ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில்வெயிட்டேஜ் மதிப்பெண் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.பட்டதாரிஆசிரியர்களைப் பொருத்தவரை பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட் மற்றும் டிஇடி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்களைப் பொருத்தவரை பிளஸ்2 , டி.டி.எட்., மற்றும் டி.இ.டி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களைக் கணக்கிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
தற்போது அரசாணை எண்: 29 நாள் : 14.02.2014பள்ளிக்கல்வி (டிஆர்பி) துறை வெளியிடப்பட்ட அரசாணையில் இடஒதுக்கீட்டுப்பிரிவினர் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 82 முதல் 89 மதிப்பெண் வரை எடுத்தாலே தேர்ச்சிஎன தமிழக அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த இடஒதுக்கீட்டுப் பிரிவினர் டி.இ.டி. வெயிட்டேஜ் மொத்த மதிப்பெண்ணான 60மதிப்பெண்ணில் 42 மதிப்பெண் கிடைக்கும் என்று நம்பியிருந்தனர். ஆனால் தற்போது 55லிருந்து 60 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வெறும் 36 மதிப்பெண் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 முதல் 89மதிப்பெண் வரை பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 6 மதிப்பெண் குறைவாகவெறும் 36 மதிப்பெண் மட்டுமே கிடைக்கும். ஆனால் 89ஐவிட ஒரு மதிப்பெண்கூடுதலாக பெற்று 90 மதிப்பெண் பெற்றவர்கள் கூடுதலாக 6 மதிப்பெண்பெறுகின்றனர். இந்த வெயிட்டேஜ் முறையால் 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றஇடஒதுக்கீட்டுப்பிரிவினர் எவருக்கும் அரசு வேலை கிடைக்காது என்பதுஉறுதியாகியுள்ளது. 90 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்களுக்குமட்டுமே ஆசிரியர் நியமனத்தில் முன்னுரிமை கிடைக்கக்கூடிய நிலைஏற்பட்டுள்ளது.
இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே எனஇடஒதுக்கீட்டுப் பிரிவினர் மனம் நொந்துபோய் உள்ளனர்.அதாவது 60 முதல் 70சதவீதம் வரை வெயிட்டேஜ் மதிப்பெண் 42, 70 முதல் 80 வரை 48, 80 முதல் 90வரை 54, 90 முதல் 100 வரை 60 மதிப்பெண் என வெயிட்டேஜ் முறை உள்ளது.அதாவது ஒவ்வொரு 10 சதவீத மதிப்பெண் உயர்வுக்கும் 6 மதிப்பெண்வழங்கப்படுகிறது. ஆனால் 55 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள் அதாவது 82மதிப்பெண் முதல் 89 மதிப்பெண் பெற்றவர்கள் அதாவது 5 சதவீதவித்தியாசத்துக்கு மட்டும் 6 மதிப்பெண்களை வெயிட்டேஜ் முறையில் குறைத்துஅளிப்பது எவ்வகையில் நியாயம் என தேர்வர்கள் புலம்புகின்றனர்.தேர்வர்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று 55 சதவீதம் முதல் 70சதவீதம் வரை மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வெயிட்டேஜ்மதிப்பெண் 42 மதிப்பெண்கள் வழஙகும் வகையில் புதிய அரசாணையை வெளியிடவேண்டும்.
மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிநியமனம்பெற்றவர்கள் தவிர மற்றவர்களை காத்திருப்போர் பட்டியலில் வைத்து அடுத்துவரும் பணிநியமன்ங்களை பணியமர்த்தவேண்டும். காத்திருப்பவர்கள் அனைவரும்பணிநியமனம் பெற்ற பிறகே புதிதாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தவேண்டும்என்பதே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய தேர்வகளின் எதிர்பார்ப்பாகஉள்ளது. இவற்றை செய்யவில்லை என்றால் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குஅளிக்கப்பட்ட சலுகை வெறும் கண்துடைப்பு என்று தேர்வர்கள் கூறுவதுஉண்மையாகிவிடும். தேர்வர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்குமா?
-YAZHINIJITEESH
This comment has been removed by the author.
ReplyDeleteIda othukeetu pirivinaruku 39 weightae enbathu namakke theriyudu . Antha athigarigalukku theriyavillaya ? Nithayam case file pannuvom.
ReplyDeleteபுலம்பாதீங்க! அடுத்த தடவை நல்லா படிச்சி அதிகமா மார்க் வாங்கி அரசுப்பணிக்கு போங்க!
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை யாருக்காகவும் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்கவேக்கூடாது. நீங்களெல்லாம் ஆசிரியர்கள் தானே? பெயில் ஆயிட்டு வேலை வேண்டும்ன்னு அலையிறீங்களே?