ஒரு துறை /நிறுவனத்தில் இருந்து வேறு துறைக்கு மாறுபவர்கள் வருங்கால வைப்புநிதி கணக்கை Onlineல் தாங்களே மாற்றலாம்-புதிய சேவை அறிமுகம்:
ஆன்லைனில் பிஎப் கணக்குகளை மாற்றும் வசதி, வரும் சுதந்திர தினம் முதல், நாடு முழுவதும் அமலாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) அதிகாரிகள் கூறியதாவது:
தகவல் தொழில்நுட்பத் துறையின் பணியாற்றுபவர்கள் அடிக்கடி நிறுவனத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இதுபோன்று பல்வேறு துறையினர் உள்ளனர். வேறு சிலர் சம்ளம் உள்ளிட்ட காரணங்களுக்காக வேறு நிறுவனத்துக்கு மாறுகின்றனர். இவர்கள் தங்களுடைய பிஎப் கணக்கை மாற்ற கஷ்டப்பட வேண்டியுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை அளித்து ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அந்த நிலையை மாற்றி, பிஎப் அலுவலகங்களை தேடி அலையாமல் நேரடியாக இணையதளத்தில் பிஎப் கணக்கை மாற்றக் கோரும் வசதி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அறிமுகமாகிறது. நிறுவனம் மாறியவர்கள் தங்கள் புதிய நிறுவனத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வசதியை பயன்படுத்துவதற்கு டிஜிட்டல் கையெழுத்து பதிவு அவசியம். இதனால் அடுத்த 2 வாரங்களுக்கு நிறுவன உரிமையாளர்களின் டிஜிட்டல் கையெழுத்தை பதிவு செய்யும் பணி நடக்க உள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் ஆண்டுதோறும் நிறுவனம் மாற்றும் 13 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
Comments
Post a Comment