Skip to main content

Posts

Showing posts from July, 2013
இனிய தமிழில் இந்திய தேசிய கீதம் - இது நமது இந்திய தேசிய கீதமான (வங்க மொழி - ஜன கண மன) பாடலுக்கு என்றுமே ஈடாகாது, மற்றும் மாற்றம் கிடையாது: வங்க மொழியினில் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்திய தேசிய கீதம்... ஜன கண மன அதிநாயக ஜெய ஹே பாரத பாக்ய விதாதா. பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா திராவிட உத்கல வங்கா. விந்திய இமாச்சல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா. தவ ஷுப நாமே ஜாகே, தவ ஷுப ஆஷிஷ மாகே, காஹே தவ ஜெய காதா. ஜன கண மங்கள தாயக ஜெயஹே பாரத பாக்ய விதாதா. ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே. இதன் நேரடி தமிழாக்கம்... மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே ! இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ.. பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம், திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..விந்திய இமாசல யமுனா கங்கா மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன.. உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள
அரசு ஊழியர்களுக்கான ஜூலை 2013-க்கான அகவிலைப்படி விலைவாசி உயர்வின் காரணமாக 10 சதவீதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது:  ஜூன் 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து ஜூலை 2013 வரை 9.79 புள்ளிகள் அதிகரித்து 90.62ஆக உள்ளது. எனவே AICPIN குறியீட்டு எண் படி ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 10% என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என மத்திய அரசு பணியாளர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2013 முதல் உயர்த்தக்கூடும். மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும் உயர்த்தும்.  அத்தியாவாசி பொருட்கள்களின் விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வால் சற்று நிவாரணம் கிடைக்கும் என்பதால் அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.  
வருமான வரி : கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5 தேதி வரை கால அவகாசம்: இந்திய குடிமக்கள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதியே கடைசி நாளாகும். கடைசி நாட்களில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கால அவகாசத்தை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு வசதியாகவே, கடைசி தேதியை ஆகஸ்ட் 5ம் தேதி வரை நீட்டித்துள்ளோம். இந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி வரை 92 லட்சம் பேர் ஆன்லைனிலேயே தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும் என்று நிதித் துறை அறிவித்துள்ளது. இதனால், இறுதி நாளான இன்று வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாமல் போனவர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.  
கல்வி கட்டண விவரத்தை இணையதளத்தில் வெளியிட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கெடு: கல்வி கட்டண விபரங்களை ஒரு மாதத்திற்குள் அந்தந்த பள்ளியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சிபிஎஸ்இ உடன் இணைக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளி தொடர்பான அனைத்து விவரங்களையும் தங்களது பள்ளி இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சென்ட்ரல் போர்டு ஆப் செக்கண்டரி எஜூகேஷன் (சிபிஎஸ்இ) உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவியரிடம் இருந்து பெறப்படுகின்ற கல்வி கட்டணம், ஆசிரியர்களின் கல்வித்தகுதி, இதர விபரங்கள், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் முறை, நிர்வாக ரீதியில் உறுப்பினர் விபரங்கள் ஆகியவை வெளியிடப்பட வேண்டும். ஒரு மாதத்தில் இந்த விபரங்களை வெளியிடாத பள்ளிகளின் மாணவ, மாணவியர் வாரிய தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பல பள்ளிகள் இன்னமும் தங்களுக்கென்று தனியாக இணையதளம் எதனையும் தொடங்கவில்லை. இந்த விபரம் தெரியவந்த நிலை யில் சிபிஎஸ்இ துணை செயலாளர் யு.சி.போத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பள்ளியின் இ
ஆசிரியர் தகுதித்தேர்விற்கு ஏற்ப பி.எட். படிப்பில் புதிய பாடங்கள் அறிமுகம் : ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் பி.எட். படிப்பில் புதிய பாடங்களை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற கல்விக் குழு கூட்டத்தில் இந்த புதிய பாடங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்விக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் அளித்த பேட்டி: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் டிஇடி தகுதித் தேர்வில், மிகக் குறைவான சதவீதத்தினரே தகுதிப் பெற்று வருகின்றனர். இந்த நிலையை மாற்றும் வகையில், பி.எட். படிக்கும் மாணவர்கள் படிப்பை முடித்த பிறகு டிஇடி தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், இந்த படிப்பில் புதிய பாடப் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு, "கல்வியில் புதுமை மற்றும் பாடத்திட்ட மேம்பாடு' என்ற பாடத் திட்டமும் வரும் கல்வியாண்டுமுதல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின
சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியர்களுக்கு யோகா பயிற்சி: சென்னை மருத்துவக் கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, யோகா பயிற்சி வழங்கப்படுகிறது. தொடர்ந்து பல வாரங்களுக்கு, இந்த பயிற்சி, சென்னை மருத்துவக் கல்லூரியில் வழங்கப்பட உள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். டாக்டர்களே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், நோயாளிகளின் நிலை மோசமாகிவிடும். இப்பிரச்னை வராமல், முளையிலேயே கிள்ளி எறியும் விதமாக, சென்னை மருத்துவ கல்லூரியில், கல்லூரி செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, யோகா பயிற்சி வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முதல், யோகா பயிற்சி துவக்கப்பட்டது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, அரசு யோகாசனம் மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் கூடுதல் பேராசிரியர், வெங்கடேஸ்வரன் பயிற்சி வழங்கினார். இதில், சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், கூடுதல் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ளோருக்கு அருமையான வாய்ப்புகள்: இன்றைய நிலையில், விளையாட்டுத் துறை பணிகள், நல்ல சம்பளம் கிடைக்கக்கூடியவைகளாக திகழ்கின்றன. ஒருவர், விளையாட்டு விஞ்ஞானி, பத்திரிகையாளர், பள்ளியில் தேர்ந்த விளையாட்டு பயிற்சியாளர், விளையாட்டு சார்ந்த ஊட்டச்சத்து நிபுணர் உள்ளிட்ட பலவிதமான பணிகளைப் பெறலாம். விளையாட்டுத் துறையில், ஆராய்ச்சி நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன மற்றும் விளையாட்டு ஆணைய மையங்கள், வாய்ப்புகளை வழங்க திறந்து கிடக்கின்றன. மேலும், பயிற்சிபெற்ற பட்டதாரிகளுக்கு, பெரியளவிலான ஸ்போர்ட்ஸ் கிளப்புகள், ஜிம்கள் மற்றும் பிட்னஸ் மையங்கள் ஆகியவை, பல்வேறான வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன. கல்வியைத் தொடங்குதல் இந்தியா முழுவதும், பலவிதமான உடற்பயிற்சி கல்வி கல்லூரிகள் செயல்படுகின்றன. பள்ளிப் படிப்பை முடித்த ஒருவர், 3 அல்லது 4 ஆண்டுகளைக் கொண்ட ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை, விளையாட்டுத் துறையில் மேற்கொள்ளலாம். பிசிகல் எஜுகேஷன் துறையில் இளநிலைப் படிப்பிற்கான சேர்க்கை நடைமுறைகள், பல்கலைகளுக்கிடையே வேறுபட்டாலும், படிப்பின் அடிப்படைகள் அனைத்திலும்
01.01.2013 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியரில் இருந்துமுதுநிலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்விற்கு தகுதியான திருத்திய பட்டியல்: 1. கணிதம்  2. இயற்பியல்
பள்ளிக்கல்வி இயக்குநர் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு : பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கட்டுபாட்டிலுள்ள துறைகளின் இயக்குநர்கள் மாற்றி தமிழக அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் அவர்களும், திரு. தேவராஜன் அவர்கள் அரசுத் தேர்வுகள் துறை இயக்குனராகவும், தொடக்கக் கல்வித் துறை  இயக்குநராக திரு.இளங்கோவன் அவர்களையும், திரு.சங்கர் அவர்களை அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனராகவும், திருமதி. வசுந்திரதேவி அவர்களை ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராகவும், திரு.கண்ணப்பன் அவர்களை ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வியியல் துறை இயக்குனராகவும், திரு. பிச்சை அவர்களை மெட்ரிக் பள்ளி இயக்குனராகவும், திரு.அன்பழகன் அவர்களை பாடநூல் கழக இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.   
ஒரு துறை /நிறுவனத்தில் இருந்து வேறு துறைக்கு மாறுபவர்கள் வருங்கால வைப்புநிதி கணக்கை  Onlineல் தாங்களே மாற்றலாம்-புதிய சேவை அறிமுகம்: ஆன்லைனில் பிஎப் கணக்குகளை மாற்றும் வசதி, வரும் சுதந்திர தினம் முதல், நாடு முழுவதும் அமலாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) அதிகாரிகள் கூறியதாவது: தகவல் தொழில்நுட்பத் துறையின் பணியாற்றுபவர்கள் அடிக்கடி நிறுவனத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இதுபோன்று பல்வேறு துறையினர் உள்ளனர். வேறு சிலர் சம்ளம் உள்ளிட்ட காரணங்களுக்காக வேறு நிறுவனத்துக்கு மாறுகின்றனர். இவர்கள் தங்களுடைய பிஎப் கணக்கை மாற்ற கஷ்டப்பட வேண்டியுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை அளித்து ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அந்த நிலையை மாற்றி, பிஎப் அலுவலகங்களை தேடி அலையாமல் நேரடியாக இணையதளத்தில் பிஎப் கணக்கை மாற்றக் கோரும் வசதி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அறிமுகமாகிறது. நிறுவனம் மாறியவர்கள் தங்கள் புதிய நிறுவனத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வச
என்ஜினீயரிங் கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்ற:  தமிழ்நாடு முழுவதும் 564 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன.இந்த கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கான இடங்களுக்கு மாணவர் சேர்க்கை முடிவடைந்தது.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கல்லூரிகள் ஏற்கனவே திறந்து. ஆனால் பல கல்லூரிகளில் இடங்கள் காலியாக கிடக்கின்றன.இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக உத்தரவுப்படி நாளை (வியாழக்கிழமை) திறக்கின்றன. அதாவது பி.இ. முதலாம் ஆண்டு மாணவ–மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்குகின்றன.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் மாற்றி அமைக்காததை கண்டித்து 3கட்ட போராட்டம் அறிவித்தது தமிழக ஆசிரியர் கூட்டணி: இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் பரிசீலனை செய்யப்படாததை கண்டித்து மூன்று கட்ட போராட்டங்கள் நடத்த, தமிழக ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. ஆறாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, ஜூலை 22 ல் அரசு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றமோ, தர ஊதிய மாற்றமோ பரிசீலனை செய்யவில்லை. இதை கண்டித்து 3 கட்ட போராட்டம் நடத்த தமிழக ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக ஆக.7ல் வட்டாரத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, இரண்டாம் கட்டமாக செப்., 14 ல் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. மூன்றாம் கட்ட போராட்டமாக தொடக்க கல்வி முதல் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலை ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டுப்போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்விய
கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவு: தமிழகத்தில் பின்பற்றப்படும், 69 சதவீத இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட, தகுதி வாய்ந்த மாணவர்களுக்காக, இந்த ஆண்டும் கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்க வேண்டும்" என மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. மண்டல கமிஷன் வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், "வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில், இடஒதுக்கீடானது, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்த இடஒதுக்கீட்டு முறையால், ஒவ்வொரு ஆண்டும், மருத்துவ படிப்பில் சேர முடியாமல் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில், ஆண்டுதோறும் கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 17 ஆண்டுகளாக, தொடர்ந்து இது நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள, 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையால், இந்த ஆண்டு, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர முடியாமல் போன, ஹர்ஷினி என்ற மாணவி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த
போலி சான்றிதழ்: மாநகராட்சி ஆசிரியர் நியமனத்தில் புது சர்ச்சை...!வெளிச்சத்திற்கு வருகிறது அடுத்த மோசடி- தினமலர்  சென்னை மாநகராட்சியில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பலர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருவதால், சிக்குவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 122 துவக்க பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 36 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள், 30 மழலையர் பள்ளிகள், ஒரு உருது மேல்நிலை பள்ளி, ஒரு தெலுங்கு மேல்நிலை பள்ளி என, மொத்தம் 284 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், 5,000க்கும் அதிகமான ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். துவக்க பள்ளிகளில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்கள், 1995ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பல்வேறு கட்டங்களில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். இத
G.O.No.237 Dt.22.7.2013 - Grant of One Additional Increment of 3 % பற்றிய ஓர் விளக்கம்: அரசாணையின் தலைப்பிலேயே "Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade / Special Grade in the Revised Scales of pay" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. in the Revised scales of pay என்பது கவனிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.  அரசாணையின் முதல் பத்தியில் முந்தைய அரசானை 234 பற்றி கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பத்தியில் சங்கங்களின் கோரிக்கை பற்றியும் குறைதீர்க்கும் பிரிவின் முடிவு பற்றியும் கூறப்பட்டுள்ளது.  பத்தி 3 இல் 1.1.2006 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Revised scales of pay - இல் selection grade/special grade நிலையை அடையும் போது an additional increment benefit (3% + 3%) பெற அரசு வகை உத்தரவிட்டுள்ளது.  நமது விளக்கம்: 31.12.2005 - இன் போது பணியில் இருந்தவர்கள் 1.1.2006 இல் புதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்திருப்பார்கள். (தொகுப்பூதியதாரர்கள் 1.6.2006 இல் ) 1.1.2006 அன்று தேர்வுநிலை பெறாத இடைநிலை ஆசிரியர்கள் 5200 -20200 +G.P.2800 லும், தேர்வுநிலை
முதுகலை ஆசிரியர் தேர்வு கீ ஆன்சர்: இணையதளத்தில் வெளியீடு:   DOWNLOAD ANSWER KEY CLICK HERE அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை கடந்த 21-ந்தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைவருக்கும் அவர்களின் விடைத்தால் நகலும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வுக்கான கீ ஆன்சர் ஐ ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்  வினா வகை (ஏ, பி, சி, டி) வாரியாக தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்கள் விடைத்தாள் நகலை பார்த்து தங்கள் மதிப்பெண்ணை துல்லியமாக அறிய முடியும். தேர்வு முடிவை ஒரு மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது
மருத்துவ சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கு 19% இடம் ஒதுக்க உத்தரவு: மருத்துவ படிப்பில், பொதுப் பிரிவினருக்கு கூடுதலாக 19% இடங்களை ஒதுக்கீடு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் உள்ளது. இதனால், நல்ல மதிப்பெண் எடுத்தும், இடம் கிடைக்காமல், பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் பாதிக்கப்படுகின்றனர். இதனை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த மாணவி ஹர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர, 69% இட ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் உள்ளது. இதனால், நல்ல மதிப்பெண் எடுத்த பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கடந்தாண்டைப் போல 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையால் பாதிக்கப்படும் பொதுப் பிரிவினருக்கு 19 சதவீத கூடுதல்  இடம் ஒதுக்க உத்தரவிட்டுள்ளது.  
அஞ்சல் வழியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பள்ளி, கல்லூரி மற்றும் அஞ்சல் வழியில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, முதல் வகுப்பில் இருந்து, உயர்கல்வி வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் வகுப்பிற்கேற்ப ஆண்டிற்கு, 500 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை, கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மற்றும் அஞ்சல் வழியில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் இந்த கல்வி உதவித் தொகை பெற தகுதியானவர்கள். வேறு எந்த அரசு துறையிடமிருந்து உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. இதற்கான விண்ணப்ப படிவங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள், "மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், ஆட்சியர் அலுவலக வளாகம், திருவள்ளூர்" என்ற முகவரியில் சமர்ப்பிக்க வே
திங்கள் கிழமை தோறும் மாணவர்கள் அணிவகுப்பு: பள்ளிக்கல்வி துறை உத்தரவு: வாரந்தோறும் திங்கள் கிழமை பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர்கள் பங்கு பெறும் அணிவகுப்பு நடத்த, தமிழக பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அணிவகுப்பில் மாணவ, மாணவியர்களின் வருகை எண்ணிக்கை, தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கொடியேற்றம், கொடிபாடல், உறுதிமொழி, சர்வ சமய வழிபாடு, திருக் குறள் மற்றும் விளக்கம், இன்றைய சிந்தனை, தமிழ் மற்றும் ஆங்கில செய்திகளை படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு குறித்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்த அணிவகுப்பு பயிற்சி முகாமை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பொன்னம்மாள் துவக்கி வைத்தார்.  
மாணவர்களே உங்கள் கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்: ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்" என்பது பழமொழி. ஆடி மாதம் துவங்கியது முதல், பலத்த காற்று வீசுகிறது. ரோட்டோரத்தில் மண் அகற்றப்படாமல் உள்ளதால், காற்றின் வேகத்துக்கு புழுதி படலமாக மாறி, வாகன ஓட்டிகள், நடந்து செல்வோரின் கண்களை பதம் பார்க்கிறது. சைக்கிளில் செல்லும் மாணவர்கள், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர், பலத்த காற்றில் சிக்கி திக்குமுக்காடுகின்றனர். அதிகளவு காற்று வீசும் நேரங்களில், கண்களை பாதுகாப்பது குறித்த போதிய விழிப்புணர்வு பலரிடம் இருப்பதில்லை. கண் மருத்துவர் ஒருவர் கூறியதாவது: "ஒளியை உணரும் மென்மையான உறுப்பு கண்கள்; பார்க்கும் திறனை அளிக்கிறது. கண் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். கண்கள் ஆரோக்கியத்துக்கு வைட்டமின் "சி" அவசியம். பால், மீன், முட்டைகோஸ், கேரட், கொத்தமல்லி, பப்பாளி, தக்காளி, சாத்துக்குடி, திராட்சை, இளநீர், நெல்லிக்காய், மாம்பழம் ஆகிய வைட்டமின் நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். அனைத்து வகை கீரைகளும் ஆரோக்கியத்துக்கு ஏற்றது. அவற்றை தவிர்க்கக்கூடாது. கண்ணில் தூசி விழுந்தால், க
குறிக்கோளை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும்: முன்னாள் டிஜிபி., நட்ராஜ் அறிவுரை: குறிக்கோளை உணர்ந்து, அதனை முன் வைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம்" என கல்லிடைக்குறிச்சி பள்ளியில் நடந்த விழாவில் தமிழக முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் பேசினார். கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 23ம் தேதி துவங்கி, பல்வேறு நிகழ்வுகளாக ஆறு நாட்கள் நடந்து வந்த நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா நேற்று நடந்தது. தமிழக முன்னாள் டி.ஜி.பி.,யும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணய குழு முன்னாள் தலைவருமான நட்ராஜ் நூற்றாண்டு நினைவு கட்டடத்தை திறந்து வைத்து பேசுகையில், "எல்லோரையும் உருவாக்கிய பெருமை கொண்டது கல்வி கூடம். திலகர் என்றதும் ஊக்கம் வரும். ரத்த நாளங்கள் உறுதி பெறும். ஒவ்வொருவரிடமும் நல்ல நம்பிக்கை, குணாதிசயம் இருக்க வேண்டும். அதை வளர்ப்பது கல்வி கூடம். சேவை மனப்பான்மையை உருவாக்கும் முக்கிய இடம் பள்ளிக் கூடம். எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டியது தான் தற்போது நாட்டிற்கு தேவை. மாணவர்கள் குறிக்கோளை உணர்ந்து, அதனை முன் வைத்து செயல்பட வேண்டும். அப்போது தான் வெற்றி இலக்
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டை தலைமை ஆசிரியர்கள் பாரபச்சமின்றி கையாளவேண்டும்-இயக்குனர் உத்தரவு: அரசு பள்ளிக்கு, உரிய நேரத்திற்குள் ஆசிரியர்கள் வருகிறார்களா, என்பதை கண்டறிய, வருகை பதிவேட்டை, பாரபட்சமின்றி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்" என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் உரிய நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை. காலையில் தாமதமாக வரும் ஆசிரியர்கள், மாலையில் முன்கூட்டியே செல்வதாக புகார்கள் எழுகின்றன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.    தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்கள், கோர்ட் வழக்கு சார்ந்த ஆவணங்களுக்கு உரிய நாட்களில் பதில் தர வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களை உடல், மன, சமுதாய ரீதியாக நல்வழிப்படுத்தவேண்டும். பாடம் நடத்தும்போதே, பொது அறிவு, நாட்டுநடப்பு, அறிவுசார் திறன் போட்டி, ஆளுமைத்திறன் போன்ற சிறந்த ஆற்றல்களை வளர்க்க வேண்டும்.    தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் போன்றவற்றை, இசை ஆசிரியர்களை கொண்டு, பாட வைத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு
 பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு: Retotalling results click here பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.மதிப்பெண்ணில் மாறுதல் உள்ள மாணவர்கள் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 5 முதல் 8-ஆம் தேதி வரை சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். மறுகூட்டல் கட்டணம் கணக்கில் வரப்பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இப்போது முடிவுகள் வெளியிடப்படுகிறது. மறுகூட்டல் முடிவு பெறாத மாணவர்கள், கட்டணம் செலுத்தியதற்கான பாரத ஸ்டேட் வங்கி சலானின் பின்புறம் தங்களது பதிவெண்ணைக் குறிப்பிட்டு நேரிலோ அல்லது தபாலிலோ இணை இயக்குநர் (பணியாளர்), அரசுத் தேர்வுகள் இயக்ககம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் மட்டும் போதும்; மதிய உணவை கண்காணிக்க தேவையில்லை-கோர்ட் அதிரடி:   பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கடமை பாடம் சொல்லி தருவது மட்டும் தான்; மதிய உணவு சமைக்கும் முறையை அவர்கள் கண்காணிக்க தேவையில்லை என அலகாபாத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பீகாரில் கடந்த வாரம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அலகாபாத் ஐகோர்ட் இதனை தெரிவித்துள்ளது. ஐகோர்ட் விளக்கம் : ரசாயன பொருள் கலந்த விஷத்தன்மை உள்ள உணவை சாப்பிட்டு பீகாரில் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பீகாரில் சுமார் 3 லட்சம் பள்ளி ஆசிரியர்கள் மதிய உணவு திட்டத்தை புறக்கணித்துள்ளனர். இந்த விவகாரத்தின் எதிரொலியாக உத்திர பிரதேசத்தின் மீருட் பகுதியைச் சேர்ந்த பிரதானச்சாரியா பரிஷித் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அதன் பின்னர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றம் ஆசிரியர்களின் கடமை மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருவது மட்டுமே