இன்று 31.08.2014 பாரதிதாசன் பல்கலைகழகம் எம்.எட் ஆசிரியர்கள் தொலைநிலை வழியில் பயில நுழைவுத்தேர்வை நடத்துகிறது.இதில் 250 இடங்களுக்கு 20000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.அரசுக் கலைக் கல்லூரி விழுப்புரம்.காமராஜ் மேல்நிலைப் பள்ளி விழுப்புரம்.சென்ற மாதம் பாரதியார் பல்கலைக் கலக்கம் நடத்திய எம்.எட் நுழைவுத்தேர்வில் கேள்வித்தாள் தரவில்லை விடைகள் பென்சிலால் குறிக்க சொன்னார்கள் இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது நாம் அறிந்ததே.இவற்றை எல்லாம் போக்கும் வகையில் இன்று நடைபெறும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சரியான முறையில் தேர்வை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்கின்றனர்.
இன்று நடைபெறும் பாரதிதாசன் பல்கலைக் கழக எம்.எட் நுழைவுத் தேர்விற்கான உத்தேசிக்கப்ட்ட விடைகள் இன்று மாலை கல்விக்குரலால் வெளியிடப்படும்(கேள்வித்தாள் வழங்கினால் மட்டும்)
Comments
Post a Comment