தொடக்ககல்வித்துறையில் ஆண்டு தோறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு ,பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப் பட்டு வருகிறது
கடந்த 2013 ம் ஆண்டு மே மாதம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது .அப்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்ததால் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது இதனால் பதவி உயர்வு கிடைக்காத ஆசிரியர் பலரும் பணியிட மாறுதல் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்
வழக்கு முடிந்து ஒரு மாதமாகியும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தவில்லை .இந்நிலையில் பள்ளிகல்வித்துறையில் சென்ற வாரமே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது .ஏற்கனவே தர ஊதியமும் குறைவாக பெற்று வருகிறோம் ,இந்த பதவி உயர்வு கிடைக்கும் என்று மிகுந்த ஆவலோடு இருந்த எங்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்க்கான அறிகுறியே இல்லாமல் இருக்கிறது .இவ்வாறு தொடக்க கல்வித் துறையில்
பணி யாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் தொடர்ந்து வஞ்சிக்கப்ப்பட்டு வருகிறார்கள்
லோக்சபா தேதி அறிவிக்கப்பட்டால் இந்த கல்வியாண்டில் இந்த பதவி உயர்வு வழங்கவே முடியாது நிலை உருவாகும் .இந்நிலையில் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் தொடக்க கல்வி துறையில் நடத்த முன்வர வில்லை .தர ஊதியத்தையும் இழந்த எங்களுக்கு இந்த பதவி உயர்வாவது கிடைக்கும் என்று நம்பியிருந்தோம் அதுவும் கானல் நிராகி போய்விடுமோ என்ற மன விரத்தியில் உள்ளோம் ,இவ்வாறு தொடக்கல்வி துறை ஆசிரியர்கள் தொடர்ந்து வஞ்ச்சிக்கப்பட்டு வருகிறோம் .
எனவே பதவி உயர்வு கலந்தாய்வு உடனடியாக நடத்த வேண்டுமாய் எதிர் நோக்கி உள்ளோம் .
Comments
Post a Comment