கடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின் முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக, பள்ளியின், உதவியாளர் (ஓ.ஏ.,) இருப்பார். தற்போது, பள்ளி முதல்வரில் இருந்து, ஓ.ஏ., வரை, எவருக்கும் அனுமதி கிடையாது. வேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவார். தேர்வு துவங்குவதற்கு முன், பள்ளி வளாகத்திற்குள், நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, நுழைய அனுமதி கிடையாது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை : "தேர்வு மையங்களாக அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்குள், பள்ளி முதல்வர் முதல், ஓ.ஏ., வரை, ஒருவரும் நுழையக் கூடாது' என, தேர்வுத்துறை, கிடுக்கிப்பிடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. தேர்வில், சிறு அளவிற்கு கூட, முறைகேடு நடக்கக் கூடாது என்பதில், தேர்வுத்துறை, கவனமாக உள்ளது. இதற்காக, பல, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, துறை எடுத்து வருகிறது. பிளஸ் 2 தேர்வு, 2,238 மையங்களிலும்; ??ம் வகுப்பு தேர்வு, 3,183 மையங்களிலும் நடக்கின்றன. இவற்றில், பெரும்பாலான மையங்கள், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், பல முறைகேடுகள், தனியா