பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் வெளியீடு:
Retotalling results click here
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.மதிப்பெண்ணில் மாறுதல் உள்ள மாணவர்கள் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 5 முதல் 8-ஆம் தேதி வரை சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
மறுகூட்டல் கட்டணம் கணக்கில் வரப்பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இப்போது முடிவுகள் வெளியிடப்படுகிறது. மறுகூட்டல் முடிவு பெறாத மாணவர்கள், கட்டணம் செலுத்தியதற்கான பாரத ஸ்டேட் வங்கி சலானின் பின்புறம் தங்களது பதிவெண்ணைக் குறிப்பிட்டு நேரிலோ அல்லது தபாலிலோ இணை இயக்குநர் (பணியாளர்), அரசுத் தேர்வுகள் இயக்ககம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment