அஞ்சல் வழியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை:
பள்ளி, கல்லூரி மற்றும் அஞ்சல் வழியில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு, முதல் வகுப்பில் இருந்து, உயர்கல்வி வரை பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் வகுப்பிற்கேற்ப ஆண்டிற்கு, 500 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை, கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரி மற்றும் அஞ்சல் வழியில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் இந்த கல்வி உதவித் தொகை பெற தகுதியானவர்கள். வேறு எந்த அரசு துறையிடமிருந்து உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.
இதற்கான விண்ணப்ப படிவங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் ஆகஸ்ட் 16ம் தேதிக்குள், "மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், ஆட்சியர் அலுவலக வளாகம், திருவள்ளூர்" என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்தகவலை, ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.
Comments
Post a Comment