குறிக்கோளை உணர்ந்து மாணவர்கள் செயல்பட வேண்டும்: முன்னாள் டிஜிபி., நட்ராஜ் அறிவுரை:
குறிக்கோளை உணர்ந்து, அதனை முன் வைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம்" என கல்லிடைக்குறிச்சி பள்ளியில் நடந்த விழாவில் தமிழக முன்னாள் டி.ஜி.பி., நட்ராஜ் பேசினார்.கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 23ம் தேதி துவங்கி, பல்வேறு நிகழ்வுகளாக ஆறு நாட்கள் நடந்து வந்த நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா நேற்று நடந்தது. தமிழக முன்னாள் டி.ஜி.பி.,யும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணய குழு முன்னாள் தலைவருமான நட்ராஜ் நூற்றாண்டு நினைவு கட்டடத்தை திறந்து வைத்து பேசுகையில்,
"எல்லோரையும் உருவாக்கிய பெருமை கொண்டது கல்வி கூடம். திலகர் என்றதும் ஊக்கம் வரும். ரத்த நாளங்கள் உறுதி பெறும். ஒவ்வொருவரிடமும் நல்ல நம்பிக்கை, குணாதிசயம் இருக்க வேண்டும். அதை வளர்ப்பது கல்வி கூடம். சேவை மனப்பான்மையை உருவாக்கும் முக்கிய இடம் பள்ளிக் கூடம்.
எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டியது தான் தற்போது நாட்டிற்கு தேவை. மாணவர்கள் குறிக்கோளை உணர்ந்து, அதனை முன் வைத்து செயல்பட வேண்டும். அப்போது தான் வெற்றி இலக்கை அடைய முடியும்" என்றார்.
Comments
Post a Comment