வரவிருக்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளைப் (செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்) பெருமைப்படுத்தும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது. நன்னூல் கூறும் நல்லாசிரியர் பவணந்தியார், நன்னூலில் (நூற்.26-30) நல்ல ஆசிரியரின் பண்புகள், மாண்புகள் முதலியவற்றை விரிவாகவும் நுட்பமாகவும் தொகுத்துக் கூறியுள்ளார். ஆசிரியர், நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர் போன்ற மாண்புடையவர் என்கிறார். 1. நிலத்தின் மாண்புகள்: நிலம் ஓரிடத்தில் நின்று அதை முழுவதும் பார்க்கவே முடியாதபடி பரப்பினால் பெருமையுடையது. எவ்வளவு பாரத்தையும் சுமக்கும் திடமுடையது. மனிதர்கள் அகழ்தல், பிளத்தல் முதலிய குற்றங்களைச் செய்தாலும், அவற்றைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையுடையது. தக்க பருவதிலே உழவர்கள் செய்கின்ற உழவுத்தொழில் முயற்சிகளுக்குத் தகுந்தபடி அவர்களுக்குப் போதிய பலன்களைத் தரவல்லது. ஆசிரியரின் மாண்புகள்: தமது பரந்துபட்ட கல்வியறிவால் பெருமையுடையவர். தம்மிடம் வாதமிடுபவரைத் தாங்கும் திண்மை உடையவர். தம்மை இகழ்தல், எதிர்த்தல் போன்ற குற்றங்களையும் பொறுத்துக் கொள்பவர். தமது மாணவர்களுக்குத் தக்க பருவத்தில், தக்க அளவு, தகுந்த பயன்களைத...
Comments
Post a Comment