ஆயுர்வேத மருத்துவம்: நுழைவுத்தேர்வு ரத்து:
ஆயுர்வேத மருத்துவ படிப்பில் மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் அறிவித்துள்ளது.பனாரஸ் இந்து பல்கலைகழகம் சார்பில் ஆயுர்வேத மருத்துவ மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் கேள்வித்தாளில் ஒரு சில தவறுகள் இருந்தது கண்டறியப்பட்டது இதனையடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஐ.எம்.எஸ்., இயக்குனர் பேராசிரியர் ரானா கோபால் சிங் தெரிவித்தார்.
இன்று ரத்து செய்யப்பட்டதற்கான மறுதேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment