இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் மாற்றி அமைக்காததை கண்டித்து 3கட்ட போராட்டம் அறிவித்தது தமிழக ஆசிரியர் கூட்டணி:
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் பரிசீலனை செய்யப்படாததை கண்டித்து மூன்று கட்ட போராட்டங்கள் நடத்த, தமிழக ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.ஆறாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, ஜூலை 22 ல் அரசு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றமோ, தர ஊதிய மாற்றமோ பரிசீலனை செய்யவில்லை.
இதை கண்டித்து 3 கட்ட போராட்டம் நடத்த தமிழக ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக ஆக.7ல் வட்டாரத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, இரண்டாம் கட்டமாக செப்., 14 ல் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மூன்றாம் கட்ட போராட்டமாக தொடக்க கல்வி முதல் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலை ஆசிரியர் சங்கங்களை ஒருங்கிணைத்து கூட்டுப்போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொடக்கக் கல்வியில் ஆங்கிலவழிக்கல்வி திணிப்பை கைவிடவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளது, என மாநில பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment