கடந்த 40 ஆண்டுகளாக தினசரி உணவாக ஒன்றரை கிலோ மண்ணை சாப்பிடும் மூதாட்டி ஆரோக்கியத்துடன் இருப்பதை பார்த்து மக்கள் வியப்படைந்து உள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள நிகோஹி பகுதியில் வசிப்பவர் சுதாமா தேவி, 93. இவர் தன் 13வது வயதில் ஹேம்ராஜ் என்பவரை திருமணம் செய்து 10 குழந்தைகளைப் பெற்றார். பிரசவத்தின் போது ஐந்து குழந்தைகள் இறந்து விட்டன.கர்ப்பத்தின்போது பழக்கம்
இவர் ஒவ்வொரு முறை கர்ப்பமடைந்தபோதும் மண் சாப்பிடுவதில் ஆர்வமாக இருந்தார். நாளடைவில் இந்தப் பழக்கம் தொடர் கதையானது. 10 குழந்தைகள் பெற்ற பின்னும் மண்ணைத் தின்பதில் ஆர்வம் காட்டிய இவர், கங்கைக் கரைக்கு சென்று மணல்களை அள்ளி வருவார்.துவக்கத்தில் தினமும் அரை கிலோ மண் சாப்பிடும் பழக்கம், பின்னர் ஒன்றரை கிலோவானது. ஓர் ஆண்டுக்கு முன் கணவர் இறந்து விட்டதால், கூலி வேலை செய்யும் தன் இளைய மகனுடன் சுதாமா தேவி வசித்து வருகிறார். மணல் சாப்பிடுவதுடன், அவரின் சாப்பாட்டு ஆசை முடிந்து விடுவதில்லை என்றும், நான்கு பெரிய சைஸ் சப்பாத்திகளையும் உள்ளே தள்ளுவதாக, அவரது மகன் கூறியுள்ளார்.டாக்டரிடம் சென்றதில்லைஇதுகுறித்து, சுதாமா தேவி கூறியதாவது: மணல் சாப்பிடுவதால் எந்தவித நோயும் ஏற்பட்டதில்லை. இதுவரை டாக்டரிடம் சென்றதில்லை. சாப்பிடுவதற்கு மண் கிடைக்காதபோது, மனம் வேறு உணவை நாடவில்லை. எந்த வேலையும் செய்யப் பிடிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.சுதாமா தேவியை பரிசோதித்த டாக்டர்கள், பழக்கம் காரணமாக இவ்வாறு சாப்பிடுவதாகவும், இதற்கு தனியாக எந்தவித அறிவியல் காரணமும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளாக தினசரி உணவாக ஒன்றரை கிலோ மண்ணை சாப்பிடும் மூதாட்டி ஆரோக்கியத்துடன் இருப்பதை பார்த்து மக்கள் வியப்படைந்து உள்ளனர்.உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள நிகோஹி பகுதியில் வசிப்பவர் சுதாமா தேவி, 93. இவர் தன் 13வது வயதில் ஹேம்ராஜ் என்பவரை திருமணம் செய்து 10 குழந்தைகளைப் பெற்றார். பிரசவத்தின் போது ஐந்து குழந்தைகள் இறந்து விட்டன.
Comments
Post a Comment