தொடக்கக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு? பதவி உயர்வு வாய்ப்பும் பறிபோகும் நிலை... அனைத்து ஆசிரியர் சங்கங்களும் குரல் கொடுக்குமா...?
தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கென்று இருக்கும் ஒரே வாய்ப்பு பதவி உயர்வு தான். ஒன்று தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராகவோ அல்லது பட்டதாரி ஆசிரியராகவோ பதவி உயர்வு மூலம் செல்வதுதான். கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வும் விதிகளின் படி கிடைக்கவில்லை என்றும், அதற்கும் பல்வேறு கட்ட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என இடைநிலை ஆசிரியர்கள் குமறுகின்றனர்.
இதனால் அவர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வு இந்தாண்டு நீதிமன்ற வழக்கால் நடைபெறவில்லை. உயர்நீதிமன்றம் வழக்கில் இறுதித்தீர்ப்பு வந்த பின்பும் பல்வேறு காரணங்களால் பதவி உயர்வு கால தாமதமாகி வந்தது. இன்று பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்ப்பார்த்து ஆசிரியர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. அரசுத்தரப்பில் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்த பணியிடங்கள் திரும்ப பெற இயலாது மற்றும் தேர்தல் என காரணங்கள் கூறி கலந்தாய்வை ஒத்திவைப்பது என்பது ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை சந்திக்க சென்ற இடைநிலை ஆசிரியர்களிடம் பதவி உயர்வு கலந்தாய்வு ஜுன் மாதம் நடைபெறும் என்றும் அதுவும் 2014 முன்னுரிமை பட்டியலின்படி நடைபெறும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றதாகும். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறுகையில் ஏற்கனவே இரட்டைப்பட்டம், 10+2+3 போன்ற வழக்குகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு 2014 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படும் என்பது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஏனெனில் பதவி உயர்வு 2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்காமல் தொடக்கக் கல்வி இயக்ககம் எப்படி 2014ன் படி அளிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பினர். இது ஒரு நியாயமற்ற செயல் என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment