மருத்துவ சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கு 19% இடம் ஒதுக்க உத்தரவு:
மருத்துவ படிப்பில், பொதுப் பிரிவினருக்கு கூடுதலாக 19% இடங்களை ஒதுக்கீடு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் உள்ளது. இதனால், நல்ல மதிப்பெண் எடுத்தும், இடம் கிடைக்காமல், பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த மாணவி ஹர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர, 69% இட ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் உள்ளது. இதனால், நல்ல மதிப்பெண் எடுத்த பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, கடந்தாண்டைப் போல 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையால் பாதிக்கப்படும் பொதுப் பிரிவினருக்கு 19 சதவீத கூடுதல் இடம் ஒதுக்க உத்தரவிட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment