அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டை தலைமை ஆசிரியர்கள் பாரபச்சமின்றி கையாளவேண்டும்-இயக்குனர் உத்தரவு:
அரசு பள்ளிக்கு, உரிய நேரத்திற்குள் ஆசிரியர்கள் வருகிறார்களா, என்பதை கண்டறிய, வருகை பதிவேட்டை, பாரபட்சமின்றி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்" என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் உரிய நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை. காலையில் தாமதமாக வரும் ஆசிரியர்கள், மாலையில் முன்கூட்டியே செல்வதாக புகார்கள் எழுகின்றன. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்கள், கோர்ட் வழக்கு சார்ந்த ஆவணங்களுக்கு உரிய நாட்களில் பதில் தர வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களை உடல், மன, சமுதாய ரீதியாக நல்வழிப்படுத்தவேண்டும். பாடம் நடத்தும்போதே, பொது அறிவு, நாட்டுநடப்பு, அறிவுசார் திறன் போட்டி, ஆளுமைத்திறன் போன்ற சிறந்த ஆற்றல்களை வளர்க்க வேண்டும்.
தமிழ்தாய் வாழ்த்து, தேசிய கீதம் போன்றவற்றை, இசை ஆசிரியர்களை கொண்டு, பாட வைத்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி தேவராஜன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment