தமிழகத்தில், கல்வி பயில்வோர் அரசு வேலைக்காக, அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு குறித்த விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டு வருகிறது.அதன்படி, 2014 ஜூன் மாதம் வரையிலான விவரங்கள் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில், 48.32 லட்சம் பெண்கள் உட்பட, மொத்தம். 94.58 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து, காத்திருக்கின்றனர். இதில், இடை நிலை ஆசிரியர்கள் 2.30 லட்சம்; இன்ஜினியர்கள் 3.5 லட்சம்; டாக்டர்கள் 9,500; முதுநிலை பட்டதாரிகள் 2.51 லட்சம்; பட்டதாரிகள் 3.76 லட்சம், விவசாய படிப்புக்களை முடித்த, 4,640 பேரும் உள்ளனர்.
இதில், ஆதிதிராவிடர் 20 லட்சம்; அருந்ததியர் 2 லட்சம்; பழங்குடியினர் 68,615; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 24.28 லட்சம்; பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் 3.8 லட்சம், பிற்படுத்தப்பட்டோர் 40 லட்சம், இதர பிரிவினர், 3.5 லட்சம். கடந்த ஆண்டு இறுதியில், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்திருந்தோரின் எண்ணிக்கை, 84.38 லட்சமாக இருந்தது. தற்போது, 10 லட்சம் பேர் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment