Skip to main content

Posts

Showing posts from August, 2014

மத்திய அரசு ஊழியர்களின் டி.ஏ., 107 சதவீதமாகிறது:

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 7 சதவீதம் உயர்த்தப்பட உள்ளதாக, மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 50 லட்சம் பென்ஷன்தாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், 7 சதவீதம் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அவர்களின் அகவிலைப்படி, தற்போதைய, 100 சதவீதத்தில் இருந்து, 107 சதவீதமாக உயர உள்ளது. எனினும், அகவிலைப்படி, 100 சதவீதத்தை தாண்டினால், உயர்த்தப்படும் அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.கடந்த பிப்ரவரியில், முந்தைய மன்மோகன் சிங் அரசு, 90 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, 100 சதவீதமாக உயர்த்தியது. இப்போது, பணவீக்கத்தின் அடிப்படையில், கூடுதலாக, 7 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. இது, ஜூலை மாதம் முதல் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

எம்.பி.பி.எஸ்., வகுப்பு இன்று துவக்கம்ஜீன்ஸ் அணிய தடை; ராகிங் செய்தால் நீக்கம்:

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று துவங்குகின்றன. எதிர்கால கனவுகளோடு, மாணவர்கள் கல்லுாரிகளில் அடியெடுத்து வைக்கின்றனர்.தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன. கலந்தாய்வு:இதில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) இடங்களும் உள்ளன. இந்த ஆண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இரண்டு கட்ட கலந்தாய்வுகளில் முடிந்தன. அனைத்து இடங்களும் நிரம்பின. இட ஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவியர் கல்லுாரிகளில் மருத்துவக் கல்வி இயக்கக வழிகாட்டுதல் படி சேர்ந்தாலும், அரசு அறிவிப்பின்படி, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., வகுப்புகள், முறைப்படி இன்று துவங்குகின்றன.கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில், இட ஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவியர், சிறந்த டாக்டர்களாகும் எதிர்கால கனவுகளோடு, இன்று கல்லுாரி வகுப்புகளில் அடி எடுத்து வைக்கின்றனர். அவர்களை, மூத்த மாணவர்களும் வரவேற்று, உற்சாகப்படுத்த தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களுக்கு மருத்துவக் கல

ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களை கண்காணிக்க என்சிடிஇ புது உத்தரவு:

ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் மீதான கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் வகையில், அவற்றின் மீதான ஆய்வை ஒழுங்குபடுத்த தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) திட்டமிட்டுள்ளது.  இதற்காக எந்தெந்த ஆய்வு நிறுவனங்கள் தங்களது கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்தன என்ற விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு என்சிடிஇ அறிவுறுத்தியுள்ளது. ஆசிரியர் கல்வியிலும் தரத்தை உறுதி செய்வதற்காக மிகப் பெரிய சீர்திருத்தத்தை என்சிடிஇ மேற்கொண்டு வருகிறது. தரத்தை உறுதி செய்வதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை விரைவில் வெளியிட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்கள் மீதான தொடர் ஆய்வை ஒழுங்குபடுத்த என்சிடிஇ திட்டமிட்டுள்ளது. ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களுக்கு, "தேசிய ஆய்வு, அங்கீகாரக் கவுன்சில் (நாக்)' போன்ற அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு ஆய்வு நிறுவனங்களால் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகின்றன. இதுபோல் எந்தெந்த ஆய்வு நிறுவனங்களால் தங்களுடைய கல்வி நிறுவனம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது, கடைசியாக

மாணவர்களை துன்புறுத்தக் கூடாது: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தல்:

மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.  பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வருதல், வீட்டுப் பாடத்தை எழுதிவராமல் இருத்தல், நன்றாக படிக்காதது, வகுப்பில் பேசிக்கொண்டிருத்தல் என ஏதாவது தவறு இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைத்தல், பிரம்பால் அடித்தல் உள்ளிட்ட பல வகையான தண்டனைகளை ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர். சுற்றறிக்கை: அண்மையில் "ஸ்கேல்' கொண்டு ஆசிரியர் தாக்கியதில் மாணவர் ஒருவரின் கண் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் மாணவ-மாணவிகளை எந்தக் காரணம் கொண்டும் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பாதிக்கும்படி ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது. அதாவது மாணவர்களை ஆசிரியர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் திட்டக்கூடாது. "ஸ்கேல்', கம்பு, கை உள்ளிட்ட எதைக் கொண்டும் அடிக்கக் கூடாது. அவ்வாறு மாணவர்களை ஆசிரியர்கள் அடித்தது உறுதி செய்யப்பட்டால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்

புதிதாக நியமிக்கப்பட்ட 1,675 இடைநிலை ஆசிரியர்களும் 8ம் தேதி பணியில் சேர வேண்டும்: தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு - தினகரன்:

தொடக்க கல்வித்துறையால் நியமனம் செய்யப்பட்ட 1675  புதிய இடைநிலை ஆசிரியர்கள் செப்டம்பர் 8ம் தேதி பணியில் சேர  வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.  அரசு  தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி  ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்  தேர்வு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணியிட ஒதுக்கீடு  வழங்கப்படுகிறது. மொத்தம் 1675 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் உள்ள  காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 1ம் தேதியும், வேறு மாவட்டத்தில்  உள்ள காலி பணியிடங்களுக்கு 2ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள்  உள்ளூர் காலியிடங்களுக்கு 3ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள  காலியிடங்களுக்கு 4ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.   சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி,  தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில்  இடைநிலை ஆசிரியர்கள் காலிபணியிடங்கள் இல்லாததால் இந்த  மாவட்டங்களை சேர்ந்த பணி நாடுநர்கள் 1ம் தேதி நடைபெறும்  கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டாம

ஆசிரியர் தினம் - திருவண்ணாமலை மாணவர்களுடன் உரையாடுகிறார் மோடி:

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தன்று சிறந்த ஆசிரியர்களுக்கு டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்நிலையில், ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்களுடன் வீடியோ-கான்பரன்சிங் மூலம் கலந்துரையாட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் பள்ளி மாணவர்கள் மத்தியில் நேரில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அவரது உரையை கேட்கவும், அவருடன் வீடியோ-கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடவும், கேள்விகள் கேட்கவும் தமிழ்நாட்டில் திருவண் ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாட மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையத்தில் (நிக் சென்டர்) பிரத்யேக ஏற்பாடுகள் ச

போட்டித் தேர்வை எப்படி எதிர்கொள்வது - தினமலர்:

இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது - சென்னை, தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை:

இடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தமிழகம் முழுவதும் இன்று(திங்கள்கிழமை) தொடங்குகிறது. சென்னை மற்றும் நெல்லை, தூத்துக்குடிஉள்பட தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-  ஆன்லைனில் கலந்தாய்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடக்கக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டு தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள 1,649 இடைநிலை ஆசிரியர்களுக்கும், 167 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கு வதற்கான கலந்தாய்வு ஆன்லை னில் நடத்தப்பட இருக்கிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ள காலி யிடங்களுக்கு இன்றும் (திங்கள் கிழமை), வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்குநாளை யும் (செவ்வாய்) கலந்தாய்வு நடைபெறும். இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங் களுக்கு 4-ம்தேதியும் கலந்தாய்வு நடத்தப்படும். 9 மாவட்டங்களில் காலியிடம் இல்லை ஆசிரியர் தேர்வு வாரியத் தால் ஹால் டிக்கெட்ட

புதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு:

CLICK HERE - DSE - PG ASST JOINING REPORT FORMAT 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற முதுகலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் புதியதாக பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களை இயக்குநரின் 1 முதல் 12 முடிய அளித்துள்ள அறிவுரைகளின்படி அனைத்து விவரங்களையும் சரிபார்த்து வேலூர் மற்றும் இதர மாவட்டத்தில் இருந்து பணி நியமனம் பெற்றவர்களை பணியில் சேர்த்துக்கொள்ளவும், அதன் அறிக்கையினை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து அன்றே இவ்வலுவலகத்திற்கும் இயக்குநருக்கும் தவறாமல் அனுப்புதல் வேண்டும். வெளி மாநில சான்று எனில் உடனடியாக மதிப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.  அளவுகோல் பதிவேட்டின்படி பணியிடம் காலியாக இருப்பதை உறுதிசெய்துகொண்டு பணியில் சேர்த்தல் வேண்டும். மேலும் அசல் வேலைவாய்ப்பு அட்டையினை பெற்று இவ்வலுவலகத்திற்கு அனுப்புதல் வேண்டும். 

UNIVERSITY OF MADRAS INVITES APPLICATION FOR PROFESSOR POSTS:

UNIVERSITY OF MADRAS INVITES APPLICATION FOR PROFESSOR, ASSOCIATE PROFESSOR, ASSISTANT PROFESSOR POSTS UNIVERSITY OF MADRAS (Re-accredited by NAAC with "A" Grade and University with Potential of Excellence)  Centenary Buildings, Chepauk Chennai - 600 005 Last date for submission of application -  22.09.2014 Applications (8 copies) are invited from the eligible candidates for the following posts at the National Centre for Nanoscience and Nanotechnology situated at Guindy campus as detailed below in conformity with 200 Point Roster System Professor Biological Sciences - 01 post Biomedical Sciences - 01 post Chemistry - 01 post Physics - 01 post No. of Posts -  04 posts Scale of Pay -  Rs.37400-67000 with an AGP of Rs.10000 Associate Professor Biological Sciences - 01 post Biomedical Sciences - 01 post Chemistry - 01 post Physics - 01 post No. of Posts -  04 posts Scale of Pay -  Rs.37400-67000 with an AGP of Rs.9000 Assistant Professor Biological Sciences - 02 post Biomedic

இடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதி குறித்த த.அ.உ.சட்டத்தின் படி பெறப்பட்ட தகவல்:

தொடக்கக் கல்வி - சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டங்களை சார்ந்த பணிநாடுநர்கள் 02.09.2014 அன்றைய கலந்தாய்வில் கொள்ள உத்தரவு:

CLICK HERE-DEE - NO SGT VACANCIES IN CHENNAI, DNDGUL, KANYAKUMARI, MADHURAI, PERAMBALUR, THENI, THOOTHKUDI, TIRUNELVELI & VIRUDHUNAGAR DISTRICT & NEED NOT ATTEND 1ST DAY COUNSELING REG..

தொடக்கக் கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை அன்றே வழங்கப்படும், நியமன ஆணை 4ம் தேதிமுதல் 6ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் பெற்றுக்கொள்ள இயக்குனர் உத்தரவு:

CLICK HERE - DEE - SGT APPOINTMENT - CANDIDATE SHOULD GET WORK ALLOTMENT ORDER ON SAME DAY, APPOINTMENT ORDER WILL BE ISSUED FROM 04.09.2014 TO 06.09.2014 AT CONCERN DEEO'S OFFICE REG PROC

அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு திட்டம்:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்பட உயர்த்தப்பட்டுள்ளது . இதன்படி , தற்போதுள்ள 100 சதவீத அகவிலைப்படி , 107 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது . இந்த உத்தரவு ஜூலை 1 ம் தேதி முதல் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்களும் 7% அகவிலைப்படி உயர்வை அறிவிப்பார்.

உயர்நீதிமன்றத்தால் பரிதுரைக்க்கப்பட்டு அரசால் அமுல்படுத்தப்பட்ட G.O 71 TET Weightage ரத்து செய்யக்கோரி 01.09.2014 அன்று சென்னையில் பேரணி:

உயர்நீதிமன்றத்தால் பரிதுரைக்க்கப்பட்டு அரசால்  அமுல்படுத்தப்பட்ட G.O 71 TET Weightage ரத்து செய்யக்கோரி 01.09.2014 அன்று சென்னையில் பேரணி நடைபெற இருக்கிறது. பேரணி நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரும் கடிதம்.செப்டம்பர் 01 திங்கள்கிழமை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் சார்பில் நடைபெறும் பேரணியானது சென்னை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து லாங்ஸ் கார்டன் வரை செல்லும் பேரணியை அமைதியாக நடத்துவது குறித்து சென்னை எக்மோர் காவல்துறையினர் பேரணிக்குழுவிற்கு கொடுத்த வழிகாட்டும் நெறிமுறைப்படிவம் மற்றும் பேரணிக்குழுவினர் அளித்த ஒப்புதலும்..

இன்று பாரதிதாசன் பல்கலைக்கழகம் எம்.எட்.,நுழைவுத்தேர்வு..

இன்று 31.08.2014 பாரதிதாசன் பல்கலைகழகம் எம்.எட் ஆசிரியர்கள் தொலைநிலை வழியில் பயில நுழைவுத்தேர்வை நடத்துகிறது.இதில் 250 இடங்களுக்கு 20000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.அரசுக் கலைக் கல்லூரி விழுப்புரம்.காமராஜ் மேல்நிலைப் பள்ளி விழுப்புரம்.சென்ற மாதம் பாரதியார் பல்கலைக் கலக்கம் நடத்திய எம்.எட் நுழைவுத்தேர்வில் கேள்வித்தாள் தரவில்லை விடைகள் பென்சிலால் குறிக்க சொன்னார்கள் இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது நாம் அறிந்ததே.இவற்றை எல்லாம் போக்கும் வகையில் இன்று நடைபெறும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சரியான முறையில் தேர்வை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்கின்றனர். இன்று நடைபெறும் பாரதிதாசன் பல்கலைக் கழக எம்.எட் நுழைவுத் தேர்விற்கான உத்தேசிக்கப்ட்ட விடைகள் இன்று மாலை கல்விக்குரலால் வெளியிடப்படும்(கேள்வித்தாள் வழங்கினால் மட்டும்)

DEE :TNTET PAPER 1 SGT APPOINTMENT News:

தொடக்கக் கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை அன்றே வழங்கப்படும், நியமன ஆணை 4ம் தேதிமுதல் 6ம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் பெற்றுக்கொள்ள இயக்குனர் உத்தரவு. CLICK HERE - DEE - SGT APPOINTMENT - CANDIDATE SHOULD GET WORK ALLOTMENT ORDER ON SAME DAY, APPOINTMENT ORDER WILL BE ISSUED FROM 04.09.2014 TO 06.09.2014 AT CONCERN DEEO'S OFFICE REG PROC

தொடக்கக் கல்வி - சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் இந்த மாவட்டங்களை சார்ந்த பணிநாடுநர்கள் 02.09.2014 அன்றைய கலந்தாய்வில் கொள்ள உத்தரவு:

CLICK HERE - DEE - NO SGT VACANCIES IN CHENNAI, DNDGUL, KANYAKUMARI, MADHURAI, PERAMBALUR, THENI, THOOTHKUDI, TIRUNELVELI & VIRUDHUNAGAR DISTRICT & NEED NOT ATTEND 1ST DAY COUNSELING REG PROC

தொடக்கக் கல்வி - 1675 இடைநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது:

CLICK HERE - DEE - SGT - DISTRICT WISE 1675 CANDIDATE SELECTION LIST

அறிவோம் ஆசிரியர் தின வரலாறு:

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம். ஆசிரியர் தின வரலாறு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண

நல்லாசிரியரின் நற்பண்புகள் யாவை?

வரவிருக்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளைப் (செப்டம்பர் 5, ஆசிரியர் தினம்) பெருமைப்படுத்தும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது. நன்னூல் கூறும் நல்லாசிரியர் பவணந்தியார், நன்னூலில் (நூற்.26-30) நல்ல ஆசிரியரின் பண்புகள், மாண்புகள் முதலியவற்றை விரிவாகவும் நுட்பமாகவும் தொகுத்துக் கூறியுள்ளார். ஆசிரியர், நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர் போன்ற மாண்புடையவர் என்கிறார். 1. நிலத்தின் மாண்புகள்: நிலம் ஓரிடத்தில் நின்று அதை முழுவதும் பார்க்கவே முடியாதபடி பரப்பினால் பெருமையுடையது. எவ்வளவு பாரத்தையும் சுமக்கும் திடமுடையது. மனிதர்கள் அகழ்தல், பிளத்தல் முதலிய குற்றங்களைச் செய்தாலும், அவற்றைத் தாங்கிப் பொறுத்துக் கொள்ளும் பொறுமையுடையது. தக்க பருவதிலே உழவர்கள் செய்கின்ற உழவுத்தொழில் முயற்சிகளுக்குத் தகுந்தபடி அவர்களுக்குப் போதிய பலன்களைத் தரவல்லது. ஆசிரியரின் மாண்புகள்: தமது பரந்துபட்ட கல்வியறிவால் பெருமையுடையவர். தம்மிடம் வாதமிடுபவரைத் தாங்கும் திண்மை உடையவர். தம்மை இகழ்தல், எதிர்த்தல் போன்ற குற்றங்களையும் பொறுத்துக் கொள்பவர். தமது மாணவர்களுக்குத் தக்க பருவத்தில், தக்க அளவு, தகுந்த பயன்களைத

'குரு உத்சவ்' என மாறுகிறது ஆசிரியர் தினம்:

ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படும், ஆசிரியர் தினம் இனிமேல், 'குரு உத்சவ்' என்ற பெயரில் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. செப்டம்பர் 5ல், முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின், 126வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை, இனிமேல், 'குரு உத்சவ் 2014' என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்றும், விழாவையொட்டி, மாணவர்களிடையே, 23 மொழிகளில் கட்டுரை எழுதும் போட்டியை நடத்த வேண்டும் என்றும், அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் பாதுகாப்பு : சிறப்பு குழு அமைக்கிறது யு.ஜி.சி.,

உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், கல்வி சுற்றுலா, கள ஆய்வு உள்ளிட்டவற்றிற்கு செல்லும்போது ஏற்படும் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண, சிறப்பு குழுவை, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) அமைக்கிறது நாடு முழுவதும் மத்திய, மாநில பல்கலைகள், நிகர்நிலை பல்கலைகள், அரசு, சுயநிதி கல்லூரிகள் என, 30 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள், ஆண்டுதோறும், கல்விச்சுற்றுலா, பாடம் சார்ந்த சுற்றுலா, கள ஆய்வு, இன்பச் சுற்றுலா, தொழிற்சாலை ஆய்வு அல்லது விளையாட்டு சார்ந்து வெளியிடங்களுக்கு செல்கின்றனர். மாணவர்களுக்கு, அவர்கள் செல்லும் இடங்களில், பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதுபோன்ற இடங்களில், அவர்கள்  பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். மேலும், இமாசல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற தெலுங்கானா மாநில மாணவர்கள், அங்குள்ள சட்லஜ் நதியில் இறங்கிய போது, அணை திறந்துவிடப்பட்டதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 23 பேர் பலியாகினர். இது போன்ற பல்வேறு சம்பவங்கள், நாடு முழுவதும், உயர்கல்வி நிறுவனங்களில்

95 லட்சம் பேர் அரசு வேலைக்கு காத்திருப்பு:

தமிழகத்தில், கல்வி பயில்வோர் அரசு வேலைக்காக, அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு குறித்த விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2014 ஜூன் மாதம் வரையிலான விவரங்கள் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், 48.32 லட்சம் பெண்கள் உட்பட, மொத்தம். 94.58 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து, காத்திருக்கின்றனர். இதில், இடை நிலை ஆசிரியர்கள் 2.30 லட்சம்; இன்ஜினியர்கள் 3.5 லட்சம்; டாக்டர்கள் 9,500; முதுநிலை பட்டதாரிகள் 2.51 லட்சம்; பட்டதாரிகள் 3.76 லட்சம், விவசாய படிப்புக்களை முடித்த, 4,640 பேரும் உள்ளனர். இதில், ஆதிதிராவிடர் 20 லட்சம்; அருந்ததியர் 2 லட்சம்; பழங்குடியினர் 68,615; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 24.28 லட்சம்; பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் 3.8 லட்சம், பிற்படுத்தப்பட்டோர் 40 லட்சம், இதர பிரிவினர், 3.5 லட்சம். கடந்த ஆண்டு இறுதியில், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்திருந்தோரின் எண்ணிக்கை, 84.38 லட்சமாக இருந்தது. தற்போது, 10 லட்சம் பேர் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத

ஐ.ஏ.எஸ்., கனவை நனவாக்கும் அரசு மையங்கள்!

ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பயிற்சி மையங்கள், மூலைக்கு மூலை கணக்கின்றி முளைத்து கிடக்கின்றன. பயிற்சி பெறுவோருக்கு அதிக கட்டணம், பயிற்றுனர்களுக்கும் அதிக சம்பளம், எனும் போது. 'ஏழைகளால், அதுவும் பெண்களால் என்ன செய்ய முடியும்?' இந்த விம்மலுக்கு விடிவாக, 2001ல் பிறந்தவைதான், சென்னை ராணி மேரி கல்லுாரியிலும், மதுரை அருள்மிகு மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியிலும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு மற்றும் பிற மத்திய பணிகளுக்கான தேர்வுகளுக்கு, மகளிருக்கென சிறப்பு இலவசப் பயிற்சி வகுப்புகள்.அவை எப்படி செயல்படுகின்றன?இடம்: ராணி மேரி கல்லுாரி, சென்னை. பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், வரலாற்று துறை தலைவருமான அமுதா கூறிய தாவது:குடிமை பணிகளுக்கு, முதன்மை தேர்வும், பிரதான தேர்வும் நடக்கும். இங்கு, முதன்மை தேர்வுக்கான வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. ஏழை மாணவியர் பயன்பெற வேண்டும். தமிழகத்தில் இருந்து, நிறைய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வரவேண்டும்என்பதே, எங்கள் நோக்கம்.தமிழக அரசின், செய்தி ஒலிபரப்பு துறை சார்பில் பயிற்சிக்கான விளம்பரம், செய்தி தாள்கள் வழியே, ஒவ்வொராண்டும்வெளியிடப்படும்

'ஒன்பது மாவட்டங்களில் ஆசிரியர் காலியிடம் இல்லை'

' சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடம் இல்லாததால், செப்., 1ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், குறிப்பிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கு, புதிய ஆசிரியர் செல்ல வேண்டாம்' என, தொடக்க கல்வி இயக்குனர்,இளங்கோவன் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு: தொடக்க கல்வித்துறையில், 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியரும் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு, செப்., 1ம் தேதி முதல் நடக்கிறது. 'செல்ல வேண்டாம்' அன்று, மாவட்டத்திற்குள் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, பணி நியமன கலந்தாய்வு நடக்கிறது. ஒரு மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெற, செப்., 2ம் தேதியும், மாவட்டத்திற்குள் உள்ள பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கு, செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4ம் தேதியும் நடக்கிறது. இதில், சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர் ஆகிய, ஒன்பது மாவட்டங்களில், இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியில்லை. எனவே,

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது:

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

புதிய ஆசிரியர் நியமனம் - தொடக்கக் கல்வி - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளதால், 30.08.2014 மற்றும் 31.08.2014 ஆகிய இரு நாட்களும் அனைத்து DEEO / AEEO அலுவலகங்களும் அலுவல் நாட்களாக செயல்பட இயக்குநர் உத்தரவு:

CLICK HERE - DEE - ALL DEEO / AEEO's OFFICES ARE WORKING DAY ON 30.08.2014 & 31.08.2014 REG ORDER

கலந்தாய்வு - கலந்தாய்வு மையத்திற்குள் உங்களை தவிர யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் - லஞ்சம் கொடுத்து ஏமாறவேண்டாம்:

கலந்தாய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே செல்ல கேட்டுக்கொள்கிறோம். கலந்தாய்வு மையங்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் பட்டியல் ஓட்டபட்டிருக்கும்... குறைதபட்சம் 5 இடங்களையாவது வரிசைவாரியாக தேர்வு செய்து அப்பள்ளிகளை குறித்து, பதவி நிலை குறித்து, பள்ளிக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து நன்கு அறிந்துக்கொண்டு கலந்தாய்வு மையத்திற்குள் செல்லுங்கள்.... கலந்தாய்வு மையத்திற்குள் உங்களை தவிர யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் அறியவேண்டியது மிக அவசியம். எனவே பள்ளிகள் குறித்து முழு தகவலுடன் உள்ளே செல்லுங்கள்... உள்ளே அலைபேசி அனுமதிக்கப்படும்... கலந்தாய்வு அறைக்குள் மாநில தேர்வுமூப்பு வரிசை படி 5 பேராக அனுமதிப்பார்கள்... 5 பேறும் பள்ளிகளை தேர்வு செய்தபிறகு தான் "SELECTION OK " குட்டுக்க முடியும் என்பதால் சந்தர்பத்தில் உங்களை அதிகாரிகள் அவசர படுத்த நேரிடும்... பதட்டம் அடையாமல் நீங்கள் ஏற்கனவே பள்ளிகளை தேர்வு செய்து வைத்திருந்தால் பதட்டத்தை தவிர்க்கலாம்..... கலந்தாய்வு அறைக்குள் கைபேசி பயன்படுத்த அனுமதிக்கப் படமாட்ட

ஆசிரியர் நியமன கவுன்சலிங் இன்று தொடக்கம்:

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 14 ஆயிரத்து 700 பேருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்கும் கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில், சுமார் 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது.அதன்படி, 14,700 பேர் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். தவிர, முதுநிலைப் பட்டதாரிகளின் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும் மேனிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுன்சலிங் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி 5ம் தேதி வரை இணைய தளம் மூலம் நடக்கிறது. அரசு, நகராட்சி உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களும், அரசு மற்றும் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகளில் காலியான பட்டதாரி, ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களிலும் ஆசிரியர்கள் நி

அறிவியல் ஆசிரியர்களுக்கு செப்.,1 ல் கருத்தாளர் பயிற்சி:

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3 நாட்கள் நடக்கிறது. மாணவர்களுக்கு எளிதில் புரியும்வகையில் அறிவியலை கற்பிப்பது, அவர்களை போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்வது, பள்ளி அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிப்பது உள்ளிட்டவை குறித்து இம்முகாமில் பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்காக 32 மாவட்டங்கள் கோவை, திருச்சி, நாகை, தேனி, விருதுநகர் என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் இப்பயிற்சியில், சிறப்பு மற்றும் முதன்மை கருத்தாளர்கள் (மூத்த ஆசிரியர்கள்) 72 பேர், கருத்தாளர்கள் 264 பேர் பங்கேற்கின்றனர். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “இப்பயிற்சி பெறுவோர் பின்னர் மாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பர். மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதே இதன் முக்கிய நோக்கம்,” என்றார்.

கலந்தய்வுக்கு செல்வோர் கவனிக்க...

கலந்தாய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே செல்ல கேட்டுக்கொள்கிறோம். கலந்தாய்வு மையங்களில் மாவட்டத்திற்கு உட்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ள பள்ளிகளின் பட்டியல் ஓட்டபட்டிருக்கும்... குறைதபட்சம் 5 இடங்களையாவது வரிசைவாரியாக தேர்வு செய்து அப்பள்ளிகளை குறித்து, பதவி நிலை குறித்து, பள்ளிக்கான போக்குவரத்து வசதிகள் குறித்து நன்கு அறிந்துக்கொண்டு கலந்தாய்வு மையத்திற்குள் செல்லுங்கள்.... கலந்தாய்வு மையத்திற்குள் உங்களை தவிர யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அனைவரும் அறியவேண்டியது மிக அவசியம். எனவே பள்ளிகள் குறித்து முழு தகவலுடன் உள்ளே செல்லுங்கள்... உள்ளே அலைபேசி அனுமதிக்கப்படும்... கலந்தாய்வு அறைக்குள் மாநில தேர்வுமூப்பு வரிசை படி 5 பேராக அனுமதிப்பார்கள்... 5 பேறும் பள்ளிகளை தேர்வு செய்தபிறகு தான் "SELECTION OK " குட்டுக்க முடியும் என்பதால் சந்தர்பத்தில் உங்களை அதிகாரிகள் அவசர படுத்த நேரிடும்... பதட்டம் அடையாமல் நீங்கள் ஏற்கனவே பள்ளிகளை தேர்வு செய்து வைத்திருந்தால் பதட்டத்தை தவிர்க்கலாம்..... கலந்தாய்வு அறைக்குள் கைபேசி பயன்படுத்த அனுமதிக்கப் படமாட

புதிய ஆசிரியர் பணி நியமனம் : சென்னையில் காலிப்பணியிடம் இல்லை - மூன்று மாவட்டத்தவர் ஏமாற்றம்:

சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதிதாக தேர்வு பெற்றுள்ள, 14,700 ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்குவதற்கான கலந்தாய்வு, இன்று முதல், வரும், செப்., 5ம் தேதி வரை, மாநிலம் முழுவதும், 32 மையங்களில் நடக்கிறது. சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள, சி.எஸ்.ஐ., செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலந்தாய்வு நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, திருவள்ளூரில் உள்ள,  லட்சுமி மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் கலந்தாய்வு நடக்கிறது. சென்னை நகரம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லைகளைச் சேர்ந்த சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், கணிதம் அல்லாத பாடங்களில், ஓரிரு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கலாம் என, கூறப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் புறநகர்களை எதிர்பார்

புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்:

புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஆணை பெற்ற தேர்வர்கள் மருத்துவரிடம் உடற் தகுதி சான்றிதழ் பெற்று  தாங்கள் பணிபுரியப்போகும் பள்ளி தலைமையாசிரியரிடம் பணியில் சேரும் தினத்தன்று சமர்பிக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுக்கும் ஆசிரியர் பணியில் ஒதுக்கீடு வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு:

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கும் இடஒதுக்கீட்டில் ஆசிரியர் பணி கோரிய மனு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட் டம், அஞ்சுகுழிபட்டியை சேர்ந்தவர் சரண்யா. ஐகோர்ட் மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனு:நான், டிப்ளமோ ஆசிரியை பயிற்சி முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். இடைநிலை ஆசிரியர் பணி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, மார்ச் 28ல் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். எனது கல்விச் சான்றிதழ் உள்பட, எனது தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதால், அதற்கான சான்றையும் சமர்பித்தேன். கடந்த 6ம் தேதி தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘ராணுவத்தில் பணியாற்றி இருந் தால் மட்டுமே, அந்த இட ஒதுக்கீட்டில் ஆசிரியர் பணி வழங்க முடியும்‘ என கூறியிருந்தார். ஆனால், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் அனைத்து அரசு பணிகளும் வழங்கப்படுகிறது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் அறிவிப்பை ரத்து செய்து, எனக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும். இவ்வ

மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!

மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் திட்டவோடு, அடிக்கக்கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வரும் மாணவர்கள், வீட்டுப்பாடத்தை எழுதிவராத மாணவர்கள், நன்றாக படிக்காத மாணவர்கள், வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் மாணவர்கள் இப்படி ஏதாவது தவறு இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்கவைத்தல், பிரம்பால் அடித்தல், ஸ்கேல் கொண்டு தாக்குதல், குனிய வைத்து முதுகு மீது செங்கற்களை வைத்தல் இப்படி பல வகையான தண்டனைகளை ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர். அப்படிப்பட்ட நேரங்களில் சில மாணவர்கள் உயிரிழக்கக்கூடும். சில நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது உண்டு. இப்படி எந்த துன்பமும் மாணவ-மாணவிகளுக்கு நேரக்கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை அதிக அக்கறை கொண்டுள்ளது. இதற்காக மாணவர்களை கம்பு கொண்டு தண்டிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன் காரணமாக மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் பிரச்னை பெரும்பாலும் ஓய்ந்துவிட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள்

அனைத்து காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்: முதல்வர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து:

அனைவருக்கும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டட்டும்; அன்பும், அமைதியும் நிலவட்டும்; நாடெங்கும் நலமும் வளமும் பெருகட்டும் என முதல்வர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை: "வினை தீர்க்கும் தெய்வமாம் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கிய பின்னர் எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணர்ந்து, விநாயகர் சதுர்த்தியன்று மக்கள், களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் வைத்து அலங்கரித்து, எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி பெற வேண்டி பக்தி பரவசத்துடன் வழிபட்டு மகிழ்வார்கள். கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் அருளால், அனைவருக்கும் அனைத