Skip to main content

Posts

Showing posts from June, 2014

ஆசிரியர் பயிற்றுனர்கள் கூண்டோடு மாற்றம் உண்ணாவிரதம் இருக்க ஆசிரியர்கள் முடிவு:

தமிழகம் முழுவதும் 4,587ஆசிரியர் பயிற்றுனர்கள் கூண்டோடு மாற்றப்பட்டதற்கு கண்ட னம் தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசி ரியர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டத் தில் முடிவு செய்யப்பட் டது.சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி தெப்பக்குளம் பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. திருச்சி மவட்ட செயலாளர் மகேஷ் வரவேற்றார். மாவட்ட பொரு ளாளர் மணிவண்ணன், மாநில செய்தி தொடர் பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலை வரும், நிறுவனருமான சம்பத் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவி, மாநில பொருளாளர் கார்த்திகேசன், மாநில தலைமை நிலைய செயலாளர் வேலுச் சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், ஆசிரியர் பயிற்றுனர்கள் 3 ஆண்டுக ளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி செய்யக்கூடாது என்ற ஆணையை உடனே ரத்து செய்யவேண்டும். அரசு ஆணை எண் 137ன் படி அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் மாறுதல் நெறிமுறைகள் உள்ளடக்கி யது என்பதால் ஒட்டுமொத்தமாக 4,587 ஆசி ரியர் பயிற்றுனர்களுக்கும் மாறுதல் அளித்திருப்பது விதிக்கு புறம்பானது என்பதையும், இதனால் ஒவ் வொரு வட்டாரத்திலும் புதிய பணி இடத்தி

புதிய மருத்துவ காப்பீட்டில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு:

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர ஓய்வூதியதாரர்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 1-7-2014 முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய படிவத்தை ஜூன் 30ககுள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான காலக்கெடு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, படிவங்களை இதுவரை அளிக்காத ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் 31ம் தேதிக்குள் ஓய்வூதியம் பெறும் அலுவலகத் தில் பொதுத்துறை வங்கி கிளையில் அளித்து, அதன் ஒரு நகலை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் கையொப்பத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த நகலை, அடையாள அட்டை வழங்கப்படும் வரை பணம் செலவின்றி மருத்துவச் சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதல்வர் ஜெயலலிதா வழங்குகிறார் பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசு:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு 4ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்குகிறார். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தமிழக அரசு ஆண்டு தோறும் பரிசகள் வழங்கி பாராட்டி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் ஊத்தங்கரை மாணவி 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலாவது இடத்தை பிடித்தார். தர்மபுரி மாணவி 1192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தார். நாமக்கல் துளசிராஜன், சென்னை நித்யா ஆகியோர் 1191 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3ம் இடத்தை பிடித்தனர்.பத்தாம் வகுப்பு தேர்வில் 465 மாணவ மாணவியர் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். அவற்றில் 19பேர் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத் தில் முதலாவது இடத்தை பிடித்தனர். 125 பேர் தலா 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தனர். 321 பேர் தலா 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடத்தை பிடித்துள்ளனர். மேற்கண்ட பிளஸ் 2 மற

முதல் பருவத் தேர்வு கேள்வித்தாள் தயாரிக்க வல்லுநர் குழு:

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்ப தேர்வுகள், ஆண்டு தேர்வுகள் ஆகியவற்றுக்கான கேள்வித்தாள்களை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தயாரிக்கின்றனர். தற்போது சமச்சீர் கல்வி முறையும், முப்பருவ முறையும் உள்ளது. 10மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான கேள்வித்தாள்கள் மட்டுமே அரசு தேர்வுகள் இயக்ககத்தின் மூலம் அச்சிட்டு வழங்கப்படும். பருவ தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை கடந்த ஆண்டு முதல் அரசுத் தேர்வுகள் இயக்ககமே வல்லுனர் குழுவை கொண்டு தயாரித்தது.அனைத்து வகை பள்ளிகளுக்கும் இந்த கேள்வித்தாள் அடிப்படையில் பருவமுறைத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. வரும் செப்டம்பர் 10 அல்லது 12ம் தேதியில், முதல் பருவ தேர்வு தொடங்க வேண்டும். அதனால் அதற்கான கேள்வித்தாள்களை வடிவமைக்கும் பணியை தேர்வுத் துறை இப்போதே தொடங்கிவிட்டது. இதற்காக சிறப்பு ஆசிரியர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

90 சதவீத பள்ளிகளில் அன்னையர் குழு முடக்கம்:

பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட அன்னையர் குழு திட்டம், 90 சதவீத பள்ளிகளில் உருவாக்கப்படவில்லை. மீதியிருக்கும், 10 சதவீத பள்ளிகளிலும், பெயரளவில் மட்டுமே, குழுவின் செயல்பாடுகள் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது.கோவை மாவட்டத்தில், 268 மெட்ரிக் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு மாணவர்களின் தாய்மார்களை ஒருங்கிணைத்து, அன்னையர் குழு உருவாக்க வேண்டுமென, கடந்தாண்டு பள்ளிக்கல்வித் துறை சார்பில், அரசாணை வெளியானது. இதன்படி, மாவட்டந்தோறும் உள்ள தனியார் பள்ளிகளில், அன்னையர் குழு உருவாக்க, முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக உத்தரவிடப்பட்டது. இந்த குழு, வாரத்திற்கு ஒருமுறை கூடுவதோடு, மாணவர்களது பிரச்னைகள், பள்ளிகளின் அடிப்படை வசதிகளில் குறைபாடு போன்றவற்றை நிர்வாகத்திடம் தெரியப்படுத்தி, அறிக்கை புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என, குறிப்பிடப்பட்டது. இருப்பினும், கோவை மாவட்டத்தில், 90 சதவீத பள்ளிகளில், அன்னையர் குழு உருவாக்கப்படவில்லை என, பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர்.கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பெற்றோர் நலச்சங்க தலைவர் மணிமோகன் கூறுகையில், '

இட மாறுதல் கலந்தாய்வில் குழப்பம்: 'ஆன்லைன்' குளறுபடியால் ஆசிரியர்கள் ஆவேசம்:

திருப்பூரில் நடந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், நீலகிரி மாவட்டத்தில், பணியிடம் காலி இல்லை என 'ஆன்லைன்' தகவல் வந்ததால், ஆசிரியர்கள் ஆவேசம் அடைந்தனர்.திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில், நேற்று, துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 'கவுன்சிலங்' துவங்கியது. மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் தலைமையில், 26 உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கவுன்சிலிங் நடத்தினர். திருப்பூர் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 582 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 195 பேர் பணி இட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு இட மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு, அங்கு பணியிடம் காலி இல்லை என ஆன்-லைனில் வந்துள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த ஆசிரியர்கள், பள்ளி வளாகத்தில் திரண்டு நின்றிருந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆசிரியர்களை சமாதானப்படுத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் கூறுகையில்,''நீலகிரி மாவட்டத்துக்கு இட மாறுதல் செய்ய, காலி பணியிடம் இல்லை என்று ஆன்-லைனில் தகவல் வந்தது.

2005ல் குரூப் 1 பணிக்கு 83 பேர் தேர்வானது செல்லாது: உச்சநீதிமன்றம் உத்தரவு:

தமிழகத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 83 பேர் தேர்ச்சி பெற்றாது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார் . அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதை உறுதி செய்ததுடன் 83 பேரின் தேர்வையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது . இத்தீர்ப்பை எதிர்த்து தேர்வு செய்யப்பட்டவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது . மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது .

சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் விபரம் - 30.6.2014 நிலவரப்படி:

I.தேவகோட்டை வட்டாரம் ( திரு. தனுஷ்கோடி - 9443181443) அறிவியல் பட்டதாரி பணியிடம் : 1. காவுதுகுடி 2. பிடாரனேந்தல் 3. உருவாட்டி ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்: 1. காவுதுகுடி 2. பாரதி வேலாங்குளம் 3. ஆந்தகுடி 4. பிடாரனேந்தல் 5. சிறுநல்லூர் 6. செங்கர் கோவில் II.சிங்கம்புணரி வட்டாரம் (திரு.நா.பாலகிருஷ்ணன் -9865352562) ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்: 1. எருமைப்பட்டி 2. சிறுமருதூர் அறிவியல் பட்டதாரி பணியிடம் : 1. கல்லமபட்டி 2. எஸ்.செவல்பட்டி 3. சிறுமருதூர் III.இளையான்குடி வட்டாரம் (திரு.ஜான் பீட்டர் தோமை - 9486671498) ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்: 1. துகவூர் 2. வடக்கு அண்டக்குடி 3. புதூர் வலசை அறிவியல் பட்டதாரி பணியிடம் : 1. வடக்கு அண்டக்குடி 2. எஸ்.காரைக்குடி 3. மேலாயூர் 4. மேலதுரையூர் IV.கல்லல் வட்டாரம் ( திரு.சேவியர் சத்தியநாதன் - 9787491475) அறிவியல் பட்டதாரி பணியிடம் : 1. பாடத்தான்பட்டி 2. கே.வலையபட்டி ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்: 1. பிளார் V.காளையார்கோயில் வட்டாரம் ( திரு.ஜான் - 9442049820) ஆங்கிலம் பட்டதாரி பணியிடம்: 1. முடிக்கரை அறிவியல் பட்டதாரி பணியிடம் : 1. சேம்பார் 2. பொட்டக வயல் 3. பெரிய ஓலை

அனைத்துவகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்,உயர் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள்,படிவங்கள் என அனைத்து தகவல்களும் நிறைந்த திருத்தப்பட்ட புதிய தலைமை ஆசிரியர் கையேடு:

 நன்றி:சி.சுகுமார் M.A,B.SC,B.ED. தலைமை ஆசிரியர்,அரசு உயர்நிலைப் பள்ளி ஆதனூர்,திருவண்ணாமலை மாவட்டம். அனைத்துவகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்,உயர் அதிகாரிகளின் தொலைப்பேசி எண்கள்,படிவங்கள் என அனைத்து தகவல்களும் நிறைந்த திருத்தப்பட்ட புதிய தலைமை ஆசிரியர் கையேடு-பெற இங்கு கிளிக் செய்யவும்...

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100%தேர்ச்சியை தந்த பள்ளிகள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா-திரு.வெ.இறையன்பு IAS அவர்கள்:

பள்ளிக் கல்வித்துறையின்  சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100%தேர்ச்சியை தந்த பள்ளிகள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா A.R. Engineering College. Vadakuchipalayam, Kappiyampuliyur Villupuram இல் காலை 10:30 மணியளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மார்க்ஸ் எம்.எஸ்.ஸி,எம்.பில்,எம் எட்.அவர்கள் தலைமையில் தமிழ்த்தாய்வாழ்த்துடன் இனிதே ஆரம்பமானது.இந்த நிகழ்விற்கு தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஆட்சியர் திரு. வெ. இறையன்பு IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கள்ளகுறிச்சி,விழுப்புரம்,திண்டிவனம் என மூன்று கல்வி மாவட்ட ஆசிரியர்களும் சுமார் 2000 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.முதல் நிகழ்வாக முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் வரவேற்புரை  வழங்கினார்கள்.பின்னர் சிறப்பு விருந்தினர் திரு.வெ.இறையன்பு IAS அவர்கள் ஆசிரியர் பணிக்குறித்தும்,இந்த ஆண்டு இம் மாவட்டம் 100% தேர்ச்சி விழுக்காட்டை பெறுவதற்கு ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மிக அருமையாக தனது சொல் ஆற்றலால் 2000 ஆசிரியர்களையும் மெய்மறக்க செய்தார்-அவற்றுள் ச

01.07.2014 முதல் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?

மே '2014 மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் இன்று ( ஜூன் 30) வெளியிடப்பட்டது .  இதன் படி அகவிலைப்படி உயர்வு 106.17% ஆக உள்ளது . ஜூன் மாத விலைவாசி உயர்வுக் குறியீட்டு எண் ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்படும் . அதன்பிறகே அகவிலைப்படி உயர்வு எவ்வளவு என்பது துல்லியமாக தெரிய வரும் . இதன்பிறகு அகவிலைப்படி உயர்வு பற்றிய நடைமுறைகள் தொடங்கும் . ஆகஸ்ட் இரண்டாம் வாரம் அகவிலைப்படி உயர்வு பற்றிய பரிந்துரைகள் மத்திய அமைச்சரவை குழுவிற்கு அனுப்பப் படும் . மத்திய காபினெட் இதுபற்றி முடிவு செய்து , செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் அதிகாரப் பூர்வமான அறிவிப்பை வெளியிடும் . இதன் பிறகு அரசாணை வெளியிடப்படும் . மத்திய அரசின் அரசாணையை பின்பற்றி மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடும் . மாநில அரசுகள் செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் வாரத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிபார்க்கப் படுகிறது . மாநில அரசு ஊழியர்கள் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் 3 மாத அகவில

IGNOU B.Ed., & M.Ed.,2015 Admission:

CLICK HERE-DOWNLOAD THE B.Ed.,M.Ed ADVERTISEMENT CLICK HERE-APPLICATION FORM AND GUIDE FOR APPLICANTS FOR BACHELOR OF EDUCATION (B. Ed.) January, 2015 IGNOU B.Ed & MEd Programme >Master of Education (M.Ed) Programme Eligibility -B.Ed with 55% Duration - 2 years Medium of Instruction - English Last dt.15.7.14 Entrance Exam - 17.8.14 Cost of application for the above programmes -1050/- There is no age bar for admission to the above programmes Application form and prospectus can also be downloaded from the website www.ignou.ac.in IGNOU B.Ed Programme- January 2015 session IGNOU - B.ED ADMISSION 2015 >Bachelor of Education (B.Ed) Programme Eligibility for admission- UGC recognized Bachelor's degree or a higher degree with 50% marks from a recognized university Serving teachers with two years full time teaching experience in a govt or govt recognized pri/sec/sr.sec.schl with registration number Duration - 2 years Medium of Instruction - English/Hindi Last date to filled

நெல்லையில் லைநெல்யில் விடிய விடிய நடைபெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு:

திருநெல்வேலியில் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை காலை தொடங்கிய இக்கலந்தாய்வு இணையதளம் சரிவர செயல்படாததால் விடிய விடிய நடைபெற்றது. எனினும் பணியிட மாறுதல் கிடைக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பணி நிரவல், பணியிட மாறுதல் கலந்தாய்வு ஜூன் மாதம் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது.திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு வண்ணார்பேட்டையில் உள்ள எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வு சனிக்கிழமைநடைபெற்றது.கலந்தாய்வில் 133 பட்டதாரி ஆசிரியர்களும், 33 இடைநிலை ஆசிரியர்களும், 15 தொகுப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு இவர்கள் காலை 9 மணிக்கே வந்து விட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியைகள் என்பது குறிப்பிடத்தக்கது.க

இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு:

மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு பணி மூப்பு அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 2012-13ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஏற்பட்ட 3 காலி பணியிடங்களில் ஒன்றில் பணி நியமனம் கோரி விண்ணப்பித்தார். ஆனால் கலந்தாய்வில் காலி பணியிடம் காட்டப்படவில்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வையணன் வழக்கு தொடர்ந்தார்.  அப்போது அளிக்கப்பட்ட தீர்ப்பில், இனி வரும் காலங்களில் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தவும், விதிமுறைகளின்படி ஆசிரியர் வையணன் விண்ணப்பத்தை பரிசீலித்து இடமாற்றம் வழங்கவும் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு நடந்த கலந்தாய்விலும் காலியிடங்கள் மறைக்கப்பட்டதால், ஐகோர்ட்டில் வையணன் மீண்டும் வழக்கு தொடர்ந் தார். இந்த மனுவை கடந்த 23ம் தேதி விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஹரிபரந்தாமன், ‘’ ஜூன் 24ம் தேதி நடைபெறும் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தி மனுதாரரின் விருப்பத்தை பரீசீலிக்க வேண்டும்‘ என்று உத்தரவிட்டார்.  இதன் அடிப்படையில் கடந்த 24ம் தேதி ராமநாதபுரத்தில் நடந்த கலந்தாய்வில் வையணன் பங்கேற்றார். ஆனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் மறைக்கப்பட்ட

இன்று ஒரு தகவல்: தினமும் 1.5 கிலோ மண் சாப்பிடும் மூதாட்டி!!!

கடந்த 40 ஆண்டுகளாக தினசரி உணவாக ஒன்றரை கிலோ மண்ணை சாப்பிடும் மூதாட்டி ஆரோக்கியத்துடன் இருப்பதை பார்த்து மக்கள் வியப்படைந்து உள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள நிகோஹி பகுதியில் வசிப்பவர் சுதாமா தேவி, 93. இவர் தன் 13வது வயதில் ஹேம்ராஜ் என்பவரை திருமணம் செய்து 10 குழந்தைகளைப் பெற்றார். பிரசவத்தின் போது ஐந்து குழந்தைகள் இறந்து விட்டன. கர்ப்பத்தின்போது பழக்கம் இவர் ஒவ்வொரு முறை கர்ப்பமடைந்தபோதும் மண் சாப்பிடுவதில் ஆர்வமாக இருந்தார். நாளடைவில் இந்தப் பழக்கம் தொடர் கதையானது. 10 குழந்தைகள் பெற்ற பின்னும் மண்ணைத் தின்பதில் ஆர்வம் காட்டிய இவர், கங்கைக் கரைக்கு சென்று மணல்களை அள்ளி வருவார். துவக்கத்தில் தினமும் அரை கிலோ மண் சாப்பிடும் பழக்கம், பின்னர் ஒன்றரை கிலோவானது. ஓர் ஆண்டுக்கு முன் கணவர் இறந்து விட்டதால், கூலி வேலை செய்யும் தன் இளைய மகனுடன் சுதாமா தேவி வசித்து வருகிறார். மணல் சாப்பிடுவதுடன், அவரின் சாப்பாட்டு ஆசை முடிந்து விடுவதில்லை என்றும், நான்கு பெரிய சைஸ் சப்பாத்திகளையும் உள்ளே தள்ளுவதாக, அவரது மகன் கூறியுள்ளார். டாக்டரிடம் சென்றதில்லை இதுகுறித்

16 உண்டு உறைவிடப் பள்ளிகள் மூடல்: இணை இயக்குனர் அதிரடி:

கிருஷ்ணது. இதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் மாதத்துக்கு 1,250 ரூபாய் வழங்கப்படுகிறது. உண்டு உறைவிட பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு, அகிரி மாவட்டத்தில் உள்ள 16 உண்டு உறைவிட பள்ளிகளில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் உத்தரவின்படி பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வந்தன. இங்கு, ஏழு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி இடைநின்ற குழந்தைகள் மீட்கப்பட்டு, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் படிப்பறிவு அளிக்கப்பட்டு வருகிறவர்கள் மேல்நிலைக்கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படுகிறது. எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மார்ச் மாதம் வரை உண்டு உறைவிட பள்ளிகளிலும், ஏப்ரல் மாதம் மட்டும், மாணவ, மாணவிகளின் ஊருக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, ஏப்ரல் இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டு, மேல்நிலைக்கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக தன்னார

அரசு பள்ளிகளில் புதிய விளையாட்டுகள்: காலிப் பணியிடங்களால் திண்டாட்டம்:

பள்ளி கல்வித்துறை சார்பில், 13 வகையான புதிய விளையாட்டுகளை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கற்று தர வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் உடற்கல்வி ஆசிரியர் காலிபணியிடம், உபகரணங்கள் இன்மை உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யாமல், இதுபோன்ற நடவடிக்கைகளால் பலனில்லை என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்து 976 துவக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், உடற்கல்வி ஆசிரியர் தரத்தில் 3,500 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். தவிர 5,604 உயர்கல்வி பள்ளிகளிலும் சேர்த்து உடற்கல்வி இயக்குனர் கிரேட் -2 என்ற தரத்தில் ௮6 ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி இயக்குனர் கிரேடு -1 என்ற தரத்தில் 320 ஆசிரியர்களே உள்ளனர். இருப்பினும், அரசின் உத்தரவுப்படி 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர்கள் இருத்தல் அவசியம். இந்தகணக்கீடு படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இது நகர்புறங்களை காட்டிலும், கிராமப்புற பள்ளிகளில் அதிகம். தவிர, நடுநிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு ஏழு ரூபாய், உயர்நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு 14 ரூபாய், மேல்

தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்:

பிற மாவட்டத்தை பற்றி அறிந்தவர்கள் "COMMENT BOX"ல் பதிவிடலாம்... ========================================================= திருவண்ணாமலை மாவட்டம்  ********************************************* டேனிஷ் மிஷின் மேல்நிலைப் பள்ளி,  பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை ஈரோடு மாவட்டம்  ***************************** மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், ஈரோடு விருதுநகர் மாவட்டம் ********************************* கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, சூளகிரி, விருதுநகர் காஞ்சிபுரம் மாவட்டம்  ******************************* ராணி அண்ணாதுரை பள்ளி, காஞ்சிபுரம் தஞ்சாவூர் மாவட்டம்  ******************************* DPC , SSA அலுவலகம், தஞ்சாவூர் திருப்பூர் மாவட்டம்  *************************** Jaivaabhai School,Thirupur. கரூர் மாவட்டம்  ************************* MORNING STAR AIDEAD SCHOOL, கரூர் கோவை மாவட்டம்  ***************************** மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ராஜா வீதி  கோவை. நாகப்பட்டினம் மாவட்டம்  ************************************ நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி  - நாகப்பட்டினம் வேலூர் மாவட்டம