Skip to main content

புதியதாக ஆதார்அடையாள அட்டை பெறுவது எப்படி?

அக்டோபர் மாதத்திலிருந்து படிப்படியாக தமிழகத்தில் சமையல் கியாஸிற்கான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அதற்கு ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வங்கிக் கணக்குத் துவக்க, கியாஸ் இணைப்புப் பெற, பாஸ்போர்ட் பெற, வீடு வாங்க, விற்க போன்றவற்றிற்கு ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? என்னென்ன ஆவணங்கள் தேவை? எப்போது கிடைக்கும்? யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் போன்ற தகவல்கள் உங்களுக்காக இதோ...




ஆதார் என்றால் என்ன?


ஆதார் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண். ஒருவரின் கருவிழிப்படலம், இரு கை விரல்களின் ரேகை, புகைப்படம் போன்ற தகவல்களைச் சேகரித்து 12 இலக்க எண்களைக் கொண்ட தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும். 

ஆதார் அட்டை பெறத் தகுதிகள்: இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ஆதார் அட்டை பெறலாம். 5 வயது மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் ஆதார் அட்டை பெறலாம். வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை இல்லாதவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


ஆதார் அட்டை பெற எங்கே விண்ணப்பிப்பது?
இந்தியாவில் வசிக்கும் யாரும் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். திருச்சியைச் சேர்ந்த ஒருவர் புதுச்சேரியில் வசிக்கிறார் என்றால்  புதுச்சேரியிலேயே விண்ணப்பிக்கலாம்.

தற்போது தமிழகத்தில் அரசு மையங்களில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் ஆனால். நவம்பர் மாதத்திற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் நிரந்தர ஆதார் மையங்கள் அமைக்கப்படும். அதுவரை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.

சென்னையில் உள்ளவர்கள் அந்தந்த வார்டுக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம்.  


இதுதவிர அரசுப் பள்ளிகள் / தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்துகொடுக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மையப் பணியாளர்களையோ அணுகி விவரங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆதார் அட்டை பெற பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.



ஆதார் அட்டை பெறத் தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்று தேவை.



1.வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர்  உரிமம். புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐ.டி. கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்களில் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.


2.ஒருவேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.



3.எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.  
என்ன விவரங்கள் சேகரிப்பார்கள்?தேவையான ஆவணங்களைக் கொடுத்தபின் கருவிழிப்படலம், இரு கை விரல் ரேகைகள், புகைப்படம் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும்.
ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண்தான் வழங்கப்படும். நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு 60 முதல் 90 நாட்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பத்தின் நிலையறிய:https://portal.uidai.gov.in/ResidentPortal/statusLink இந்தத் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணையும், தேதியையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தின் நிலையறியலாம். எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் 60  முதல் 90 நாட்களுக்குள் ஆதார் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கு வந்து சேரும்.

ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?http://appointments.uidai.gov.in/ இந்தத் தளத்திற்குச் சென்று விவரங்களைப் பதிந்து ஆன்லைனில் அப்பாயின்மெண்ட் வாங்கிக்கொண்டு நேரில் செல்லலாம். ஒருவேளை செல்ல முடியாத சூழல் இருந்தால் அப்பாயின்மெண்ட்டை கேன்சல் செய்துகொள்ளலாம். மீண்டும் வேறு அப்பாயின்மெண்ட் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரில் குறைபாடு:ஆதாரில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் ஆதார் கிடைத்து 48 மணி நேரத்திற்குள் தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று நிரந்த மையத்தில் சரிசெய்துகொள்ளலாம்.
மேலதிக தகவலுக்கு:  புதுச்சேரியில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள: 88070 82845, 97866 27066
தமிழகத்தில் கடலூரில் மட்டும் நிரந்தர ஆதார் மையம் உள்ளது. இதன் தொடர்பு எண்: 94861 43053
1800 300 1947 என்ற எண்ணில் தகவல் மையத்தை இலவசமாகத் தொடர்பு கொள்ளவும். இதில் தமிழ் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் பேசுவார்கள். விரைவில் தமிழும் கொண்டுவரப்படும்.
https://portal.uidai.gov.in/ResidentPortal/ getstatusLink மற்றும் http://uidai.gov.in/ இந்தத் தளங்களுக்குச் சென்று மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

TAMIL NADU DISTRICT WISE TAHSILDAR PHONE NUMBER:

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் செல் எண்  TAMIL NADU  DISTRICT WISE  TAHSILDAR PHONE NUMBER PRINTOUT-CLICK HERE ============================================ 1 Chennai ********************** 1 Fort-Tandiarpet 94450 00484 2 Purasawakkam-Peramb9u4r 450 00485 3 Egmore-Nungambakkam94450 00486 4 Mylapore-Triplicane 94450 00487 5 Mambalam-Guindy 94450 00488 2 Tiruvallur ********************** 6 Ambattur 94450 00489 7 Ponneri 94450 00490 8 Gummudipoondi 94450 00491 9 Thiruthani 94450 00492 10 Pallipattu 94450 00493 11 Thiruvallur 94450 00494 12 Uthukottai 94450 00495 13 Poonamallee 94450 00496 3 Kancheepuram ********************** 14 Kancheepuram 94450 00497 15 Uthiramerur 94450 00498 16 Sriperumbudur 94450 00499 17 Chengalpattu 94450 00500 18 Thirkkalukunram 94450 00501 19 Tambaram 94450 00502 20 Madurantakam 94450 00503 21 Cheyyur 94450 00504 4 Vellore ********************** 22 Arcot 94450 00505 23 Valaja 94450 00506 24 Arakkonam 94450 00507 25 Vellore 94450 00508 26 Gudiyatham 94450 00509

இங்கு வெளியிடப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் போட்டித்தேர்வுக்கான பொதுத்தமிழுக்கான உத்தேசமான வினா - விடைகள். TNPSC ஆல் வெளியிடப்படும் விடைகளே முடிவானதாகும்.

தேர்வு நாள்: 14.06.2014 1. சரியாகப் பொருத்துக: நூலாசிரியர்  -  நூல் அ. சுரதா - 1.கொடிமுல்லை ஆ. முடியரசன் - 2.பள்ளிப்பறவைகள் இ. வாணிதாசன் - 3.எச்சில் இரவு ஈ. ஆலந்தூர் மோகனரங்கன் - 4.பூங்கொடி விடை: ஆ. 3 - 4 - 1 - 2 2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களுக்கான இலக்கணக்குறிப்புகளில் வரிசை மாறாத சரியான இணையைத்தேர்வு செய் விடை: அ. அன்மொழித்தொகை சேய்மைச்சுட்டு 3. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்   உயிரினும் ஓம்ப்பபடும் - இதில் பயின்று வரும் மோனைச்சொற்கள். விடை: அ. ஒழுக்கம் - ஒழுக்கம் 4. உடம்பார் அழியின் உயிரார் அழிவார்  - இச்செய்யுளில் வயின்று வரும் மோனை விடை: ஈ) பொழிப்புமோனை  5. மா முன் நிரையும் விள முன் நேரும் வருவது விடை: ஆ) இயற்சீர் வெண்டளை 6. பூவோடு சேர்ந்த நார்போல - உவமை உணர்த்தும் பொருள் விடை: இ) உயர்வு 7. நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக: அ. தி.ஜானகிராமன் - 1.சாயாவனம் ஆ. க.நா.சுப்பிரமணியன் - 2. செம்பருத்தி இ. சா.கந்தசாமி - 3 கரைந்த நிழல்கள் ஈ. அசோகமித்திரன் - 4. பெரியமனிதன் விடை: அ) 8. கற்பனைக்களஞ்சியம் என்று போற்றப்படுபவர் - விடை: ஈ) சிவப்பிரகாசசுவாமிகள் 9. சேரமான் பெருமா

நல்லாசிரியரின் நற்பண்புகள் யாவை?

வரவிருக்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளைப் (செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்) பெருமைப்படுத்தும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது. நன்னூல் கூறும் நல்லாசிரியர் பவணந்தியார், நன்னூலில் (நூற்.26-30) நல்ல ஆசிரியரின் பண்புகள், மாண்புகள் முதலியவற்றை விரிவாகவும் நுட்பமாகவும் தொகுத்துக் கூறியுள்ளார். ஆசிரியர், நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர் போன்ற மாண்புடையவர் என்கிறார். 1. நிலத்தின் மாண்புகள்: நிலம் ஓரிடத்தில் நின்று அதை முழுவதும் பார்க்கவே முடியாதபடி பரப்பினால் பெருமையுடையது. எவ்வளவு பாரத்தையும் சுமக்கும் திடமுடையது. மனிதர்கள் அகழ்தல், பிளத்தல் முதலிய குற்றங்களைச் செய்தாலும், அவற்றைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையுடையது. தக்க பருவதிலே உழவர்கள் செய்கின்ற உழவுத்தொழில் முயற்சிகளுக்குத் தகுந்தபடி அவர்களுக்குப் போதிய பலன்களைத் தரவல்லது. ஆசிரியரின் மாண்புகள்: தமது பரந்துபட்ட கல்வியறிவால் பெருமையுடையவர். தம்மிடம் வாதமிடுபவரைத் தாங்கும் திண்மை உடையவர். தம்மை இகழ்தல், எதிர்த்தல் போன்ற குற்றங்களையும் பொறுத்துக் கொள்பவர். தமது மாணவர்களுக்குத் தக்க பருவத்தில், தக்க அளவு, தகுந்த பயன்களைத