்தது. இந்த ஆண்டு அது 89% ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் மாணவியரின் பங்கு அதிகம்.
- Get link
- Other Apps
- Get link
- Other Apps
Comments
Post a Comment